"அடிங்கடா அவனை" என்ற என் முந்தைய பதிவு வரலாறு காணாத (!) மறுப்புகளை சந்தித்து வரும் வேளையில்... (யாரோ முன்ன பின்ன தெரியாத anonymous எல்லாம் மறுப்பு சொல்றாங்க தலிவா! அப்புறம் வீட்டுக்கு உருட்டகட்ட வந்தா தாங்குவானா நானு?)
திருமிகு ஷாருக்கான் அவர்களை அவமதிக்கும் வகையில் என் பதிவில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகள் அவரது அகில இந்திய ரசிகர்களைக் காயப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆகவே... நான் எழுதியது ஏதேனும் ஒரு வகையில் யாரேனும் ஒருவரைப் புண் படுத்தியிருந்தால், அவர்கள் அனைவரிடமும் தார்மீக மன்னிப்பு நான் கோருவதற்காக இவ்வளவும் எழுதவில்லை....
இந்தக் கோபம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என ஒரு சின்ன ஆராய்ச்சி:
நேற்று பழைய போலிஸ் டி.ஐ.ஜி திரு.ரத்தோர் நடு ரோட்டில் நங்கு நங்கென்று முகத்திலும் கழுத்திலும் கத்திக் குத்து வாங்கியதை CNN-IBN நொடிக்கு நூறுதரம் மறுபடி மறுபடி ஒளிபரப்பு செய்த வண்ணம் இருந்தது. ஏ பாத்துக்கோ இது மொத குத்து... இது ரெண்டா குத்து...இது மூணாவது... என freeze, deep freeze, zoom என அனைத்து வகைகளிலும் அந்தக் குத்துக்கள் தெளிவாய் காட்டப்பட்டன. கோபம் வந்தால் கத்தி எடு, நேரா போ, மூஞ்சில நங்கு நங்குன்னு குத்திட்டு வந்துடு என கிட்டத்தட்ட பிரஸ்தாபம் செய்தவண்ணம் இருந்தன அந்தச் செய்திகள்.
ஒரு வாரம் முன்பு ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்து குறித்த தூர்தர்ஷனின் செய்தியை நினைவு கூர்கிறேன்.
- செய்தி வாசிக்கப் படுகிறது
- விபத்து நடந்த நதி, படகுகள் காட்டப்படுகின்றன.
- சோகமான உறவினர்கள்.
- சிதறிக் கிடக்கும் செருப்புகள்.
அவ்வளவே...வயிற்றிலடித்தவரே கதறி அழும் பெற்றோர், கோரமான சடலங்கள் என மரணத்தை கடை விரித்து வியாபாரம் செய்ய DD என்றும் தயாராயில்லை.
ஆகவே வாசகப் பெருமக்களே, என் கோபம் எங்கிருந்து வந்தது என உங்களுக்கு இப்போது விளங்கி விட்டால்...இந்த நாள் ஒரு இனிய நாளே!
1 comment:
ஆமாமாம், எல்லாத்துக்கும் தனியார் தொலைக்காட்சிதான் காரணம்...
நம்பற மாதிரிதான் இருக்கு!
Post a Comment