Feb 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின் வெளிவந்துள்ளது வி.தா.வ! எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால், "partially" என்று சொல்வேன்.

செம்ம ஓபனிங்! கேரளா back water ஒன்றில் கேமரா பின்செல்ல டைட்டில் சாய்வாக மேலேறும் ஆரம்பத்திலேயே தொடங்குகிறது மேனன் டச். இப்படத்தில் A.R.ரகுமானின் துணை முதன் முறையாக கெளதம் மேனனுக்கு. "ஓ சோனா" பாடலின் ஆரம்பம் தியேட்டரையே அதிர வைக்கிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு பாடலும் இசை, படமாக்கிய விதங்களில் கலக்கி எடுக்கின்றன.




சிம்பு, த்ரிஷா இருவருக்குமே நல்ல ரோல் படத்தில். சொன்ன வேலையை தன் வழக்கமான அலட்டல்களை மட்டுப்படுத்திக்கொண்டு கச்சிதமாக செய்திருக்கிறார் "யங் சூப்பர் ஸ்டார்". த்ரிஷாவின் கதாபாத்திரம் படத்தின் சூப்பர் ஸ்பெஷல். காதல் சார்ந்த வசனங்கள், சிம்பு த்ரிஷா இருவரின் முக பாவங்கள் எல்லாம் படத்தில் பின்னிப் பெடல் எடுக்கின்றன. காதலில் உய்(ந்)தவர்களுக்கு இது செம ட்ரீட்! 


கண்களில் ஒத்திக்கொள்ளும் வண்ணம் இருக்கும் ஒளிப்பதிவு பற்றி தனியே சொல்லும் அவசியம் இல்லை. முன்னரே மீடியாக்களில் வெளிவந்த படத்தின் படங்கள் அதுபற்றி முன்னமே பேசிவிட்டன. கேரளா, கோவா, அமெரிக்கா என எங்கு பயணித்தாலும் லொகேஷன்கள் மனதில் நிற்கின்றன.



உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதமான படமாகத்தான் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.  இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே இடத்தில் கதை தங்கிவிட்டு சிம்புவும், த்ரிஷாவும் மாத்திரம் வசனங்களைப் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டிருப்பது (இது போன்ற script-ற்குத் தேவைதான் என்றாலும்) படத்தின் பெரிய பேஜார்! படத்தின் பின்பாதியில் "யப்பா நேரமாச்சு, எப்போ படத்த முடிக்கப் போறீங்க?" என்று தியேட்டரில் குரல்கள் கேட்கின்றன. கெளதம் சார், நோட் பண்ணுங்க!



படம் முழுவதும் சிம்புவுடனேயே வரும் ஒளிப்பதிவாளர் நண்பர் பேசிப்பேசியே காமெடி செய்து நம்மைக் கொஞ்சம் காப்பாற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - பாருங்கள்!

2 comments:

Anonymous said...

Giri enntha padhathukku entha revire tomuch, one of the slowest movie from Gautham.

Giri Ramasubramanian said...

@ Anonymous - தங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டிய குறையை நான் என் விமரிசனத்தின் பின் பாதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அந்தக் குறையைக் காரணம் காட்டி படம் கொண்டுள்ள ஏகப்பட்ட நல்ல விஷயங்களைப் புறம் தள்ள முடியாதல்லவா?

Related Posts Plugin for WordPress, Blogger...