"யாரும் செய்யாததை ஒண்ணும் நான் செஞ்சுடலைங்க! எல்லாரும் பண்ணினாங்க! நானும் பண்ணினேன். நான் இளிச்சவாயன், என்னை தண்டிச்சு மத்தவங்களுக்கு அதை ஒரு எச்சரிக்கை ஆக்கிட்டாங்க."
இன்று பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் ஹைலைட்ஸ் பார்க்க நேர்ந்தது. "மேன் ஆப் த மேட்ச்" விருதை தான் அடித்த ஐம்பது ரன்கள் மற்றும் எடுத்த இரண்டு விக்கெட்டுகளுக்காக பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா. அந்த ஒரு நாள் ஆட்டம் நடை பெற்றதற்கு நான்கு நாட்கள் முன்னால்தான் IPL3'ல் இருந்து ஜடேஜா விலக்கப்பட்டிருந்தார். ரவிசாஸ்திரி அழைத்து விருது அளித்துப் பேசுகையில், பேச்சினூடே ஒரு நடுக்கம் ஒலிக்கிறது ஜடேஜாவின் குரலில். அவர் ஏதோ பேச நினைக்கிறார், வேறு ஏதோ வார்த்தையாய் வெளியே வருகிறது. ஒற்றை ரன்னில் நாங்கள் ஜெயித்ததற்கு ஜடேஜாதான் முக்கியக் காரணம் என்று முன்னதாகப் பேசிய தோனி சொல்லிவிட்டுச் சென்றாலும் அந்த ஆட்டத்தில் தன் பங்கு குறித்த பெருமை ஏதும் ஜடேஜாவின் முகத்தில் தெரியவில்லை.
மற்ற IPL அணிகளிடம் தன்னை அதிக விலைக்குத் வாங்கிக் கொள்ளுமாறு பேரம் பேசினார் எனக் கூறி IPL விளையாட ஓராண்டுத் தடை பெற்றிருக்கிறார் ராஜஸ்தான் ராயல் அணியின் ரவீந்திர ஜடேஜா. அவர் தனது தர்மத்திற்குச் சரி என மனதில் பட்டதைச் செய்தார் (எப்படி ஒரு நியாயம் பாருங்க). ஆனால் அது IPL சட்டத்திட்டப்படி தவறாம். இந்தப் பரபரப்பு அடங்குமுன், அந்த முக்கிய வெற்றிக்கு வித்திட்ட "மேன் ஆப் த மேட்ச்" விருது அவருக்கு.
நல்ல வேளை, BCCI ஜடேஜாவிற்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற தடை விதிக்கவில்லை. அந்தமட்டில் அவர் BCCI-யின் நன்றிக்குரியவர்.
ஜடேஜான்னு பேரு வெச்சாலே ஏதோ வில்லங்கம் வருது பாருங்க!
2 comments:
ஜடேஜா பாவம். மும்பைக்கு வரச்சொல்லி ஆசை காட்டினவரு அம்பானி. ரெலயன்ஸ் கம்பனில வேலை வேற தரதா சொல்லியிருக்காங்க. சின்னப் பையன், நல்ல வேலைல செட்டில் ஆக ஆசைப்பட்டிருக்கான். போட்டு தள்ளிட்டாங்க. இதில பாதிக்கப்பட்டது அவரும், ஆர் ஆர் டீமுந்தான். அம்பானி பெரிய பணக்காரர், தப்பிச்சுட்டார். அந்த ஆளை ஒண்ணும் செய்ய மாட்டாங்க.
@zzz...
நன்றிங்கண்ணோவ்
Post a Comment