Mar 14, 2011

புத்தக வெளியீடு அழைப்பு - கார்பரேட் கனவுகள்!



அன்பு நண்பர்களுக்கு, 


நான் எழுதி வெளிவந்துள்ள என் முதல் புத்தகம் "கார்பரேட் கனவுகள்" வெளியீட்டு விழா வரும் பத்தொன்பதாம் தேதி சென்னை ராயப்பேட்டை ஸ்வாகத் மினி ஹாலில் நடைபெற உள்ளதால் தாங்கள் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 


விழா விபரங்கள்:


நாள்: சனிக்கிழமை, 19/03/2011 மாலை 05:30 மணிக்கு. 
இடம்: ஹோட்டல் ஸ்வாகத் (மினி ஹால்), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை.
 
புத்தக வெளியீடு: அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
முதல் பிரதியைப் பெறுபவர்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.
நூல் அறிமுகம்: எழுத்தாளர் திரு. என்.சொக்கன் அவர்கள்


வாழ்த்து:
மூத்த எழுத்தாளர் திரு.ஜ.ரா.சு அவர்கள் (பாக்யம் ராமசாமி)
மூத்த பதிப்பாளர் அருணோதயம் திரு. அருணன் அவர்கள்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள்
டாக்டர் ஷ்யாமா அவர்கள்
"இலக்கியவீதி" இனியவன் அய்யா அவர்கள்.






"கார்பரேட் கனவுகள்" புத்தகம் குறித்து....


BPO -  இந்த மூன்றெழுத்துக்கள் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாக்கிய மாற்றத்தை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.


பி.குதங்கள் நண்பர்களிடம் இந்த அழைப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


ஸ்வாகத் ஹோட்டலுக்கு மேப் : http://goo.gl/4352X  





.
.
.

20 comments:

R. Gopi said...

வாழ்த்துகள் கிரி!

Giri Ramasubramanian said...

Thanks Gopi!

natbas said...

வாழ்த்துகள் கிரி!

விஜி செந்தில் said...

நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடக்கும்...இரவு உணவு உண்டா?

Giri Ramasubramanian said...

@ விஜி செந்தில்
நல்ல கேள்வி. சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சி. ஸ்வீட், காரம், காபி உண்டு.

virutcham said...

வாழ்த்துக்கள் கிரி.
எந்த பதிப்பகம் ?

Giri Ramasubramanian said...

@ விருட்சம்
ஒரு எழுத்தாளனா நல்லா யோசிச்சித்தான் சொல்றேன்.... நீங்க அழைப்பிதழை நல்லா படிக்கணும் :)))))

virutcham said...

நான் அழைப்பிதழை படிக்கவே இல்லை. நீங்க மேலே குறிப்பிட்டிருந்த வெளியிடுபவர், பெறுபவர் ... விவரங்களை மட்டுமே பார்த்தேன்

virutcham said...

இப்போ படிச்சிட்டேன்

Giri Ramasubramanian said...

@விருட்சம்
மன்னிக்கணும். தப்பா எடுத்துக்கப் படாது. சும்மா காமெடிக்கு செஞ்சேன்!
எனவே! படித்தமைக்கு நன்றி! நேரில் வரணும் ப்ளீஸ்!

Shanmuganathan said...

கிரிக்கு எனது மனமார வாழ்த்துக்கள், கண்டிப்பாக பங்கேற்பேன்...

Natarajan Venkatasubramanian said...

வாழ்த்துக்கள் சாரே

Unknown said...

ரொம்ப சந்தோசங்க.. வாழ்த்துக்கள்..

செல்வா said...

வாழ்த்துக்கள்ங்க!!

ரோஸ்விக் said...

மனமார்ந்த வாழ்த்துகள் கிரி. சிங்கையில் இருப்பதால் கலந்துகொள்ள இயலாது.

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பதால் நீங்கள் இந்தப் புத்தகத்தை இணைய வடிவிலும் வெளியிட வேண்டும்

Giri Ramasubramanian said...

வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

@ ராம்ஜி
கண்டிப்பாக செய்கிறேன். ஒரு இருபது வருட அவகாசம் தரவும்.

Anand Viruthagiri said...

சொன்னதை செய்து காட்டி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Guru said...

வாழ்த்துகள் கிரி!

A doctor said...

வாழ்த்துக்கள் கிரி!

இனித்தொடர்ந்து வரப்போகின்ற உங்கள் புத்தக வெளியீடுகளில் ஒன்றிலாவது கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கும் என்று நம்புகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...