இரு கடிதங்களில் இரண்டாம் கடித அன்பரும் நண்பரான இனிய நிகழ்ச்சி நடந்தேறியது.
அபிலாஷ் எழுத்துக்கள் எதையும் வாசித்தவனில்லை நான். அவரிடம் தனித்த விரோதமோ, என் எழுத்துக்களை அவர் விமரிசிக்க அவர் எழுதியதை நான் விமரிசிக்க என எங்களிடையே ஏதும் நிகழ்ந்ததில்லை இதுவரை.
நேற்று நடந்த முட்டல் மோதல்களுக்குப் பின் இன்று காலை அபிலாஷ் தளத்தைக் குறித்தும் என் தளத்தில் எழுதிவிட்டு அலுவல்களைப் பார்க்கச் சென்றுவிட்டேன். நண்பர் பரிதி அனுப்பிய குறுஞ்செய்தி வாயிலாக அபிலாஷ் தான் எழுதியவைகளுக்கு வருத்தம் தெரிவித்து தன் தளத்தில் எழுதியிருந்ததை அறிந்தேன்.
அபிலாஷின் அந்த இடுகை: இன்று கற்றவை
தவறு செய்தல் மனித இயல்பு. அதற்காக உணர்ந்து வருந்தி மன்னிப்பு கேட்டல் மாமனிதப் பண்பு. அதை தன் பதிவு மூலம் எனக்கு உணர்த்தியமைக்கு அபிலாஷுக்கு நன்றி.
மேலும், என் தேவையற்ற சீண்டல்கள் மூலம் முன்னமே தன் மீது பட்டிருந்த காயங்களை மேலும் ரணமாக்கிக் கொண்ட அபிலாஷிடம் நானும் என்னை மன்னிக்கக் கோருகிறேன்.
4 comments:
என்னங்க இது அநியாயமா இருக்கு- ரத்த ஆறு ஒடுமின்னு பாத்தா தோள்ள கை போட்டுக்கிட்டு வரீங்க? பிடிவாதம் இல்லாதவங்கெல்லாம் எதுக்கு விவாதம் பண்ணறீங்க? கொஞ்சம் கூட நல்லா இல்லை- இப்போ நான் தயார் பண்ணி வெச்சிருக்கிற நக்கல் கேலி கிண்டல் குசும்பை எல்லாம் என்ன பண்றதாம்? கவுத்திட்டீங்களே...
(ஆங்! அதா அந்த பிளாகுல ஒரு காட்ஜெட்டை காணமாம்.. கடைசியா வந்த பதிவர் நண்பர்தான் தூக்கிட்டு போயிருக்கணும்னு சத்தம் போட்டுகிட்டு இருக்காரு ஒருத்தரு ... போயி என்னான்னு கேட்டுட்டு வந்திடுறேன்...நோ! வர மாட்டேன்)- சமாதானமா போற பதிவர்களை எல்லாம் கட்டம் கட்டறதா பின்னூடமிடுவோர் சங்கத்துல பற்பலமனதா முடிவு எடுத்திருக்கோம். நீங்களும் உங்க ப்ளாகும் @#*@&%$*#- நல்லா வருது வார்த்தை.
நன்றி!
Giri to Natbas - Venaam..... valikkidhu..... aludhuduven......
ஆனந்தக் கண்ணீர்னு நினைச்சேன்- ரத்தக் கண்ணீரா! :)
Post a Comment