எழுத்துலகக் குடுமிப்பிடிச் சண்டைகள் காலம்காலமாக நாம் பார்த்து வருவது. ஆனால் அதன் பரிமாணம் அடுத்தடுத்த அசிங்கக் கட்டங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தும் போது நமக்கு "சே" என்றாகிறது.
சாருவைப் பற்றி நாம் அனைவரும் அறிந்தது. அவர் பயன்படுத்தும் ஆயுதங்கள் எப்போதும் விகாரமானவைகள். இப்போது அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் "அபிலாஷ்".
அபிலாஷ் ஜெயமோகனை தன் முன்னாள் குருநாதர் என விளிக்கிறார். அவர் இப்போது சாருவைத் தன் தற்கால குருநாதராக தத்து எடுத்திருப்பதால் இந்த விளிப்பு. அபிலாஷ் நான்கு முழ நீளத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பாருங்கள். எனக்கு அப்படியே கண்ணைக் கட்டுகிறது.
அது தன்னிலை விளக்கமா அல்லது தன்னிரக்க விளக்கமா எனத் தெரியவில்லை. ஆனால் அக்கட்டுரையின் காரசாரம் அபிலாஷின் தத்து குருநாதரின் தடாலடி தோரணையில் இருப்பது அபிலாஷின் உண்மை மீதான பலப்பல கேள்விகளை எழுப்புகிறது.
நேற்றைக்கு திடீரென ஜெயமோகன் தன் தளத்தில் வணக்கம் எனப்போட்டு, தான் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இணையத்தில் எழுதுவதில்லை என்கிறார்..ஜெயமோகனின் "ஆன்மாவைக் கூவி விற்றல்" அவரது இந்த முடிவிற்கான இடை ஆரம்பம். அபிலாஷின் உயிரோசைக் கட்டுரை "கிளி எடுத்த சீட்டு" முதல் ஆரம்பம்.
எல்லாம் அரசியல். அதுதான் இப்போதைக்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
8 comments:
புர்ல
@யாசவி
நான் புரியிற மாதிரி சொல்றேன் கவனமா கேளுங்க
கொக்கரக்கோ கும்மாங்கோ...
இப்ப புர்ல...
அபிலாசைக்கும் வணக்கத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை ,
ஜெயமோகன் ஜனவரியிலேயே நாவல்களை முடிக்க வேண்டியிருப்பதால் லீவு என சொல்லியிருந்தார் , இந்த சில்லுண்டுகளுக்கெல்லாம் அசருகிற ஆளா ஜெ ?
இதை ஒரு தனி பதிவா போடணும், ஆனா யாரு படிப்பார்கள்? அதனால இங்கேயே எழுதிடறேன்.
ஜெமோ ஏன் 'இடைவேளை' கார்டு போட்டாருன்னு நமக்கு தெரியாது. அப்படியே அது இந்த விவகாரத்தின் விளைவுதான்னு சொன்னா, அது நல்லதுக்குதான். என்னைப் பொறுத்த வரை இந்த தனி மனித தாக்குதல்கள் குறித்து கவலைப் பட அவசியம் ஜெமோவுக்கு இல்லை. அதன் பின்புலத்தை விளக்கிக்கிட்டு இருக்கற தேவையும் அவருக்கு இல்லை- சொல்லப் போனா அது அவரது திறமைக்கு ஒவ்வாத வேலை.
நீங்களும் நானும்கூட நல்லா நாக்க புடிங்கிக்கற மாதிரி யாரை வேணா திட்டலாம்: விமரிசனம் என்கிற பேர்ல உண்மையும் பொய்யும் கலந்து என்ன வேணாம் எழுதலாம். என்னை விடுங்க, உங்களுக்கு இருக்கற திறமைக்கு நீங்க ஒரு நல்ல, உருப்படியான எதிர்மறை விமரிசனம் கூட ஜெமொவோட எழுத்தைப் பத்தி எழுதலாம். ஆனா, அவரு எழுதற சில நாவல்கள் மாதிரி எல்லாராலும் எழுத முடியுமா?
ஜெமொவோட பேரு ஒரு நாப்பது அம்பது வருசத்துக்கு அப்புறம் பெசப்படுதுன்னு வெச்சுக்குங்க, அப்போ எல்லாரும் எதைப் படிப்பாங்க? அவரு எழுதின கதைகளையா, இல்லை இந்த மாதிரியான தன்னிலை விளக்கங்களையா?
----
வலைத்தளங்கள் narcissistகளின் சுவர்க்கம். (narccissistக்கு தமிழாக்கம் தெரியலை- அதனால, குளிக்கப் போன இடத்துல தண்ணில ஒரு அழகான உருவத்தைப் பாத்து மனங்குலைஞ்ச பரசுராமனின் தாயார ரேணுகா அம்மையாரின் நினைவாக ரேணுகம் என்ற சொல்லை உபயோகிக்கிறேன்).
வலைதளங்கள் எப்படிப்பட்ட பத்தினியையும் ரேணுகம் பண்ணக் கூடியவை. முதலில ஒரு இனிமையான அனுபவத்தை, நாம நல்லா எழுதின படைப்புகளை பகிர்ந்துக்கலாம்னு வலைதளத்துல எழுத ஆரம்பிப்போம்.
அங்க நம்மை பாராட்ட நாலு பேர் வருவாங்க. அவங்களை நாம பாராட்டுவோம், அவங்களோட உரையாடலுக்கு தனி கவனம் செலுத்துவோம். நாலு பேர் திட்டவும் செய்வாங்க. அப்போ என்ன பண்ணுவோம்? வலுவான வாதங்களைப் பண்ணி அவங்களை வாயடைப்போம். அப்புறம் என்ன? நம்ம வலைதளத்துல நம்ம அழகைக் கண்டு நாமே பிரமிச்சுப் போய் நிப்போம்.
அப்புறம்தான் தோணும்? "இதுக்குத்தான் ஆசைப்பட்டாயா ------------?" ன்னு? (சில பேருக்கு அப்படியெல்லாம் தோணாதுன்னு வையிங்க.).
ஜெமோ தன்னைத் தானே கடுமையா விமரிசனம் பண்ணிக்கற எழுத்தாளர். இந்த இடைவேளைக்கு அப்புறம், வாசகர்கள் மற்றும் விமரிசகர்களின் புகழ்ச்சி இகழ்ச்சி ரெண்டையும் துச்சமா மதிச்சு அற்புதமான படைப்புகளை ஆத்மார்த்தமாக எழுதுகிற செகண்ட்-ஹாப் வரும்னு நினைக்கிறேன்.
எப்படி பாத்தாலும் ஜெமோ என்கிற எழுத்தாளருக்கு இந்த விவகாரமெல்லாம் அவரது எழுத்தாள தர்மத்தை திசை திருப்புகிற விரய யத்தனங்கள்தான்.
இந்த உண்மையை அவர் உணரணும்னு சொல்றது அதிகப்பிரசங்கித்தனம். அதை விட முக்கியம் அவரோட வாசகர்கள் இதை உணரணும்: அவரு இப்படி சொல்லிட்டாரேன்னு போன் போட்டு துக்கம் விசாரிக்கறது, மெசேஜ் அனுப்பறது, பின்னூட்டம் போடறது, தன்னோட வலைதளத்துல எதிரிகளைப் பந்தாடறதுன்னு அவரை ஏத்தி விடாம "ஒழுங்கா கதை எழுதுங்க தல. நான் டிஸ்டர்ப் பண்ணலை"ன்னு சொன்னா அவருக்கு அதுவே பெரிய சேவை.
மொக்கைக்கு மன்னிச்சிக்குங்க. ரொம்ப ரத்தம் வருதா, சொல்லுங்க, இந்த ப்ளேடை போலீசுகிட்ட ஒப்படைச்சிட்டு சரண் ஆயிடறேன்.
@ யாசவி
இது அவ்ளோ எளிமைய புரியற விஷயம் ஒண்ணும் இல்லை.
ஏன்னா, நானே அரைகுறையா புரிஞ்சிதான் எழுதறேன். அப்டியாவது எதாவது உங்கள மாதிரி இணையப் புலிங்க கிட்டருந்து எதாவது கத்துக்கலாம்னு.
எப்புடி?
@ தேடுதல்
அட்டகாச பதில். நன்றி.!!
@மதி
அவ்வாறெனின் மிக்க மகிழ்ச்சி
Post a Comment