அவசர இனிப்பு தயார் செய்ய வேண்டுமா? சிம்பிள் அண்ட் சூப்பராக இருக்கவும் வேண்டுமா? வாருங்கள் பாசிப்பருப்பு கொண்டு அசோகா அல்வா செய்யலாம்.
பாசிப்பருப்பு இதர வகையறாக்கள் போல அல்லாமல் வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏதும் தராதது. எனவே இந்த அல்வாவை குழந்தைகளுக்கும் தாராளமாகத் தரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களைக் காணச் செல்லும்போது உங்கள் கையால் ஏதேனும் செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புபவர் நீங்கள் என்றால், அசோகா அல்வா அதற்கு மிகவும் உகந்தது.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - இரண்டரை கப்
முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையில் கலந்து கிளறவும். கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும்.
நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான அசோகா அல்வா தயார்.
அசோகா அல்வாவின் மிக எளிய செய்முறை இது. இதனுடன் கோதுமை மைதா சேர்த்து செய்பவர்களும் இருக்கிறார்கள். இணையத்தில் அந்த ரெசிபிக்களும் நிறையவே கிடைக்கின்றன. நான் சொல்லும் செய்முறை T20 அசோகா அல்வா.
9 comments:
//நெய் - இரண்டரை கப்// cup or spoon??
@ anonymous
கப் தானுங்க. ஸ்பூன்ல கலந்தா அல்வா பதம் வராது.
ரெண்டரை கப் நெய்யா! கண்ணைக் கட்டுதே...
நான் பெண் பார்க்கப் போன போது வாழைக்காய் பஜ்ஜியும் இந்த அசோகா அல்வாவையும்தான் கொடுத்தார்கள்- சங்கேதமாக என்னவோ சொல்லியிருக்கிறார்கள், எனக்குப் புரிந்தால்தானே! ஹூம்ம்ம்...
நல்ல பதிவு. பயனுள்ள இதுபோன்ற மேலும் பல விஷயங்களைக் கொடுங்கள் (சொலவடை சொலவடை என்று சொல்கிறார்களே, அது ஒரு ஹோட்டலிலும் கிடைப்பதில்லை. அதன் செய்முறை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்)
@அநாணி: கப்பா ஸ்பூனானு கேக்கறதுல என்னப்பா நாணம, பேரைச் சொல்லலாமே?
sir if u want to taste oiginal asokha go to thanjavur old bus stand.there u can really enjoy the original thirvaiyaru asoka sweet.just near bombay sweet stall.
the reciepe posted here also correct method. i appreciate giri.
@உமா ஐயர்
தஞ்சை தகவலுக்கு மிக்க நன்றி! நவம்பரில் செல்கிறேன். நிச்சயம் முயற்சிக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி! :)
T20 அல்வா- பார்த்து ரசிக்க மட்டுமா? ஏனெனில் சியர்ஸ் கேர்ள்ஸ் மாதிரி அழகாய் படம் மட்டும் போட்டிருக்கிறீரே அந்த டவுட்டில் கேட்டேனாக்கும் :)
பை தி வே டிவிட்டரில் லிங்க் தரும் பணியிலாவது வந்தமரவும் ! #ரிக்வெஸ்ட்
ஆகா.....இப்டியெல்லாம் நல்லதா எழுதறதுண்டா? ரொம்ப நன்றிங்க..செய்து சாப்ட்டு நிச்சயம் சொல்றேன் :))
- அனு ...
இந்த அசோக அல்வாவே ஒரு ஏமாத்து வேலை. இதெல்லாம் அல்வான்னு ஒத்துக்கமுடியாது.
Post a Comment