May 18, 2010

தமிளுக்கு இளிவு...!!


யதேச்சையாக இரண்டு யுடியூப் வீடியோக்களைக் கண்டேன்.

முதல்  செய்தி கொஞ்சம் பழையது. நடிகர் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தினார் என்று தமிழகமே பொங்கி எழுந்த செய்தி. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு:


1 . சன் டிவி வழக்கம் போல நீதியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.  தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஜெயராம் என்பதாகவே செய்தி இருக்க வேண்டும், நீதியின் மூலம் அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் நிரூபிக்கப் படும் வரை. இங்கே சன் டிவி எப்படிச் செய்திகளைத் தொடங்குகிறது எனப் பாருங்கள்.

2 . செய்திக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரலின் தமிழைக் கேளுங்கள். இவர்களை விட ஜெயராம் மோசமான இழிவை செய்திருக்க வாய்ப்பில்லை.




http://naamtamilar.wordpress.com/ இணைப்பில் காணக் கிடைக்கும் இரண்டாவது வீடியோவில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் அமைப்பின் தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார் இந்தத் தம்பி (யார் இவர்?). அரசியள், சிளம்பு, விளங்குகள் எனத் தாறுமாறாகத் தமிழ் பேசுகிறார். கூகிள் கூட தமிழை தவறாக தட்டினாலும் சரியாகக் கொணர்கிறது சார். நாம் தமிழர் என இயக்கப் பெயரை வைத்துக் கொண்டு இப்படித் தமிழ் பேசினால்.....? எனக்கு இது சரியா வரும்னு தோணலை!


இவங்களை மொதல்ல தமிழ் படிக்க அனுப்புங்க, பின்னால இவங்க நாம் தமிழர்'ன்னு மார் தட்டட்டும்.


19 comments:

natbas said...

அதெப்படி சார் ஒரே பதிவுல உங்களைத் திட்டறதுக்கு ரெண்டு ஆயுதங்களை எடுத்துக் குடுக்கறீங்க?
அதே மாதிரி, என் கோபம்'னு tag 'ஏ வெச்சிருக்கீங்களே, ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க போல இருக்கு?
உண்மைய சொன்னா, ல, ள மாத்திப் பேசறது பெரிய தப்பா எனக்குத் தெரியல.
நாம் தமிழர் சிவ சேனா, முத்தாலிக் கம்பெனி மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். பாக்கலாம்.
விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா, அதை சொல்லுங்க முதலிலே.

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்

என் பார்வையில ல ள மாத்திப் பேசறது தப்பு. அது தப்பு இல்லன்னு சொல்றது கிரிமினல் குற்றம்.
விஜய் அரசியல் விஜயம்? அது பத்திக்கிட்டு எரியும்போது அதுபத்தி எழுதுவோம். இப்போ என்ன அவசரம்.

Giri Ramasubramanian said...

@ Natbas

யார் வேணுமுன்னா யார வேணுமுன்னா அனுப்பட்டும். அடிப்பாங்க இல்ல கொல்லுவாங்க அவ்ளோதானே. தமிழுக்காக என் உயிர் போகறது எனக்கு பிரச்னை இல்லை.

Breeze said...
This comment has been removed by the author.
Breeze said...

I think there is nothing wrong in interchanging ல ள in general but as a tamil leader or soneome who leads tamil community must be using correct letters.

Giri Ramasubramanian said...
This comment has been removed by the author.
Giri Ramasubramanian said...

Thanks very much for your comments.

Though you support my views for the post content, I disagree with your initial statement. I think there should be no compromise in the pronunciation if it is general or special purpose. A mistake is a mistake. We do not tolerate it when it happens in English, we tease or even strongly comment who pronounce it wrong in English. But Tamil is always taken for granted. Parents who say "அட எனக்கே கே'வுக்கும் கோ'வுக்கும் வித்தியாசம் தெரியாது சார்" should be given imprisonment first. Because they feel ashamed to say that they do not know some basic stuff in English but when it comes for Tamil, they are happy to say that.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

மூச்சுக்கு 300 முறை தமிழ் தமிழ் என்று கூவும், வீட்டில் தெலுங்கு பேசும் நமது வருங்கால முதல்வர் “கேப்டன் டி வி” என்று அழகிய தமிழில் பெயர் வைத்ததை யாரும் புகழ்ந்து கூறக்காணோமே!!!???

natbas said...

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க தலைவா... எப்பவுமே இப்படித்தான் பெசிக்கிட்டிருந்தாங்களா என்ன?

சமீபத்துல ஆயிரத்தில் ஒருவன்ல பார்த்திபன் தலைமையிலான சோழ ராஜா கூட்டம் தமிழை அசிங்கப்படுத்திட்டாங்கன்னு காரசாரமா பேசிக்கிட்டாங்க நினைவிருக்கா?

http://chumma.posterous.com/10257905 இதை பாருங்க (விகடன்ல வந்த செய்தி)

அப்புறம் அந்தப் படத்தில் வசனம் எழுத உதவியர் கூட சொல்வனத்துல வந்த இந்த பேட்டியைப் படியுங்க. http://solvanam.com/?p=6441 அப்புறம் சொல்லுங்க.

மாற்றம் ஒண்ணுதாங்க நிரந்தரம். இந்த ல ள ந ன ண வித்தியாசமெல்லாம் இன்னும் ரெண்டு தலைமுறையில அழிஞ்சு போயிடும்: தமிழ் இங்கிலீஷ் மாதிரி அந்த வகையில ஆயிடும்- நீங்க என்னதான் உணர்ச்சி வசப்பட்டாலும்.

natbas said...

@ breeze

என்ன சார், ரொம்ப நாளா ஆளையே காணோம்?

அடிக்கடி வந்து உங்க கருத்தை வெளிப்படையா சொல்லுங்க. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நாங்க உங்களை வேத்து மனுஷனா நினைக்க மாட்டோம்: எப்பவும் பேச்சு பேச்சாத்தான் இருக்கும், பயப்படாதீங்க.

Anonymous said...

டேய் ,

நீயெல்லாம் பெரிய பருப்பு மாதிரி தமிழை பற்றி பேச வந்துவிட்டாய் . கேவலம் ஒரு BPO கம்பனியில் கூஜா தூக்கும் உனக்கு எதற்காக ஒரு வலைத்தளம் ?

எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறாயே என்ன தகுதி இருக்கிறது உனக்கு ? எழுத்தில் என்ன சாதித்து இருக்கிறாய் இது வரை ? ஏதேனும் ஒரு பத்திரிகையில் உன் படைப்பு வந்துள்ளதா ? இணையம் இலவசம் என்பதால் நீயெல்லாம் எழுதுகிறாய் .

natbas said...

நண்பரே,

நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுத நேர்ந்ததற்கு வருத்தப்படுகிறேன். அதற்கு எனது நண்பர் கிரியோ அல்லது அதற்கு பின்னூட்டமிட்ட என்னைப் போன்றவர்களோ காரணமாயிருந்தால் மன்னித்து விடுங்கள்.

உங்கள் கோபம் புரிகிறது- அதன் நியாயங்களும் புரிக்கிறது, ஆனால் இவ்வளவு காரசாரமான தாக்குதல் தேவைதானா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்- நயமாகப் பேசுவதுதானே நம் பண்பாடு? ஒருத்தரை ஒருத்தர் தரங்கெட்ட சொற்களால் திட்டிக் கொள்வது யாருக்கு என்ன நன்மையைத் தரும்?

சொல்லப் போனால், உங்கள் பதிவைப் படிக்கிறவர்கள், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து உடையவர்களாக இருந்தால், "இவங்களே இப்படித்தான்!" என்று நினைப்பார்களா இல்லையா? நீங்கள் யார் என்பது வெளியில் தெரிய வேண்டாம் என்று அனானியாகப் பதிவு செய்திருக்கிறீர்களே- அது இப்படிப்பட்ட பதிவுகள் உங்களுக்கு நல்லதொரு அடையாளமாக இருக்காது என்பதால்தானே!

நண்பர்களாக இருப்போம், வாருங்கள்- உங்கள் கருத்துக்களை நயமான வகையில் வெளிப்படுத்துங்கள் என்று நான் உங்களை வரவேற்கிறேன்.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

முதலில் ல, ள மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்திற்கு நன்றி. அதை நான் யோசிக்கிறேன், ஆனாலும் ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் எனக்கு இப்போதைக்கு இல்லை. எனக்கு ரொம்ப வயசாகிவிட்டதோ என்னவோ.சொற்கள் மருவலாம் (இரட்டை ரெட்டையாவது, கூடை கூட என மாறுவது போல) , தனிப்பட்ட எழுத்துக்களின் உச்சரிப்பு மாறுதல் குறித்து என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. நான் தமிழ்க் காவலன் இல்லை. ஆனால் தாய்மொழி வேறெனினும், தமிழ் படித்து வளர்ந்தவன்.

மேலும் திருமிகு.அனானிமஸ் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு நன்றி.

Giri Ramasubramanian said...

திரு அனானிமஸ் அவர்களுக்கு,

எனக்கு என்ன உரியது என நீங்கள் நினைத்தீர்களோ அதை உங்கள் எழுத்து மூலம் உமிழ்ந்து விட்டீர்கள். மிக்க நன்றி. இப்போது அங்கே தமிழைத் தப்புத் தப்பாய்ப் பேசி சீரழிக்கும் அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள், அதையும் சொன்னீர்கள் என்றால் நான் நிம்மதி அடைவேன்.

Giri Ramasubramanian said...

@ கிறுக்கல் கிறுக்கன்

அய்யா, இப்போதான் ஒரு பஞ்சாயத்து தொடங்கியிருக்கு. என்னை இன்னொண்ணுக்குள்ள இழுக்கறீங்களே! வேண்டாம் சாமி!

Shanmuganathan said...

ஹலோ கிரி,
இப்பொழுதுதான் எனக்கு மிகவும் திருப்தியாக உங்களது இந்த பதிவு. இது மாதிரிதான் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம். நானும் உங்களிடம் ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த ஜெயராமை விட்டு தள்ளுங்கள் அவர் ஒரு ஆர்வ மிகுதியில் சொல்லிருக்க கூடும். அதை நான் ஏற்றுகொள்ளவில்லை.. ஆனால் இந்த நாம் தமிழர் இயக்கம் முதலில் தமிழ் படங்களில் கேரள பெண்களை (பெரும்பாலும் எல்லா படங்களிலும்) இழிவாக சித்தரிக்கும் செயல்களை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதாவது தன் வீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.

திரு நட்பாஸ் அவர்களுக்கு,
ல ள ழ, ண, ன, ந, ர, ற வித்தியாசங்கள் வேண்டும் சார், தமிழோட சிறப்பை அதுதான் சார், அது மாறாது சார்.

திரு அநோன்ய்ம்ஸ்,
1. இந்த மாதிரி ப்ளாக் எழுதவதற்கு முதலில் என்ன தகுதி வேண்டும் என்று கூறுங்கள்.
2. நீங்கள் இந்த மாதிரி பேசுவதற்கு என்ன தகுதியுடன் இருக்கிறீர்கள் என்றும் கூறுங்கள்.
3. உங்கள் பெயரையே வெளியிட விரும்பாத உங்கள் தைரியத்தை நினைத்து எங்கள் போன்றோர்க்கே (நீங்கள் தான் எங்களை BPO ல் கூஜா தூக்குவதாகத்தானே கூறுகிறீர்கள்) கூசுகிறது.

Shanmuganathan said...

ஹலோ கிரி,
இப்பொழுதுதான் எனக்கு மிகவும் திருப்தியாக உங்களது இந்த பதிவு. இது மாதிரிதான் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம். நானும் உங்களிடம் ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த ஜெயராமை விட்டு தள்ளுங்கள் அவர் ஒரு ஆர்வ மிகுதியில் சொல்லிருக்க கூடும். அதை நான் ஏற்றுகொள்ளவில்லை.. ஆனால் இந்த நாம் தமிழர் இயக்கம் முதலில் தமிழ் படங்களில் கேரள பெண்களை (பெரும்பாலும் எல்லா படங்களிலும்) இழிவாக சித்தரிக்கும் செயல்களை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதாவது தன் வீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.

திரு நட்பாஸ் அவர்களுக்கு,
ல ள ழ, ண, ன, ந, ர, ற வித்தியாசங்கள் வேண்டும் சார், தமிழோட சிறப்பை அதுதான் சார், அது மாறாது சார்.

திரு அநோன்ய்ம்ஸ்,
1. இந்த மாதிரி ப்ளாக் எழுதவதற்கு முதலில் என்ன தகுதி வேண்டும் என்று கூறுங்கள்.
2. நீங்கள் இந்த மாதிரி பேசுவதற்கு என்ன தகுதியுடன் இருக்கிறீர்கள் என்றும் கூறுங்கள்.
3. உங்கள் பெயரையே வெளியிட விரும்பாத உங்கள் தைரியத்தை நினைத்து எங்கள் போன்றோர்க்கே (நீங்கள் தான் எங்களை BPO ல் கூஜா தூக்குவதாகத்தானே கூறுகிறீர்கள்) கூசுகிறது.

Giri Ramasubramanian said...

@ சண்முகம்

இறுதியாக, உங்கள் எதிர்பார்ப்பிற்கு என்னால் எழுத முடிந்ததற்கு எனக்கு மெத்த மகிழ்ச்சி. ஆனால் இத்தனை விவகாரமான ஒரு பதிவை நீங்கள் போற்றிப் புகழ்வது எனக்கு கிலியை ஏற்படுத்துகிறது. நீங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி என் உடம்பை ரணகளம் ஆக்காமல் விடுவதாய் இல்லை எனப் புரிகிறது.

Unknown said...

என் நண்பன் விட்டு தமிழில் பதிவிடுகிறேன் தாய்மொழியான தமிழ் பேச கூடிய நடிகர் ஜெயராம் வீட்டை தாக்கும் முட்டாள்ப,பட்டி,அண்டி சீமான் ஒரு தமிழனா!

Related Posts Plugin for WordPress, Blogger...