Feb 2, 2010

ஒருவன் ஒருவன் முதலாளி......

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தூர்தர்ஷன் விழா ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார், "தமிழில் இரண்டே இரண்டு தொலைக்காட்சி சேனல்கள்தாம் உள்ளன, அவை "பொதிகை மற்றும் ஜெய-ராஜ-விஜய-சன்" என்றார்.

பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் (நிர்மா, ரஸ்னா, ஓல்டு சிந்தால்), பழைய தூர்தர்ஷன் தொடர்கள் (ராமாயண், அலீப் லைலா, ஜுனூன்), வாராந்திர நிகழ்ச்சிகள் (எதிரொலி, முன்னோட்டம், ஒளியும் ஒலியும், செவ்வாய் நாடகம், ரங்கோலி, சித்ரஹார்) என ஒரே சேனலில் நாம் காத்திருந்து ஒரு காலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.
இன்று எந்தத் தலைப்பை சொன்னாலும் அதில் ஒரு சேனல் இருக்கிறது. இசை, சினிமா, நகைச்சுவை, செய்தி, விளையாட்டு, கல்வி, கார்டூன் என எல்லாம் தனித்தனியே சிதறிக்கிடக்கின்றன. ஆனால் மக்களிடம் தரப்படும் நிகழ்ச்சிகளின் வடிவம்? அதன் தரம்? அது அவரவர் இஷ்டத்திற்கு கட்டவிழ்த்து விட்ட கணக்கில் இருக்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன் தூர்தர்ஷனின் ஒடியா (ஒரியாவின் புதிய பெயர்) சேனலில் "முக்தேஷ்வர் நடன விழா (Mukteswar Dance Festival)" காணும் பாக்கியம் கிடைத்தது. நான் பார்த்த நாற்பத்தைந்து நிமிடங்களில்.... "அந்த live performance, நடனக் கலைஞர்கள் வெளிப்படுத்திய பாவம் (expressions), பின்னணியில் மாறிக்கொண்டே இருந்த விதவிதமான ஜதிகளுடன் கூடிய இசை, பின்னணியில் முக்தேச்வர்  கோவில் கோபுரம், இரவை இரவாய்க் காட்டும் விதமாய் விளக்கமைப்புகள் என அனைத்தும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. அத்தனை நெடிய நடன நிகழ்ச்சிக்கான அவர்களது ஆயத்தங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சுதந்திரம் தூர்தர்ஷனுக்கு மட்டுமே உண்டு. மற்ற தனியார் சேனல்களுக்கு உள்ள சுதந்திரம் குறித்து நான் சொல்லி உங்களுக்குத் தெரியும் அவசியம் இல்லை.


(இந்த வீடியோ நான் பார்த்த நடனம் அல்ல, எனினும் உதாரணத்திற்கு இணைத்திருக்கிறேன்)


தொடர்புடைய இடுகைகள்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...