இது எத்தனை உண்மையான வார்த்தை. இதை நானும் எத்தனை பேருக்கு உபதேசித்திருப்பேன். ஆனால் நானாகப் புரிந்து கொள்ள எனக்கு அவ்வப்போது இனிய அல்லது கசப்பான அனுபவங்கள் தேவைப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் எனக்கு இரண்டு வெவ்வேறு அனுபவங்கள் கிட்டின. ஒன்று நன்று, இன்னொன்று தீது.
கடிதம் 1
மனமாற்றமும் மதமாற்றமும் பதிவிற்கு அன்பர் தமிழ் மீரான் என் கருத்தை மறுத்து எதிர்வினை இட்டார். அவர் கருத்தை நான் ஒப்புக்கொள்ளாவிடினும் அதற்கு நேற்று என்னால் இயன்றவரை தன்மையாக ஒரு பதிவு வழியாகவே என் பதிலைச் சொல்லியிருந்தேன்,. ஒரே கடிதத்தில் நண்பரானார் தமிழ் மீரான்.
கடிதம் 2
என் நண்பனின் தாயார் "சின்னப்பயல்களிடமும், நாய்க்குட்டிகளிடமும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது", என அடிக்கடி சொல்வர். எந்த நேரத்திலும் உங்களுக்கு சபையில் அவமானம் நேரலாம். நான் செய்ததே தவறு எனினும், இடம் தெரியாமல் ஒரு அரைவேக்காட்டுத் தளத்தில் நேற்று என் கருத்து ஒன்றை கிண்டல் தொனியில் சொல்லி சற்றே சேற்றை வாரிப் பூசிக்கொண்டேன்.
அது பற்றிய விவரங்களை இங்கே தர விருப்பமில்லை ஏனென்றால்....?
ஒரு கற்பனைக் காட்சிக்கு வாருங்கள்....
பின்னொரு நாளில் நான் ஒரு வேளை பிரபல எழுத்தாளனாகி புத்தகங்கள் வெளியிடும் நிலைக்கு வருகையில் நான் மேடையில் அமர்ந்திருக்கிறேன். முன் வரிசையில் என் நண்பர் பரிதி ஆடலரசன். அவர் அருகில் என்னைப்பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர்,
"யாரு சார் இந்த எழுத்தாளர், புதுசா இருக்காரு?", என என்னைக் காட்டி வினவ...
நண்பர் பரிதி: "அவரா, அவர்தான் சார் அந்த இந்திரஜித் பய கிட்ட கெட்ட கெட்ட வார்த்தையில ஒரு தடவ திட்டு வாங்கினாரே அவர்தான்", என எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தர.....தேவையா இதெல்லாம் எனக்கு.
இனி இணையத்தில் அடக்கி வாசிக்க வேண்டும்.
4 comments:
முடியல...கடிதம்-2 க்கு கொடுத்த பின்கதைசுருக்கம்... தாங்கமுடியல... யாருக்கும் தெரியாம தனியா சிரிச்சேன்....அலுவலகங்க..
உங்க முடிவை நான் வரவேற்கிறேன். இதுவெல்லாம் நமக்குத் தேவை இல்லாத வேலை.
நேத்திக்கு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை ஒரு நண்பர் அனுப்பினார். "கல்லாதவரின் கடையென்ப கற்றறிந்திருந்தும் கல்லார் அவையஞ்சுவார்"னு.
"என்னப்பா விஷய்ம், இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் போட்டு திட்டறியே?"ன்னு கேட்டேன்.
"நிறைய தெரிஞ்சிருந்தும் தெரியாதவங்களுக்கு நடுவுல பேச பயப்படறவன் படிச்ச படிப்பு படிப்பேயில்லை"ன்னு பதில் சொன்னான்.
"கேக்க நல்லாத்தான் இருக்கு, ஆனா அவங்க கூட வாதம் பண்ணினா அன்றாயரை உருவிடுவாங்களே"ன்னு சொன்னேன்.
பதில் வரலை- இவன் கிட்ட திருக்குறள் பேசினது நம்ம தப்புன்னு அமைதி ஆயிட்டாரு.
உங்க பதிவைப் படிச்சுட்டு அங்க போனப்பறம்தான் தெரிஞ்சுது நீங்க ஏன் வருத்தப்படறீங்கன்னு.
பக்கத்துல இருக்கற மாரியம்மன் கோவிலுக்கு போயி மந்திருச்சுக்கிட்டு பயப்படாம அங்க போயி பாருங்க: அவரு கவுரவம் அது இதுன்னு ப்ரெஸ்டீஜ் பாக்காம வெளிப்படையா மன்னிப்பு கேட்டு "நானும் ஒரு ஜெண்டில்மேன்"னு நிரூபிச்சிருக்கார்.
உங்களுக்கு இன்னொரு நண்பரும் கிடைச்சிட்டார்: உங்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க அவரே வந்தாலும் வருவாரு.. அப்போ உங்க நண்பர் பரிதி ஆடலரசன் (எங்கிங்க இந்த மாதிரி பேரெல்லாம் புடிக்கறீங்க!), "எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க!"ன்னு ஆனந்தக் கண்ணீரைத் தொடச்சிக்குவார். இதுவும் வந்து போகும்...
நாம பின்னூட்டம் இடும் தளங்களில் எழுதுபவரின் பின்புலம், வயது இதெல்லாம் வைத்து அவர்களது பக்குவத்தை நாம் எடை போட்டுவிடக் கூடாது என்பதை நானும் ஒரும் முறை தெரிந்து கொண்டேன். பதிவரின் முதிர்ச்சி, செய்யும் தொழில் எல்லாம் கணக்கில் கொண்டு அவர்ர்களுக்கு மெச்சூரிட்டி இருக்கும் என்று நாம் நினைத்தால் அது தவறு. பதிவுலக பிரபலங்களின் மெச்சூரிட்டி எல்லாம் மைனஸ் லெவல் தான் என்பது என் அனுபவம். ஒரு வேளை பிரபலம் என்பதாலேயே அவர்கள் தங்களை தாங்களே உயர்வான இடத்தில வைத்துக் கொண்டு சொல்லும் கருத்துக்கு ஆம், பிரமாதம் என்று ஜால்ரா போடா வேண்டும் என்று எதிர் பார்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.
http://www.virutcham.com
கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
@ உங்கள் நாள் மிக இனிமையாக அமைய ஒரு வகையில் நான் காரணமாய் இருந்தமைக்கு மகிழ்கிறேன்.
Post a Comment