பதிவர் உலகக் கத்துக்குட்டி நான். எல்லோரும் பதிவர் உலகக் கலகங்கள் குறித்துப் பேசி முடித்துக் கொண்டே இருக்கிறார்கள். பலர் குதிக்கிறார்கள், சிலர் கதறுகிறார்கள், நிறையப்பேர் சிரித்து எக்காளமிடுகிறார்கள், நானும் கடந்த சில தினங்களாக அழவா சிரிக்கவா எனப்புரியாமல், ஆனால் ஒரு அதிர்ச்சியோடு இவற்றைப் பார்த்த வண்ணம் இருக்கிறேன். அனானித் தாக்குதல்களும், வசவுகளும் நான் பாராததில்லை. எனினும் இப்போது பதிவர் உலகில் நான் கேட்கும் கெட்ட வசவுகள் முன்னெப்போதும் இல்லா வண்ணம் எல்லை (அப்படி ஏதும் இருக்கிறதா என்ன?) மீறி இருக்கிறது.
இது நர்சிம் மற்றும் சந்தனமுல்லை ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட பிரச்னையாக மட்டுமே நான் காண்கிறேன். இடையில் பலர் ஊடாட ஒன்றுமில்லை. அப்படியே நான் ஊடாட விரும்பினாலும் இதில் நான் கருத்து கூற ஏதுமில்லை. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட குழுக்கள் எதிலும் நானில்லை. அந்த அளவிற்கு நான் இன்னும் வலையுலகில் வளரவில்லை (நல்ல வேளையாக). ஆகவே என் தளத்தில் கருத்து கூறும் அவசியமற்றுப் போகிறது.
இதையும் மீறி நான் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் விசா பக்கங்களில் வாசியுங்கள் . அங்கே படித்த பதிவு உள்ளதில் சிறந்ததாய்ப் படுகிறது எனக்கு.
நண்பருடன் இதுகுறித்துப் பேசுகையில், தன் தளத்தில் பின்னூட்ட வசதியையே நீக்கவிருப்பதாகக் கூறினார். அத்தனை அதிர்ச்சி கலந்த பயம் அவரிடம் தெரிந்தது. நிகழ்வுகள் அப்படித்தானிருக்கின்றன. சிலவற்றைப் படிக்கையில் எனக்கு நரகலை மிதித்த உணர்வே மேலிடுகிறது. பெரியார் சரியாய்த்தான் தமிழர்கள் குறித்துச் சொன்னார்.
நண்பர் எப்போதும் ஒன்றைச் சொல்வார், "இதுவும் கடந்து போகும்", என்று. அவரோடு இது தொடர்பாகப் பேசியபோது அவர் இது பற்றி அவருக்குத் தோன்றுவதாகச் சொன்னது...
....the darkest hour is before the dawn ...
நானும் இந்த விஷயத்திற்கும் இந்த வார்த்தைகள்தான் பொருந்துமோ என முதலில் எண்ணினேன். ஆனால் விஷயம் மென்மேலும் தீவிரமடைவதைக் காண்கையில் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்....
.........THE WORST IS YET TO COME ...........
.
.
.
.