Apr 11, 2010

மாதவரம் மாதாகோயில் திருவிழா


சரியாக நான் மாதவரம் வந்து சேர்ந்து இருபது வருடங்கள் ஆகின்றன. வருடம் தவறாமல் நான் பங்கேற்கும் ஓர் உள்ளூர் உற்சவம் உண்டு என்றால் அது எங்கள் ஊரில் அமையப் பெற்றுள்ள புனித செபஸ்தியார் திருக்கோயிலின் ஆண்டு விழாதான். எங்கள் உள்ளூர் பாஷையில் நாங்கள் "மாதா கோயில் திருவிழா" என இவ்விழாவை அழைக்கிறோம். ஐம்பத்தி எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு கிராமத் திருவிழாவாக நடைபெறும் உற்சவம் இது.

புனிதவெள்ளி, ஈஸ்டர் சென்றபின் வரும் சனிக்கிழமை மாலை முதல் மறுநாள் ஞாயிறு மதியம் வரை இத்திருவிழா நடைபெறுகிறது. கத்தோலிக்க திருக்கோயிலான புனித செபஸ்தியார் திருக்கோவிலின் ஆண்டு விழாவே இந்த உற்சவம். மத பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் இவ்விழாவில் பங்கேற்பது இதன் முக்கியச் சிறப்பு. மாதாகோயிலில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும். அனைத்துத் தரப்பினரும் இதில் கலந்துகொண்டு மாதாவின் அருள் வேண்டிச் செல்கின்றனர். ஞாயிறு பிறந்தவுடன் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மாதா திருவீதி உலா நடைபெறுகிறது. 

பழைய பள்ளி காலத் தோழர்களை விழாவில் சந்தித்து அவர்களுக்கு கல்யாணமானது, குழந்தை பிறந்தது போன்ற தகவல்களை (updates) அறிந்து கொள்வது ஒரு இனிய அனுபவமாயிருக்கும்.

ஒரு வாரம் முன்னதாகவே சாலை ஓரங்களில் கடைகள் முளைக்கின்றன. மூலக்கடை முதல் தபால் பெட்டி என்னும் பகுதிவரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் அனைத்து வகைக் கடைகளும் திறக்கப் படுகின்றன. பொம்மைகள், பாத்திரக்கடைகள், வளையல்கடைகள், ராட்டினங்கள், ஐஸ் வண்டிகள், பலூன் கடைகள், நரிக்குறவர்களின் உண்டிவில் அணிவகுப்புகள், பொரி கடலை பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் என ஒரு கிராமத்துத் திருவிழாவில் என்னென்ன இருக்கவேண்டுமோ அனைத்தையும் கொண்டிருக்கின்றன இக்கடைகள்.

சென்னை மாநகரத்தின் விளிம்பில் மாதவரம் இருந்தாலும் இன்னமும் இது போன்ற திருவிழாக்கள் மூலம் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தின் உயிர்த்தன்மையை இந்த ஊர் கொண்டிருப்பது இந்த ஊரை விட்டு வெளியே வரவிடாமல் என்னை இன்னமும் தடுத்துக் கொண்டிருக்கும் முக்கியக் காரணி.
(நான் தினமும் வேலை நிமித்தம் போக வர எண்பது கிலோ மீட்டர்கள் பயணிக்கிறேன்.)

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!



6 comments:

யாசவி said...

Dear Giri,

I lived in Madavaram about 8yrs.

I planned to settle over there. Very nice place.

Mada thiruvizha stimulate my olden days.

Very much happier still it looks the same.

Thank you for the photos.

:)

யாசவி said...

Later I'll found some land and settle over there.

Is the place is too crowded? like other parts of chennai?

Giri Ramasubramanian said...

@ யாசவி
மாதவரத்தில் வாழ்ந்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து இப்பதிவை உடனடியாகப் படித்தது எனக்கு மெத்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்மணத்திற்கு நன்றி!
நான் குறிப்பிட்ட வண்ணம், அங்கே இங்கே சற்று அலங்கார ஆர்பாட்டங்கள் தென்பட்டாலும், மாதவரம் இன்னமும் தன பழமைப் பொலிவை இழக்காது அழகாய்த்தான் இருக்கிறது. YOU ARE MOST WELCOME. ஆனால் ரியல் எஸ்டேட் விலையானது மாநகருக்கு சற்றும் குறையாது பெருகிக் கிடக்கிறது. இருந்தாலும் என்ன...வாருங்கள் வாருங்கள்!

யாசவி said...

I'll do that. But most of friends are oversea now.

I'll try to find someplace and settle.

Thank you for following me :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னுடைய பதினேழு வயது வரை (அதாவது 1987 வரை) நான் வாழ்ந்த ஊர் மாதவரம். வருடா வருடம் நடந்தே தபால் பெட்டி தாண்டி, மூலக்கடைக்கு முன்னாலிருக்கும் இந்த மாதா கோவில் திருவிழாவிற்கு கூட்டமாகச் செல்வோம். பிறகு கொஞ்சம் பெரியவனானதும், சைக்கிளில்.

நண்பர்களுடனான கொண்டாட்டமே பிரதானமாயிருக்கும் திருவிழாவில்.

சின்ன வயது ஞாபகங்கள் :)

Giri Ramasubramanian said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

தங்கள் சின்ன வயது ஞாபகங்களை மீட்டெடுக்க என் பதிவு உதவியதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி.

Related Posts Plugin for WordPress, Blogger...