வரலாறு தொடர்கிறது. மாரடோனா மக்கள் 2006 காலிறுதியில் ஜெர்மனியிடம் பெற்ற தோல்விக்கு ஏதேனும் பதில் தருவார்கள் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் அதற்கான ஒரு சுவடும் தெரியாமல் முழுக்க முழுக்க சரெண்டர் ஆட்டம் ஆடினார்கள் அர்ஜென்டினா அணியினர்.
மெஸ்ஸி மெஸ்ஸி என்று ஒரு மானஸ்தர் இருந்தார். அவரது இருப்பும் அணியில் கடைசிவரை உணரப்படவில்லை. அவர் அடித்து சொதப்பலாய் முடிந்து போன சில நேரடி ஷாட்களைத் தவிர்த்து ஜெர்மனி அணியின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி நேற்று பந்து சென்றதாக எனக்கு நினைவில்லை.
"தடுப்பாட்டமாய்யா அது? காறி உமிழ்கிறேன்...தூ....!!!" எனச் சொல்லும்படியாக இருந்தது அர்ஜென்டினா அணியின் தடுப்பாளர்களின் வேலை.
ஜெர்மனி அணியில் அவரவர் தத்தமக்கு தரப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். வேறு ஒன்றும் எக்ஸ்ட்ரா இல்லை. மேற்கொண்டு தேவை எதையும் அர்ஜென்டினா அணியினர் ஜெர்மனி அணிக்கு தரவும் இல்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு கோல்கள், இங்கிலாந்துக்கு எதிராக நான்கு என வென்று வந்த ஜெர்மனி அணியினர் நான்கு கோல்கள் அடிக்காமல் நாங்கள் இந்த மாட்சிலும் ஜெயிக்க மாட்டோம் டோய் என சூளுரைத்து உள்ளே நுழைந்தது போலிருந்தது அவர்களின் செயற்பாடுகள்.
கடைசியாக.....
அர்ஜெண்டினாவின் இந்தத் தோல்வியின் மூலம் லாபமோ / நஷ்டமோ ஏதோ ஒன்று என்னவென்றால், மாரடோனாவை நிர்வாணக் கோலத்தில் காணும் வாய்ப்பை இழந்துள்ளது கால்பந்து உலகம். ரொம்பத் தேவைதான் என்கிறீர்களா?
.
.
. image courtesy: beta.thehindu.com