Showing posts with label தவலை அடை. Show all posts
Showing posts with label தவலை அடை. Show all posts
Jan 3, 2010
தவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க!
சென்ற முறை செய்து பார்த்த பொரியுருண்டை போல அல்ல இந்த முறை. தவலடை நீங்கள் செய்தும் உண்டும் மகிழலாம். நான் கேரண்டி.
தேவையான பொருட்கள்: (சுமாராக 3 பேருக்கான செய்முறை)
அரிசி - ஒரு ஆழாக்கு
கடலைப் பருப்பு - கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல்
தாளிக்க கடுகு, உளுந்து
உப்பு - தேவையான அளவு.
அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் மூன்றையும் மிக்சியில் பொலபொலவென வெள்ளை ரவை அளவிற்கு அரைத்துக்கொள்ளவும். அரைக்குமுன் ஓரிரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் பதம் நன்றாயிருக்கும்.
அரைத்த ரவையை, உப்புமா கிண்டுவது போல தயார் செய்து கொள்ள வேண்டும். கொஞ்சமாய் எண்ணெய் சேர்த்து தாளித்து, ரவையின் அளவிற்கு சரி பங்கு தண்ணீர் சேர்த்து (ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒரு கப் தண்ணீர் - 200 ml) கிளறிக்கொள்ளவும். உப்புமா போல இல்லாமல் இறுக்கமாக இருந்தால் நல்லது.
தவலை அடை தட்டும் முறை.
மாவு ஆறிய பின்னர், வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரில் படத்தில் காணும் விதத்தில் தட்டிக் கொண்டு, தோசைக்கல் அல்லது வாணலியில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தவலை அடை தயார்....!!!
வெளிப்புறம் மொறுமொறுவெனவும் உட்புறம் நன்கு வெந்து soft ஆக பொலபொலவெனவும் இருந்தால் சுவை நன்றாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)