நான் எப்போதும் பெண்கள் பக்கம் பரிந்து பேசுபவன். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., சூப்பர்ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் இந்த மூவருக்கும் அடுத்ததாக தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்க ஒருவர்(ன்) உண்டென்றால் அது நான்தான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சரி அவசரமாக நண்பனைப் பார்க்க வேண்டியிருந்ததால், திரும்பி வந்ததும் காரசாரமாக பாஸ்கர் அவர்களுக்கு கச்சேரி வைத்துக் கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.
வா மச்சான் என பரிவுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றான் நண்பன். "எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு நண்பனின் அண்ணி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். சமீபத்தில்தான் நண்பனின் அண்ணனுக்கு கல்யாணமாகி இருந்தது. "நல்லா இருக்கேன் அண்ணி", என்றவாறு அந்தக் காப்பியை குடித்து முடித்தேன். "காபி நல்லாருக்கு", என்று நான் சொல்ல, "அது டீ", என பதில் வந்து என்னை அசடு வழிய வைத்தது. ஹிஹி என சமாளித்தேன்.
"அம்மா எங்கேடா?", என நான் கேட்க, ஜன்னலைத் திறந்து வீதி முனையைக் காட்டினான். அங்கே அவன் அம்மா ஒரு பெட்டிக்கடையில் அமர்ந்தவாறு மிட்டாய், பிஸ்கட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். "டேய், என்னடா நடக்குது?, இப்போ என்ன தேவைன்னு அங்க கடை போட்டுக் கொடுத்திருக்கீங்க?", எனக் கேட்டேன். அவர்கள் வீட்டில் அவன் அம்மா உழைத்துத்தான் உலை பொங்கும் அவசியம் இல்லை. சுமாராய் வசதி உள்ள குடும்பம்தான்.
"மச்சான் உனக்கே தெரியும், அண்ணனுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ மச்சான், ரெண்டு சிங்கத்த ஒரு கூண்டுல வெக்கலாம், ஆனா ரெண்டு பொம்பளைங்கள ஒரு வீட்டுல வெக்கக் கூடாதுடா!" என ஏதோ தத்துவம் உதிர்த்தான். எனக்கு ஏதோ புரிந்தது, ஏதோ புரியவில்லை. "சரிடா, நான் வர்றேன்", எனப் புறப்பட்டு வந்தேன்.
ஒருவேளை பாஸ்கர் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினது சரிதானோ? நீங்கள் யாராவது சொல்லுங்களேன்.
10 comments:
இந்த ஆய்வுக் கட்டுரைகளை நம்ப முடியாது- இன்னிக்கு ஒண்ணு எழுதுவாங்க நாளைக்கு ஒண்ணு எழுதுவாங்க. என்னை பொருத்தவரையில இத எல்லாம் நம்பக் கூடாது, ஆனா நம்பாமயும் இருக்க முடியாது.
நீங்களே யோசிச்சுப் பாருங்க, பெண்கள் ஆண்களைப் பொதுப்படியாத்தான் திட்டுவாங்க, ஆம்பளைங்களே மோசம், அப்படி இப்படியின்னுட்டு. ஆனா குறிப்பா திட்டு வாங்கறது மத்த பெண்களாத்தான் இருக்கும்.
முன்னுக்கு வந்த பெண்களை மத்த பெண்கள் வெறுக்குறாங்க- ஆனா, அவங்க தங்களைப் புகழ்ந்தா ஏத்துக்கறாங்க- அப்படிங்கறது ஏத்துக்க கசப்பாதான் இருக்கு. எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்கன்னு வெச்சிக்குங்க. இருந்தாலும், அப்படி இப்படி ஒண்ணு ரெண்டு இடத்துல நடந்தா, பேசாம புகழ்ந்து போட்டு போயிறலாம்- இது பெண்களுக்கு உபயோகமான பாடம்னு நினைக்கிறேன்.
http://neurologicalcorrelates.com/wordpress/2008/03/06/the-neuropolitics-of-hillary-stay-at-home-moms-penalize-successful-women- ஹிலாரி கிளிண்டனை வீட்டில இருக்கற பெண்கள் ஏன் ஆதரிக்கலை, http://jurylaw.typepad.com/deliberations/2008/01/when-women-judg.html- பெண்கள் நீதிபதிகளா இருக்கற இடத்துல நஷ்ட ஈடு கேக்கற பெண்களுக்கு அது கிடைக்கறது அவ்வளவு சுலபமா இல்ல, என்பது போன்ற கருத்துகளுக்கு நிரூபனமா இந்த ஆய்வை சுட்டியிருக்காங்க!
உங்கள் எதிர்வினையே ஒரு கட்டுரைக்கு நிகராக இருக்கிறது...
நன்றி!
@Giri
திட்டுறதுனா, அதுவும் காரசாரமா திட்டுறதுன்னா உடனே பண்ணிடணும். நீங்க திட்டியிருந்தாக்கூட சரியா இருந்திருக்கும், திட்டாம விட்டதுதான் தப்பாப் போச்சு- விஷயத்துக்கு வரேன்:
அந்த ஆய்வு முடிவை நான் சரியா படிக்காம தப்பு தப்பா பதிவு பண்ணிட்டேன், முதலிலே அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.
சுருக்கமா சொன்னா, அந்த ஆய்வு இதைத்தான் நிரூபணம் பண்ணுது: ஒரு பெண் வெற்றி பெறுவதை ஆண், பெண் இருவருமே விரும்புவதில்லை- ரெண்டு பாலாருமே அதை தண்டிக்க விரும்பறாங்க. ஆனா, தன்னைப் புகழ்ந்து பேசினா பெண்கள் தாங்கள் எண்ணத்தை மாத்திக்கிட்டு அந்த வெற்றி பெற்ற பெண்ணை ஆதரிக்க ஆரம்பிச்சுடறாங்க- அதனால, பெண்ணுக்கு எதிரி பெண்தான்னு சொல்றது தப்பு. பெண்ணுக்கு எப்போதும் எதிரி ஆண்தான்- ஏன்னா, அவன் பாராட்டினா கூட பெண்கள் முன்னேறுவதை ரசிக்கறது இல்லை.
அதனால பெண்களைப் பத்தி தப்பா சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க. நிச்சயமா பெண்ணுக்கு எதிரி பெண் என்று இந்த ஆய்வு சொல்லவில்லை (அப்போ, பெண்கள் புகழ்ச்சிக்கு மயங்குராங்கன்னு அது ப்ரூவ் பண்ணுதான்னு ஒரு கேள்வி வரும்- ஆளை விடுங்க சாமி! இந்த விளையாட்டுக்கு நான் வரலை!)
@Giri,
No survey or for that matter no person can determine what a women thinks or who is her enemy(or her friend), everyone is her own individual, so sterotyping them with these kinds of suverys is totally chauvinistic and i don't expect that from(especially from) you.
@ Sharmilaji
I do not have any conclusions here. I am neither accepting this point, nor denying. I am just asking my readers to express their opinion.
As I told I am fourth after those superstars to support Tamil ladies, pls remember that!
பாஸ்கர்ஜி
எப்படியோ ஒரு குழப்பப் பதிவு எழுதி என்னையும் உசுப்பேத்தி விட்டுட்டு என்னோட தாய்க்குல வாசகி கிட்ட இருந்து "You too Brutus"-ன்னு திட்டு வாங்க வெச்சிட்டீங்க.
@Giri
பர்சனலா ஒண்ணு சொல்ல ஆசைப்படறேன்...
நாம நண்பர்களா இருக்கலாம், அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் க்ரிடிசைஸ் பண்ணக்கூடாதுன்னு இல்லே.
சமீபத்துல ரெண்டாம் 'கல்யாணம்' பண்ணிக்கிட்ட ஷோயாப் மாலிக் சொன்னது நினைவு இருக்கா: நான் வேற பெண்ணை மனசில நினைச்சிக்கிட்டு இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினேன், அதுனால அந்தக் கல்யாணம் செல்லாதுன்னு? சத்தியமான வார்த்தைங்க.
ஒரு பொய்யான பிம்பத்தோட நட்பு பாராட்டுறது நட்பே இல்லைங்க.. "நீ சொன்னது தப்பு... ஆச்சா போச்சா"ன்னு நீங்க திட்டினாலும் நான் ஏத்துக்கணும், அப்படி ஒரு பக்குவம் இல்லாம நான் இருந்தா என்னையெல்லாம் குளிரப்பண்ணி என்னங்க பிரயோசனம்? அதனால உங்களுக்கு பிடிக்கலன்னா இரக்கமில்லாம வறுத்தெடுங்க , தப்பே இல்ல. அதை நான் வரவேற்கிறேன்.
அதேதான் எல்லாருக்கும்: நம்ம மனசுல இருக்கறதை சொல்லறோம், தப்பா இருந்தா சொல்லுங்க, திருத்திக்கறோம்: ஆனா அது எப்படி இப்படி சொல்லலாம்னு கேட்டா எப்படிங்க? இல்ல, அப்படிதான் கேப்பேன்னு சொன்னா, உங்ககிட்ட ஒரு கோரிக்கை: சமயம் கிடைக்கிறபோது, "எப்போதும் பிழையற சிந்திப்பது எப்படி?"ன்னு ஒரு புத்தகம் எழுதுங்க, அதோட முதல் காம்ப்ளிமென்டரி காபியை நான் வாங்கிக்கறேன்.
நான் அம்பேல்!
Post a Comment