கடந்த நான்கு மாதங்களில் எழுத்திற்கு இத்தனை இடைவெளி விட்டதில்லை நான்.
அலுவலகத்தில் என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், "என்ன சார், கவுண்டமணி ஆர்டிகிளுக்குப் பிறகு ஒண்ணும் எழுதலையா?" எனக் கேட்கிறார்கள்.
"ஏதோ ஸ்பெஷலா உங்க நூறாவது போஸ்ட் இருக்கப் போகுது", நண்பர் எஸ்.எம்.எஸ்ஸில் உசுப்பேத்துகிறார்.
தொண்ணூற்றி ஒன்பது இடுகைகள் எழுதிய பின், நான் எழுதப் போகும் நூறாவது இடுகை பற்றி நினைத்தபோதே எனக்கு லேசாய் ஏதோ சாதித்த கர்வம். சரி, ஏதேனும் ரொம்ப ஸ்பெஷலாக எழுதுவோம் என கடந்த ஒரு வார காலமாய் தலையைச் சொறிந்தவாரே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதல்முறையாக ஒரு "சிறுகதை"?
கலக்கலாக ஒரு "கவிதை"?
சொந்தக்குரலில் ஒரு "பாடல்"?
புது முயற்சியாக ஒரு "தொடர்கதை"?
ஏதேதோ எழுதுகிறேன், கிழித்துப் போடும் அவசியமின்றி அவை கணினியின் recycle-bin-ற்கு செல்கின்றன.
இடையில் சென்னை வலைப்பதிவர்கள் பங்கேற்ற Indiblogger கூட்டத்தில் "நான் அடுத்து எழுதப் போவது என் செஞ்சுரி போஸ்ட்", என்கிறேன். கூடியிருந்த இருநூறு பேரும் பலத்த கரகோஷம் எழுப்பி என்னை மேலும் முடுக்கி விடுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து இன்று காலையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தன் கிடாரைக் கொண்டு என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார், ஆனந்த விகடனில் "நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி" எனும் பேட்டியில்.
நான்காம் வகுப்பு படிக்கையில் அப்பா இறந்தது, படிப்பிற்காக இரண்டரை வருடங்கள் உறவினர்கள் வீடுதோறும் ஊர் ஊராக அலைந்து படித்தது, பின்னர் திருநெல்வேலியில் ஆறு வருடங்கள் பள்ளிப்படிப்பு, நெல்லை சேவியர் கல்லூரிப் படிப்பு, சென்னை லயோலாவில் விஸ்காம், பகுதி நேர ரெக்கார்டிங் ஸ்டுடியோ வேலை, பியானோ படிப்பு, சொந்தமாக ஸ்டுடியோ நிறுவியது, "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடருக்கு இசை, சுக்ரன் / டிஷ்யூம் படங்கள் மூலம் திரையில் அறிமுகம் என பன்னிரண்டு பாராக்களில் அவர் பயணம் குறித்து சொல்லியிருக்கிறார்.
விஷயம் அந்த பன்னிரண்டு பாராக்களில் இல்லை, பதிமூன்றாவது பாராவை உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன், படித்துப் பாருங்கள்!
"நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?" என்று கேட்டதால், "இப்படித்தான் ஆனேன்" என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சதவிகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!
அவ்வளவே.....! இங்கு முத்தாய்ப்பாய் எழுத எனக்கு ஒன்றுமில்லை. அவரே நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார்.
34 comments:
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
ஸ்ரீ!
தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
கீப் அப் தி குட் வொர்க்
என் பிரதான critic மோகன் அவர்களே!
நன்றி!
வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணாமலை சார்....
தங்கள் மறு வருகை மற்றும் தாங்கள் தந்த ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.
Congrats Giri, Keep up the good work :-)
'நூறாவது பதிவு' என்பது கண்டிப்பாக ஒரு சாதனைதான். பல செஞ்சுரி தாண்டிய பின்னும், இன்னும் சாதிக்க துடிக்கும் சச்சின் டெணுல்கர் போல் நீங்கள் பல சாதனை நிகழ்த்த ஆசை படுகிறேன் (வலைப்பதிவர்கள் பங்கேற்ற Indiblogger கூட்டத்தில், "அடுத்து எழுதப் போவது என் செஞ்சுரி போஸ்ட்" என்று நீங்கள் கூறியவுடன் பலத்த கரகோஷம் எழுப்பியவர்களில் நானும் ஒருவன்)
கிரி,
நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பல நூறு பதிவுகள் காண வேண்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே! ஒன்று சொன்னாலும் நன்றாக சொன்னீர்கள்- மேலும் பல்லாயிரப் பதிவுகள் அளித்து உலகத் தமிழ் வலையுலகைச் சிறப்பிக்க வாழ்த்துக்கள்!
Sharmilaji!
Typical MNC grade encouragement words!? :-)
Thanks!
சண்முகராஜன் சார்,
வணக்கம். ரொம்ப நன்றி உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு. கரகோஷம் எழுப்பினீர்கள் அன்று! சந்தோஷம் தந்தீர்கள் இன்று...!!
நன்றி நன்றி நன்றி!
பரிதி அய்யா!,
மிக்க நன்றி! உங்கள் போன்றவர்கள் ஊக்கம் இருந்தால் அது சாத்தியமே!
zzz ஜி!
ரொம்ப தேங்க்ஸ்! நிம்பள்கி சப்போர்ட் இருக்கறே வரிக்கும் நம்பள் நெரிய எழுதுவான்!
நக்கலா, இனிமெல் ஒரு comment கூட எழுத மாட்டேன் பொஙக. :-/
@ Sharmilaji,
ஆஹா...மேடம் .. அப்படியெல்லாம் முடிவெடுக்காதீங்க!
உங்களைப் போன்ற உயரியோர் தயை என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்குத் (!!!!??) தேவை!
அவரது வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருப்பதும் மனம் தளராமல் வெற்றி பெற்றிருப்பதும் புரிகிறது.
ஆனால் எதற்காக உபநிஷடத்தின் சாந்தி மந்திரமான அசத் தோ மா வை வன்முறை காட்சிக்கு பாடலில் பயன்படுத்தினார் என்று சொன்னால் நல்ல இருக்கும். ஜோசப் விஜய் , விஜய் ஆண்டனி கூட்டணியின் இந்த தவறான அணுகுமுறையை யாரவது கண்டித்தார்களா என்று தெரியவில்லை.
எனது பங்கிற்கு ஒரு பதிவு எழுதி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
http://www.virutcham.com/?p=274
(Upanishad as told by Vettaikaran)
virutcham
@ விருட்சம்
நண்பரே, எல்லாவற்றையும் சமயம் / ஜாதிக் கண்ணோடு பார்ப்பது தங்களுக்கு பெருமை சேர்ப்பதாகாது...
அப்படியே பார்த்தாலும் பாதி பார்ப்பன ரத்தம் ஓடுவதால், விஜய் உபநிடத மந்திரங்களை அரையும் குறையுமாக சொல்வதில் எப்படி பிழை காண முடியும்?
@ விருட்சம்
நான் சொல்லவிழைவது வேறெனினும், natbas சொல்லியிருப்பது கிட்டத்தட்ட சரி.
நம் தேனிசைத் தென்றல் தேவா செய்யாத புனிதத்தையா விஜய்யும் விஜய்யும் செய்து விட்டார்கள்?
"பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட..."
ஒரு அற்புத தெய்வீக ராகத்தை விரசப் பாடலுக்குள் நுழைத்ததை விடவும் பெரிய பேஜாரைப் பண்ணிவிடவில்லை இந்த இருவரும். மன்னித்து விடுவோம் விஷயம் தெரியாதவர்களை.
ஆனால் தேவாவிற்கு என்ன தண்டனை? அதைச் சொல்லுங்கள்.
நான் என் ஆதங்கத்தை என் தளத்தில் பதியும் போது அவர் ஜோசப் விஜய் என்று தெரியாது. பாதி பார்பன ரத்தம் என்பதும் எனக்கு இப்போதே அறிகிறேன். அதனால் சிதைக்கும் உரிமையை அவர் எடுத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா ? கோவிலின் உள் வந்துவிட்டு விபூதி பூச மறுத்தார் என்று இப்போது கண்டனம் தெரிவிக்கும் பலரும் இந்த மந்திர சிதைவை கண்டு கொண்டார்களா என்று தெரியாது.
நீங்கள் சொன்ன தேவா பாடல்கள் மெட்டை திருடிக் கொண்ட பாடல். மூலம் தவறாக பயன்படுத்தப் படவில்லை.
தேவாவுக்கு என்ன பதில் என்று சொல்லப் போனால் அதற்கு முன் யாரவது சிதைத்து வைத்திருப்பதை உதாரணம் காட்டி அவரை என்ன பண்ண என்று இன்னொருவர் சொல்லுவாரோ என்னமோ.
பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை வரிசையில் வரும் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா! பாடலை எதோ திரைப் படத்தில் காதல் பாட்டுக்கு பயன்படுத்தி இருப்பார்கள்.
இப்படி சிதைப்பதை யாரும் கண்டுகொள்ளுவதில்லை.
இந்த மாதிரி கண்டனங்கள் தெரிவிக்காமல் விட்டுக் கொண்டே இருந்ததால் தான் இன்று உபநிஷத் வரை சென்று விட்டார்கள்.
http://www.virutcham.com
@ விருட்சம்
நண்பரே, நான் ஏதோ தாங்கள் பாதி விளையாட்டாக சொல்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லி விட்டேன். தயவு செய்து மன்னிக்கவும்.
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது, ஆனால், என்ன செய்வது- இது போன்ற நுண்ணுணர்வுகளுக்கெல்லாம் இது காலமில்லை.
இங்கே இப்படியென்றால் மேலை நாடுகளில் கிருத்தவ மதத்தை இன்ன வகை என்று இல்லாமல் கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். அதுவெல்லாம் தமிழ் ஊடகங்களை மட்டும் படிப்பவர்களுக்கு அதிகம் தெரிவதில்லை. உலகம் எங்கும் புனிதமானவையாகக் கருதப் படுபவை கேளிக்கை பொருட்களாக மாறி வருகிறது. நாம் இவற்றைக் குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை. கூடுமான வரை தோலை எருமையினதைப் போல் கெட்டித்துக் கொள்ளலாம்.
இது தவிர இன்னொன்று. நாம் பார்க்கிற உலகில் நமக்கு ஏற்புடையனவாக இல்லாதவற்றுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியம்தானா? இருட்டாய் இருக்கிற இடத்தில் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வை என்று எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன்.
நாம் ஏன் வெறுப்பு இருக்கிற இடத்தில் அன்பை வளர்க்க முயற்சி செய்யக் கூடாது? தப்பு செய்பவர்கள் செய்து விட்டு போகட்டும், ஆனால் நாம் செய்கிற நாலு நல்ல காரியங்களால் ஒருத்தர் கூட கவரப்பட்டு நல்ல முயற்சிகள் செய்ய மாட்டார்களா?
கெட்ட விஷயங்களை திட்டுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் நுண்ணுணர்வு படைத்த தங்களைப் போன்றவர்கள் அந்த சிந்தனை அளவிலான வன்முறைக்கு பூட்டு போட்டுவிட்டு உயர்ந்த கருத்துகளை, படிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம், நயமாக வெளிப்படுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல விவாதம். இரு ஜாம்பவான்கள் நிகழ்த்துகிறீர்கள். நான் ஒதுங்கி நின்று கேட்டுக் கொள்கிறேன்.
திட்டு எல்லாம் ஒன்னும் இல்லே. ஒரு மதத்தை விமர்சனம் செய்வது என்பது வேறு, அதன் சாரத்தை தவறாக உபயோகிப்பது என்பது வேறு. நான் இந்த தவறான உபயோகம் குறித்தே சொல்ல விரும்பினேன். இந்து மதம் எப்போதுமே எடுப்பார் கைபிள்ளை தான்.
விவிலியத்தில் இருந்து ஒரு வரியை அந்த இருவரும் தவறாக பயன்படுத்தினால் அப்புறம் சர்ச்சுக்குள் போக முடியாது. எல்லா படத்திலேயும் நம்ம விஜய் தம்பி இந்துவாகவே பெரும்பாலும் வருகிறார். பட்டை போட்டுக் கொண்டு பாட்டெல்லாம் தவறாம படுகிறார். ஒரு படத்திலே ஆத்தா கூட ஆட்டம் எல்லாம் போட்டார். இனிமே கொஞ்சம் அடக்கி வாசிப்பருனு தான் தோணுது.பார்க்கலாம்.
---
அவர் தவறான contextல் பயன்படுத்திய மந்திரத்தின் அர்த்தம் இதோ. .
Lead me from the illusion to the truth.
Lead me from darkness to light.
Lead me from death to immortality.
இதே வரிகள் விவிலியத்திலும் வருகிறது. ஆனால் உபநிடதமே படத்தில் உபயோகிக்கப் பட்டது
இப்போ புரியுதா நான் ஏன் சுட்டி காட்டினேன் என்று?
http://www.virutcham.com
@ கிரி என்னை கொரில்லான்னு சொல்லிட்டிங்க, இத நான் விடப் போறதில்ல. அதுக்கு தனியா கவனிச்சுக்கறேன்.
@ விருட்சம்
முன்னமேயே சொன்னதுதாங்க, நாம அது செரியில்ல இது செரியில்லன்னு சொல்லிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆவுமா? இந்து மதத்தோட பலமே அதை யாரு வேணா எப்படி வேணா திட்டலாம், அதை எப்படி வேணா பயன்படுத்திக்கலாம் என்கிறதுதான்.
பௌத்தமும் சமணமும் பண்ணாத திருபுகளையா இவங்க பண்ணறாங்க? இதையெல்லாம் பெரிசு பண்ணாம ஆக்கப்பூர்வமா இந்த காலத்து கேள்விகளுக்கு, இந்த காலத்து பிள்ளைகளுக்குத் தகுந்த மாதிரி, அவங்களுக்கு உபயோகப்படற மாதிரி இந்து மத நம்பிக்கைகள புதுப் பார்வையோட வெளிப்படுத்தரதுதான் அதை வலுவாக்கும்னு நினைக்கிறேன்.
நன்றி.
என்னோட நூறாவது பதிவை மங்களகரமாய் ஒரு ஆன்மீக சொற்பொழிவுத் தலமாய், விவாதத் தளமாய் மாற்றிய நல்லுங்களுக்கு நன்றி.
சினிமாவின reach இலக்கியத்தை விட மிக மிக அதிகம்(multiple times and instant reach). புத்தமோ சமணமோ இரெண்டுமே இந்து மதத்தில் வேரூன்றி விட்ட சில தவறான அணுகுமு ரைகளையே எதிர்த்தார்கள். இந்துமதத்தில் இருந்தே அவர்கள் போதித்த நல்ல விஷயங்களும் வந்ததால் இந்து மதமே உள்வாங்கி விட்டது இந்த மதங்களை.
தமிழில் கலந்திருக்கும் சமஸ்க்ரிதம் குறித்து ஆள் ஆளாளுக்கு குறைபட்டுக் கொள்பவர்களும் அதற்காக பிராமணர்களை திட்டுபவர்களும் இங்கு அதிகம். அப்படி இருக்கும் போது ஒரு தமிழ் பாட்டில் ஒரு சம்ச்க்ரித்த மந்திரம் எதற்கு சொருகப்பட வேண்டும் அதுவும் தப்பான contextல் என்று ஒருவர் ஆதங்கப் படக் கூட கூடாது என்று சொல்லுவது ஏன் இப்படி இஷ்டத்துக்கு கையாள்கிறார்கள் என்பதற்கான பதிலும் ஆகிறது. நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் திரும்பத் திரும்ப எழுதுவது சரியாகாது.
இதோடு இதை முடித்துக் கொள்ளவே விரும்புகிறேன்.
http://www.virutcham.com
ஆமாம் ஜாம்பவான் என்றால் கொரில்லா என்று விளையாட்டாகத் தானே சொன்னிங்க
@Virutcham
@ விருட்சம்,
மிகத் தன்மையாக எந்தவிதமான கசப்புணர்வும் இல்லாமல் நீங்கள் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி, நானும் நீங்கள் சொன்ன விஷயம் குறித்து யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றி.
@ விருட்சம்,
திரும்பவும் இதப் பத்திப் பேசறதுக்கு மன்னிச்சுக்குங்க. நான் உண்மையிலேயே கொரில்லான்னு விளையாட்டாத்தான் சொன்னேன். "அவன் ஒரு பிரகஸ்பதி"ன்னு சொல்றதில்லையா, அந்த மாதிரிதான் கிரி சொல்லியிருக்காருன்னு என் எண்ணம். காரணம், என்னோட உருவமும் அறிவும் அனுபவமும் எல்லாமே ஜாம்பவானுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதது.
எப்படி இருந்தாலும், நம்மை நாமலே கிண்டல் பண்ணிக்கறது நல்லதுதானே? அப்பிடி இல்லாமே டெட் சீரியஸா இருந்தா ஊரே சிரிச்சுப் போயிடுங்க: இந்த மாதிரி-
http://theworsthorse.com/2010/04/the-buddha-snorts-coke-on-south-park/
இதை யாரும் பெரிசா கண்டுக்கலை, சிரிச்சுட்டு போயிட்டாங்க.
அதே இசுலாமைக் கிண்டலடிச்சா இப்படி ஆகுது:
http://andrewsullivan.theatlantic.com/the_daily_dish/2010/04/comedy-centrals-cowardice.html
அதுக்கு இப்படி ஒரு பதில்:
http://theworsthorse.com/2010/04/every-religion-gets-it-on-the-daily-show/
அப்புறம் இப்படி-
http://andrewsullivan.theatlantic.com/the_daily_dish/2010/04/draw-mohammed-day.html
நீங்களே சொல்லுங்க, இதெல்லாம் தேவைதானா? இந்த மாதிரி கடுமையா இந்துக்களும் நடந்துக்கணுமா? எதுக்கு எடுத்தாலும் அதே அவங்களா இருந்தா?ன்னு யோசிக்காம நாம நாமளா இருக்கறதுக்குப் பெருமைப்படலாமே?
முதலில் ஜாம்பவான் பற்றி ஒரு திருத்தும். நீங்க கொரில்லன்னு சொலஈ விட்டதால். ஜாம்பவான் ஒரு கரடி உருவம் கொண்ட திருமால் பக்தர். பல திறமைகள் கொண்டவர். விஷ்ணுவின் பல அவாதரங்களிலும் அவர் வாழ்ந்து இருந்ததாக புராணங்கள்சொல்லுகிறது.
நீங்கள் கொடுத்த லிங்க் இன்னும் நான் பார்கவில்லை. நான் வன்முறையை ஆதரிக்க வில்லை. தவறுகளை யாரவது சுட்டிக் காட்டினால் மறுபடி மறுபடி தவறுகள் நிகழாது.
இது மட்டுமே என் கருத்து.
உதாரணமாக இந்த கொரில்லாவை நான் கண்டுக்காமல் விட்டால் ( உங்களுக்கு உண்மையில் கரடி என்று தெரிந்து இருக்கலாம். ஆனால் படிக்கும் வேறு ஒருவருக்குத் தெரியாவிட்டால் அவர் ஜாம்பவானை கொரில்லா என்று நினைத்துக் கொள்வார்.
அதே மாதிரி உபநிஷதம் குறித்து தெரியாத ஒருவர் அந்த கவிதையை (மந்திரத்தை) எழதியது கபிலன் (புலி உறுமுது பாடலின் ஆசிரியர் )அது வீரத்துக்கானது என்று கற்பித்துக் கொள்ளலாம் இல்லையா? இதை தவிர்க்க யாரவது குரல் எழுப்ப வேண்டும் இல்லையா ?
http://www.virutcham.com
@ விருட்சம்
நண்பரே, எனக்கு தங்கள் உணர்வு புரிகிறது. ஜாம்பவானை கொரில்லா என்று பொருள்பட எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அறிவாலும் அனுபவத்தாலும் நான்தான் கொரில்லா என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் மனம் என்னால் புண்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். இனிமேல் இந்த மாதிரியான தவறை செய்யாதிருக்க முயற்சி செய்கிறேன். என்னைத் திருத்தியதற்கு நன்றி.
அடடா இது என்ன ? மன்னிப்பு அது இதுன்னு
அப்புறம் விவாதம் செய்தா தானே பல விஷயங்கள் தெரிய வரும். சும்மா பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டவா பதிவு எழுதுகிறோம். பின்னூட்டம் போடுகிறோம்.
இங்கே புள்ளி வைத்து விட்டு எழுதுவதது தானே நடந்து கொண்டு இருக்கிறது. ஒருவர் கருத்தை ஏற்பது எல்லாம் கூட நடக்குமா? நான் என்னையே கொஞ்சம் கிள்ளி பார்த்துகிட்டேன். உள் குத்து ஒன்னும் இல்லையே.
சரி நம்ம பதிவு பக்கமும் கொஞ்சம் வாங்க.
நிச்சயமா உள்குத்து இல்லீங்க. உண்மையாத்தான் சொல்றேன், நாம ஒண்ணு சொல்லி அதனால இன்னொருத்தர் மனசு புண்படுதுன்னா மன்னிப்பு கேக்கறதுக்கு எதுக்கு யோசிக்கணும்?- அதுவும் நாம சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னோம் என்கிறபோது!
உங்ககூட விவாதம் பண்ணினதுல மகிழ்ச்சி.
அப்புறம், உங்க தளம். அதில் வரும் பதிவுகளை என் ரீடர்ல பாத்துக்கிட்டுதான் இருக்கேன். Full Feedஉம RSSல வர வழி செஞ்சிங்கன்னா, படிச்சுட்டு சுட சுட பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
நன்றி.
Post a Comment