Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
Jun 12, 2013
Mar 25, 2011
யுவராஜ சரிதம்!
இந்திய உலகக் கோப்பைகளில் இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.
நான்கு உலகக் கோப்பைகளாக இறுதிப்போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா காலிறுதியோடு வெளியேறுகிறது.
தொடர்ச்சியாக நான்காவது உலகக்கோப்பை வெல்லும் ஆஸ்திரேலிய கனவு பொய்த்திருக்கிறது.
கேப்டனாக தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பை வெல்லும் பாண்டிங்கின் கனவும் பொய்த்திருக்கிறது.
1983'க்குப் பின் முதன்முறையாக அரையிறுதி விளையாடும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டுள்ளது.
இத்தனை நிகழ்ந்ததும் இன்னமும் நிறையவும்
அத்தனையும் செய்தான் இவன்
....இன்றைய புகைப்படம்....
ஒரு மாறுதலுக்கு டிவிட்டருக்குப் பதிலாக இங்கே!
பின்னூட்ட வெண்பாம்கள் படையுங்கள் தோழர்ஸ்....
Jul 12, 2010
உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின்
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்தப் போட்டியை நள்ளிரவில் கண்விழித்துப் பார்த்தேன் நான்.
சூப்பர் ஸ்டார் அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும் நம்மில் பெரும்பாலானவர்களின் பரிச்சய நாயகர்களை அடக்கிய இங்கிலாந்து அணியும் இந்த போட்டிகளின் ஒவ்வொரு நிலையில் தத்தமது கம்பார்ட்மன்ட்கலைக் கழற்றிக் கொண்டு இறுதிப் போட்டியை ஹாலந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு விட்டுத் தந்தன.
ஸ்பெயின் முதலில் இருந்தே ரேசில் எல்லோர் பார்வையிலும் முதல் இடத்தில் இருந்தது.
இன்றைய ஆட்டத்தின் முதற்பாதியில் விறுவிறுப்பிற்குக் குறைவில்லை. அரங்கத்தினுள் ஆட்டக்காரர்கள் வாங்கிய அடிகள் மிதிகள் பார்த்து நமக்கு வலித்தது. மொத்தம் ஏழு மஞ்சள் அட்டைகள் தரப்பட்டன. அதில் ஐந்து ஹாலந்துக்கு. உலகக் கோப்பைகளின் இறுதிப்போட்டிகள் வரலாற்றில் இதுவே அதிகமாம்.
இந்த இறுதியாட்டமும் ஒரு "தடுப்பு ஆட்ட" ஸ்பெஷல் அமைந்தது. அதிலும் குறிப்பாக கடைசி நொடி கோல் தடுப்புகள் இந்த ஆட்டத்தில் அதிகம் அதிகம், மிக மிக அதிகம். கிட்டத்தட்ட துரதிஷ்டவசமாக இதுபோல் எட்டு பத்து கோல்கள் தடுக்கப்பட்டன.
இரண்டாம் பாதியும் முடிந்து போக, மேலும் இரண்டு மஞ்சள் அட்டை விநியோகங்கள் மட்டுமே கூடிப் போயின. கோல்கள் ஏதும் சேரவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது கூடுதல் நேரத்தில் நேர்ந்தது அந்த ஜாலம். இனேஸ்டா அனுப்பிய பந்து கச்சிதமாக கோல் ஆக.....ஆகா ஆகா.... ஸ்பெயின் வெற்றி பெற்றது.
அது ஆப் சைடு ஆகியிருக்கவேண்டிய கோல். மிக புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்த இனேஸ்டா உண்மையாகவே சமயோசித சூப்பர் ஸ்டார்.
கடைசி நான்கு நிமிடங்களில் நான்கு வருடங்களை இழந்தனர் ஹாலந்து அணியினர்.
கணிப்புகள், ஆரூடங்கள், பால் என எல்லோரும் சொன்னது பலிக்க. இதோ கோப்பை ஸ்பெயினின் கையில்.
.
.
image courtesy : fifa com
Jul 10, 2010
பால் என்ற நாஸ்ட்ரடாமஸ்
இந்தமுறை உலகக்கோப்பை ஆட்டங்களின் விறுவிறுப்பிற்கு இணையாக கதைக்கப்பட்டு வரும் மற்றுமோர் விஷயம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பால் ஆக்டோபஸ் சொல்லும் ஜோசிய ஜோக்குகள்.
இங்கே நான் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு முன்னமே தெரியுமா எனப் பாருங்கள்!
ஆக்டோபஸ் ஏன்?
நம்மூரில் கிளி போல அவர்கள் ஊரில் ஆக்டோபஸ் ஜோசியம் நம்பப்படும் காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆக்டோபஸ்'சுக்கு மூன்று இதயங்களும் (யப்பாடி) அதைச் சார்ந்து ஒன்பது மூளைகளும் (யம்மாடி) இருப்பதுதான்.
பால் பற்றி:
பால் இருப்பது ஜெர்மனி நாட்டில், ஆனால் அவன் பிறந்தது இங்கிலாந்தில். அடடா! ப்ரீ-குவாட்டர்ஸ்ல பொறந்த நாட்டுக்கு எதிராவே தீர்ப்பு சொல்லிட்டியே நாட்டாமை.
போய் லான்ஸ் (Boy Lornse) எழுதிய டேர் டின்ட்டேபிச் பால் ஒக்டோபஸ் (Der Tintenfisch Paul Oktopus) என்னும் குழந்தைகள் புத்தகம்தான் நம்ம "பால்" சாருக்கு பெயர் தந்தது.
உங்க பேர்ல ட்விட்டர் அக்கௌன்ட் இருக்கா? பால் பேர்ல ரெண்டு இருக்கு சார். (http://twitter.com/PsychicOctopus + http://twitter.com/PPsychicOctopus)
மத்த விஷயங்கள் நீங்க அவனைப்பத்தி நல்லாவே கேள்விப்பட்டதே. மேலும் அவனைப்பற்றி வாசிக்க: டென் திங்க்ஸ் / விக்கியில் பால்
நாளைக்கு இறுதிப் போட்டியில ஸ்பெயின் ஜெயிக்கப் போறதா சொல்லியிருக்காரு இந்த உலகக் கோப்பை ஹீரோ. ஸ்பெயின் ஜெயிச்சிட்டா கிட்டத்தட்ட அந்த கோல்டன் பூட்டுக்கு சமமா பாலுக்குத் ஏதேனும் விருது தரப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
.
.
. image courtesy: examiner.com
Jul 8, 2010
கவுத்துட்டிங்களே ஜெர்மனி!
என்ன நடக்குது சார் இது?
எல்லாரும் ஸ்பெயின் டீமை ஜெயிக்கற குதிரை'ன்னு சொன்னாங்க சரிதான். அவங்க ஜெயிச்சதுல ஆச்சர்யம் யாருக்கும் இருக்காது. ஆனா ஜெர்மனி அணியோட செயற்பாடுகள் இந்த உலகக் கோப்பை முழுசுமே அவங்கதான் கோப்பையை தட்டிட்டுப் போகறாப்போல இல்ல இருந்துச்சி?
கடைசி நேரத்துல இப்படி சொதப்பி, அந்த ஆக்டோபஸ் "பால்" சொன்னது சரிதான்னு ஆக்கிட்டீங்களே ஜெர்மனி கனவான்களே!
முல்லரோட இழப்பை நல்லா உணர்ந்தாங்க ஜெர்மன் அணியினர். அவங்க தடுப்பாட்டத்துல ஏதும் பெருசா தப்பு இருந்ததாத் தெரியலை. இன்னும் சொல்லப் போனா ஸ்பெயின் அணியினர் கிடைச்ச நிறைய பழம் போன்ற வாய்ப்புகளைக் கூட அசால்ட்டா தடுத்தாங்க ஜெர்மனி அணியினர். அந்த கார்னர் வாய்ப்புல அடிச்ச அந்த ஒரே ஒரு கோலை மட்டும் தடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும் சங்கதி.
ஆனா அதே சமயம் ஸ்பெயின் அணியின் தடுப்பு ஆட்டத்தைப் பற்றியும் சும்மா சொல்றதுக்கு இல்லை. கொன்னு போட்டுட்டானுங்க பயலுவ. அவங்க வெற்றியின் ரகசியம் நேத்து நிச்சயம் அதுதான்.
எப்படியோ, இந்நேரம் அந்த ஆக்டோபியை "கொத்து" போட்டிருப்பாங்க. உண்மையை சொன்ன ஒரே குத்தத்துக்கு அவனுக்கு அந்த தண்டனை.
.
.
.
image courtesy: telegraph.co.uk
Jul 7, 2010
FIFA - ஹாலந்து ஜாலங்கள்
எழுபதுகளில் இருமுறை இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், எண்பதுகளில் ஒருமுறை நான்காம் இடத்தைப் பிடித்ததுமே இதுவரை நெதர்லாந்து அணி உலகக் கோப்பைகளில் சாதித்த விஷயம்.
இந்தமுறை கொஞ்சம் சிரமப்பட்டும், பெரிதாய் சிரமமில்லாமலும் என இப்படி அப்படி உருகுவே அணியை மூன்றுக்கு இரண்டு என அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதியில் என்ன செய்யப் போகிறார்கள் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கம்பியூட்டரை ஒரு புறம் தட்டியவாறே பார்த்துக் கொண்டிருந்ததால், அந்தக் கடைசி நிமிட உருகுவே கோலைத் தவிர்த்து ஆட்டத்தில் அப்படியொன்றும் சுவாரசியம் கலந்ததாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
இரண்டாவது அரையிறுதி நாளை சுவாரசியத்திகுக் குறைவில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மோதுவது இந்த உலகக்கோப்பையில் முதலில் இருந்தே பந்தயம் கட்டப்பட்ட குதிரை ஸ்பெயின் மற்றும் நான்கு கோல்களை நான்காவது முறையாகப் போட்டு வெல்லக் காத்திருக்கும் ஜெர்மனி அணியும் அல்லவா?
பார்ப்போம்....ரசிப்போம்.....!!
.
.
.image courtesy: http://www.kxan.com
Jul 4, 2010
அடுத்த அதிர்ச்சி - அர்ஜென்டினா
வரலாறு தொடர்கிறது. மாரடோனா மக்கள் 2006 காலிறுதியில் ஜெர்மனியிடம் பெற்ற தோல்விக்கு ஏதேனும் பதில் தருவார்கள் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் அதற்கான ஒரு சுவடும் தெரியாமல் முழுக்க முழுக்க சரெண்டர் ஆட்டம் ஆடினார்கள் அர்ஜென்டினா அணியினர்.
மெஸ்ஸி மெஸ்ஸி என்று ஒரு மானஸ்தர் இருந்தார். அவரது இருப்பும் அணியில் கடைசிவரை உணரப்படவில்லை. அவர் அடித்து சொதப்பலாய் முடிந்து போன சில நேரடி ஷாட்களைத் தவிர்த்து ஜெர்மனி அணியின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி நேற்று பந்து சென்றதாக எனக்கு நினைவில்லை.
"தடுப்பாட்டமாய்யா அது? காறி உமிழ்கிறேன்...தூ....!!!" எனச் சொல்லும்படியாக இருந்தது அர்ஜென்டினா அணியின் தடுப்பாளர்களின் வேலை.
ஜெர்மனி அணியில் அவரவர் தத்தமக்கு தரப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். வேறு ஒன்றும் எக்ஸ்ட்ரா இல்லை. மேற்கொண்டு தேவை எதையும் அர்ஜென்டினா அணியினர் ஜெர்மனி அணிக்கு தரவும் இல்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு கோல்கள், இங்கிலாந்துக்கு எதிராக நான்கு என வென்று வந்த ஜெர்மனி அணியினர் நான்கு கோல்கள் அடிக்காமல் நாங்கள் இந்த மாட்சிலும் ஜெயிக்க மாட்டோம் டோய் என சூளுரைத்து உள்ளே நுழைந்தது போலிருந்தது அவர்களின் செயற்பாடுகள்.
கடைசியாக.....
அர்ஜெண்டினாவின் இந்தத் தோல்வியின் மூலம் லாபமோ / நஷ்டமோ ஏதோ ஒன்று என்னவென்றால், மாரடோனாவை நிர்வாணக் கோலத்தில் காணும் வாய்ப்பை இழந்துள்ளது கால்பந்து உலகம். ரொம்பத் தேவைதான் என்கிறீர்களா?
.
.
. image courtesy: beta.thehindu.com
Jul 3, 2010
பிரேசில் - தகர்ந்த கனவுகள்
காலிறுதிப் போட்டிகள் ஆரவாரமாக ஆரம்பித்திருக்கின்றன. முதல் இரு போட்டிகளே சுவாரசியத்திற்கு ஏதும் குறை வைக்காமல் நடந்து முடிந்துள்ளன.
பிரேசில் அணியின் தோல்வி நிறைய பேருக்கு ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம்.
நெதர்லாந்து அணியை ஒரு அண்டர் டாக் அணி என நினைத்தவர்களுக்கு ஆமாம் சார் நாங்க அப்படித்தான் ஆனா யாருக்கும் எங்களால அதிர்ச்சி வைத்தியம் தர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் அவர்கள்.
ஆனால், நேற்றைய ஆட்டத்தைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். பிரேசில் அணிக்கு கோலடிக்க நிஜமாகவே கிடைத்தது ஓரிரு வாய்ப்புகள் மட்டுமே. அதை அவர்கள் ஓரளவு பயன்படுத்திக் கொண்டு ஒரேயொரு கோல் அடித்தனர். ஆனால், நெதர்லாந்து அணிக்கு நேற்று கிடைத்த வாய்ப்புகள் கிட்டத்தட்ட பத்து. அதில் அவர்கள் கோலாக மாற்றியது இரண்டை மட்டுமே. நீங்கள் மட்டமாக ஆடுங்கள் கவலையில்லை. ஆனால் உங்கள் எதிரி தன் உண்மையான பலத்தைப் பயன்படுத்தத் தவறினால் ஜெயம் உங்கள் பக்கம்தான் என நிரூபித்தது நேற்றைய ஆட்டம்.
இரண்டாவது காலிறுதியில் முதல் போட்டியளவு சுவாரசியம் இல்லையென்றாலும், ஆட்டத்தின் கடைசிக் கட்டம் ஒரு அற்புத திகில் நாவல்.
ஆட்டம் முடிந்த கடைசி நிமிடத்தில் உருகுவே அணி வீரர் பெற்ற சிகப்பு அட்டை மூலம் கிடைத்த பெனால்டி ஷூட்டை கானா அணி பயன்படுத்தத் தவற பின்னர் வந்த "நானா நீயா" டை பிரேக்கரில் நான்குக்கு இரண்டு என உருகுவே வென்றுள்ளது.
இப்போது அடுத்த இரு காலிறுதிப் போட்டிகளின் நிகழ்வுகளுக்கு முன் நம் மனதில் சுவாரசியம் ஏற்படுத்தும் ஒரு கேள்வி....நெதர்லாந்து, உருகுவே இந்த இருவரில் யார் இறுதிப் போட்டிக்குப் போகப் போகிறார்கள் என்பதுதான்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
.
.
.
image courtesy: http://www.thehindu.com
Jun 27, 2010
இங்கிலாந்து - வடை போச்சே!
இந்த சீசனிலேயே நான் மிகவும் எதிர்பார்த்துக் கண்டுகளித்த ஆட்டம். ஒரு ஓரத்தில் நப்பாசை இருந்தது. ஏதேனும் செய்து இங்கிலாந்து அணி வரலாற்றைத் திருப்பிப் போடுமென.
ஹூம்....முடிவு? அப்படியொன்றும் யாரும் எதிர்பார்த்திராத முடிவொன்றும் இல்லை, எனினும் இப்படி நான்கிற்கு ஒன்று என இங்கிலாந்து அணி தோற்றிருக்க வேண்டாம்.
எண்பத்தியோராவது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜான்சனுக்கு மஞ்சள் அட்டை தரப்படுகிறது. "அண்ணன் ஜான்சன் அடுத்த போட்டியில் விளையாட முடியாது" என தொலைக்காட்சியில் காண்பிக்கப் படுகிறது.
இங்கிலாந்து அணித்தலை கூவுகிறது: "ஏலேய், தீர்ப்ப மாத்தி எழுதுலே! கொஞ்சம் ஸ்கோர்போர்டு பாத்துட்டு எதுனாச்சும் சொல்லுங்கலே. அவிங்க நாலு கோலு அடிச்சுருக்கரானுவ, நாங்க ஒண்ணே ஒண்ணுதான்லே. நாங்க யாருமே அடுத்த ஆட்டம் ஆடப் போறது இல்லையல்லா"
ஒரு சில நிலைகளில் நல்ல ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள் இங்கிலாந்து அணியினர். ஆனால் அது ஜெர்மனி அணியின் நேர்த்தியான ஆட்டத்திற்கு எதிரில் போதுமானதாக இல்லை.
வூட்டுக்குப் போயி ஈ.பீ.எல்'லுக்கு அடுத்து எங்க பேரம் படியும்னு யோசிங்க கொழந்தைகளா!
.
.
.
Jun 22, 2010
FIFA 2010 - அட்டகாச அட்டவணை
என் சகோதரி ஒருத்தி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தாள். (விளக்கம் கீழே ஆங்கிலத்தில்)
This one is really amazing. Just go to this link and you can drill down the entire competition to team wise, group wise, date wise and ground wise matches on a single screen just by navigating your mouse around. (IST=Local time+3.5 hrs)
“Even if you are not a soccer fan, just have a look at the way the calendar is designed!!!!”
.
.
.
Jun 21, 2010
FIFA 2010 பார்வைகள் - II
வினோஸ் கார்னர்
உலகக்கோப்பை கால்பந்து விமரிசனங்கள் - II
சிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்
நான் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டாலும் நீங்கள் உலகக்கோப்பை பார்ப்பதில் இடைவெளி ஏதும் வந்திருக்காது என நம்புகிறேன். இதுவரை வந்த முடிவுகள் அப்படி ஒன்றும் தலையெழுத்துகளைப் புரட்டிப் போடுமாறு அமையவில்லை என்றாலும்.....
....நம் எதிர் பார்ப்பிற்கு மாறாக இன்னும் எத்தனை ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ எனத் தெரியவில்லை. சுவிஸ்சுக்கு எதிரான ஸ்பெயினின் தோல்வி நிச்சயம் எல்லோரைப் போலவும் எனக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று. ஆனால், அதன்பின் வந்த மெக்சிகோவிற்கு எதிரான பிரான்சின் தோல்வி, செர்பியாவிடம் ஜெர்மனியின் தோல்வி ஆகியவை அடுத்த ரவுண்டுக்கு யாருடா போகப் போறீங்க என நம்மை நகம் கடிக்க வைத்துள்ளன.
மேலும் இதில் நகைப்புக்கு உரிய விஷயம் என்னவென்றால் பங்கு பெற்ற மற்ற ஜாம்பவான் அணிகள் ஜெயிக்கக் கூடியவைகளாக நாம் நினைத்த ஆட்டங்களைக் கூட டிரா செய்து சமரசம் செய்து கொண்டன.
உருகுவே, அர்ஜென்டினா, ஸ்லோவேனியா, கானா, நெதர்லாந்த், பராகுவே, பிரேசில், சிலி மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் இப்போதைக்கு அந்தந்த பட்டியல்களில் முதலிடம் பெற்றுள்ளன. எங்கும் தோற்காமல் ஒரே போக்கில் அடுத்த ரவுண்டில் ரவுண்டு கட்டிடுவோம் சார் என உத்திரவாதம் தருகின்ற அணிகள் இவை.
அடுத்து நான் சொல்லும் லிஸ்டில் நான்கு நாடுகள் இப்படித் தத்தளிக்கும் என நான் என்றுமே கனவில் கூட நினைத்ததில்லை. இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், காமெரோன், ஐவோரி கோஸ்ட் இவை அனைத்துமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள். எதிர்பார்த்த ஆட்டத்தை இவர்களிடம் காண இயலவில்லை (இது வரை)
இருந்தாலும் பாருங்க....எங்க இன்னிங்க்ஸ் இன்னும் முடிஞ்சிடலை பாஸ் என அந்த அணி கேப்டன்கள் இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதால், மிச்சமுள்ள முதல் சுற்று லீக் ஆட்டங்களையும் பார்த்துவிடுவோம் என்பதுதான் நான் இன்று சொல்லிக் கொள்வது.
மீண்டும் விரைவில் சந்திப்போம்,
நட்புடன்,
வினோத்.
.
.
image courtesy: http://blogs.indiewire.com
.
Jun 17, 2010
என்னாச்சு ஸ்பெயினுக்கு?
முன்னுரை: வினோத் தந்த நம்பிக்கையில் ஒரு ஆர்வக் கோளாறில் இந்தக் கன்னி முயற்சி. இது விமரிசனம் அல்ல. ஸ்பெயின் தோற்றுப் போச்சே என்கிற புலம்பல்.
இந்த உலகக் கோப்பையின் முதல் பெரும் அதிர்ச்சி இதுவாகத்தானிருக்கும்.
சுவிஸ் நாட்டின் மிட் பீல்டர் பெஞ்சமின் ஹக்கல் என்ன சொல்றாரு பாருங்க
"This has to be counted as the biggest night in our country’s football."
இல்லையா பின்ன?
| Spain | 0 | : | 1 | Switzerland | - | ||||||
என்ன சார்... ஏதோ கோப்பைய வெல்லப் போறாங்க அப்படி இப்படின்னு பெருசா பில்ட் அப்பு எல்லாம் குடுத்தாங்க? இப்படி சுவிஸ் வந்து ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாங்களே ஸ்பெயினை?
இந்த உலகக் கோப்பையின் முதல் பெரும் அதிர்ச்சி இதுவாகத்தானிருக்கும்.
சுவிஸ் நாட்டின் பெர்னான்டெஸ் இன்னும் எத்தனை நூறு கோல்கள் அடித்தாலும், இன்று அடித்த அந்த கோலை நிச்சயம் மறக்க மாட்டார். ஒன்றா இரண்டா சார்...? கஜினி போல இந்த ரெண்டு அணிகளுக்கு இடையேயான பதினெட்டு ஆட்டங்கள்ல ஸ்பெயின் அணிக்கு எதிராக சுவிஸ்சுக்கு வந்திருக்கும் முதல் வெற்றி இது.
சுவிஸ் நாட்டின் மிட் பீல்டர் பெஞ்சமின் ஹக்கல் என்ன சொல்றாரு பாருங்க
"This has to be counted as the biggest night in our country’s football."
இல்லையா பின்ன?
கடைசியா ஸ்பெயின் கோச்சுக்கு ஒரு கேள்வி - ஆட்டத்தோட அறுபதாவது நிமிஷம் வரைக்கும் டாரஸ் உள்ள உட்கார்ந்திருந்த ரகசியம் என்ன?
.
.
.
Jun 15, 2010
FIFA 2010 பார்வைகள்
வினோஸ் கார்னர்
உலகக்கோப்பை கால்பந்து விமரிசனங்கள்
சிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்
நான் ஒரு அதிதீவிர இங்க்லீஷ் பிரிமியர் லீக் ரசிகன். பெரும்பாலான மேட்ச்களை அங்கு பார்த்துவிட்டு நான் வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் ஆதர்ச ஆட்டக்காரர்கள் யாரும் எந்த காயம் காரணமாகவும் உலகக் கோப்பையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் அது. இறுதியாக இந்த நான்கு வருடக் காத்திருப்பிற்குப் பின் அந்த ஜூன் பதினொன்றாம் தேதி வந்தே விட்டது. தென் ஆப்பிரிக்காவில் உதய நேரத்தில் அன்று கால்பந்தைப்போல் சூரியன் காட்சியளித்தானாம்.
ஒரு சின்ன அறிமுகம் தரவேண்டுமென்றால்.... இங்கே முப்பத்தி இரண்டு அணிகள் FIFA அங்கீகாரம் பெற்று உள்ளே நுழைந்துள்ளன. எட்டு குரூப்புகள், ஒவ்வொரு குரூப்பிலும் நான்கு அணிகள். முப்பத்தி இரண்டில் ஒன்றாய்த் தானுமிருக்க உலக அணிகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய்த் தகுதிச் சுற்றுகள் விளையாடின. அர்ஜென்டீனா அணி பிரயத்தனப் பட்டு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது எனக்கு மெத்த மகிழ்ச்சி.
பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது ஒரு தனி ரெகார்ட். இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் முறையே 4, 3 மற்றும் 2 முறைகள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொருமுறை வென்று தம் கணக்கைத் துவக்கின.
பிரேசில் மட்டுமே இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கோப்பைப் போட்டிகளிலும் பங்குபெற்ற தகுதி பெற்ற ஒரே அணி. அவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதா? பார்ப்போம்!
சரி, இதுவரை நடந்த போட்டிகள் பற்றி கொஞ்சம் அலசலாம்.
மூன்று நாட்கள் முழுதாக முடிந்துள்ளன. ஒரு சில முதல் வரிசை அணிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துள்ளன. உள்ளதில் சிறந்ததாய் ஜெர்மனி - ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை சொல்லலாம். ஆஸ்திரேலியாவை உதை உதையென உதைத்து ஆரோக்கியமாக 4-0 என வென்றுள்ளது ஜெர்மனி.
இதர அணிகள் இதுவரை நல்ல ஆட்டத்தைக் கொடுத்திருந்தாலும் ஒரு பலமான திடமான ஆக்ரோஷ ஆட்டம் இன்னும் நம் கண்ணில் படவில்லை.
ராபர்ட் கிரீன் செய்த ஒரு சில்லித் தவறால் அமெரிக்க அணி இங்கிலாந்தை டிரா செய்தது. இங்கிலாந்தின் கோல்கீ புண்ணியத்தில் அமெரிக்க டெம்ப்சி தன் கணக்கில் ஒரு கோலைச் சேர்த்துக் கொண்டதுதான் இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக் காமெடி.
அர்ஜெண்டினாவின் மெஸ்சி எப்போதும் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். நைஜீரியாவுக்கு எதிராக அவர் கொடுத்த ஒவ்வொரு அடியும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி எனலாம். என்றாலும் அவரை மென்று விழுங்கும் வண்ணம் அவருக்கு எனிமா தந்தார் நைஜீரிய கோல்கீ எனியேமா (Enyeama). மேட்ச் முடியும்வரை எனிமா தன் கட்டுப்பாட்டில் மெஸ்சியை வைத்துக் கொண்டார்.
கால்பந்தில் தலைசிறந்த எதிரிகளான உருகுவே பிரான்ஸ் அணிகளின் ஆட்டம் எதிர்பார்த்தபடி டிராவில் முடிந்தது.
ரொனால்டோ, காகா, வான் பெர்ஸி மற்றும் இன்னபிற முன்னணி ஆட்டக்காரர்களின் ஆட்டங்களைக் காண ஆடுகளங்கள் இன்னும் காத்திருக்கின்றன.
விரைவில் சந்திப்போம்.....
நட்புடன்,
வினோத்
.
.
.
.
.
.
.
.
May 17, 2010
இங்கிலாந்து - தவமாய் தவமிருந்து
ஒன்றல்ல ரெண்டல்ல முப்பத்தைந்து வருடத் தவம் இது. இங்கிலாந்திற்கு இப்போதுதான் கைகூடி வந்திருக்கிறது.
உலக கிரிக்கெட் அணிகளில் என் கருத்தில் டாப் 2 அணிகள் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும்தான். இன்று வரையில் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக (ஒரு sportsmanship உடன்) ஆடும் அணிகளாக இவை இரண்டை மட்டுமே நான் பார்க்கிறேன்.
உலகக்கோப்பை ஒன்றின் இறுதி ஆட்டத்தில் ஐந்தாவது முறையாக பங்கேற்கும் பெருமை பெற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சாம்பியன் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக அளவு இறுதி ஆட்டங்களில் பங்கு கொண்ட பெருமை இங்கிலாந்திற்கு உண்டு.
ஆனால் இப்போதுதான் முதல்முறையாக கோப்பை வெல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அவர்கள் வென்றது நான்கு உலகக் கோப்பைகளையும், ஒரு மினி உலகக் கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலியாவை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களது ஆஷஸ் எதிரியை.
எனக்கு எப்போதும் இப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை போட்டிகள் தொடங்கியது முதலே சொல்லிக் கொண்டிருந்தேன் இம்முறை இங்கிலாந்து கோப்பை வெல்லுமென்று.
நேற்று இங்கிலாந்து இன்னிங்ஸின் நேரலை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை எனக்கு. காலையில் எழுந்தே முடிவை தெரிந்து கொண்டேன். .ஆஸ்திரேலிய அணியை அறவே வெறுக்கும் எனக்கு "இன்பத் தேன்வந்து பாய்ந்தது காதினிலே".
உங்களுக்கு?
Apr 28, 2010
ஐ.பி.எல் - ராஜ்தீப்பின் "மூன்று" வேண்டுகோள்
கிரிக்கெட் பற்றி மூச்சுத் திணறத் திணற பேசியாயிற்று, எழுதியாயிற்று. ஒரு பெரிய இடைவெளி விடவேண்டும் என்ற நேரத்தில்தான் நம்ம Breaking News அண்ணன் ராஜ்தீப் சர்தேசாயின் டிவிட்டர் பதிவு ஒன்று பற்றி நண்பன் ரோகன் ஒரு தகவல் சொன்னான்.
ஐ.பி.எல்லில் போயும் போயும் சென்னையிடம் மும்பை தோற்ற கலக்கத்தில் சர்தேசாய் அண்ணன் என்ன சொல்கிறார் எனப்பாருங்கள்.
நல்லா சொல்லியிருக்காரு இல்ல? போன ரெண்டு வருஷமா அண்ணன் ஐ.பி.எல். பார்க்கலியா? அப்போ அவருக்கு இதே கேள்விய கேட்கத் தோணலையா?
சரி அது இருக்கட்டும். நம்ம ரோகன் அதுக்கு என்ன பதில் சொல்லியிருக்காரு பாருங்க.
"We already have a 3 game final, the other 2 are just called league matches. Total results - 2:1 "
எப்பூடி?
Apr 24, 2010
ஆண்டவனின் அவதாரத் திருநாள்
சச்சினின் முப்பத்து ஏழாவது பிறந்த நாள் இன்று.
சச்சின் போன்ற கிரிக்கெட் மகாமேதை வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். அவ்வகையில் நான் அதிஷ்டசாலி எனவும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
சாதனை மன்னனுக்கு அன்பு வாழ்த்துக்கள்!
இளம் சச்சினில் ஒரு இன்னொசன்ட் பேட்டி யூடியூபில் கிடைத்தது. அந்தக் கன்னிப் பேட்டியைப் பாருங்கள், கொள்ளை அழகு!
அவர் குறித்து உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பாருங்கள்.
மேத்யு ஹேடன்
நான் கடவுளை நேரில் கண்டேன். அவர் இந்திய கிரிக்கெட்டில் நான்காம் ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.
பிரையன் லாரா
அவர் ஒரு ஜீனியஸ், நான் சாதாரணன்.
ஆன்டி பிளவர்:
உலகில் இருவகை ஆட்டக்காரர்கள் உண்டு. ஒன்று சச்சின், இன்னொன்று மற்றவர்கள்.
ஷேன் வார்னே:
பிராட்மேனுக்கு நிகராய் ஒரு கிரிக்கெட்டர் உண்டென்றால் அது சச்சின் தவிர யாருமில்லை.
மார்க் டைலர்:
1997 டெஸ்ட் போட்டி தோல்வியின் போது: நாங்கள் இந்திய அணியிடம் தோற்கவில்லை, சச்சின் என்ற மாபெரும் ஆட்டக்காரனிடம்தான் தோற்றோம்.
Apr 18, 2010
ருத்ரதாண்டவ தோனி..அரையிறுதியில் CSK
தோனியின் அந்த கடைசி ஓவர் அடியை நேரிடையாகவோ அல்லது நேரலையிலோ இன்று பார்க்காதவர்கள் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்.
இருபது தினங்களுக்கு முன் இதே போன்று கடைசி ஓவரில் இதே இர்பான் பதானின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்களை எடுக்காது, சென்னை கவ்வியது மண்ணை.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரும் இர்பானின் கையிலேயே கொடுக்கப் பட்டது. எதிரே இர்பானைச் சந்திக்க அணியின் கேப்டன் தோனி. எடுக்க வேண்டிய ரன்கள் பதினாறு.
முதல் பந்து யார்க்கராக வர லாங் ஆப் திசையில் நான்கு ரன்கள்.
இரண்டாம் பந்து எட்ஜ் ஆகி சங்கக்காரா அதைத் தவற விட்டு, இரண்டு ரன்கள். இன்னும் நான்கு பந்துகளில் பத்து தேவை.
கடைசி இரண்டு பந்துகளும் வைட் லாங் ஆனில் அரங்கம் தாண்டிப் பறந்து இரண்டு சிக்சர்கள். சென்சேஷனல் மொமென்ட் என்பார்கள்....அப்படி இருந்தது அந்த அடி.
அப்படி ஒரு ஆக்ரோஷ தோனியை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். கடைசி சிக்சரை அடித்து விட்டு வெற்றி உறுதியானதும் அவர் ஆக்ரோஷமாக உச்சரித்த வார்த்தைகளை இங்கே அச்சிலேற்ற முடியாது.
சென்னையின் இன்னிங்சை இந்த யுடியூப் லிங்கில் பாருங்கள். குறிப்பாய் இதன் பதினேழாம் நிமிடத்தில் இருந்து தோனியின் ருத்ரதாண்டவம் காணலாம்.
Apr 7, 2010
ரவீந்திர ஜடேஜா என்னும் பலி ஆடு
"யாரும் செய்யாததை ஒண்ணும் நான் செஞ்சுடலைங்க! எல்லாரும் பண்ணினாங்க! நானும் பண்ணினேன். நான் இளிச்சவாயன், என்னை தண்டிச்சு மத்தவங்களுக்கு அதை ஒரு எச்சரிக்கை ஆக்கிட்டாங்க."
இன்று பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் ஹைலைட்ஸ் பார்க்க நேர்ந்தது. "மேன் ஆப் த மேட்ச்" விருதை தான் அடித்த ஐம்பது ரன்கள் மற்றும் எடுத்த இரண்டு விக்கெட்டுகளுக்காக பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா. அந்த ஒரு நாள் ஆட்டம் நடை பெற்றதற்கு நான்கு நாட்கள் முன்னால்தான் IPL3'ல் இருந்து ஜடேஜா விலக்கப்பட்டிருந்தார். ரவிசாஸ்திரி அழைத்து விருது அளித்துப் பேசுகையில், பேச்சினூடே ஒரு நடுக்கம் ஒலிக்கிறது ஜடேஜாவின் குரலில். அவர் ஏதோ பேச நினைக்கிறார், வேறு ஏதோ வார்த்தையாய் வெளியே வருகிறது. ஒற்றை ரன்னில் நாங்கள் ஜெயித்ததற்கு ஜடேஜாதான் முக்கியக் காரணம் என்று முன்னதாகப் பேசிய தோனி சொல்லிவிட்டுச் சென்றாலும் அந்த ஆட்டத்தில் தன் பங்கு குறித்த பெருமை ஏதும் ஜடேஜாவின் முகத்தில் தெரியவில்லை.
மற்ற IPL அணிகளிடம் தன்னை அதிக விலைக்குத் வாங்கிக் கொள்ளுமாறு பேரம் பேசினார் எனக் கூறி IPL விளையாட ஓராண்டுத் தடை பெற்றிருக்கிறார் ராஜஸ்தான் ராயல் அணியின் ரவீந்திர ஜடேஜா. அவர் தனது தர்மத்திற்குச் சரி என மனதில் பட்டதைச் செய்தார் (எப்படி ஒரு நியாயம் பாருங்க). ஆனால் அது IPL சட்டத்திட்டப்படி தவறாம். இந்தப் பரபரப்பு அடங்குமுன், அந்த முக்கிய வெற்றிக்கு வித்திட்ட "மேன் ஆப் த மேட்ச்" விருது அவருக்கு.
நல்ல வேளை, BCCI ஜடேஜாவிற்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற தடை விதிக்கவில்லை. அந்தமட்டில் அவர் BCCI-யின் நன்றிக்குரியவர்.
ஜடேஜான்னு பேரு வெச்சாலே ஏதோ வில்லங்கம் வருது பாருங்க!
Feb 25, 2010
சச்சின், பதில் சொல்லுங்க!
சமீபத்தில்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு self-assessment rating வாங்கி நொந்து நூடூல்ஸ் ஆனவர் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கே.
இந்த மின்னஞ்சலை அனுப்பியமைக்காக என் இனிய நண்பருக்கு நன்றி. இப்பதிவின் மீதம் ஆங்கிலத்தில் இருப்பதற்காக அவரிடமே ஒரு "ஸாரி".
200 Runs/ 147Balls/ 25X4 / 3X6
Agree you have done GREAT BUT BUT BUT BUT
25 x 4s = 100
3 x 6s = 18
IT implies that you have done 118 Runs in 28 Balls.
And 12 x 2s = 24
58 x 1s = 58
IT means you have done all 200 Runs in only 98 balls
So you have wasted 147-98 = 49 balls
Considering only 1 run scored on each of these balls you could have earned 49 valuable RUNS FOR OUR TEAM
MANAGER’S COMMENT: So you only met the expectations and NOT EXCEEDING (though anyone of our team could not do it) and your Grade is MEDIUM
Trainings for him: Learn from how to STEAL singles. ( you better know what I mean stealing single )
சாதனை மன்னனுக்கு ஒரு சல்யூட்!

இருபத்தி ஒரு ஆண்டுகளாய் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சாதனைகளையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் சாதனை மன்னனுக்கு ஒரு ராயல் சல்யூட்.
முப்பத்து ஒன்பது வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக இருநூறு ரன்களை எடுத்துப் புதிய சாதனை படைத்திருக்கும் சச்சின் இப்போதும் சொல்வது "what next?" - அங்க நிக்கறீங்க சச்சின்!
ஆட்டத்தின் highlight முப்பத்து ஐந்தாவது ஓவரில் நிகழ்ந்தது.
இரண்டு பந்துகள் off சைடில் வைடாக வீசப்படுகின்றன. நூற்று இருபது ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கும் சச்சினை வெறுப்பேற்ற இவ்வாறு செய்கிறார் தென் ஆப்பிரிக்க ஸ்டெயின். மூன்றாவது பந்தும் off சைடில் வர, வலது பக்கமாக இரண்டு அடிகள் நடந்து, மூன்று ஸ்டம்புகளையும் "தோ பாத்துக்கோடா டேய்" என்றவாறு வளைத்து லெக் சைடிற்கு பந்தை திருப்பி பவுண்டரிக்கு அனுப்புகிறார் சச்சின். அவர் பதில் பேசுவது எப்போதும் தன் பேட்டின் மூலம்தான்.
Subscribe to:
Posts (Atom)








.jpg)