இருபது வருடங்கள் முன் நான் சென்னை வந்த புதிதில், செம்பியம் சிம்சன் கம்பெனியைத் தாண்டினால் எதிரே அழகாக நிற்கும் ஒரு கிருஷ்ணர் கோவிலும் அதே காம்பவுண்டிற்குள் நிற்கும் ஒரு கிறிஸ்துவ தேவாலயமும்.
கிறிஸ்துவும் கிருஷ்ணனும் இணைந்தது எப்படி என நான் பலமுறை வியந்ததுண்டு. ஒரு கிறிஸ்துவ இந்து ஜோடியின் காதல், திருமணத்தில் முடிந்து காதலின் உச்சியில் அவர்கள் இருக்கையில் எழுப்பப்பட்ட காதலின் அடையாளம் அவை.
கிறிஸ்துவும் கிருஷ்ணனும் இணைந்தது எப்படி என நான் பலமுறை வியந்ததுண்டு. ஒரு கிறிஸ்துவ இந்து ஜோடியின் காதல், திருமணத்தில் முடிந்து காதலின் உச்சியில் அவர்கள் இருக்கையில் எழுப்பப்பட்ட காதலின் அடையாளம் அவை.
அக்கோவில்களில் தெய்வீக மணம்.இரு சுடர்களாய் வீசுவதை நான் கண்டிருக்கிறேன். அப்போது ஒரு நாள் ,கிருஷ்ணர் கோவிலில் ஒரு சமயச் சொற்பொழிவு நடக்கையில் திடீரென மழை வர, பக்த கோடிகள் அனைவரும் மாதா கோவில் நிழலில் அமர்ந்து சொற்பொழிவு கேட்டார்களாம். அந்நாட்களில் ஆனந்த விகடனில் இது பற்றிய கட்டுரை ஒன்றும் வந்தது. கோவிலின் சிறப்பைக் கண்டு உணர்ந்த எனக்கு, இச்செய்தி புல்லரிப்பைத் தந்தது.
வருடங்கள் ஓடின. திடீரென கோவில்கள் பொலிவை சற்றே இழந்தன, பராமரிப்பு குறைந்தது, இதன் விளைவாய் பக்தர்களின் வருகை குறைந்தது. காரணம் காதல் துணைகளுக்குள் வந்த மன வேற்றுமை. சிலப்பல மாதங்களுக்குப் பிறகு சட்டத்தின் வாயிலாக அவர்கள் தங்களுக்குள்ளான உறவைப் பிரித்துக் கொண்டார்கள். கொஞ்ச நாட்களில் கோவில்களுள் ஒன்று இடித்து அகற்றப்படுவதற்குத் தயாரானது. நண்பர்கள் வாயிலாக கேள்விப்பட்ட எங்கள் குழாமிற்கு மனம் சங்கடப்பட்டது. பின்னர் கோவில் அகன்ற இடத்தில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் எழுந்தது. அவ்வளவே! இன்னமும் அங்கு இருக்கும் இன்னொரு கோவில் இப்போது பழையதாய் கோபுரம் மட்டுமாக காட்சியளிக்கிறது. அந்த பக்தர்கள், பக்தி மணம் என எதுவும் அந்த இடத்தில் இப்போது இருப்பதாய்த் தெரியவில்லை.
காதல் மறைந்தது, கடவுள் மறந்தது. (இல்லை மாற்றியும் படித்துக் கொள்ளலாம்)
தன்னைக் காத்துக் கொள்ளவேணும் அவர்களுக்குள்ளான காதலைப் பொய்யாக்காமல் இருந்திருக்கலாம் அந்தக் கடவுள்.
4 comments:
superb post- brilliant: ***** (five stars- ketta vaarthaila thitrennu ninaichukkatheenga)
ungaloda intha post ennai kalanga vechiruchi Andal.
ambalaikalukku arivu valarave valaraatha?
Thanks. I think I have kept "Eppodhum Penn" away. Need to start writing there...!!!
really nice post
கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html
Post a Comment