Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

May 16, 2011

ரஜினி நலமாக உள்ளார்: ராமச்சந்திரா மருத்துவமனை


<நம்புங்கப்பு! ஹீ இஸ் டூயிங் வெல்! சும்மா ரூமரைக் கெளப்பாதீங்க!>

நன்றி: தினமணி <இன்று மாலை ஆறு மணி அப்டேட்>

சென்னை, மே 16- நடிகர் ரஜினி நலமாக உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டி.ஜி. நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 13-ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி நலமாக உள்ளார்.

பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகிறது.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
.
.
.

Dec 1, 2010

டிசம்பர் ஸ்பெஷல் - ரஜினியும் கர்நாடக இசையும்

டிசம்பர் மாதம் என்றால் நிறைய விஷயங்கள் ஸ்பெஷலாக உள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருக்கம், பிள்ளைகளுக்கு அரையாண்டு விடுமுறைகள், பணிக்கு வந்தப் பின் அலுவலகத்தில் ஆண்டு இறுதியில் வரும் நீண்ட விடுமுறைகள் என நிறைய நிறைய.

இவற்றிலெல்லாம் முன்னுக்கு நிற்பவை இரண்டு விஷயங்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் சென்னையில் வரும் டிசம்பர் சீசன் கர்நாடகக் கச்சேரிகள்.

ரஜினி பற்றியும் டிசம்பர் சீசன் பற்றியும் இந்த மாதம் முழுக்க எழுத விருப்பம். எனினும் பணிச் சூழலின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் முடிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு சூப்பர் ஸ்டார் அவர்களின் எனக்குப் பிடித்த டாப் த்ரீ புகைப்படங்கள் மற்றும் என் ஆதர்ச டாப் த்ரீ கர்நாடக இசை மேதைகளின் புகைப்படங்கள் இங்கே...






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




Related Posts Plugin for WordPress, Blogger...