சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்.....
நெற்குன்றத்தில் அப்போது நான் வேலை செய்து வந்த நேரம். பைக் வசதியெல்லாம் இல்லாத ஒரு காலம். மாதவரத்திலிருந்து கோயம்பேடு, கோயம்பேடிலிருந்து நெற்குன்றம் என இரண்டு பேருந்துகள் தாண்டி அலுவலகம்.

வாழ்க்கையின் மிக சுவாரசியமான நாட்கள் அவை. லூகாஸ், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், கிண்டி வழியாக தாம்பரம் வரை செல்லும் 170A மட்டுமே துணை அப்போது. இத்தனை இடங்களை கடக்கும் அப்பேருந்தில் நீண்டதூரப் பிரயாண நண்பர்கள் என ஆறேழு பேர் சேர்ந்தோம்.
மூலக்கடையைக் கடக்கும்போது புளிமூட்டையாகிவிடும் பேருந்து. நடுவில் நுழைவாசல் உள்ள பேருந்து. எனவே பின் பாதி முழுக்க ஆண்கள் ராஜ்ஜியம் ஆகிவிட, கடைசி சீட்டை ஆக்கிரமிப்போம் நாங்கள். "கிரி, ம்ம்ம்.... ஆரம்பிங்க 'வராக நதிக்கரையோரம்", எனக் குரல் வரக் காத்திருக்கும் எங்கள் ஜமா. பாட்டுக் கச்சேரியை ஆரம்பிப்போம். ஜன்னலோரம் அமரும் பவித்ரன் ஒரு கையை வெளியே வைத்து பேருந்தின் வெளிப்புறம் தாளம் தட்ட, நானும் சரவணனும் பாட ஆரம்பிப்போம். என்னடா நூறுபேர் மத்தியில் பாடுகிறோமே என்றெல்லாம் யோசிக்காத பருவம் அது.
அங்கே ஒவ்வொருவரின் ரீயாக்ஷனும் ஒவ்வொரு மாதிரியாய் இருக்கும்.
"என்ன தம்பி, பழைய பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா?"
பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடல் பாடினால், "சார், ஜெமினி கணேசனே நேர்ல வந்தாப் போல பாடறீங்க சார்" (நல்ல வேளை, அவர் இதை கேட்கலை).
"கண்ணுபடப் போகுதய்யா சின்ன கண்டக்டரே", என பவித்ரன் பாடினால் அந்த ஒல்லிப்பிச்சி கண்டக்டர், "ஏய், யாருய்யா, இங்க பாடவே கூடாது. அண்ணாநகர் போலிஸ் ஸ்டேஷன்'ல வண்டியப் போடுப்பா டிரைவர்", என எங்களை மறு கலாய்ப்பு செய்வார்.
"அண்ணா, புதுசா பாட மாட்டேங்களா? பழைய பாட்டா பாடி போர் அடிக்கறீங்க?" ஸ்கூல் வாண்டு ஒன்றின் நேயர் விருப்பத்திற்கு சரவணன் புதுப் பாடல் எதையேனும் எடுத்து விடுவான்.
சுந்தரம் சாருக்கு பழைய பாட்டு, குறிப்பாக "கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே", தினமும் பாட வேண்டும். அவருடனே பிரயாணம் செய்யும் அவர் சகலைக்கு எந்தப் பாட்டு பாடினாலும் ஒகே ஆனால் பாடுபவர் காலை வார வேண்டும்.
சிரித்தவாறே பாடல் கேட்கும் சதாசிவம் ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் அப்பாடல் பற்றிய ஒரு கருத்தைப் பகிர்வான். எங்கள் ஜமாவின் அப்துல் ஹமீது அவன். இன்னைக்கும் இதே பாட்டாய்யா, சரி பாடித்தொலை என்பான் ரமேஷ்.
இதில் எதிலும் சேர்த்தியில்லை பாபு. அவன் எங்கள் குழுவில் எப்படிச் சேர்ந்தான் என்பது எங்கள் யாருக்கும் புரியாத ரகசியம். தவறாமல் தினம் வருவான், எங்கள் குழுவுடன் ஒன்றோடோன்றாக அமர்வான். என்ன பாடினாலும் என்ன பேசினாலும் ஒரு வெறித்த மௌனத்துடன் இருப்பான். நம்முடைய நாற்பது வார்த்தைக்கு அவனிடமிருந்து ஒரு வார்த்தை பதிலாக இருக்கும். கையில் எப்போதும் திறந்த நிலையில் ஒரு சிறு புத்தகம், வாயில் தவறாமல் ஏதோ ஒரு மந்திர ஜபம். இதுதான் பாபு.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புனிதத் தலத்திற்கு செல்வதாக முடிவானது. "நான் வரலை" என பாபு தவிர்த்தான். அவன் மதம் சார்ந்த நம்பிக்கைகள் எங்களுடன் வருவதற்கு அவனுக்கு இடம் தரவில்லை என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் எங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒரு விஷயம், அத்தனை மாதங்களாகப் பேசாமல் வந்து கொண்டிருந்த பாபு அதன்பின் புதிதாகப் பேச ஆரம்பித்தான். கொஞ்சமல்ல, நிறைய பேசினான். அவன் பேசிய அத்தனையும் மதம் சம்பத்தப்பட்ட பேச்சுக்கள். தன் மதத்துடன் எங்களில் பலர் சார்ந்திருந்த மதத்தையும், கடவுள்களையும் குறித்து சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டு என மெல்ல மெல்ல ஏதேதோ பேசத் துவங்கினான். இதை எங்களில் யாரும் ரசிக்கவில்லை.
பேச்சு ஆரோக்கியமான சூழலில் பயணிப்பதாக எங்களில் யாருக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எங்கள் பேச்சுக்கள் கருத்து யுத்தமாகத் தொடங்கி, அதன் பின் பட்டிமன்ற பாணியில் பயணிக்கத் துவங்கியது. அதனை பெரும் சண்டையாக வெடிக்க வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது விதி.
பாபு தவிர்த்து மற்ற எல்லோரையும் ஒரு வார இறுதியில் சந்திக்க அழைத்தார் சுந்தரம் சார். "நாம் பாபுவைத் தவிர்ப்போம்", என்றார். அப்படியே ஆகிப் போனது. இப்போது நாங்கள் எல்லோரும் பழைய பாபுவாகிப் போனோம். "ஒரு ஹாய்", "ஒரு பை", அத்துடன் அவனிடம் நிறுத்திக் கொண்டோம்.
பாபு இதனை எதிர்பார்க்கவில்லை. எங்கேனும் பேச்சு துவங்குமா எனக் காத்திருந்தான். அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக அவன் பயன்படுத்திக் கொண்டாலும், எங்களில் ஒருவர் ஏதேனும் பேசி அந்தச் சூழலை மாற்றுவதாக நாங்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்ததால், சிலப்பல நேரங்களில் அது பாபுவுக்கு மூக்குடைப்பில் சென்று முடிந்தது.
இப்போது அவனுடைய அடுத்த இலக்கு நானாகிப் போனேன். தினம் அவன் பேருந்து ஏறும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்து வந்து நான் பேருந்து ஏறும் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் மெல்லப் பேச்சு தரத் துவங்கினான். மீண்டும் மத யானை முருங்கை மரம் ஏறியது. தாங்குமா?
கடவுள் கதைகள் கொஞ்ச நாளைக்கு. சரி, சுவாரசியமாக இருக்கிறதே என நினைத்தேன். கடவுள் விளம்பரங்கள் கொஞ்ச நாட்களுக்கு நடந்தது. என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அடுத்தக் கட்டம்?
"நீங்கள் உங்கள் கடவுள்களை நம்பாதீர்கள்", என்றான். எனக்கு விவாதம் செய்யும் மனநிலை எப்போதும் இல்லை. அவன் ஒரு முடிவோடு வருகிறான், அவனிடம் பேசிப் பயனில்லை.
"நாம் வேறு பேசலாமா?"
"அவை சாத்தான்கள்"
"இருக்கட்டும் பரவாயில்லை"
"அப்போ அங்கேதான் கடைசி வரை இருப்பீர்களா"
"உங்களால் இங்கு வர முடியுமா", எனக் கேட்டேன்.
"ச்சே ச்சே! அது சாத்தியமே இல்லை."
"அதே போலத்தான், ச்சே ச்சே, எனக்கும் அது சாத்தியமே இல்லை.", முடிந்தது என நினைத்தேன்.
"நீங்க வேணா பாருங்க ரெண்டாயிரமாவது வருஷம் உலகத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகுது. அதுக்கு அப்புறம் சாத்தான்களை நம்பறவங்க எல்லோரும் செத்துப் போயிடுவாங்க. எங்க மதத்தை நம்பறவங்க, எங்க கடவுளை ஏத்துக் கிட்டவங்க மட்டும்தான் உயிரோட இருப்பாங்க".
எனக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்குத் தப்புத் தப்பாய் கேன்வாசிங் வேலை சொல்லித் தந்த சேல்ஸ் மேனேஜர் மீது பரிதாபம் ஏற்பட்டது.
"அந்தப் பக்கம் வந்து உயிரோட இருக்கறதை விட, இந்தப் பக்கம் இருந்து செத்துப் போயிடறேன். அந்தக் கவலை உங்களுக்கு வேணாம். இனிமே இந்த கேன்வாசிங் வேலை வெச்சுக்கிட்டு என்கிட்ட வந்தா அசிங்கமா திட்டுவேன் போயிடுங்க", என்றேன்.
அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கத் தேவையில்லை என்றாலும் எனக்கு விவாதத்தை முடிக்க வேறு வழி தெரியவில்லை. அதன் பின் பாபு என்வழியில் கடைசிவரை வரவில்லை. அவன் சேல்ஸ் டார்கெட் புத்தகத்தில் என் பெயரை நீக்கியிருக்கக் கூடும்.
அவன் மதம் சார்ந்த ஒரு பெரியவரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் பாபு சார்ந்த மதத்திலேயே வேறொரு உப பிரிவைச் சேர்ந்தவர்.
"_________ _________ _________ _________ _________ _________ _________ _________", அப்பா, அம்மா, குல கோத்திரம் எல்லோரையும் அந்த இடத்திற்கு அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைதார். "இவனுங்கலாலதான் எங்க மதத்துக்கே கெட்ட பேரு சார், நீங்க அவங்களையெல்லாம் ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க" என்றார். "அதைத்தான் நான் செய்தேன்", என்றுவிட்டு வந்தேன்.
பாபு சார்ந்த மதத்தின் அதே உபப் பிரிவு நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கையில், "அது கண்டிப்பாக தவறுதான், கண்டிக்கத் தக்க செயல்தான். இன்னும் சொல்லப் போனால், கடவுள் பெயரை பொதுவில் சொல்லாதே, அப்படின்னே எங்க மதம் சொல்லுது. இருந்தும் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவங்க தனிரகம், ஜஸ்ட் இக்னோர் பண்ணுங்க", இங்கும் அதே கருத்து.
இவங்களை என்ன பண்ணலாம்? எந்த நம்பிக்கையில் இப்படி மடத்தனம் செய்கிறார்கள். எங்கள் மதத்தை இத்தனை பேர் தழுவுகிறார்கள் என்ற புள்ளியியல் விபரங்களால் இவர்களுக்கு என்ன பலன்?
யாரேனும் சொல்லுங்களேன்!
.