திரைவிமரிசனம்
படத்தை ஆவரேஜிற்கு சற்றே மேல் எனச் சொல்லலாம். டைடானிக் மற்றும் லகான் இரண்டின் கலவையாக மிகவும் மெதுவாக ஓடும் ஒரு படம். கதை என்று பார்த்தால் பஸ் டிக்கெட்டின் பின் புறம் எழுதும் கதைதான். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக படத்தை "ஓஹோ" எனச் சொல்லியிருக்கிறார்கள்.
பழைய சென்னையை....மன்னிக்கணும்....பழைய மதராசை கண் முன் நிறுத்திய விதம் அருமை. குறிப்பாக கூவம் ஆற்றில் படகு ஓடுதல், டிராம் வண்டி மற்றும் அந்தக் கால மதராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியன.
ஆனால், துரதிருஷ்டவசமாக இரண்டாம் நாளில் தியேட்டரில் கூடிய கூட்டம் ஒரு அறுபது சதம் மட்டுமே இருக்கும்.
நான் தரும் மதிப்பெண்கள் 3/5
.
.
நன்றி: முரளி மோகன் (சிறப்புப் பதிவர்)
.
image courtesy: teenchennai.com