மாநாடு பத்தி நான் ஒண்ணும் எழுதலை, அப்படின்னு சொன்னியே! இதோ எழுதிட்டேன்.
உலகச் செம்மொழி மாநாடு கோவையில் இதோ இப்போது தொடங்கியுள்ளது.
வெளி வந்த விளம்பரங்கள், செய்திகள், புகைப்படங்கள், ஒளிப்படங்கள் அனைத்திலும் அய்யா கலைஞர் அவர்களே தமிழையும் தாண்டி முன்னிறுத்தப் பட்டிருந்தார். இதோ கலைஞர் செய்திகள் தொலைகாட்சி நேரிடையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத் துளிகளில் பேசும் அனைவரும் தமிழைக் குறித்துப் பேசுவதை விட கலைஞரைப் பற்றித்தான் அவர் செய்யும் சாதனைகள் பற்றித்தான் அறை கூவுகிறார்கள்.
யதேச்சையாக நண்பர் செந்தில் தொலைபேசியில் வந்தார். மாட்டினாண்டா இந்த கழகச் செம்மல் என்று கேட்டேனே ஒரு கேள்வி.
"யோவ், இது என்னய்யா, தமிழுக்கு மாநாடா இல்லை உங்க தலைவருக்கு மாநாடா?"
"ரெண்டும் வேறயா நண்பரே?", என எதிர்க் கேள்வி வந்தது.
மேற்கொண்டு நான் பேசியிருப்பேன் என நினைக்கிறீர்களா?
.
.