பத்துத் தலைகள்
பத்து மனதுகள்
ஒரு நூறு குரல்கள்
ஒரு மனிதன்.
அப்படிப்பட்ட ஒரு மனிதன் எப்போதும் இருந்துள்ளானா?
அவன் ஒரு கதைதானா....இல்லை இப்போதும் எங்கேனும் வாழ்கிறானா?
நல்லதையும் அல்லதையும் பிரிக்கும் அந்த ஒற்றை வரிதான் எது?
நாம் எதிராளியின் பார்வையில் காணத் தொடங்குகையில் நம் புரிதல் நிலையிலும் மாறுதல் ஏதேனும் ஏற்படுகிறதா?
...................
இந்த ஒற்றையைக் காட்டிலும் அந்தப் பத்துத் தலைகள் சிறந்தனவா என்ன?
அந்த ராவணனுள் ராமனின் பண்பு வாழ்ந்ததா?
இங்கே நம் ஒவ்வொருவருள்ளும் ஒரு ராவணன் இருக்கிறானா?
இப்படி மணிரத்னம் அவர்கள் எழுப்பும் கேள்விகளுடன் ராவணன் இன்று வெளிவருகிறது. காலை சிறப்புக் காட்சி பார்க்கப் போய்க்கொண்டேயிருக்கிறேன்.
மாலையில் அலுவலகத்தில் விழா ஒன்றில் மணிரத்னம் படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவைப் பாடவிருக்கிறேன்.
இன்று மணிரத்ன தினம் எனக்கு!
.
.
.