தோனியின் அந்த கடைசி ஓவர் அடியை நேரிடையாகவோ அல்லது நேரலையிலோ இன்று பார்க்காதவர்கள் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்.
இருபது தினங்களுக்கு முன் இதே போன்று கடைசி ஓவரில் இதே இர்பான் பதானின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்களை எடுக்காது, சென்னை கவ்வியது மண்ணை.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரும் இர்பானின் கையிலேயே கொடுக்கப் பட்டது. எதிரே இர்பானைச் சந்திக்க அணியின் கேப்டன் தோனி. எடுக்க வேண்டிய ரன்கள் பதினாறு.
முதல் பந்து யார்க்கராக வர லாங் ஆப் திசையில் நான்கு ரன்கள்.
இரண்டாம் பந்து எட்ஜ் ஆகி சங்கக்காரா அதைத் தவற விட்டு, இரண்டு ரன்கள். இன்னும் நான்கு பந்துகளில் பத்து தேவை.
கடைசி இரண்டு பந்துகளும் வைட் லாங் ஆனில் அரங்கம் தாண்டிப் பறந்து இரண்டு சிக்சர்கள். சென்சேஷனல் மொமென்ட் என்பார்கள்....அப்படி இருந்தது அந்த அடி.
அப்படி ஒரு ஆக்ரோஷ தோனியை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். கடைசி சிக்சரை அடித்து விட்டு வெற்றி உறுதியானதும் அவர் ஆக்ரோஷமாக உச்சரித்த வார்த்தைகளை இங்கே அச்சிலேற்ற முடியாது.
சென்னையின் இன்னிங்சை இந்த யுடியூப் லிங்கில் பாருங்கள். குறிப்பாய் இதன் பதினேழாம் நிமிடத்தில் இருந்து தோனியின் ருத்ரதாண்டவம் காணலாம்.
No comments:
Post a Comment