ஸ்வாமியின் மனமாற்றமும் நாத்திகனின் மதமாற்றமும்
பேராசிரியர் பெரியார்தாசன் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் அப்துல்லா என்று இன்று அழைக்கப்படும் அன்பரின் மதமாற்றம் குறித்த என் கருத்துக்களைப் பதிய வேண்டாம், இது ஒரு விவகாரமான விஷயம் என்றே இருந்தேன். பின்னர், ஒரு பிரபல எழுத்தாளரின் தளத்தில் இதுகுறித்த என் கேள்விகளைப் பதிவு செய்தேன். எழுத்தாளருக்கு என் கேள்வியின் மேல் ஆர்வம் ஏற்படவில்லை அல்லது நேரமில்லை என எண்ணுகிறேன்.
ஆகவே, இங்கே என் கருத்துக்கள்.
என் கருத்தில் மதமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுள்ளும் நிகழும் ஒரு மாபெரும் மாற்றம், அது பணத்தைக் காட்டுவதன் மூலம் மட்டுமே நிகழும் விஷயமல்ல.ஒருவனின் உள்ளே வரும் அல்லது உள்ளே வரவேண்டிய மாற்றம். எந்த மதமாயினும் அங்கு ஒருவன் வெளிச் செல்கிறான் என்றால், அவன் பற்றி அம்மதம் கவலை கொள்ளும் அவசியமில்லை என்பதுவும் என் கருத்து. அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் அது அம்மதத்திற்கு இழப்பல்ல.
சரி விஷயத்திற்கு வருவோம். மதம் மாறிய யார் பற்றியும் நான் இதுவரை பேசியதில்லை. பேராசிரியர் பற்றி நான் இங்கு பேச விழையும் காரணம், அவர் ஒரு நாத்திகராய்த் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டும், மதங்கள் மற்றும் மதங்கள் சார்ந்த பின்பற்றுதல்களை விமரிசிப்பவராக அல்லாமல், எள்ளி நகையாடும் ஒரு அசிங்கமான வழிமுறையைக் கொண்டிருந்ததால்தான். நான் போற்றி மதிக்கும் தெய்வங்கள் மற்றும் ஆச்சார்யார்கள் குறித்த விமரிசனங்களும் கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவைகளே. ஆனால் அசிங்கத்தை அள்ளி வீசுதல் அல்ல. ஆகவேதான் இந்தப் பதிவு.
பேராசிரியரே ஒரு பேட்டியில் சொன்னார், நான் கூறிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரம் பேராவது நாத்திகர்கள் ஆகி இருப்பார்கள் என.
என்னுடைய கேள்வி இங்கு ஒன்றே ஒன்றுதான். பிரம்மச்சர்யத்தை போதித்த நித்தியானந்தா, தான் போதித்ததை பின்பற்றாது நடிகை ஒருவருடன் கூடிக்குலவியது தவறு என்றால், பேராசிரியர் செய்ததும் அதற்கு சற்றும் குறைவில்லாத...இன்னும் சொல்லப்போனால் அதனைவிட ஆயிரம் மடங்கு அசிங்கமான விஷயம்.
நித்தியானந்தாவின் அந்தரங்கங்களை அதிகாரம் கையிலிருக்கும் தைரியத்தில் உலகுக்கே வெளிச்சம் போட இருபத்து நான்கு மணிநேரமும் நீலப்படக் கணக்கில் ஓட்டிய ஊடகங்கள்... நித்தியானந்தாவிற்கு சற்றும் குறைவில்லாது, போதித்ததை பின்பற்றாது மாற்று வழியில் சென்ற பேராசியரின் தோலை உரிக்க என்ன செய்தன. .
செக்ஸ் என்றால் நாக்கைத் தொங்கப் போட்டவாறு கண்ணிமைக்காது பார்க்கும் நம்மைச் சொல்ல வேண்டும்.
9 comments:
மிக அபத்தமான ஒப்பீடு செய்துள்ளீர் நண்பரே..
நித்யானந்தா ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தான் மட்டும் கபடத்தனமாக செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டவர் மட்டுமல்லாமல் இன்னமும் தான் தவறே செய்யாத யோக்கியர் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பவர்.
ஆனால் பெரியார்தாசனோ கடந்த காலங்களில் தான் கூறிய நாத்திகக் கருத்துக்கள் தவறானவை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு அதற்காக மன்னிப்பும் கேட்டவர். அவர் ஊருக்கு நாத்திகம் போதித்து தான் மட்டும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தால் ஊடகங்கள் கண்டிப்பாக அவரை ஒரு வழியாக்கியிருக்கும். கொஞ்சம் சிந்தித்து கருத்தை பதிவிடுங்கள் நண்பரே.!
சீர்திருத்த திருமணம் சட்டபூர்வமாக்கப்படாத காலத்தில அதை பலருக்கும் செய்து வைத்து விட்டு ( இந்து மத சடங்குகளை எதிர்க்கும் நோக்கமே பிரதானம்) தான் சட்டபூர்வ திருமணம் செய்து கொண்ட சீர்திருத்தவாதிகள் வாழ்ந்த நாடு இது. இது எல்லா வகையிலும் தொடரும். இங்கே முக்கியம் இந்து மத எதிர்ப்பு மட்டுமே.
இந்த பகுத்தறிவாதிகள் எல்லாம் சான்றிதழ்களில் என்ன மதம் போட்டுக் கொள்வார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
@ தமிழ் மீரான்
சாகர காலத்திலே சங்கரா அப்படீன்னு ஊரிலே ஒரு பழமொழி சொல்லுவாங்க
மதம் மாறியதோ ஒரு மதத்தை விமர்சனம் செய்ததோ கூட பெரிய தவறில்லை. ஆனால் தன் பேச்சால் பலரையும் நாத்திகர் ஆக்கிவிட்டு தான் மட்டும் escape ...அது தான் ஏற்க முடியலை. இப்போ இவர் பேச்சை கேட்டவங்க எல்லாம் என்ன செய்வாங்க ?
போன வாரம் நித்தி குறித்து விஜய் டிவி யில் நக்கீரன் கோபால்கிட்டே பேட்டி எல்லாம் வேறு எடுத்தார்.
கொஞ்ச நாளில் அதே நிகழ்ச்சியில் இவரே வந்து தன் மத மாற்றம் குறித்து விளக்கம் கொடுப்பார் என்று நம்புவோம்
http://www.virutcham.com
உண்மையிலேயே அற்புதமான பதிவு. என்ன, யாரிடமும் இந்த கேள்விக்கு பதில் வராது. மழுப்பலாக பேசுவார்கள்.
@ விருட்சம்
நல்ல கேள்வி கேட்டீங்க சீர்திருத்த கல்யாணவாதிகளை.
@ கருப்பு
தங்கள் வருகை, கருத்து...இரண்டுக்கும் மிக்க நன்றி.
பெரியார் தாசன் நாத்திகனாக இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, அதற்கு முன்பே புத்தமதத்திற்கு மாறி சித்தார்தன் என்று பெயர் வைத்துக் கொண்டார்.
//அவர் ஊருக்கு நாத்திகம் போதித்து தான் மட்டும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தால் ஊடகங்கள் கண்டிப்பாக அவரை ஒரு வழியாக்கியிருக்கும். //
இஸ்லாமுக்கு மாறும் முன்பு பெரியார் தாசனின் பெயர் சித்தார்த்தன், பவுத்த மதத்திற்கு மாறி இருந்தார். எனவே நாத்திகனாக இருந்து மாறினார் என்பது நச்சு பிரச்சாரம்
@ கோவி கண்ணன்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தமிழ் மீரான் அவர்களுக்கு நான் அளித்த விடை இங்கே.... உங்களுக்கு இது ஏற்புடையதா எனப் பார்க்கவும்
http://www.sasariri.com/2010/04/blog-post_21.html
@கோவி கண்ணன்
//நச்சு பிரச்சாரம்//
இதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க.
நான் பிரச்சாரம் பண்ற அளவுக்கெல்லாம் பெரிய ஆளில்லை. அதுக்கெல்லாம் வேற பெரியவங்க ப்ளாக்குகள் இருக்கு.
எனக்குன்னு நாலு அல்லது எட்டு ரெகுலர் ரீடர்ஸ் இருக்காங்க. அவங்களோட என் மனசுல தோணறதைப் பகிரவும், என் டைரியாவும்தான் இந்த சைட்.
மறுக்கா சொல்றனுங்க.... பிரச்சாரமெல்லாம் பெரிய வார்த்தை
Post a Comment