Apr 16, 2010

ஹலோ ஹலோ - தமிழ்க் கொலை



நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு பதிவு. ஒரு மறுமொழி வடிவில் இன்று ஜெயமோகன் அவர்களின் "ஹலோ ஹலோ" பதிவிற்குக் கீழே காணக் கிடைத்தது. அன்பர் பிரசன்னா படம் பிடித்தது போல் எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் பதிவிற்கான இணைப்பு கீஈஈஈ....ழே...

*(பண்பலை = FM Radio)



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய காலை வணக்கம். சமீபமாக உங்கள எழுத்துகளில் நகைசுவை சற்று தூக்கலாக இருக்கிறதே… உங்களின் இந்த கட்டுரையை யாராவது வாசிக்க சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு கேட்டால் அப்படியே ஒரு பண்பலை ஒலிபரப்பை நேரடியாக கேட்டது போலவே இருக்கும்.
தகவல் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் பண்பலைகளின் பங்களிப்பை இன்று நாம் ஒதுக்கி விட முடியாது. பல சிறிய நிறுவனங்களின் விளம்பரங்களால் பலன் அளித்தும் பலன் அடைந்தும் கொண்டு இருக்கும் இது போன்ற பண்பலைகள் பல மாவட்டங்களில் வேருன்றி போய் இருக்கின்றன.
ஒரு நல்ல விளம்பரதாரர் எனவும் , ஒரு மிக சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது தான். ஆனால் அந்த மாவட்ட வட்டார வழக்கில் பேசுகிறேன் என இவர்கள் தமிழை படுத்தும் பாடு சொல்லி மாளாது.
ஒரு பாடலை விளம்பரங்களுக்கு இடையில் இவர்கள் போடுவதில் இருக்கும் ஆர்வம் அந்த பாடல் பற்றிய சரியான் தகவல்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சிறிதும் இல்லை.
மதுரை பண்பலை ஒன்றில் நேற்று காலையில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறேன் என ஒரு தொகுப்பாளினி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சொல்கிறார். பொங்கல் அன்று என்ன வாழ்த்துகள் கூறுவார் என தெரியவில்லை.
பாரதியார் பிறந்த நாள் அன்று ஒருவர் பாரதியாருக்கே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
தமிழ் பற்றியும் தமிழ் பேச்சுக்கள் பற்றியும் சரியான விழிப்புணர்வு இல்லாத இவர்களின் குரல்களை கேட்டு தான் தமிழனின் பொன் காலை பொழுது விடிகிறது ….
என்ன செய்வது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த நவீன சோதனை….. மேற்சொன்ன அனைத்தையுமே உங்களின் இந்த கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது.


அன்புடன்
பிரசன்னா






நன்றி: ஹலோ! ஹலோ!



5 comments:

natbas said...

இளைஞ்சர்கள் தமிழ் பேச முயற்ச்சி பண்ணறாங்களே அதை பாராட்டரத்தை விட்டுப்புட்டு இப்படியெல்லாம் அவங்களை கிண்டல் கேலி பண்ணக்கூடாது. இதை நான் வன்மையாக கண்டிக்கறேன்.

(ஆமாம், எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகளோடு பதிவு பண்ற என்னை மாதிரி வலிப்பதிவாலர்களை எப்போ கிண்டல் பண்ணப் போறீங்க?)

Giri Ramasubramanian said...

தமிழ்க் கொலைப் பதிவாளர்களுக்குத் தனியா ஒரு கச்சேரி இருக்கு!

natbas said...

ஆஹா... அதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...சீக்கிரமா அந்தப் பதிவை போடுங்க.

Giri Ramasubramanian said...

Andhap padhivu... appuram enakku varra thamizhk kolai mirattalgalai yaaru samalikkaradhu sir...

virutcham said...

ஜெயமொஹனே நிறைய வட்டார வழிக்கிலே தான் எழுதிகிட்டு இருக்காரு பதிவுகளில். முக்கியமா நகைச்சுவை பதிவுகளில். ஒருவேளை அவரை நேரிடையாக கேட்க முடியாமல் வாசகர் மறைமுகமாக கேட்கிறாரோ? வட்டார வழக்கு தவறில்லை அதை சரியாக சொல்லும் போது. ஆனால் அதே தொடர்ந்தா சரியில்லை. FMல் பேசுபவர்கள் தமிழை style லாக பேசுவதாக நினைத்து எதோ மாதிரி பேசுவது எரிச்சலூட்டுகிறது. தமிழை தூக்கி நிறுத்துவதாக சொல்லும் குழுமத்தின் channels இதற்கு விதிவிலக்கில்லை

எனது தமிழ் கொலை குறித்த ஆதங்கம் இதோ இங்கே http://www.virutcham.com/?p=470 ( தலைப்பு :இது தமிழா?)

http://www.virutcham.com

Related Posts Plugin for WordPress, Blogger...