ஐபோன்’ல புதுசா ஒரு ஆப்பு (app) வந்திருக்காம். அந்த ஆப்பை அமுக்கிட்டு அதாண்ட உங்க சாக்ஸைக் கொண்டு போனா அந்த சாக்ஸுக்கு உண்டான சோடி சாக்ஸ் எதுன்னு உங்களாண்ட அது காட்டிக் குடுக்குமாம். அதனால அவசரத்துல சோடி மாத்தி சாக்ஸ் மாட்டிக்கினு போயி “இஹ்ஹீஹ்ஹீ”ன்னு ஆபீஸ் சகாக்களாண்ட வழியற வேலை இல்லியாம்.
பெறகு இன்னொரு விசியமும் உண்டாம். ஒரு குறிப்பிட்ட சாக்ஸ் தொவைச்சிருக்குதா, இல்லியா? இதுவரியும் இந்த சாக்ஸ எத்தினி தபா தொவைச்சிருக்கீங்கன்னு அல்லாத்தையும் இந்த ஆப்பு சொல்லிருமாம்.
இதனால சாக்ஸ மாத்தாம மாத்தி மாத்தி போட்டுனு போற சாக்ஸ் மாற்றான்’களுக்கு நல்ல பிரயோஜனம் உண்டு பாருங்க. தொவைக்கறமோ இல்லியோ. அஞ்சு தபா போட்டாச்சு, ஆறு தபா போட்டாச்சுன்னு அலாரம் அடிக்கும் போல.
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! இந்த ஆப்பு கொணாந்த நீ மாக்கானா? இல்ல இதையெல்லாம் வாங்கப் போற நாங்க மாக்கான்ஸா?
நாளை (அக்.1) தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ஆம்னிபஸ் தளத்தில் தி.ஜானகிராமன் புத்தகங்களுக்கு அறிமுக / விமர்சனப் பதிவுகள் வெளிவருகின்றன.
சென்றவாரம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை ஐந்து பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆம்னிபஸ் ரெகுலர் ஓட்டுனர்களே அந்தப் பதிவுகளை எழுதச் சித்தமாக இருக்கிறார்கள். எனினும், சிறப்புப் பதிவர்களின் பதிவுகளும் வரவேற்கப்படுகின்றன.
நாளை தொடங்கி அடுத்த ஞாயிறுவரை மாலை ஆறுமணிக்கு மேலாக பதிவுகள் வலையேற்றப்படும்.
நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பெய்ர்ஸ்டோவை அவுட் ஆக்கிய க்றிஸ் கெயில் ஆடிய இந்த நடன அசைவு கீழே இருக்கும் விடியோவின் இன்ஸ்பிரேஷனாம். கொலைவெறி கொலைவெறி என்று ஐந்து கோடி ஹிட், ஆறு கோடி ஹிட் எனக் கொண்டாடும் நமக்கு 30 கோடி ஹிட்டடித்த இந்த இரண்டு மாதமே ஆன கொரியன் பாப் பாடலில் அந்தக் குதிரையசைவைத் தவிர்த்து அப்படி என்னவிருக்கிறது எனப் புரியவில்லை.
என்னத்த சொல்ல
சமீபத்தில் தொடர் நிகழ்வாகிப் போன பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் விபத்துகளில், இருக்கும் அத்தனை அரசுத் துறைகளின் மெத்தனங்களையும் வார்த்தைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறோம். பள்ளிகளுக்குப் பொறுப்பில்லை என ஓலமிடுகிறோம்.
இது சென்ற வாரம் நிகழ்ந்த நிகழ்வு: சென்னை சைதாப்பேட்டை அருகே லிட்டில்மவுண்ட்’டில் 16 வயது சிறுவன் ஒருவன் தன் வயதையொத்த மேலும் இரண்டு சிறுவர்களைத் தன் தந்தையிடம் கிளப்பிக் கொண்டு வந்த மொபெட்டில் வைத்து ரவுண்டு அடித்திருக்கிறான். போதாத குறைக்குத் துணைக்கு தம் வீட்டருகே இருந்த ஆறு வயது சின்னஞ்சிறுவனையும் அதே வண்டியில் ஏற்றிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள். மெயின் ரோட்டில் விட்ட சவாரியில் அன்றைய எமனாகக் குறுக்கே வந்த அரசுப் பேருந்து மோதி அந்த ஆறுவயது சின்னஞ்சிறுவன் ஸ்பாட் டெட்.
இத்தனை சிறுவர்களிடம் நம்பி வண்டியைத் தரும் பெற்றோரை என் சொல்ல? அந்த ஆறுவயது சிறுசை அலட்சியமாக ட்ரிப்பிள்ஸ் போன வண்டியில் நான்காவதாக ஏற்றி அனுப்பிய பெற்றோரை என்ன சொல்ல?
சீயோன் பள்ளி விபத்தில் இறந்த குழந்தைக்காய்ப் பொங்கியெழுந்த நாம், இது போன்ற நிகழ்வுகளிலிருந்தும் நம் குழந்தைகளைக் காத்துக் கொள்ள எப்போது பொங்கப் போகிறோம்?
எம் புள்ள, எட்டு வயசுதான் ஆவுது, என்னாமா கார் ஓட்டுது தெரியுமா / என்னாமா பைக் ஓட்டுது தெரியுமா என்று பெருமையடிக்கும் பெற்றோர்களை இனி கேட்ட இடத்திலேயே தூக்கிப் போட்டுத்தான் மிதிக்க வேண்டும்.
- ”மனெ
தேவுரு” கன்னட சீரியல் வசனகர்த்தாரைட்டர் பாரா
மேட்டர் 2:
#அடடடடடடடடடடடடடடடடடடடடடடடடே
"நான் சீரியல் நடிகைதாங்க. ஆனா அதனால உங்களுக்கு என்ன நல்லது இருக்கு? ஒரு நிகழ்ச்சி பார்க்கறிங்கன்னா அதனால உங்களுக்கு ஏதாச்சும் கிடைக்கணும் இல்லை? மெகா சீரியலில் என்னங்க இருக்கு? நான் நடிக்கிற ஒரு சீரியல். 3 வருஷமா அதே இடத்துலதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கதை நகரல. நானும் நடிச்சிட்டுதான் இருக்கேன். அது எனக்கு ப்ரெட் & பட்டர். ஆனா உங்களுக்கு என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறத லேட்டாக்குறத தான் இந்த சீரியல் செஞ்சிருக்கு. வேற ஒண்ணும் செய்யல"
இதைச் சொன்னவர், இதோ இங்கே இருப்பவர். இவர் யாரென்று தெரியாதவரிடம் நான் என்னத்த சொல்ல? கார்க்கி சொல்றார் பாருங்க
கோரத் தாண்டவம்
தமிழ் இணையத்தில் தாண்டவம் படம் குறித்த அப்டேட்களை கொஞ்சம் மேய்ந்தேன். பழகிப் போன, புளித்துப் போன அடித்துத் துவைக்கும் மேதாவித்தன விமர்சனங்கள். முக்கியமாக தமிழ் ட்விட்டருலகினரின் வழமைமாறா “அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீய” ரக அப்டேட்கள்.
இனி நீங்க உலாத்துற ட்விட்டர் பக்கங்களுக்குத்தான் வரக்கூடாதய்யா. #முடியலை.
இன்று மேட்னி ஷோ புக் பண்ணீயிருக்கிறோம். பார்த்து வந்துவிட்டு என் பங்கிற்கு நானும்.....
வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கொசுக்களின் ப்ளூ அட்டாக்
மழை வருகிறதோ இல்லையோ, மழைக் காலம் வரவிருக்கிறது. நம்மூரில் கூடவே கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வரும். (அல்ரெடி வந்தாச்சா? வெரிகுட், கைகுடுங்க! நீங்க நம்மாளு).
ஒரு உண்மை தெரியுமா? கொசுக்களுக்கு நீல நிறம் ரொம்ப அட்ராக்டிவ் நிறமாம். ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். பாத்து பதவிசா நடந்துக்கிட்டு கொசுக்களிடமிருந்து கொஞ்சூண்டு தப்பிச்சிக்கோங்க.
ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை; கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
நா.முத்துக்குமார் -இன்றையதமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த
பாடலாசிரியர்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால்
அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.
2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனி” படத்தில்
வரும் “கண்பேசும் வார்த்தைகள்” பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான
வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
சந்தோஷிடம்
சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.
பாடல்
முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான
எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ
ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது.
”சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா
இருக்கு”, என்றான்.
நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை, யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல்
விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் ”நச்” என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில்
என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்!
அடுத்த
இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ்நான்குமுறை பார்த்தது தனிக்கதை.
2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான
குருபிரசாத் என் கையில் “சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாககண்பேசும் வார்த்தைகள்புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை
அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான்.நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவா’வும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.
கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன், ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த
வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது. நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே
உங்க நீஎபொவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கேன். என்னோடு வா வா, காற்றைக் கொஞ்சம், முதல்முறை பார்த்த, சற்றுமுன்பு’ன்னு என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் பத்தியெல்லாம் பத்தி பத்தியா சொல்லிக்கிட்டு சுத்தி வளைச்சி, நீட்டிமுழக்க விரும்பலை.
யுவன் தன் ம்யூசிக்’ல பாடும்போதே ஓடற வண்டியில இருந்து குதிக்கறவன் நான். உங்களுக்கு யுவன் பாடகரா இல்லையான்னு தெரியாதா? அவருக்கு எதுக்கு ரெண்டு பாட்டைத் தூக்கித் தந்தீங்க? காலத்தின் கட்டாயமா? அதுக்கு நீங்களும் அடிமையா? முடியலை சார்.
அடுத்து, உங்க குரலுக்குன்னு கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்கன்றது இந்த உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, வானம் மெல்ல மாதிரியான க்ளாஸ் ட்யூனை நீங்க பாட நினைச்சது ஏன்? எதுக்கு எட்டாத ரேஞ்ச் பத்தியெல்லாம் கவலைப்படாம அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க. யெஸ், ஐ ரிப்பீட். எதுக்காக அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க?
எட்டு ட்யூன் போட்டுட்டு அதுல நாலு ட்யூனை மட்டும் என்னைக் கேக்க விடற நீங்க..... விதவிதமா விருந்து சமைச்சிட்டு அதைப் பாதிக்குப் பாதி தின்னவிடாம செஞ்சாப் போல எனக்குத் தோணுது.
இந்த காலத்தின் கட்டாயத்தின் பேர்லயும், கொலைவெறி ரசிகர்களுக்காகவும் செய்யப்படற காம்ப்ரமைஸ்கள் எனக்குப் பிடிக்கலை சார். என்னைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே கருத்தோட இருப்பாங்கன்னு நான் வலுவா நம்பறேன்.