லைலாவின் தாக்குதலில் இருந்து எச்சரிக்கப்பட்ட தமிழகம் வழக்கம் போல தப்பித்து, வழக்கம் மாறாமல் ஆந்திரா அடி வாங்கியுள்ளது.
அடுத்த புயல் எப்போது எங்கே வரும் என நமக்குத் தெரியாது. எனினும் அதற்கு ஏற்கெனவே பண்டு (Bandu) எனப் பெயரிடப்பட்டுவிட்டது தெரியுமா உங்களுக்கு? உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் (WMO) அது சார்ந்த அந்தந்தப் பெருங்கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் / நாடுகள் இந்தப் பெயரிடுதலில் ஈடுபடுகின்றன.
வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மியான்மார், ஓமன், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் இனைந்து ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் 64 பெயர்களைக் கொண்ட லிஸ்டில் இருந்து "லைலா" என சமீபப் புயல் பெயரிடப்பட்டது. இந்தப் பெயரைத் தந்தது பாகிஸ்தான். "பண்டு"வின் பெயர் இலங்கை கொடுத்துள்ளது. பண்டு'வைத் தொடரும் புயலுக்கு "பெட்" (Phet) என தாய்லாந்து பெயரிட்டுள்ளது.
WMO'யின் ஒப்புதல் பெற்ற பெயர்கள் அதன் வரிசைப்படி அடுத்ததுத்த புயல்களுக்கு இடப்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இவ்வாறு பெயரிடும் வழக்கம் 1970'களிலேயே தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2000 வருடத்திற்குப் பிறகே இவ்வழக்கம் தொடங்கியுள்ளது.
அது இருக்கட்டும், "அது ஏன் புயலுக்குப் பெரும்பாலும் நிஷா, ஐலா, லைலா, கத்ரீனா என பெண்களின் பெயரையே வைக்கறாங்க" என கேள்வியை எழுப்புகிறார் இந்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சஞ்சய்.
ஒரு வேளை அப்படி இருக்குமோ? ஒரு வேளை இப்படி இருக்குமோ? அட ஆளை விடுங்கப்பா "பெண்களுக்கு எதிரி" அப்படின்னு ஒரு பதிவு எழுதி வாங்கிக் கட்டிக்கிட்டது போதும்.
1 comment:
ராத்திரி இருட்டுல பயத்தைப் போக்கிக்க சஷ்டிக் கவசம் சொல்றதில்லையா- அந்த மாதிரிதான் இதெல்லாம். பெண் என்றால் பேயே இறங்கும்போது புயல் இரக்கம் காட்டாதான்னு ஒரு இதுதான்! (பண்டுன்னா சிங்கள மொழியிலே நண்பர்னு பொருளாம்!)
Post a Comment