May 15, 2010

ரத்த சரித்திரம் - மேலும்..

என் ரத்த சரித்திரப் பதிவைப் படித்துவிட்டு நண்பர் சண்முகமும், நட்பாசும் எழுதிய பின்னூட்டங்களுக்காக பதில் அளிக்க நான் திரட்டிய தகவல்கள் எனக்கு படம் பற்றி மேலும் வியப்பை ஏற்படுத்தியது. 


பின்னூட்டம்  1


ஹலோ கிரி,

உங்கள் 'ரத்த சரித்திர' trailor பார்த்தேன், இந்த மாதிரி படங்களெல்லாம் நீங்கள் encourage பண்றத நான் விரும்பல சார், தயவுசெய்து தவிர்ப்பீங்கனு நினைக்கிறேன் சார். Making ஸ்டைலுக்காக எந்த மாதிரி படங்களையும் பார்க்க முடியாது சார். பருத்தி வீரன் படத்தை பார்த்து நானும் பிரமித்தது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு தவறானது சார். எல்லோருக்கும் அந்த 14 ரீல் தன மனசில் இருக்கும், 15th ரீல் அல்ல. நான் உணர ஆரம்ப்பித்திருக்கிறேன். இது என் தாழ்வான கருத்து பிழையிருந்தால் மன்னிக்கவும்.

நன்றி,
சண்முகநாதன்



பின்னூட்டம் 2



@ நண்பர் சண்முகநாதன்,

பருத்தி வீரன் பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி.


ரத்த சரித்திரம் வருவதற்கு முன்னமேயே அதுக்கு சிவப்புக் கம்பளம் விரிசசிருக்காரு நம்ம கிரி- உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறாருன்னு தெரியல. அனேகமா அவரு ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்.

- நட்பாஸ் 
______________________________________________________________

சண்முகம் / நட்பாஸ் ரெண்டுபேருக்கும்,

உங்க ரெண்டு பேருக்கும் நன்றி, கேள்வி கேட்டதுக்காக...

முதல்ல பருத்திவீரன் பத்தி... அந்தப் படம் எனக்கும் அப்படி ஒண்ணும் பிரமிப்பை ஏற்படுத்திய படமில்லை. சில சில்லரைக் காமெடிகள் படத்துல எனக்கு பிடிச்சிருந்தது. அது தவிர்த்து அந்தப் படம் நெடுக எனக்கு என்னவோ முழுக்க கரப்பான்பூச்சி இருக்கற ஒரு அறைக்குள்ள இருந்த ஒரு உணர்வு. மேலும் அந்தப் படத்துல அரவாணிகளை வெச்சு பண்ணப்பட்ட அலம்பல்கள் (குறிப்பா ஒரு பாட்டுக்கு இடையில கேட்கப்படும் ஒரு கேள்வி) என் பார்வையில ஒரு கிரிமினல் குற்றம்.  நான் சாருவா இருந்திருந்தா இங்க கெட்ட வார்த்தை சொல்லி அமீரையும், அந்தப் பாட்டை எழுதின, இசையமைச்சவங்களை திட்டியிருப்பேன். 



பருத்திவீரனின் வியாபார வெற்றி அந்த காலகட்டத்தில் வந்த ஸ்டீரியோ டைப் படங்களால கிடைச்சது. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது, அதை ப.வீ தந்ததால படம் பாரதிராஜா முதலான பிதாமகர்களால் பாராட்டப்பட்டது.. அதைத் தொடர்ந்து வந்த சுப்ரமணியபுரம் தொடர்ந்து வந்து கல்லா நிரப்பிய அடுத்த முயற்சி.

சரி, ரத்த சரித்திரத்துக்கு வருவோம்.

ரத்த சரித்திர டிரைலர் குறித்த என் தெளிவான பார்வையை என் முந்தைய பதிவுல கொடுத்திருக்கிறேன். நான் இப்படத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.  என் பய உணர்வைப் பற்றி குறிப்பிட்டேன். அதுவே இது போன்ற படங்கள் மீதான அச்சத்தை குறிப்பிடுவதாக நான் நினைத்தேன். நான் எழுதிய தொனி வேறு பொருள் தந்திருந்தால் கொஞ்சம் மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். மேலும், டிரைலர் பார்த்து படம் பற்றி எந்த முடிவையும் செய்யவும் முடியாது. அது ஒரு எதிர்பார்ப்பை மட்டுமே கொடுக்க முடியும். படம் வந்தபின்தான் எதுபற்றியும் நாம் தெளிவா சொல்லணும்.

சூர்யாவிற்கு ஹிந்தி திரையுலகில் ஒரு வரவேற்பு கிடைக்கட்டும் என்பது மட்டுமே என் பதிவில் நான் கொஞ்சமேனும் சப்போர்ட் செய்து எழுதியது. அது சூர்யா மீது எனக்கு இருக்கும் அபிமானத்தால் வந்த வெளிப்பாடு.



சரி உங்களுக்கு பதில் தந்திட்டேன், இப்போ படம் பத்தி மேலும் சுவாரசிய தகவல்கள் பகிர்ந்துக்கறேன். படத்தைப் பற்றி என்னோட சித்தூர் தம்பி தந்த தகவல் இது.  ரத்த சரித்திரம் அல்லது ரக்த சரித்ரா ஆந்திராவுல, குறிப்பா அனந்தபூர் ஜில்லாவுல நடந்த ஒரு உண்மை சம்பவமாம். பலமான எதிர்ப்புகளைக் கடந்துதான் இந்தப் படத் தயாரிப்பு நடந்துட்டு இருக்கு.


பரிடால ரவி அப்படிங்கற அரசியல்வாதியின் ரோலைத்தான் விவேக் ஓபராய் பண்ணறதாப் பேச்சு. பரிடால ரவி பத்தி விக்கிபீடியாவுல படிச்சி பாருங்க. ரத்தம் உறையுது.






மத்தெலசெருவு சூரி அப்படின்ற factionist ரவியைக் கொலை செஞ்சாருன்னு அவரு ஐந்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு காங்கிரஸ் ஆதரவுல சமீபத்துல வெளி வந்ததாத் தெரியுது. இந்த ரெண்டு குடும்பத்துக்குமான பகை சுமார் இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல தொடர்றதுதான் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சூரி ரோலைத்தான் சூர்யா பண்றார்னு நாமே புரிஞ்சிக்கலாம்.


ரத்த சரித்திரம்....உண்மையிலேயே ரத்த சரித்திரம் சார்.


உண்மை சூரியின் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி இங்கே, ஒரு சின்னக் குழந்தையின் ஆர்வத்தோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த இதயத்திலா ரத்த வெறி கொண்ட பழி வாங்கும் உணர்வு என நினைக்கும்போது நம்பத்தான் முடியவில்லை என்னால்...





7 comments:

natbas said...

நல்லாத்தான் நியாயப்படுத்தி இருக்கீங்க, ஆனா ஒரு டவுட்டு.

நீங்க கொடுத்த கானொளியில வர சூரி மாதிரி நம்ம சூர்யா இல்லியே, என் மேக் அப்ல கோட்டை விட்டுட்டாரு ராம் கோபால் வர்மா? (அவரைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே!- உங்களுக்கு அவரைப் பிடிக்காதோ?)

Giri Ramasubramanian said...

@ natbas

கூகுல் இமேஜஸ் போயி maddelacheruvu suri அப்டின்னு ஒரு தேடல் தேடித் பாருங்க. வர்ற ரிசல்ட்ல் பாதி நம்ம சூர்யாதான். மீதி, சூரியோட நிஜப்படம் வரும், அதை வெச்சு பார்த்துட்டு சொல்லுங்க சார்.

நீங்க கானொளியில பார்த்தது 2010 சூரி. RGV'யோட சூர்யா 2005 'க்கு முந்தின சூரி, சரியா?

அப்புறம் உங்க ரெண்டாவது கேள்வி! ராம் கோபால் வர்மா படம் எதையும் நான் சிவாவுக்கு அப்புறம் பார்த்தது இல்லை. அதனால பெருசா இப்போ கமென்ட் பண்ண ஒண்ணுமில்லை. படம் பார்த்துட்டு பாகங்களை குறிக்கறேன்.

natbas said...

என்ன, அவரு சிவான்னு ஒரு தமிழ் படம் எடுத்திருக்காரா? யாரு நடிச்ச படம்? எப்போ வந்தது?

(உங்க ப்ளாகர் ப்ரோபைலை முடக்கி வெச்சிருக்கீங்களே, அது ஏன் என்கிற மர்மத்தை நாங்க தெரிஞ்சிக்கலாமா?)

சூரி/ சூர்யா பத்தின கமேன்ட்சை வாபஸ் வாங்கிக்கறேன்.

Giri Ramasubramanian said...

என்ன சார் இப்படி கேட்டுபோட்டீங்க... சிவான்னு சொன்னேனா? அதை ஷிவான்னு மாத்திக்கோங்க. அதுதான் அண்ணன் ராம்கோபாலோட மொத படம். தமிழ்ல டப் பண்ணி வந்துது. ஹாக்கி பேட் எடுத்து அடிச்சிக்கற தெலுகு கலாசாரத்துக்கு விதை விதைச்ச படம்னு நெனைக்கறேன்.

http://en.wikipedia.org/wiki/Shiva_(film)

Anonymous said...

டேய் மானங்கேட்டவனே ..

உனக்கு சினிமாவை பத்தி என்ன தெரியும் ? பருத்தி வீரன் படத்தின் தரம் பற்றி பேசுற அருகத இருக்கா உனக்கு ? .

நீயே ஒரு கரப்பான் புச்சி மாதிரி . யார் எவளோ திட்டினாலும் சூடு சுரண்ணை இல்லாம , கரப்பான் மாதிரி இருக்கிறவன் .

உன்னால இந்த நாட்டுக்கு எதாவது பிரயோஜனம் உண்டா ? நீ எதுக்கு அடுத்தவனை பற்றி விமர்சனம் பண்ற ? உன் வேலைய ஒழுங்கா பாரு . வாழ்க்கையில முன்னேறுவ.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Giri Ramasubramanian said...

@ அனானி 2

என்னை மானங்கெட்டவன் எனத் திட்டியவருடன் நான் என்றோ சமரசம் ஆகிவிட்டேன். ஆகவே, உங்கள் பதில் இங்கே பொருந்தாமல் போகிறது. உங்கள் கருத்தை பிரசுரிக்க முடியாமைக்கு DELETE செய்தமைக்கு வருந்துகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...