தமிழ் மாநாடெல்லாம் முடிந்து மாமாங்கம் சென்ற பிறகு இப்போதுதான் எழுதுகிறேன். தமிழன்னை மன்னிப்பாளாக.
அது என்ன மாயமோ தெரியலை என்ன மர்மமோ தெரியலை, நேற்று மட்டும் என் தளத்திற்குக் குறைந்தது ஐம்பது பேர் குஷ்புவைத் தேடி வந்திருக்கிறார்கள். அதனால்தான் நான் குஷ்பு ஒரு never before never after ஹீரோயினி என்று விவரிக்கிறேன், நண்பர் பரிதி ஆடலரசருக்குக் கோபம் வருகிறது.
சரி ஆடலரசறை விடுவோம். நம்மைத் தேடி வரும் விருந்தினரை உற்சாகப்படுத்த இந்தப் பதிவு.
சமீபத்தைய செம்மொழித் திருவிழாவில் வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் பொன்னான எழுதுகோலின் மைத்தீற்றல்கள் கீழே.....
அவர் கலைஞருக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தவேளையில் அந்த ஆரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் இவை.
பூ ஒன்று
‘ப்பூ’ இவ்வளவுதானா
என்று இலையை விட்டு
இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம்
அலர்த்தாத பூவுக்கு
உதயசூரிய வெளிச்சம்
சோபிதம் தந்திருக்கிறது.
அப்பூ…
எப்பூ?
(குஷ்பூ)
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு !
அவருக்கு ஒரு கை கூப்பு !”
சூப்பரப்பூ......!!
நான் எஸ்கேப்பூ....!!
No comments:
Post a Comment