Showing posts with label வீணை காயத்ரி. Show all posts
Showing posts with label வீணை காயத்ரி. Show all posts

Nov 16, 2010

வீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்

நான் எழுதிய "வீணையின் சரஸ்வதி" பதிவு குறித்து வீணை காயத்ரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்த நன்றி, பாராட்டுகள், ஆசிகள் கலந்த கடித்தை இங்கே மிகப் பெருமையுடன் வெளியிடுகிறேன்.
Dear Sri.Giri,



First and foremost I thank you for your appreciation of my music. I read your article about me in your blog and am extremely happy and touched that you have presented me so well through thr same.


I also think it is a great idea to present articles on music and I thank you for starting the series with your ideas about my music. So well written and presented!


I wish you all the best!



Kind regards and may God bless you!
Gayathri

.
.
.

Nov 14, 2010

இசைக் கோலங்கள்: வீணையின் சரஸ்வதி

மாதங்களில் மார்கழிக்கு இருக்கும் மகத்துவம் வீணை இசைக்கலைஞர்கள் இடையே காயத்ரிக்கு உண்டு 
- இசை விமரிசகர் சுப்புடு


வீணை காயத்ரி அவர்கள் பூமிக்கு வந்த சரஸ்வதி
 - தினமணி நாளிதழ்


_______________________________


வீணையின் நாதத்திற்கு எப்போதுமே தனி மயக்கம் உண்டு எனக்கு. குரலில் கொண்டு வர இயலும் நெளிவு சுளிவுகளையும், குரல் வடிவின் குழைவுகளையும் கூட அனாயசமாக வெளிக்கொணர இயலும் ஒரு இசைக் கருவி வீணை மட்டும்தான் என நான் முழுமையாக நம்புவேன்.

அதிலும் வீணை காயத்ரியின் வாசிப்பில் வீணையின் நாதம் கேட்கும் சுகம் தனி.




வீணை E.காயத்ரி அவர்களைத் தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 


அதென்ன வீணை காயத்ரி? தமிழ்நாட்டில் இவரை விட்டால் வீணை வாசிக்க ஆளே இல்லையா என்ன எனக் கேட்பவர்களுக்கு இவர் தன் அற்புத வீணை வாசிப்பின் மூலமே பதில் தருகிறார்.

உன்னத வாசிப்பு, மயக்கும் இசை, அபார ஞானம் என்றெல்லாம் இவர் வாசிப்பை எளிய வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

எனவே, ஒரு மிக எளிய உதாரணத்தில் காயத்ரி அவர்கள் மீட்டும் வீணையின் நாதத்தைக் கேளுங்கள். முகமது ரபி அவர்களின் கிளாசிக்களில் ஒன்றான இந்தப் பாடலில் நெஞ்சைத் தைக்கிறது வீணையின் தந்தி.



ஆறு வயதில் இவர் கைகள் வீணையிசைக்க ஆரம்பித்தன. கூடிய விரைவில் பொன்விழா காணவிருக்கிறது வீணைக்கும் இவருக்குமான பந்தம்.

ஒன்பது வயதினில் இசையுலகிற்கு பேபி காயத்ரி என அறிமுகமான இவர் தன் பன்னிரண்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவின் இசைக் கலைஞர் ஆனது இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று.

அதே பன்னிரண்டாம் வயதில் 1971'ல் இவர் வீணை வாசிப்பை "அது கடவுளின் மொழி" என டெக்கன் க்ரானிகல் (செகந்தராபாத்) குறிப்பிட்டது.

கர்நாடக இசை மட்டுமல்லாது, திரையிசை, கஜல், ஜாஸ், வெஸ்டர்ன், ப்யூஷன், கிராமிய இசை என இவர் மீட்டாத இசைப்பாணி இல்லை எனலாம். இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வரும் எல்லா நாடுகளிலும் இவர் வீணையிசைப்  பயணம் நிகழ்ந்துள்ளது.

இந்தியத் திரையிசையிலும் கூட இவரின் பங்கு குறிப்பிடும்படியானது. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார். 

 இவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் ஒரு கட்டுரைக்குள் சொல்லி முடிக்க இயலாத அளவிற்கு உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை எம்.எஸ். அவர்கள் கரங்களால் இவர் பெற்ற இசைப்பேரொளி விருது மற்றும் இவரின் இருபத்தி ஐந்தாம் வயதிலேயே இவரை வந்தடைந்த கலைமாமணி விருது ஆகியவை.

காயத்ரி அவர்களின் வீணை மட்டுமே பேசும் என எண்ண வேண்டாம். Jasmine Strings என்னும் வலைப்பக்கத்தின் வாயிலாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன் ரசிகசிகாமணிகளிடம் உரையாடத் துவங்கியுள்ளார் இவர்.

வீணையின் மகத்துவம், சிறப்புகள், இசையுலகில் வீணை வாசிப்பில் ஜாம்பவான்கள் பற்றிய அரிய தகவல்கள், இசையின் மூலம் நோய் தீர்ப்பு பற்றிய தகவல்கள், மறைந்த இசை மேதைகளுக்கு புகழாஞ்சலி எனப் பலப்பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது இவர் வலைமனை.


காயத்ரி அவர்களின் வீணையிசைத் தொகுப்புகள் http://gvshobha.blogspot.com/
என்ற தளத்தில் கிடைக்கின்றன.


இந்தப் பதிவிற்கு வீணை காயத்ரி அவர்களின் கடிதம்.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...