May 29, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்



தமிழில் ஜெய்ஷங்கர் காலத்திற்குப் பிறகு வந்திருக்கும் கௌபாய் ரகப்படம் இது.  மூன்று விஷயங்கள் படத்தின் முக்கிய பிளஸ்.

வித்தியாசமான கதைக்களம்
அட்டகாசமான கலை இயக்கம் (art  direction)
படம் நெடுகத் தூவப்பட்டிருக்கும் வெடிச் சிரிப்புகள்

வீராதி வீரன், துப்பாக்கி சுற்றுவதிலும் சுடுவதிலும் சூரனான ஜெய்சங்கர்புரத்து  "சிங்கம்" லாரன்ஸ் காணாமல் போக, அவருக்கு மாற்றாக பயம் கொண்டான் "சிங்காரம்" லாரன்ஸ் அந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறார். ஜெய்சங்கர்புர  மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் "இரும்புக் கோட்டை" வில்லன் நாசரை எப்படி "பயந்தான்கொள்ளி" லாரன்ஸ் வெல்கிறார் என்பதுதான் மீதக் கதை.

லாரன்சுக்கு வழக்கமான ரோல். துப்பாக்கி சுழற்றி சுழற்றி ஸ்டைல் செய்கிறார், பயப்படுகிறார், பதுங்குகிறார், டான்ஸில் கலக்குகிறார். அப்புறம் புதுசா ஏதாவது? அப்படி ஒன்றும் ரிஸ்க் எடுக்கும் கதை இல்லை இ.கோ.மு.சி.

வித்தியாசமாக கதைக் களத்தை யோசித்தமைக்கே இயக்குனர் சிம்புதேவனுக்கு ஒரு பெரிய ஓஹோ போடலாம். சிரிப்புப் படம் என்றாலும் அங்கங்கே தன் வழக்கமான சீரியஸ் சிவப்பு சிந்தனைக் கருத்துக்களையும், சுயாட்சிக் கோரிக்கை வசனங்களையும் தூவத் தவறவில்லை சிம்புதேவன். இவருக்குத் தமிழ்த் திரையுலகில் நிச்சயம் ஒரு தனியிடம் உண்டு.



படத்தின் முதல் பாதியை லாரன்ஸ் தன் ஸ்டைல் கலாட்டாக்கள் மூலம் பார்த்துக் கொள்கிறார். படத்தின் பின்பாதி முழுக்க செவ்விந்தியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அவரின் மொழி பெயர்ப்பாளர் சாம் இருவரிடமும். ரெண்டு பெரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். 



மௌலி, இளவரசன், டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, வி.எஸ்.ராகவன், வையாபுரி, ஆச்சி மனோரமா, செந்தில் என பெரிய பட்டாளமே கொஞ்சம் அப்படி இப்படி கலகலப்பை அங்கங்கே தருகிறது. மூன்று கதாநாயகிகள் - பத்மப்ரியா. சந்த்யா, லட்சுமி ராய் - அவர்கள் பங்கிற்கு இருக்கிறார்கள்.



பின்னணி இசையிலும் கொள்ளைக்காரி பாடலிலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றாகத் தெரிகிறார். சிறப்புப் பாராட்டுகளுக்கு உரியவர் மிக அருமையான செட்களால் நம்மை கௌபாய் கதைக்குள் அழைத்துச் செல்லும் கலை இயக்குனர்.

முக்கால்வாசிப் படம் கலகலப்பைத் தந்து நம்மை சுவாரசியப் படுத்துகிறது என்றால், மீதம் கால்வாசிப் படம் நம்மைப் படுத்தி எடுக்கிறது. வில்லனின் கிளைமாக்ஸ் சவால்கள், ஒண்டிக்கு ஒண்டி சண்டை என தேவையின்றி படம் இழுக்கப்படுகிறது. நாசர் ரொம்பவும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்ட ஒரு பழைய கஞ்சி வில்லன் ரோல் செய்திருக்கிறார். அவருக்கு அசிஸ்டன்ட் சாய்குமார் இன்னொரு காமெடி வில்லன்.

இந்த மைனஸ் பாயிண்டுகளையும் தாண்டி படத்தை நீங்கள் பார்க்க நாம் மேலே சொன்ன காரணங்கள் திடமாக இருக்கின்றன. ஆகவே.....

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - தவறாமல் குழந்தைகளை அழைத்துச் சென்று பாருங்கள்.
.
.
.

மாவோக்கள் அல்ல, பயங்கரவாதிகள்

தீவிரவாதத்தின் எல்லா கோரத் தாண்டவங்களுக்குப் பின்னாலும் அப்பாவி ஜீவன்களின் உயிர் சிதைக்கப்படும் பயங்கரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


நேற்று மேற்குவங்க ரயில் விபத்தில் இறந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களிலும் இப்படிப்பட்ட கதைகள் பல அடங்கியிருக்கின்றன.  அவற்றில் எல்லாவற்றுக்கும் உச்சமான கண்ணீர்க் கதை ஷிரின் மற்றும் ஷர்மின் என்ற இரட்டைப் பெண் குழந்தைகளின் மரணம். 

மும்பையில் இருக்கும் பெரியம்மாவைப் பார்க்கவும் கோடை விடுமுறையை களிப்புடன் கொண்டாடவும் சென்ற இக்குழந்தைகளின் கனவு நள்ளிரவில் சிதைந்தது கொடூரமானது.  இதற்குமேல் எனக்கு எழுத வரவில்லை. 



உள்நாட்டுக் குழப்பங்களை அடக்க இயலாமல் தவிக்கும் நம் ஜனநாய ஆட்சி முறையை எண்ணி அடக்க மாட்டாமல் நெஞ்சு விம்முகிறது. சிவப்பு சித்தாந்தத்தை தவறு தவறாக போதித்தவாரும், இப்படிப்பட்ட கோரமுகம் கொண்ட பயங்கரவாத மாவோக்களை ஆதரித்துக் கொண்டும் இருக்கும் அருந்ததி ராய் மற்றும் இதர அதிமேதாவிகள் இதற்கு என்ன சப்பைக்கட்டு  சொல்லப் போகிறார்கள்?

செய்தி மற்றும் தலைப்பு உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா 
.
.
.

May 28, 2010

கர்மவினை - சில விளக்கங்கள்

கர்மா பற்றிய நட்பாஸ் அவர்களின் இந்தப் பதிவை "சிறப்புப் பதிவர்கள்" தலைப்பில் வெளியிடுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்கள், விவாதங்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கள் ஏதேனும் உண்டெனில் அவற்றையும் இங்கு வெளியட பெரு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.
________________________________

உங்களுக்கே தெரியும், நான் இந்த சிறப்புப் பதிவிடும் வாய்ப்பை எத்தனை போராடிப் பெற்றேன் என்பது. அதையும் வேண்டா வெறுப்பாகத்தான் கொடுத்திருக்கிறார் நண்பர் கிரி. "நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தால் அந்த நினைப்பை விட்டு விடு. இரண்டெழுத்து பெயர்களால் செல்லமாகக் கொண்டாடப்படும் அந்த இரு பிரபல எழுத்தாளர்களின் பக்தர்களைப் பார்த்துத் தொடை நடுங்குகிற நீயெல்லாம் அச்சுக்கோக்கிற வேலைக்குத்தான் லாயக்கு.  இருந்தாலும் என் ஒவ்வொரு பதிவுக்கும் நீ பின்னூடிட்டிருக்கிறாய். அதை அனுமதித்த பாவத்துக்காக ஒரே ஒரு பதிவு போட்டுத் தொலைக்க உன்னை அனுமதிக்கிறேன்," என்று சொல்லிவிட்டார் கிரி. "அப்படியானால் என்ன எழுதட்டும்?" என்று கேட்டேன். "என்ன எழுதித் தொலைத்தால் என்ன? நானே என் தலைவிதியை நொந்துக் கொண்டிருக்கிறேன். பேசாமல் கர்மவினை குறித்து எழுதி விட்டுப் போ!"

கிடைத்த வாய்ப்பை விடுவானேன்? நமக்கா எழுதத் தெரியாது!

_______________________

Image Courtesy: http://vi.sualize.us

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது- எங்கள சிறு வயதில் ஒரு நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் போயிருந்தோம். இரவு எல்லாரும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்த உறவினரின் பையன், சிறுவன், "அப்பா, நாம் மட்டும் ஏன் சொந்த வீடு கட்டிக்கொண்டு நன்றாக இருக்கிறோம்? இவர்களெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்?," என்று கேட்டான். அதற்கு அவர், "நாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறோம். இப்போது நன்றாக இருக்கிறோம். பாபத்தை செய்திருந்தால் நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்," என்று பதில் சொன்னார். எங்களைப் போய் பாவம் செய்தவர்கள், என்று இவர் சொல்லிவிட்டாரே,  எனக்குக் கோபம வந்து விட்டது. ஒன்றும் பேசவில்லை, ஆனால், இந்த பாவ புண்ணியம், கர்மபலன் என்பதேல்லாம் பொய் என்று தோன்றிவிட்டது.

இது போன்ற நம்பிக்கைகள், நன்றாக இருப்பவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், கஷ்டப்படுபவர்களை அது உன் தலை எழுத்து என்று கைகழுவிவிடவும் மட்டும்தான் உபயோகப்படுமா? இனி வருவதையும் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள். 

நான் கர்மவினை குறித்து ஆராயும் முகமாக பகவத் கீதை, விவேக சூடாமணி வகையறாக்களுள் நுழையப்போவதில்லை (நுழைந்துதான் என்ன ஆகப்போகிறது- குருடன் யானையைத் தடவிப் பார்த்த கதைதான், விடுங்கள்). நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களைக் கொண்டே அதைப் பற்றி யோசிக்கலாம். 

இந்தத் தளத்தில் கடந்த வாரம் அதிரத்தக்க சில நிகழ்வுகள் நடந்தன. நாம் பாட்டுக்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டு போகிறோம், அப்போது வழியில் எதிர்படுகிறவர்களைப் பார்த்து விளையாட்டாகக் கமெண்ட் செய்வோமில்லையா?  அந்த மாதிரி இந்த வலையேடு போய்க்கொண்டிருந்தது. சாத்வீகமானவர்கள், நல்லவர்கள், அவர்கள் காதில் நாம் பேசுவது விழுந்தால் அவர்கள் நின்று நம்மை முறைத்துப் பார்க்கக்கூடும்- அப்புறம் நம்மைக் கடந்து போய் விடுவார்கள். கொஞ்சம் விவகாரமான ஆட்கள் என்றால் என்ன செய்வார்கள்? "யாரைப் பற்றி என்னடா பேசறீங்க? டாடி மம்மி.." என்று வசவு மழை பொழிவார்களா இல்லையா? இரண்டும் நடந்தது. 

இதைத்தான் கர்மவினை என்று சொல்லத் தோன்றுகிறது. நீ எது செய்தாலும்- இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, இவர் மூலம் நிகழாவிட்டால் வேறொருவர் மூலம், இப்படி இல்லாவிட்டால் வேறு வகையில்- அதற்கான பலன் கிடைக்கவே செய்யும், இல்லையா? யோசித்து பாருங்கள், கறிகாய் வாங்க ரங்கநாதன் தெரு செல்கிறீர்கள், ஒவ்வொரு கடையிலயும் ஒவ்வொரு விலை, எடை, தரம்- நீங்கள் அது குறித்து அந்த இடத்தில் நாட்டாமை பண்ணினால், ஒருத்தர் இல்லாவிட்டால் வேறொருத்தர் சட்டையைப் பிடிப்பார்களா இல்லையா? இதைப் புரிந்து கொள்ள மாய மந்திரம், மத நம்பிக்கை, சித்தாந்தம், வேதாந்தம் என்று எந்த "அது"வும் தேவை இல்லை. 

ஆங்கிலத்தில் சொல்வார்கள், கோலின ஒரு முனையைப் பற்றுகிறவன், அதன் மறுமுனையை ஏற்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று. ஒரு வேலை செய்கிறோம், அதற்குண்டான பலன் கிடைக்கத்தானே செய்யும்?

"என்ன சார் பேத்தலா இருக்கு! தினமும் ரெண்டாளு செய்யற வேலையை நான் ஒழுங்கு மரியாதையா ஒத்தை ஆளா செய்யறேன், அதை எவனும் கண்டுக்கக் காணோம்... என்னத்துக்கு கர்மபலன்னு கதை பண்ணி என்னை ஏமாத்தறீங்க?" அப்படின்னு சில பேர் கேட்கலாம். 

அதற்கு என் பதில் என்னவென்றால், செய்கிற வேலைக்கு ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் தக்க பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையானது உங்கள் உழைப்பை ஊக்குவிக்கும், உள்ளத்துக்கு உரமூட்டும், உயர்வான சிந்தனைக்குக் களமாக இருக்கும். 

ஜே. கிருஷ்ணமூர்த்தி, மறுஜென்மம் போன்ற கோட்பாடுகளில் எள்ளளவும் ஆர்வம காட்டாதவர். ஆனால், அவரே ஒரு உரையாடலின்போது, "கர்மா கர்மா என்று பேசுகிறீர்களே, நீங்கள் நிஜமாகவே கர்மபலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்ன? அப்படி உண்மையிலேயே பாவ புண்ணியம் இருக்கிறது, அதற்கான பலன் பிறவிகள் தோறும்  கிடைக்கிறது என்று நினைத்தால், ஐயா, நீங்கள் இந்த மாதிரியா அக்கறையில்லாமல் இருப்பீர்கள்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் அந்த எண்ணம இருக்குமா இல்லையா? உங்கள் வாழ்க்கை எத்தனை உன்னதமானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டாராம்.

ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்: இந்த நிமிடம் நீங்கள் செய்கிற செயல் உங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றத்தை உண்டாக்கப் போகிறது என்றால்- நீங்கள் நற்செயல்கள் செய்வீர்களா, இல்லை எவன் எக்கேடு கேட்டால் என்ன என்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருப்பீர்களா? 

அட, ஒரு பேச்சுக்கு நாம் உழைப்பது நமக்காகத்தான் என்று வைத்துக்கொண்டாலும், இந்த கர்மபலன் கிடைக்கும் என்ற எண்ணம ஊக்கத்தைத்தானே கொடுக்கிறது: இப்போது எனக்கு ஃபோர்ட் , அதுதான் அந்த கார் கம்பனிக்காரர், அவர் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது:-

"எனக்கு இருபத்தாறு வயது இருக்கும்போது நான் மறுபிறவி இருக்கிறதென்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டேன். எது தேவைப்பட்டதோ அதை என் மத நம்பிக்கையால் கொடுக்க முடியவில்லை. வேலை கூட எனக்கு முழுநிறைவு தருவதாயில்லை. ஒரு பிறவி முழுதும் சேகரித்த அனுபவத்தை அதற்கப்புறம் பயன்படுத்த முடியாதென்றால் வேலை செய்வது வீண் செயலே ஆகும். நான் மறுபிறவி பற்றி அறிய வந்தபோது... அதன் பின் காலம் ஒரு எல்லைக்குட்பட்டதாய் இருக்கவில்லை. ஒரு கடிகாரத்தின் கைகளில் இனியும் நான் அடிமையாய் இல்லை... வாழ்க்கை முடிவில்லாமல் நீண்டு நிற்கிறது என்பதை நினைக்கும்போது எனக்குக் கிடைக்கிற நிம்மதியை மற்றவர்களுக்கு அறிய வைக்க ஆசைப்படுகிறேன்"

கதை எப்படி போகிறது பார்த்தீர்களா?

நான் இந்தப் பதிவில் கர்மா என்றால் என்ன, கர்மபலன் எப்படி கிடைக்கிறது என்பது போன்ற விளக்கங்களைத் தவிர்த்துவிட்டேன். அந்த ஆராய்ச்சி பெரிதாய் பிரயோசனப்படாது என்பது என் எண்ணம. ஆனால் செய்கிற வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கும், நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் போன்ற நம்பிக்கைகளை நாம் நம் வாழ்க்கையை மேம்படுத்த எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஓரிரு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இது உங்களுக்கு உதவுமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இப்பொது நானும் கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்:  ஓட்டுப போடலையோ ஓட்டு! 

இருட்டில் விளக்கேற்றுகிற மாதிரி, முடங்கிப்போன சரித்திரத்துக்கு முன்னேறும் பாதையைக் காட்டுகிறார், புண்ணான உள்ளங்களுக்கு அருமருந்திடுகிற மருத்துவர் ஐயா (ஐயே, இது வேற மருத்துவர்)- வாழ்வை மேம்படுத்தும் எண்ணங்களைக் கைகொண்டு, நல்வாழ்வு வாழ நீங்கள் ஆசைப்பட்டால்- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் வாழும் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க நினைத்தால்- வரசித்தன் பக்கங்களுக்கு தினமும் போய் அவர் எழுதுவதைப் படித்துவிட்டு அங்கே போடுங்க ஓட்டு: நீங்களும் நன்றாக இருப்பீர்கள், தமிழர்களும் நலமாக இருப்பார்கள்.

முடிவாக இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; போர்ஹே சொன்ன மாதிரி, "காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று"- நீங்கள் செய்யும் எதுவும் வீணாய்ப் போவதில்லை. உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். 

இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், கலைஞர் எழுதி ரகுமான் இசையமைத்த பாடலைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்- 

"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
.
.
.

May 27, 2010

கர்மா - நிஜமா?

சிக்கலான விஷயங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பலருக்கும் இல்லை, இந்த "நம்மில்" முக்கியமாக என்னை சேர்த்துக் கொள்கிறேன்.

சிறு வயதில் இருந்து கர்மயோகம் பற்றிய புத்தகங்களைப் பல முறை படிக்க எத்தனித்திருக்கிறேன். எத்தனித்த அத்தனை முறையும் இரண்டே நிமிடங்களில் தூக்கம் அல்லது ஆயாசம் மிகுந்து படித்துக் கொண்டிருந்த புத்தகம் மறுபுறம் சரிந்து சென்ற அனுபவமே நேர்ந்துள்ளது.

சுமார் பத்து வருடங்கள் முன்பு ஒரு யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது அங்கும் கர்மா பற்றிய ஒரு பகுதி இருந்தது. அங்கு எனக்குக் கிடைத்த விளக்கத்தில் ஒரு வார்த்தை கூட என் நெஞ்சில் நிற்கவில்லை.

அலுவலக நண்பர் ஒருவர், "கிட்டு மாமா", என எங்களால் செல்லமாகக் கொண்டாடப் படுபவர். வேதம், உபநிஷதம், விசாகா ஹரியின் காலட்சேபம் என இருக்கும் அவரது மேற்கோள்கள். அவரிடம் நான் இது குறித்து விவாதித்த போது அவர் தந்த விளக்கங்கள் கிறுகிறுப்பை மட்டுமே தந்தன.


என் எழுத்துத் திறமையின் மீதும் (!), அறிவுத்திறன் மீதும் (!!) அபார நம்பிக்கை கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கர்மாவிற்கும் பாவ புண்ணியங்களுக்கும்  இடையேயான தொடர்புகளை எழுதுமாறு ஓரிரண்டு முறைகள் கேட்டுக் கொண்டார். "எனக்கு என்னப்பா தெரியும்", என ஒப்புக் கொள்ளும் பக்குவமின்றி, "சரி கொஞ்சம் டைம் குடுங்க எழுதிடலாம்", என பதில் சொல்லி சமாளித்தேன்..

இந்த வேளையில்தான் நண்பர் நட்பாஸ் "யப்பா, எனக்கு உன் தளத்துல எழுத ஒரு வாய்ப்பைக் குடுப்பா", என நச்சரித்த வண்ணம் இருந்தார். "வாய்யா வா!, என்னோட எத்தனை பதிவுகளை மறைமுகமா கிண்டல் செஞ்சு, வஞ்சகப் புகழ்ச்சி அணி பாடி சந்தோஷப் பட்டிருப்பே. என்னோட பழகின கர்மபலனுக்கு எழுது கர்மா'ங்கற தலைப்புல ஒரு பதிவு"ன்னு கட்டளையிட்டேன்.

அவரும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை புரிந்துகொள்ள முயற்சி செய்த வண்ணம் இருக்கிறேன். நாளை பதிவேற்றம் செய்கிறேன், நீங்களும் உங்கள் கர்மபலனை அனுபவியுங்கள்.
.
.

May 26, 2010

அசோகா அல்வா செய்வது எப்படி?

அவசர இனிப்பு தயார் செய்ய வேண்டுமா? சிம்பிள் அண்ட் சூப்பராக இருக்கவும் வேண்டுமா? வாருங்கள் பாசிப்பருப்பு கொண்டு அசோகா அல்வா செய்யலாம்.

பாசிப்பருப்பு இதர வகையறாக்கள் போல அல்லாமல் வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏதும் தராதது. எனவே இந்த அல்வாவை குழந்தைகளுக்கும் தாராளமாகத் தரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களைக் காணச் செல்லும்போது உங்கள் கையால் ஏதேனும் செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புபவர் நீங்கள் என்றால், அசோகா அல்வா அதற்கு மிகவும் உகந்தது.



தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - இரண்டரை கப்
முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையில் கலந்து கிளறவும். கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும்.

நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான அசோகா அல்வா தயார்.

அசோகா அல்வாவின் மிக எளிய செய்முறை இது. இதனுடன் கோதுமை மைதா சேர்த்து செய்பவர்களும் இருக்கிறார்கள். இணையத்தில் அந்த ரெசிபிக்களும் நிறையவே கிடைக்கின்றன. நான் சொல்லும் செய்முறை T20 அசோகா அல்வா.

May 25, 2010

அஞ்சலீனா ஜோலிக்கு அல்வா

முன்குறிப்பு: இது ஒரு கிண்டல் பதிவு. கிண்டல் செய்து வரையப்படும் பின்னூட்டங்கள் வெளியிடப்படும். என் வேலை, ஜாதி, தகுதி சம்பந்தப்பட்ட வெட்டுக்குத்துப் பின்னூட்டங்கள் சைபர் கிழிப்பு செய்யப்பட்டு தூக்கி எறியப்படும்.

ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு ஏக்கம் உண்டு. நாற்பது வருடங்களாக எழுத்துலகில் கோலோச்சிவரும் என் மனதிற்கினிய எழுத்தாளர் சாருவிற்கு மட்டும் நிறைய பெண் வாசகிகள் இருக்கிறார்களே. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேவல் ஒலியுடன் தொலைபேசியை சாத்துகிறார்களே. அவர் எழுத்தைப் படித்தவாறே காரோட்டிச் சென்று விபத்துகள் ஏற்படுத்துகிறார்களே. நாமும் நாற்பது மாதங்களாக எழுதுகிறோம், ஒரு ராக்காயி மூக்காயி கூட நமக்கு ஒரு மடல் கூட எழுதவில்லையே என்பதே அந்த ஏக்கம். 


பதிவர் பாஸ்கருக்கு நான் எழுதிய பச்சடிப் பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் என்னை ஜென்ம சாபல்யம் அடைய வைத்தது. மடல் எழுதியிருந்தது நம்ம பிராட் பிட் சம்சாரம் ஏஞ்செலினா ஜோலி. 







ஏன்ஜெலினா ஜோலி said...






கிரி, உங்களது இந்த பதிவு எனது வலியை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் மீது எனக்கிருக்கிற எனது நேசத்தையும், அதற்காக நான் என் கணவரை விவாக ரத்து செய்து விட்டு வரத் தயாராய் இருக்கிறேன் என்ற செய்தியையும் பல முறை சொல்லியும் உங்கள் பக்கத்திலிருந்து மௌனம்தான் பதிலாக வருகிறது, 

இதை நான் படிக்கும்போது கோல்டன் கேட் பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். கோங்குரா பச்சடியை நீங்கள் சமைத்துப் பரிமாற நான் சாப்பிட முடியாமலிருக்கிற அவலத்தை நினைத்தபோது எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது: அப்படியே ஒரு வேன்குருவியைப் போல கோல்டன் கேட் பாலத்திலிருந்து கீழ்நோக்கி பறந்து விடலாமா என்று தோன்றியது. என்ன சொல்கிறீர்கள் கிரி? இனிப்பான செய்தி வருமா, அல்லது அடுத்ததாக அல்வா தருவீர்களா?






கிரி said...






@ அஞ்சலீனா ஜோலி

தற்சமயம் தங்களுக்கு உதவும் நிலையில் நானில்லை.

அல்வாப்பதிவை எதிர்பாருங்கள்.
.
.
.

அந்தநேரம் அந்திநேரம்




அந்திநேர
அழைப்பு...
அரங்கத்தில்
அவசரக் கூட்டம்
அடிவயிறு
அல்லல்படுது...

அதுவாயிருக்கும்?
இல்லை
இதுவாயிருக்கும்!?
எதுவாயிருக்கும்!!?

ஒண்ணுமே புரியல்லே
உலகத்திலே....
என்னம்மோ நடக்குது
மர்மமாயிருக்குது...
ஒண்ணுமே புரியல்லே
உலகத்திலே....
.
.
.

May 22, 2010

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் - 2



மின்னஞ்சல் மூலம் கிடைத்த இச்செய்தி உண்மையா எனத் தெரியவில்லை. எப்படியோ, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். விலை மதிப்பில்லாத உயிரை முடிந்தவரை காத்துக் கொள்ளலாம்.

The most unbelievable is the last three words. 
The cops were traveling down the highway at around 1 o'clock in the morning near Tulsa , Oklahoma . They found this on the road. Looks like a Kawasaki Ninja







Another patrol car stopped a truck some miles down the highway and were struck with the following
 image. 



The Truck Driver said he thought he felt the impact, but it took him almost 4 miles down the road before he thought he'd better pull over and check out his rig.
 
You can just make out the blood trails from his feet draggin on the ground!
 



Notice the driver has no shoes on from the impact or from being drug all that distance. Ouch!
 



Side view of Motorcycle Driver caught up in the trailer of the Semi.
 




Witnesses and State Police say the Motorcyclist was traveling at 120 mph when he ran into the back of the moving semi-truck. 
It pays to have a good quality helmet when riding a motorcycle,
Now for the rest of the story!
 
THIS GUY SURVIVED!
 (Wear Helmet that too of good quality)




சில மைல் தொலைவுகள் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மனிதர் உயிரை அந்த ஹெல்மெட்தான் காத்ததாம்.


தொடர்புடைய முந்தைய பதிவு: 

புயலுக்குப் பெயர் லைலா?

லைலாவின் தாக்குதலில் இருந்து எச்சரிக்கப்பட்ட தமிழகம் வழக்கம் போல தப்பித்து, வழக்கம் மாறாமல் ஆந்திரா அடி வாங்கியுள்ளது.






அடுத்த புயல் எப்போது எங்கே வரும் என நமக்குத் தெரியாது.  எனினும் அதற்கு ஏற்கெனவே பண்டு (Bandu) எனப் பெயரிடப்பட்டுவிட்டது தெரியுமா உங்களுக்கு? உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் (WMO) அது சார்ந்த அந்தந்தப் பெருங்கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் / நாடுகள் இந்தப் பெயரிடுதலில் ஈடுபடுகின்றன.

வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மியான்மார், ஓமன், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் இனைந்து ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் 64 பெயர்களைக் கொண்ட லிஸ்டில் இருந்து "லைலா" என சமீபப் புயல் பெயரிடப்பட்டது. இந்தப் பெயரைத் தந்தது பாகிஸ்தான். "பண்டு"வின் பெயர் இலங்கை கொடுத்துள்ளது. பண்டு'வைத் தொடரும் புயலுக்கு "பெட்" (Phet) என தாய்லாந்து பெயரிட்டுள்ளது.

WMO'யின் ஒப்புதல் பெற்ற பெயர்கள் அதன் வரிசைப்படி அடுத்ததுத்த புயல்களுக்கு இடப்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இவ்வாறு பெயரிடும் வழக்கம் 1970'களிலேயே தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2000 வருடத்திற்குப் பிறகே இவ்வழக்கம் தொடங்கியுள்ளது.

அது இருக்கட்டும், "அது ஏன் புயலுக்குப் பெரும்பாலும் நிஷா, ஐலா, லைலா, கத்ரீனா என   பெண்களின் பெயரையே வைக்கறாங்க" என கேள்வியை எழுப்புகிறார் இந்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சஞ்சய். 

ஒரு வேளை அப்படி இருக்குமோ? ஒரு வேளை இப்படி இருக்குமோ? அட ஆளை விடுங்கப்பா "பெண்களுக்கு எதிரி" அப்படின்னு ஒரு பதிவு எழுதி வாங்கிக் கட்டிக்கிட்டது போதும்.

May 21, 2010

ஆனந்த விருத்தம்




ஆனந்த்.வி said...

சற்றே நீண்ட பின்னோட்டம். படிக்க நேரம் இருக்கும் என்று நம்புகிறேன்.

இணைய வலைபூக்களில் கிரி,நட்பாஸ் இவர்களின் பாங்கு சற்று அரிதானது. சகட்டு மேனிக்கு திட்டுவதும்,பதிலுக்கு கூச்சல் போடுவதுமே பெரும்பான்மை பாங்கு.

ஒரு கவிதையை ஒருவர் எனக்கு கோபம் வரும் அளவு சாடுகிறார் என்றால் (தந்தையின் கவிதை என்பதால் கூடுதல் ரௌத்திரம் :-)), எனது நோக்கம் அவர் கருத்தை மாற்றுவதாக,தவறு என உணர செய்வதாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்.

சரி,அதற்காக இப்பொழுது என் தந்தை எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்,எத்தனை பத்திரிகைகளில் அவர் கவிதை வந்துள்ளது என்ற தகவல் அறிக்கையை தர போவதும் இல்லை, அது உங்கள் கருத்தை மாற்ற உதவாது என்றும் நம்புகிறேன்.

நம் அனைவர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை - எழுத்தாளர் சுஜாதா -வின் எழுத்து மீது நமக்கு உள்ள காதல். 2003'ம் வருடம்,ஜூலை மாதம்,'கற்றதும் பெற்றதும்' தொடரில் அவர் என் தந்தை - சொல்கேளான் ஏ.வி.கிரி - கவிதையை மேற்கோள் காட்டி எழுதியது இது :

"'இலக்கிய வீதி'யின் வெள்ளிவிழா நிறைவாக சொல்கேளான் (ஏ.வி. கிரி) கவிதைகள் நூல் வெளியீட்டின் அழைப்பிதழ் வந்தது. வரவேற்பில் இனிப்பு மிட்டாய்க்கு பதில் இஞ்சி மிட்டாய், அரங்கில் தேநீருக்கு பதில் சுக்குக்காபி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கேக்களுக்கு பதிலாக புதினாக் கீரைக்கட்டு, முதல் நூல் பெற பார்வையற்ற சகோதரி சுப்புலட்சுமி போன்ற புதுமைகள் இருப்பதாகத் தெரிந்தது. 

சொல்கேளான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்த கவிதைகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது. 

அழகான நெற்றியில்
கலையாத சந்தனப் பொட்டு
சட்டைப்பையில்
நான்காக மடித்த காகிதத்தில்
விபூதி குங்குமம்...
கையிலும் கழுத்திலும்
இடுப்பிலும்
வளம் தரவும் நலம்பெறவும்
மகான்கள் மந்திரித்துத் தந்த
கயிறுகள்... தாயத்துகள்
முகவரி மட்டும் இல்லை
பொது மருத்துவமனையில்
சவக்கிடங்கில்
அநாதையாக
இந்தக் கவிதையின் எட்டாவது ஒன்பதாவது வரிகளை நீக்கிப் படித்துப் பார்த்தால் சிறப்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் ஓ போடுங்கள்!"

முழு கட்டுரை :
http://sujatha-kape.blogspot.com/2003/07/blog-post_13.html

பூ,நிலா,வானம்,காதல் எவை பற்றி கவிதை எழுதும் பலர் மத்தியில் சமூகத்திற்காக எழுதும் என் தந்தையை போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்.

புதுக்கவிதை என்பது அதன் நடைக்காக அன்றி,அதன் கருத்திற்கும்,நோக்கத்திற்கும் தான் விமர்சிக்கப்படவேண்டும்.

இது பற்றி உங்களுக்கு இன்னமும் மாற்று கருத்து இருந்தால் அதற்காக ஆரோகியமான விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

@நட்பாஸ்: உங்கள் பண்பு சற்று ஆச்சர்யமானது. என்னை பாராட்டியதால் இதை சொல்லவில்லை. எனக்குள் தூங்கும் அந்த மனிதன் உங்களுக்குள் விழித்திருக்கிறான் :-) .


______________________________



natbas said...

@ஆனந்த்,
எனது தந்தையும் கவிதை எழுதுகிறார்- ஆனால் நமக்குள் என்ன ஒரு வேறுபாடு என்றால், நானே அவரது கவிதைகளைக் கடுமையாக விமரிசிக்கிறேன். கவிஞர் கண்ணதாசனுடன் இளம் வயதில் ஓரளவு பழகி இருக்கிறார். எங்கள் வீட்டு வரவேற்பறையில் ரொம்ப நாட்களாக அவரும் கவிஞரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிற புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. 

கவிஞர் ஒரு மாபெரும் மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது திரை உலக வெற்றி, தமிழில் தரமான கவிஞர்களுக்கு தவறான அடையாளத்தைத் தந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம், நல்ல கவிஞனாக இருந்தால் அவன் திரைப்பாடல்கள் மூலம் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது- இதுவும் கூட கவிஞரின் குற்றமல்ல. எனது தந்தையும் அந்தக் கவர்ச்சியில் தனது தனித்துவத்தை இழந்தவர் என்பது எனது விமரிசனம். கவிஞரின் ஆளுமை தமிழ் கவிதை உலகை ஆட்டிப்படைத்ததை சுஜாதா "கனவுத் தொழிற்சாலை" நாவலில் நன்றாக பதிவு செய்திருக்கிறார் (என்னைப் பொறுத்தவரை, அவர் எழுதியதிலேயே சிறந்த நாவல் இதுதான்- நானே, கவிஞர் அருமைநாயகம்- அதுதானே அவர் பெயர்?-, அவருக்காக வருத்தப்பட்டிருக்கிறேன், கண்ணீர் கூட விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்).

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதனால்தான் என்னால் உங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி நானும் உங்களைப் போலவும், நண்பர் கிரியைப் போலவும் உணர்ச்சிவசப்படுபவன்தான். என்னிடம் சிறப்பாக எந்த நற்குணமும் கிடையாது.

உண்மையை சொன்னால், நான் மூன்றாம் மனிதன்- ஆனால் விவாதத்தில் பாதிக்கப்பட்ட நீங்கள் இருவரும், மிக எளிமையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு- மன்னிக்கவும் மாற்றிக் கொள்ளவும் கூச்சப்படாமல்- வெளிப்படையாக தவறுகளை திருத்திக்கொண்டு நட்பு பாராட்டுவது எனக்கு நிஜமாகவே உங்கள் இருவர் மீதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. முன்னமேயே சொன்ன மாதிரி, இந்த இளைய தலைமுறை ஒன்றுபட்டு நிற்கும், சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

நீங்களிருவருமே நயத்தக்கோர்- உங்கள் உயர்ந்த குணத்தைத் தாண்டி நீங்கள் கவிதை குறித்து கதைத்து என்ன ஆகப் போகிறது என்று தோன்றுகிறது. 

நன்றி.

______________________________


ஆனந்த்,

எனக்கு என்ன எழுத எனத் தெரியவில்லை. எனவே இந்த இரண்டு கடிதங்களை (பின்னூட்டங்களை) மட்டுமே இங்கு தந்தேன். நான் பலவித உணர்வுகளின் சுழலில் இருக்கிறேன் என்பதே உண்மை.

உங்களுக்கு இரண்டேயிரண்டு தகவல்கள். 

நட்பாஸ் என் முதன்மை விமரிசகர். என்னைக் கொண்டாடியதற்கு நிகராக குட்டவும் செய்திருக்கிறார். ஒரு வகையில் அவர் எனக்கு தூரத்து சொந்தம் ஒருவர் மூலமாக குறுஞ்செய்தி வாயிலாக அறிமுகமாகி இணையத்தில் இணைந்தவர். நாங்கள் இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஒரேயொருமுறை (என் மகன் பிறந்த செய்தி சொல்ல) நான் அவரிடம் பேசினேன், நான்கே வரிகள்.

மேலும், உங்களுக்கு நான் எழுதிய சமாதானக் கடிதத்தை வடித்தவர் நட்பாஸ்தான். மேலே கீழே சில விளம்பரங்களையும், நீங்கள் பெரிதுபடுத்தாத கொஞ்சம் கிண்டலையும் சேர்த்தது மட்டுமே நான்.

அன்புடன்,
கிரி
______________________________

May 20, 2010

இசை மொழியறியாது


இந்தப் பதிவிற்கு "தரணியெங்கும் தமிழ்" எனத்தான் பெயர் சூட்ட வேண்டும். எனினும், இங்கே பொதுவில் முன்னிலை வகித்து நம்மை ஒருங்கிணைத்து நிற்பது இசையென்னும் அந்த மாபெரும் விஷயம்.


ஹாரிஸ் யு.எஸ்.சில் 

இந்த ஆங்கிலப் பெண் எத்தனை அழகாய்த் தமிழ் உச்சரிக்கிறார் பாருங்கள்.  







ரஹ்மான் சீனாவில்


தமிழை உலகின் பல எட்டாத இடங்களுக்கும் அழைத்துச் சென்ற பெருமை, நம் ஆஸ்கர் தமிழனுக்கும் உண்டு. அந்த சீனப் பெண்ணின் சின்ன சின்ன ஆசை உச்சரிப்பு, ஆஹா என்ன அழகு!?





ரஜினி ஜப்பானில்
அடுத்து மிக முக்கியமாக நம் சூப்பர் ஸ்டார் அவர்களின் "ஜப்பானில் முத்து".


ஒரு கடிதமும் நான்கு வசவுகளும்


நண்பர் ஒருவரின் ரத்த பந்தத்தின் கவிதை ஒன்றை நான் விமரிசனம் செய்திருந்தேன். அது கடல் தாண்டி அவர் இருந்தாலும், பிட்ஸ்பர்கிலிருந்து பீட்ஸா தின்றபடி கண்டபடி அவர் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அவர் உணர்வுகளை நான் மதிக்கிறேன். மேலும் என் தளத்தை விமரிசித்து ஒரு கடிதமும் எனக்கு எழுதியிருந்தார் ஆனந்தமாக.




அட, நான் ஏதேதோ எழுதினாலும் இரண்டு வருடங்களாக எழுபத்து மூன்று நாடுகளில் ஏழாயிரத்து ஐநூறு பேர் என்னைப் படித்திருப்பதை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை தந்தது அவர் கடிதம்.





அன்பு நண்பர் ஆ.வி.கி'க்கு,

உங்கள் கோபம் புரிகிறது- உங்கள் பின்னணியிலிருந்து பார்த்தால் அது நியாயமானதும் கூட.  உங்களை உசுப்பேத்திய என் விமரிசனங்கள் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். விமரிசனத்தை அப்படியே விடுத்து, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் சொற்களை நீக்கியிருக்கிறேன். இப்போது இந்த விமரிசனத்தை ஒரு கிரிட்டிசிசம் ஆக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் என எண்ணுகிறேன். 

நீங்கள் எழுதியது எது குறித்தும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை- பொது வாழ்க்கையில் இது போன்ற வசவுகள் எல்லாம் சகஜம். என் தளத்தை உஷார்ப் படுத்திக் காக்கும் AVG ஆன்டி வைரஸ் மென்பொருளாகவே உங்களை நான் காண்கிறேன். (அட....நீங்களும் AVG தானே?)

பின் குறிப்பு: நானும் ஒரு புத்தகத்தை வெளியிடத்தான் போகிறேன். அது குறித்த பதிவு இந்த ஆண்டு கட்டாயம் வரும். நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு கூடுதால் ஊக்கம் தரவே செய்கிறது. நன்றி. புத்தக வெளியீட்டு விழாவிற்கு நிச்சயம் உங்கள் ஆனந்த mailbox'ற்கு அழைப்பு வரும். விமான டிக்கெட்டிற்கு சொல்லி வையுங்கள். 

மேலும் பின் குறிப்பு: அட எனக்கும் உங்களுக்கும் 19 ராசியான நம்பர் சார். உங்க linkedin contacts பத்தி சொல்றேன் நான்.

May 18, 2010

தமிளுக்கு இளிவு...!!


யதேச்சையாக இரண்டு யுடியூப் வீடியோக்களைக் கண்டேன்.

முதல்  செய்தி கொஞ்சம் பழையது. நடிகர் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தினார் என்று தமிழகமே பொங்கி எழுந்த செய்தி. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு:


1 . சன் டிவி வழக்கம் போல நீதியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.  தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஜெயராம் என்பதாகவே செய்தி இருக்க வேண்டும், நீதியின் மூலம் அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் நிரூபிக்கப் படும் வரை. இங்கே சன் டிவி எப்படிச் செய்திகளைத் தொடங்குகிறது எனப் பாருங்கள்.

2 . செய்திக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரலின் தமிழைக் கேளுங்கள். இவர்களை விட ஜெயராம் மோசமான இழிவை செய்திருக்க வாய்ப்பில்லை.




http://naamtamilar.wordpress.com/ இணைப்பில் காணக் கிடைக்கும் இரண்டாவது வீடியோவில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் அமைப்பின் தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார் இந்தத் தம்பி (யார் இவர்?). அரசியள், சிளம்பு, விளங்குகள் எனத் தாறுமாறாகத் தமிழ் பேசுகிறார். கூகிள் கூட தமிழை தவறாக தட்டினாலும் சரியாகக் கொணர்கிறது சார். நாம் தமிழர் என இயக்கப் பெயரை வைத்துக் கொண்டு இப்படித் தமிழ் பேசினால்.....? எனக்கு இது சரியா வரும்னு தோணலை!


இவங்களை மொதல்ல தமிழ் படிக்க அனுப்புங்க, பின்னால இவங்க நாம் தமிழர்'ன்னு மார் தட்டட்டும்.


May 17, 2010

இங்கிலாந்து - தவமாய் தவமிருந்து

ஒன்றல்ல ரெண்டல்ல முப்பத்தைந்து வருடத் தவம் இது. இங்கிலாந்திற்கு இப்போதுதான் கைகூடி வந்திருக்கிறது.

உலக கிரிக்கெட் அணிகளில் என் கருத்தில் டாப் 2 அணிகள் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும்தான். இன்று வரையில் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக (ஒரு sportsmanship உடன்)  ஆடும் அணிகளாக இவை இரண்டை மட்டுமே நான் பார்க்கிறேன்.

உலகக்கோப்பை ஒன்றின் இறுதி ஆட்டத்தில் ஐந்தாவது முறையாக பங்கேற்கும் பெருமை பெற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சாம்பியன் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக அளவு இறுதி ஆட்டங்களில் பங்கு கொண்ட பெருமை இங்கிலாந்திற்கு உண்டு.

ஆனால் இப்போதுதான் முதல்முறையாக கோப்பை வெல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அவர்கள் வென்றது நான்கு உலகக் கோப்பைகளையும், ஒரு மினி உலகக் கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலியாவை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களது ஆஷஸ் எதிரியை.



எனக்கு எப்போதும் இப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை போட்டிகள் தொடங்கியது முதலே சொல்லிக் கொண்டிருந்தேன் இம்முறை இங்கிலாந்து கோப்பை வெல்லுமென்று.



நேற்று இங்கிலாந்து இன்னிங்ஸின் நேரலை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை எனக்கு. காலையில் எழுந்தே முடிவை தெரிந்து கொண்டேன். .ஆஸ்திரேலிய அணியை அறவே வெறுக்கும் எனக்கு "இன்பத் தேன்வந்து பாய்ந்தது காதினிலே".

உங்களுக்கு?

May 16, 2010

சைபர் கிரைம் - 4

இந்தத் தலைப்பில் ஏற்கெனவே மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன். இதோ என் நான்காவது பதிவு.

எனக்கு ஜிமெயிலில் வந்த ஒரு மின்னஞ்சலைப் பாருங்கள். 



இந்த இமேஜை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். என் விளக்கம் ஏதும் தேவையின்றி உங்களுக்கே என்னவென்று விளங்கும். 

எந்த மின்னஞ்சல் சேவை அமைப்பும் (ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ முதலியன) இதுபோல் கடவுச்சொல் (password) கேட்டு உங்களைத் தொடர்பு கொள்வதில்லை. கொடுத்தா என்னாகும்னு கேட்கறீங்களா? கொடுத்துப் பாருங்க தெரியும்.


May 15, 2010

ரத்த சரித்திரம் - மேலும்..

என் ரத்த சரித்திரப் பதிவைப் படித்துவிட்டு நண்பர் சண்முகமும், நட்பாசும் எழுதிய பின்னூட்டங்களுக்காக பதில் அளிக்க நான் திரட்டிய தகவல்கள் எனக்கு படம் பற்றி மேலும் வியப்பை ஏற்படுத்தியது. 


பின்னூட்டம்  1


ஹலோ கிரி,

உங்கள் 'ரத்த சரித்திர' trailor பார்த்தேன், இந்த மாதிரி படங்களெல்லாம் நீங்கள் encourage பண்றத நான் விரும்பல சார், தயவுசெய்து தவிர்ப்பீங்கனு நினைக்கிறேன் சார். Making ஸ்டைலுக்காக எந்த மாதிரி படங்களையும் பார்க்க முடியாது சார். பருத்தி வீரன் படத்தை பார்த்து நானும் பிரமித்தது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு தவறானது சார். எல்லோருக்கும் அந்த 14 ரீல் தன மனசில் இருக்கும், 15th ரீல் அல்ல. நான் உணர ஆரம்ப்பித்திருக்கிறேன். இது என் தாழ்வான கருத்து பிழையிருந்தால் மன்னிக்கவும்.

நன்றி,
சண்முகநாதன்



பின்னூட்டம் 2



@ நண்பர் சண்முகநாதன்,

பருத்தி வீரன் பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி.


ரத்த சரித்திரம் வருவதற்கு முன்னமேயே அதுக்கு சிவப்புக் கம்பளம் விரிசசிருக்காரு நம்ம கிரி- உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறாருன்னு தெரியல. அனேகமா அவரு ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்.

- நட்பாஸ் 
______________________________________________________________

சண்முகம் / நட்பாஸ் ரெண்டுபேருக்கும்,

உங்க ரெண்டு பேருக்கும் நன்றி, கேள்வி கேட்டதுக்காக...

முதல்ல பருத்திவீரன் பத்தி... அந்தப் படம் எனக்கும் அப்படி ஒண்ணும் பிரமிப்பை ஏற்படுத்திய படமில்லை. சில சில்லரைக் காமெடிகள் படத்துல எனக்கு பிடிச்சிருந்தது. அது தவிர்த்து அந்தப் படம் நெடுக எனக்கு என்னவோ முழுக்க கரப்பான்பூச்சி இருக்கற ஒரு அறைக்குள்ள இருந்த ஒரு உணர்வு. மேலும் அந்தப் படத்துல அரவாணிகளை வெச்சு பண்ணப்பட்ட அலம்பல்கள் (குறிப்பா ஒரு பாட்டுக்கு இடையில கேட்கப்படும் ஒரு கேள்வி) என் பார்வையில ஒரு கிரிமினல் குற்றம்.  நான் சாருவா இருந்திருந்தா இங்க கெட்ட வார்த்தை சொல்லி அமீரையும், அந்தப் பாட்டை எழுதின, இசையமைச்சவங்களை திட்டியிருப்பேன். 



பருத்திவீரனின் வியாபார வெற்றி அந்த காலகட்டத்தில் வந்த ஸ்டீரியோ டைப் படங்களால கிடைச்சது. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது, அதை ப.வீ தந்ததால படம் பாரதிராஜா முதலான பிதாமகர்களால் பாராட்டப்பட்டது.. அதைத் தொடர்ந்து வந்த சுப்ரமணியபுரம் தொடர்ந்து வந்து கல்லா நிரப்பிய அடுத்த முயற்சி.

சரி, ரத்த சரித்திரத்துக்கு வருவோம்.

ரத்த சரித்திர டிரைலர் குறித்த என் தெளிவான பார்வையை என் முந்தைய பதிவுல கொடுத்திருக்கிறேன். நான் இப்படத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.  என் பய உணர்வைப் பற்றி குறிப்பிட்டேன். அதுவே இது போன்ற படங்கள் மீதான அச்சத்தை குறிப்பிடுவதாக நான் நினைத்தேன். நான் எழுதிய தொனி வேறு பொருள் தந்திருந்தால் கொஞ்சம் மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். மேலும், டிரைலர் பார்த்து படம் பற்றி எந்த முடிவையும் செய்யவும் முடியாது. அது ஒரு எதிர்பார்ப்பை மட்டுமே கொடுக்க முடியும். படம் வந்தபின்தான் எதுபற்றியும் நாம் தெளிவா சொல்லணும்.

சூர்யாவிற்கு ஹிந்தி திரையுலகில் ஒரு வரவேற்பு கிடைக்கட்டும் என்பது மட்டுமே என் பதிவில் நான் கொஞ்சமேனும் சப்போர்ட் செய்து எழுதியது. அது சூர்யா மீது எனக்கு இருக்கும் அபிமானத்தால் வந்த வெளிப்பாடு.



சரி உங்களுக்கு பதில் தந்திட்டேன், இப்போ படம் பத்தி மேலும் சுவாரசிய தகவல்கள் பகிர்ந்துக்கறேன். படத்தைப் பற்றி என்னோட சித்தூர் தம்பி தந்த தகவல் இது.  ரத்த சரித்திரம் அல்லது ரக்த சரித்ரா ஆந்திராவுல, குறிப்பா அனந்தபூர் ஜில்லாவுல நடந்த ஒரு உண்மை சம்பவமாம். பலமான எதிர்ப்புகளைக் கடந்துதான் இந்தப் படத் தயாரிப்பு நடந்துட்டு இருக்கு.


பரிடால ரவி அப்படிங்கற அரசியல்வாதியின் ரோலைத்தான் விவேக் ஓபராய் பண்ணறதாப் பேச்சு. பரிடால ரவி பத்தி விக்கிபீடியாவுல படிச்சி பாருங்க. ரத்தம் உறையுது.






மத்தெலசெருவு சூரி அப்படின்ற factionist ரவியைக் கொலை செஞ்சாருன்னு அவரு ஐந்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு காங்கிரஸ் ஆதரவுல சமீபத்துல வெளி வந்ததாத் தெரியுது. இந்த ரெண்டு குடும்பத்துக்குமான பகை சுமார் இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல தொடர்றதுதான் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சூரி ரோலைத்தான் சூர்யா பண்றார்னு நாமே புரிஞ்சிக்கலாம்.


ரத்த சரித்திரம்....உண்மையிலேயே ரத்த சரித்திரம் சார்.


உண்மை சூரியின் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி இங்கே, ஒரு சின்னக் குழந்தையின் ஆர்வத்தோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த இதயத்திலா ரத்த வெறி கொண்ட பழி வாங்கும் உணர்வு என நினைக்கும்போது நம்பத்தான் முடியவில்லை என்னால்...





May 14, 2010

க்ரியேடிவ் ராஸ்கல்!

நண்பர் மோகன் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த வலைப்பதிவை புதுப்பிக்க புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். நம்மைப்போல் டப்பா தட்டாமல், ஆங்கிலத்தில் high-fi விஷயங்களில் புகுந்து விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.


மோகனைப் பற்றி சொல்லணும்னா ஒரு புத்தகமே போடணும். அவரைப்பற்றி அவர் என்ன சொல்றார்னு அவரோட site-லயே போயி sight அடிங்க. 

வாங்க மோகன்....!!! கலக்கத் தொடங்குங்க....!!

வலைமனை: http://creativerascal.com
Related Posts Plugin for WordPress, Blogger...