என் இனிய தமிழ் மக்களே,
தமிழ்நாட்டுல "பகுத்தறிவு பகுத்தறிவு" என ஒரு வார்த்தை ஆதி காலம்தொட்டுப் புழங்கி வருகிறது.
இதற்கு உங்கள் பார்வையில் அர்த்தம் என்னன்னு சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.
துக்ளக் "சோ" அவர்களைக் கேட்டால் அவருக்கே உரிய நக்கலுடன் அது ஒரு கெட்ட வார்த்தை என்பார். ஆனால் அவரும் தெளிவாக இதுவரை ஒரு விளக்கக் குறிப்பு எழுதவில்லை. எனவே திராவிட இயக்கங்களுக்கும்* அவருக்கும் இந்த வார்த்தை குறிப்புரை எழுதியதில் பெரிய வித்தியாசம் இல்லை.
* இந்த ரெண்டு வார்த்தைகளை இங்கே உபயோகிச்சதுக்காக எத்தனை பேரு வெளக்குமாறு தூக்கிட்டு வரப்போறாங்களோ?
பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. (நன்றி: yarl.com)
அடடா அப்படின்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. அதை நான் இங்கே பிரசுரம் பண்ண முடியாது. பண்ணினா எனக்கு ஒரு சாயம், அடையாளம் தந்து வசவுப் பின்னூட்டங்கள் வரும் (உ-ம் - பார்ப்பனப் பரதேசி நக்கி நாயாடா நீ?).
மூத்த பதிவர் வெட்டிப்பயலும் ஒரு பதிவின் வாயிலாக இதே போல் கேள்வி எழுப்பியிருந்தார். அங்கு வந்த பதில்களிலும் அப்படியொன்றும் ஒரு முடிவுரை எழுதும் வண்ணம் ஏதும் தேறவில்லை.
ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.) (நன்றி: http://blog.mohandoss.com).
பகுத்தறிவுன்னா என்ன? நீங்க என்ன சொல்றீங்க?
.
.
.