Jul 14, 2010

ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயை

“....But I must tell that entry into the film world has suddenly relieved me of all the burdens of a head of a family. Had I not come to this industry, I would have been running from pillar to post to organise money for my son's higher-education,” said the writer.

கடந்த ஞாயிறு ஹிந்து நாளிதழில் இதைச் சொல்லியிருப்பது வேறு யாருமில்லைங்க, நம் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்தான்.


ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே தமிழில் முன்னணி மற்றும் பிரபல எழுத்தாளராக இருக்கும் ஒருவரே இந்த வகையில் சொல்லும் அவசியம் இருக்கிறது.

மேலும், நேற்று ஒரு வலைப்பதிவர் தன் ஜெமோ சந்திப்பு குறித்து எழுதியிருந்தார். அதில், அந்தச் சந்திப்பு முழுவதிலும் அல்லது பெரும்பாலும் ஜெமோ'வின் பேச்சு சினிமா சார்ந்ததாகவே இருந்தது, இலக்கியம் மிகக் குறைவாகவே ஜெமோ பேசினார் எனக் கூறினார்.


சாரு தன் சமீபப் பதிவொன்றில் "உங்களைப் படிக்கலைன்னா தூக்கம் வரலை, சாப்பாடு எறங்கலை" என்று இணையத்தில் இலவசமாகச் சொல்வதை நிறுத்திவிட்டு தன் புத்தகங்களை வாங்கிப் படிக்குமாறு தன் வாசகர் ஒருவருக்கு வேண்டுகோள் விடுத்தார். அது தன் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சற்றேனும் உதவும் என்றார். "என்னடா மனுஷன் இப்படியெல்லாம் எழுதறார்" என்று நினைத்தேன்.


இணையத்தில் ஆயிரமாயிரம் வாசகர்கள், ஒரு பக்கம் அன்புச் சொரிதல்கள், மற்றுமோர் பக்கம் ஆவேசக் கூக்குரல்கள், அடிகள், அரவணைப்புகள், புலம்பல்கள், புண்ணாக்குகள். என்ன வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாமே இலவசமாக இலவசத்திற்குக் கிடைப்பன. ஆனால் உண்மை என்னவென்றால் at the end of the day money only can help you live.....!!! அதை நாம் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்.


சாரு சொன்னதாகட்டும், ஜெமோ'வின் சினிமா சிலாகிப்புகளாகட்டும் என் பார்வையில் யதார்த்தம்! யதார்த்தம்!

டந்த சில வாரங்களுக்கு முன்னே நடந்த தமிழ்ப்பதிவர் பிரச்னையின் போது சக பதிவர் ஒருவரிடம் அந்தப் பிரச்னைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், "தினத்தந்தி நாளிதழ் தினமும் இணையத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம் ஒரு லட்சம் ஹிட்ஸ்களைப் பார்க்கிறதாம்", என்றார். 

நாம் இணையத்தில் இலவசமாய் எழுதிக் கொண்டு கூட்டம் கூடுகையில் "என் தளத்துல டெய்லி நானூறு ஹிட்டு, நாலாயிரம் ஹிட்டு" என்று சொந்தமாக பலம் கூட்டி அறைகூவிக் கொள்கிறோம்.

At the end of the day மீசைக்கவிஞன் சொன்னதுபோல், வாழ்க்கை ஒரு ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயையாகவும் தோற்ற மயக்கங்களுடன் கூடிய சொற்பனமாகவும்தான் தோன்றுகிறது எனக்கு.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...