Showing posts with label டூன்ஸ் அனிமேஷன். Show all posts
Showing posts with label டூன்ஸ் அனிமேஷன். Show all posts

Dec 11, 2010

சர்வதேச திரைப்பட விழா - கேரளா

பதினைந்தாவது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நேற்று கோலாகலமாகத் துவங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் நேற்று இவ்விழாவை நிஷகாந்தி அரங்கில் இனிதே துவங்கி வைத்தார்.

பதினேழாம் தேதி வரையிலும் எட்டு நாட்களாக நடக்க இருக்கும் இந்த விழாவில் நகரின் பத்து அரங்கங்களில் மூன்றாம் உலக நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன என்று தகவல்.

திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல் இங்கே 

இந்த விழாவிற்கு என திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கைச்  சேர்ந்த டூன்ஸ் அனிமேஷன் நிறுவனம் ஒரு விளம்பர ஒளிப்படக் காட்சியை (promo) தயாரித்துள்ளது.

இத்தகவல்களை நான் இங்கு வெளியிடும் காரணம், அந்த விளம்பரம் உருவாக்கிய அணியில் என் அருமைச் சகோதரன் அசோக் இருந்ததுதான்.  விடியோ இணைப்பைக்  கீழே பகிர்ந்துள்ளேன். அது தயாரான தகவல் குறித்த செய்தி இங்கே.

வாழ்த்துக்கள் அசோக்.





.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...