eppadippa tamila type panre athe solluppanna sollave mattengare- Giri Ramasubramanianமொதல்லயே ஒரு தபா சொன்னனே சித்தப்பா?
- Giri RamasubramanianNHM Writer 2.0 | Indian Language Software Products & Services - New Horizon Mediasoftware.nhm.in
- Giri Ramasubramanianஇந்த லின்க்’ல download'னு ஒரு icon இருக்கும் அதை க்ளிக் பண்ணி, இந்த சாஃப்ட்வேரை உங்க சிஸ்டத்துல இன்ஸ்டால் பண்ணுங்க. ஒவ்வொரு முறையும் உங்க சிஸ்டம் ஸ்டார்ட் ஆகும்போது இது ஆட்டோமேட்டிக்கா ஸ்டார்ட் ஆகிடும்எங்க தமிழ்ல டைப் பண்ணனுமோ அங்கே ஆல்ட்+2 அழுத்துங்க. தமிழ் மோடுக்கு உங்க கம்ப்யூட்டர் தயாராகிடும்மறுபடி இங்க்லீஷுக்குப் போக ஆல்ட்+2
- Giri Ramasubramanianyes, முடியும்பாலு’ன்னு டைப் பண்ண... alt+2 போட்டுட்டு.... b a a l u'ன்னு டைப் பண்ணினா போதும்
தேங்ஸ் கிரி நான் ரொம்பவும் சந்தோஷமாய் இதை ட்ய்ப் செய்கிரேன்- Giri Ramasubramanianஹ்ஹா. . . அயாம் ஹேப்பி

- eppadi giri paravayillaiyaen tamil typing ithai melum sirappakka sila tips koden
- Giri Ramasubramanianஒரு டிப்ஸும் வேணாம். தொடர்ந்து டைப் பண்ணுங்க, தன்னால வந்துரும்.ஒவ்வொரு key'யா தனியாவும், ஷிஃப்ட் புடிச்சிக்கிட்டும், ஒரே key'யை ரெண்டு தபாவும் அழுத்திப் பார்க்கவும். என்ன ஏதுன்னு ஈஸியாப் புரிஞ்சிடும்.ka = க kaa = கா ki = கி kii = கீ ku = கு kuu = கூ ke = கெ kee = கே kai = கை ko = கொ koo = கோ kau = கௌng = ங் nj = ஞ் N = ண் r = ர் R = ற் l = ல் L = ள் z = ழ் q = ஃ w = ந் x = க்ஷ் sri = ஸ்ரீஅவ்ளோதான் விஷயமே....
- Giri Ramasubramanianwa = ந
Dec 18, 2013
Nov 16, 2013
மங்கள்யான்
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா விண்கலத்தை அனுப்பினதை ஒட்டி இன்று ஃபேஸ்புக்கில் ஒன்றும் ட்விட்டரில் ஒன்றுமாக இரண்டு ‘துப்பல்களைக்” காண நேரிட்டது
எந்த விஷயத்தையும் எப்படி அணுகவேண்டும் என்று ப்ரீடிசைன் செய்து வைத்துக்கொண்டு சிந்தித்துச் சிந்தித்தே...... அப்டீ ஆயிட்டோம்.
அமேரிக்காக் காரன் செவ்வாய்க்கு ராக்கெட்டே வுட்டுட்டான்; நாம இன்னும் செவ்வாதோஷத்தப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோமுன்னு பேசறதுவும் நம்மோட இதே வாயிதானுங்களே!
ஒன்னியும் சொல்றதுக்கில்லே!
இது முதல் துப்பல்!
ஒரு 10 லட்சம் செலவு செஞ்சு,சாக்கடைய அள்ள ஒரு மிஷின் கண்டுபிடிக்கலசெவ்வாய் கிரகத்துல என்ன வெங்காயத்த கண்டு பிடிக்க" மங்கள்யான் "
இது அடுத்தவருடையது!
காவிரித்தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வக்கில்லை,செவ்வாய்க்கிரகத்துலே தண்ணீரை கண்டுபிடிக்க போகிறார்களாம் போக்கத்தவனுங்க!
எந்த விஷயத்தையும் எப்படி அணுகவேண்டும் என்று ப்ரீடிசைன் செய்து வைத்துக்கொண்டு சிந்தித்துச் சிந்தித்தே...... அப்டீ ஆயிட்டோம்.
அமேரிக்காக் காரன் செவ்வாய்க்கு ராக்கெட்டே வுட்டுட்டான்; நாம இன்னும் செவ்வாதோஷத்தப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோமுன்னு பேசறதுவும் நம்மோட இதே வாயிதானுங்களே!
ஒன்னியும் சொல்றதுக்கில்லே!
Nov 3, 2013
என்னத்த சொல்ல...
சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் உணவு இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தேன். நெருங்கிப் பழகியவரல்ல. அதுவரை சந்திக்கும் தருணங்களில் ஒரு ஹலோ சொல்லிக் கொண்டதோடு சரி. அன்றுதான் நான்கு வார்த்தைகள் பேசத் தோதாக மேஜை நாற்காலி கிடைத்தது இருவருக்கும்.
குசல விசாரிப்புகளுக்குப் பின்...
“கல்யாணம் ஆகிடுச்சா சார் உங்களுக்கு?”, கேட்டேன்.
“நல்லா ஆகிடுச்சி சார். ஹேப்பிலி மேரீட்”
“ஹேப்பிலி மேரீட்? அப்போ நீங்க ரொம்ப சமீபத்துல கல்யாணம் ஆனவரு, கரெக்ட்தானே?”
”ஆறு வருஷம் ஆச்சு சார்”
“அது சரி. ரெண்டு தகவலும் காண்ட்ரடிக்ட் ஆவுதே”
“அதெல்லாம் இல்லை சார். நீங்க? கல்யாணம் ஆனவரா?”
“அதே ஆறுவருஷம்தான் சார் நமக்கும்”
“அப்போ அங்கயும் ஹேப்பிலி மேரீட்’னு சொல்லுங்க”
“ஆங்! சொல்லிக்கலாம்”, சிரித்தேன்.
“பசங்க?”, கேட்டார்.
“மூணரை வயசு. பையன் இருக்கான்”
ஸ்கூல் போறானா, எந்த ஸ்கூல், இங்க்லீஷ் பேசறானா என்று ஒரு டஜன் கேள்விகள் தொடர்ந்தன.
“உங்களுக்கு சார்?” என்று வினவினேன்.
”குழந்தையா?”,
”ஆ... ஆமா சார்”, இந்த சென்சிடிவான கேள்வியை நான் பொதுவாக யாரிடமும் ரொம்ப யோசித்தே கேட்பது. இருந்தாலும் அன்று அவரது ஒரு டஜன் கேள்விகள் ஒண்ணரை டஜனாக நீட்டித்திடும் முன் அவரை நிறுத்திவிடவே அப்படிக் கேட்டே விட்டேன்.
“ஆங் ஆங்... இருக்காங்க சார். மூணு குழந்தைங்க”
“மூணு பேரா”, மில்லேனியத்தின் ஆச்சர்யம் இது என்பதால் கொஞ்சம் வாய் பிளந்தேன்.
“ஆமா சார். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்”
“ஹ்ம்ம்ம்.... பையன் கண்டிப்பா பொறந்திடணும்னு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்ய முயற்சியா?”
“அதெல்லாம் இல்லை சார். முதல்ல பொண்ணு, ரெண்டாவது பையன், மூணாவது மறுபடி பொண்ணு”
இது அடுத்த விநோதம்.
“ஆபரேஷன் பண்ண மறந்துட்டு பெறகு அவசரப் பட்டுட்டீங்களோ?, கேட்டுவிட்டு நாவைக் கடித்துக் கொண்டேன்.
”ஹிஹ்ஹிஹ்ஹீ! அதெல்லாம் இல்லை சார்”, சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.
கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு...
“சொந்தத்துலதான் சொன்னாங்க, ஒரு பையன்’தானே இருக்கான். எதுக்கும் ரெண்டு பையனுங்களா இருந்துட்டா எல்லாத்துக்கும் சரியா இருக்கும்ன்னு. அதான் மூணாவது குழந்தையும் பையனாப் பொறக்குமுன்னு ரெண்டு பொறந்த அப்புறம் ஆபரேஷனுக்கெல்லாம் போகாம முயற்சி பண்ணினோம். விதி வலியது; விளையாடிடுச்சி”, என்றார்.
என்னத்தச் சொல்வேன் நான்.....
Nov 1, 2013
ஆரம்பம்
”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” வகையறா குடும்பம், உயிர்த்தோழன், நட்புஅதிகாரம், வில்லனான ஊழல் அரசியல்வாதி, ஆருயிர் நண்பனின் மரணம், அவன் குடும்பத்தை அதே அரசியல்வாதி & கோ கூண்டோடு கொடூரமாக அழிப்பது, சொல்லத் தேவையின்றி அந்த நண்பனின் மனைவி நிறைகர்ப்பிணி, ஹீரோவும் ஹீரோயினும் (மட்டும்) விஷத்தைத் தின்று, துப்பாக்கிக் குண்டடி பட்டும் வில்லனை க்ளைமாக்ஸில் பழிவாங்குவதற்காகவே உயிர் பிழைப்பது......
வெய்ட் வெய்ட் வெய்ட்...! என்னய்யா.... இதைத்தானே காலாகாலமா தமிழ் சினிமாவுல பாக்கறோம் என்கிறீர்களா? படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்’தான் நாம் மேலே குறிப்பிட்ட உபகதையின் சுருக்கம். இதற்கு முன்னும் பின்னும் வெகு சுவாரசியமான படையலாக “ஆரம்பம்”.
’மாஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல எண்டர்டெயினர் “ஆரம்பம்”. தல ரசிகர்களுக்கு கொண்டாடத்தக்க தல-தீபாவளி ரிலீஸ் “ஆரம்பம்”. சராசரி சினிமா ரசிகனுக்கு ஒரு நல்ல எண்டர்டெய்னர்.
மங்காத்தாத்தனமான நாற்பதுகள் கெட்டப்பில் மீண்டும் அஜித். ஸ்டைலில் மனிதர் பின்னியெடுக்கிறார். குறிப்பாக கூலர்ஸை அவர் ஒவ்வொரு காட்சியில் அணியும் அழகும், டுக்காட்டியை துபையில் ஓட்டும் ஸ்டைலும்.... ஓஹ்ஹோ போங்கள். பை திவே, அயாம் நாட் அஜித் ஃபேன்; கேட்ச் மை பாய்ண்ட்?
முதல் பாதியின் ஒன்றேகால் மணிநேரம் ‘ஜிவ்’வென்று பறக்கின்றது. டிபிக்கல் விஷ்ணுவர்த்தன் ஹைஃபைத்தனம். சுபா’வின் திரைக்கதை ஜாலம் முதல்பாதியில் மிளிர்கிறது. அயன் அசத்தலுக்குப் பிறகு மாற்றானில் சறுக்கிய சுபா, ஆரம்பத்தில் மீண்டும் ‘திரைக்கதை” ராஜாக்கள் என நிரூபிக்கிறார்கள்.
ஆர்யா - தாப்ஸி ஜோடி படம் மொத்தமும் அடிக்கும் அலம்பல்... ஓஹோ! அந்த ஆர்யா ஃப்ளாஷ்பேக்கில் அவருக்கு மேக்கப் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
அப்புறம் அப்புறம்.... நயன் படம் முழுவதும் இருக்கிறார். அவர் அஜீத்துக்கு ஜோடியா இல்லையா என்ற பேச்சே படத்தில் இல்லை. ஒரு வில்லனை ஏமாற்ற அவனிடம் ஆடும் ரொமான்ஸ் நாடகத்தைக் கூட தல’விடம் நயன் ஆடுவதில்லை என்பதை நினைக்கையில் நமக்கு விம்மிப் புடைத்துக் கொண்டு கண்ணீர்க் கொட்டுகிறது. அய்யகோ!
அஜித், நயன், ஆர்யா, தாப்ஸியைத் தாண்டி... கிஷோர், அதுல் குல்கர்னி, தெலுகு “ராணா”, மஹேஷ் மஞ்ச்ரேக்கர் , ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, முரளி ஷர்மா என்று ஒரு டஜன் பாத்திரங்கள் படத்தில். எல்லோருக்குமான ரோலை குழப்பம் ஏதுமின்றி சரியாக இணைத்த இண்ட்டாக்டான திரைக்கதையை மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தொண்ணூறுகளில் தமிழில், தெலுகுவில், கன்னடத்தில் சக்கைப் போடு போடாத ‘சுமா ரங்கநாத்’ ஒரு சின்ன வில்லி வேஷம் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில்.
அப்புறம்....அப்புறம்.... நல்ல படம்! தீபாவளி பட்சணம் தின்றுவிட்டு, பட்டாசு வெடிக்கும் கேப்பில் ”ஆரம்பம்” ஒரு நல்ல தியேட்டரில் பார்த்துவிடுங்கள்!
வொர்த் வாட்சிங்குங்கோ!
Oct 30, 2013
சுட்டகதை
தமிழ் சினிமா உலகில் ஸ்டார் வேல்யூ ஏதும் இல்லாமல் சின்ன கல்லு; பெத்த லாபமு என்னும் வகையில் அவ்வப்போது சில பரீட்சார்த்த சினிமாக்கள் வருவதுண்டு. நான் பார்த்த உதாரணங்களாக இரண்டினைக் கூறினால் தமிழ்ப்படம், வ’க்வாட்டர் கட்டிங் இரண்டு படங்களையும் சொல்வேன். கிட்டத்தட்ட அந்த இரண்டு படங்களையும் கலந்து கட்டியடித்ததுதான் சுட்டகதை.
ஸ்பூஃப் வகைப்படம் என்ற வகையில் ‘தமிழ்ப்பட(ம்)’ வகையிலும், வித்தியாச கான்செப்டாக ‘வ’க்வாட்டர் கட்டிங்கையும்’ சுட்டகதை நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.
மலையோர கிராம ஊர், போலீஸ் ஸ்டேஷன், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஹீரோக்கள் பாலாஜியும், வெங்கடேஷும்; தூங்குமூஞ்சி இன்ஸ்பெக்டர் நாசர், ஆதிவாசி இன ஹீரோயினி லக்ஷ்மிப்ரியா, அவளது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் துர்மரணமடைய அவரை யார் சுட்டார் என்கிற முடிச்சை அவிழ்க்கும் ‘சுட்ட’ கதைதான் ‘சுட்டகதை’.
படத்தின் பெரிய ப்ளஸ் படத்தின் பின்னணியிசையும் கான்செப்டின் தேவைக்கேற்ப ப்ரசெண்ட் செய்யப்பட்ட படத்தின் டோனிங்கும். படத்தின் பின்னணி இசையின் பெருமை சொல்ல படம் நெடூக வரும் அந்த பியானோவின் ‘’’ட்ட்ட்ட்ட்ட்டொய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்” ஒலியே போதும். வ’க்வாட்டர் கட்டிங்கின் ஃப்ரேம்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தவை. இடது மூலையிலிருந்து டேபிள் லேம்ப்பை வைத்து லைட்டிங் அடித்தாற்போல் “வ” படத்தின் லைட்டிங்கை அமைத்திருப்பார்கள். “சுட்டகதை” விஷயத்தில் object மீது மட்டும் பெரும்பாலும் லைட்டிங் படுகிறது; இன்னபிற விஷயங்கள் அவுட் ஆஃப் ஃபோகஸில். படத்தோடு ஒருவர் ஒன்றிவிட முயன்றால் பின்னணியிசையும், படத்தின் ஒளிப்பதிவும் நிச்சயம் அவருக்குத் துணை செய்யும். ஆனால் அப்படி ஒன்றிவிடச் செய்யத்தக்க ‘சுவாரசிய திரைக்கதை’ படத்தில் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்வி. (இந்த இசை, ஒளிப்பதிவு டெக்னிக்காலிட்டிகளுக்கெல்லாம் டெக்னிக்கல் பெயர்கள் நமக்குத் தெரியாது. ஏதோ கவனித்ததைச் சொல்கிறோம், ஹிஹ்ஹீ)
படத்தின் இயக்குனர் சுபு’வுக்கு செம்ம க்ரியேட்டிவ் மைண்ட் என்பது படம் முழுவதும் தெரிகிறது. டீக்கடைப் பெயர்ப்பலகையின் சின்ன நையாண்டியில் தொடங்கி, காமிக்ஸ் பிரியர்களை ஏதோ பெரிய இலக்கிய வாசக தோரணையில் காட்டுவது வரை படம் முழுவதும் இவரது காமெடி தோரணங்கள். அந்தத் தோரணங்களை இணைக்கும் திரைக்கதை நூலினை சுபு ஸ்திரமாகப் பண்ணியிருக்கலாம் என்பதுதான் நம் ஆதங்கம்.
பாலாஜி, வெங்கி இருவருமே கிடைத்த ரோலை நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெங்கடேஷுக்கு வாய்ப்புகள் அமைந்தால் அவர் நல்ல காமெடியனாக தமிழில் வலம் வரலாம். நல்ல பாடி லேங்குவேஜ் மனிதரிடம். லக்ஷ்மிப்ரியா இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவர் என்பது உபதகவல்.
படத்தின் அடுத்த பெரிய ப்ளஸ் படத்தின் நீளம். ஜஸ்ட் ஒன்றே முக்கால் மணிநேரத்தில் முடிந்துவிடுகிறது படம். அந்த ஒன்றே முக்கால் மணிநேரம் மக்களை தியேட்டரில் உட்கார வைக்கத் தக்க சுவாரசியத்தை இயக்குனர் படத்தில் வைத்திருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
தனித்தனியே சூப்பர் திறமை வாய்ந்தவர்களாக அமைந்த இந்தப் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவருக்கும் அடுத்தடுத்த படங்களில் நல்ல ‘ப்ரேக்’ அமைய வேண்டுமென்று ஜக்கம்மாவை வேண்டிக் கொள்வோம்.
Subscribe to:
Posts (Atom)
