யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் எனக்குப் பிடிப்பதில்லை...! இந்த மனுஷன் கம்போஸ் பண்றதோட நிறுத்தக் கூடாதா? பாடி வேற தொலைக்கணுமா எனத் தோன்றும்.
இந்த ரீமிக்ஸ் செய்யப்படும் பாடல்களின் ஜிம்மிக்ஸ்கள் எனக்கு ஆர்வமூட்டுவதில்லை, எரிச்சலே தருகின்றன.
புதுசு புதுசா பாடறாங்க, யாரு என்னன்னே தெரியலை எனக்கு. SPB-யின் குரலையும், K.J.யேசுதாசின் குரலையும் அவர்கள் உச்சரிக்கும் இரண்டாவது வார்த்தையிலேயே கண்டறிய முடிகிறது.
தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா யாரேனும் ஒருவராவது பார்க்க லட்சணமாக இருக்கிறார்களா என்ன?
இவ்வாறாக, அலுவலகத்திற்கு செல்கையில் காரில் முன் அமர்ந்தவாறு பேசிச் செல்கிறேன் நான்.
பின்னாலிருந்து ஒரு இருபத்தைந்தின் குரல் கேட்கிறது, "சார், உங்களுக்கு வயசாயிடுச்சி சார்".
ஓ! நமக்கு முப்பது தாண்டிடுச்சா?