Dec 24, 2011

பாடுகிறேன் 10000



குர்கானிலிருந்து செந்தில் பேசினான். நம் பாடுகிறேன் தளத்தில் ஒரு சில பாடல்கள் பாதியில் தொங்கிக் கொண்டு நிற்பதாகவும் அவற்றைக் கேட்க முடியாமல் போய்விடுவதாகவும் சொன்னான். பொதுவாக மக்கள் என்னமோ பண்ணுகிறானே ஏதோ திறந்து பார்ப்போம் என்றுதான் நம் தளத்திற்கு வருகிறார்கள் என நினைத்திருக்க....

“கொஞ்சம் என்னன்னு பாருங்க கிரி. எங்களால பாட்டு கேக்க முடியலை பாருங்க”, என்றான்

“அடடே! இதுக்கெல்லாம் கூட ஃபோன் பண்ணுவீங்களாய்யா? ரொம்ப நன்றியப்பா. சைட்ல என்ன பிரச்னைன்னு தெரியலை, இருந்தாலும் பாக்கறேன்”, என்றேன்.

“என்ன இப்பிடி சொல்லிட்டீங்க! டெய்லி காலைல எழுந்தவுடனே உங்க பாடுகிறேன் சைட்தான் மொதல்ல ஓபன் பண்ணுவேன்”

“ஆஹா தேங்க்ஸ்பா”

“நான் மட்டுமில்லை, எங்க ரூம்ல என்கூட இருக்கற ஆறுபேரும் காலைல எழுந்ததும் உங்க பாட்டோடதான் நாளைத் துவங்குவோம்”

“அடடே! அடடே! கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கய்யா! 

“பின்ன! உங்க பாட்டைக் கேட்டாத்தான் எங்க ஒவ்வொருத்தருக்கும் காலைச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து போவுது”, என்றான்.

“டேஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்”, என்று ஃபோனை சாத்தினேன்.



எது எப்படியோ! நம் தளம் இப்படிப்பட்ட ரசிகர்களின் தொடர் ஆதரவினால் இன்று பத்தாயிரமாவது ஹிட்டை எட்டிப் பார்த்தது.

இந்த 365 நாள் ப்ராஜக்ட்’டைத் தொடங்க இன்ஸ்பிரேஷனாக இருந்த சொக்கனுக்கும் டாக்டர்.விஜய் அவர்களுக்கும் என் முதல் நன்றி. தொடர்ந்து பாடல்களைக் கேட்கும், ஊக்கம் தரும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். பின்னூட்டங்கள் வாயிலாகவும், ட்விட்டர் மூலமாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.

Dec 22, 2011

கட்டுவிரியனின் காதலைக் கலைத்தோம்

படம்: நன்றி -  தமிழோவியம்


இங்கே நான் இந்தப் பதிவை எழுதும் காரணம் ஏதோ கதை சொல்வதற்காக அல்ல. நம் பெருமதிப்பிற்குரிய தீயணைப்புத் துறையினரின் பொறுப்பற்றத்தனத்தை பதிவு செய்யவே.

சென்ற சனிக்கிழமை மாலை சுமார் ஏழு மணியளவில் எங்கிருந்தோ வந்த இரண்டு பாம்புகள் எங்கள் வீட்டு வாசலில் மோகத்தில் ஆழ்ந்திருக்க எங்கள் ஏரியாவே பத்து நிமிட நேரத்தில் அல்லோலகல்லோலப்பட்டது.

சில வயோதிக அன்பர்கள் கையில் கம்பு கழிகளுடனும் பிரசன்னம் ஆனார்கள். ஓய் பெரியவர்களா காதல்வயத்தில் இருப்பவர்களை ஏன் பிரிக்கிறீர்கள். அவற்றைப் பிடித்து எங்கேனும் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடும் வழியைப் பார்ப்போமே என்று சொன்னோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனை சொல்ல 108’ஐ சுழற்றுவோம் என்று முடிவானது.

“108, உங்களுக்கு எப்படி உதவலாம்?”

“எங்க வீட்டு வாசல்ல ரெண்டு பாம்பு வந்திருக்குங்க”

“நாங்க அதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண மாட்டோம்ங்க”

“யாரைக் கூப்பிடணும்னு சொன்னா போதும் மேடம்”

“ஃபயர் சர்வீஸ்தான் சொல்லணும். கொஞ்சம் லைன்ல இருங்க”

“சரிங்க”

“இந்த நம்பர் நோட் பண்ணிக்கங்க! 22200335 இது கிண்டி ஃபாரஸ்ட் நம்பர். அவங்களுக்கு சொல்லுங்க”

“ஹலோ கிண்டி பாம்புப் பண்ணையா”

......

......

“சாரிங்க, இப்போ இங்க ஆளுங்க இல்லை. எல்லாரும் வெளிய போயிருக்காங்க”

"அடுத்து, ஃபயர் சர்வீஸ் 101 சுத்துங்க", பக்கத்து வீட்டு பெண்மணி  101 சுழற்றினார்.

“ஃபயர் சர்வீஸ், சொல்லுங்க”

“சார், கார்த்திகேயபுரம், மடிப்பாக்கத்தில இருந்து பேசறேன். எங்க வீட்டு வாசல்ல ரெண்டு பாம்பு வந்திருக்குங்க”

”சொல்லுங்கம்மா, நாங்க என்ன செய்யணும்?”

“அதை புடிக்க ஆள் அனுப்பணும் சார்”

“இல்லைங்க! வீட்டுக்கு உள்ளாற வந்தா சொல்லுங்க. அப்பதான் நாங்க வருவோம்”

“சார், என்ன இப்பிடி சொல்றீங்க”

“அட சீமெண்ணெய் ஊத்திக் கொளுத்துங்க”

“சார், நாங்க அதைப் பிடிக்க ஆள் கேக்கறோம்”

“அதெல்லாம் எதுக்குங்க. அங்க ஆம்பளைங்க யாரும் இல்லியா? நாலு பேரு சேர்த்துக்கிட்டு அடிச்சிடுங்க”

“மொதல்ல நீங்க ஃபோனை வைங்க சார்”

நெடுங்செழியர்கள் இருவரும் இன்னமும் மோனத் தவத்தில் இருக்க என்ன செய்ய எனப் புரியவில்லை. அடிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தாலும் அவர்கள் இருவரின் லீலைகள் முடிந்து பிரிய நேர்கையில் ஆளுக்கு ஒரு பக்கமாய் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து உள்ளே புகுந்துவிட்டால்? பா.கண்டால் ப.நடுங்கும் என்பார்கள். நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

பூ விற்கும் அம்மணி ஒருத்தர், “அது கட்டுவிரியன் பாம்பு. ரொம்ப வெஷமானுது, தட்டுனா நாலு அடி வைக்க மாட்டோம்”, என மேலும் பீதி கிளப்பிவிட்டுச் சென்றார்.

கடைசியாக என் ட்விட்டர் நண்பர்களிடம், “என்ன செய்ய”, எனக் கேட்க நண்பர் மோகன் ப்ளூக்ராஸை அழைக்கச் சொன்னார். <044 2235 4959> என்ற எண்ணை இணையத்தில் தேடிப்பிடித்து அழைத்தோம்.

அழைத்த அரை மணிநேரத்தில் வந்து நின்றார்கள் ப்ளூக்ராஸ் இயக்கத்தினர். ஆர்மி ஆபீசர் தோற்றத்தில் இருந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஜெண்டில்மேன் ஒருத்தர் களமிறங்கி இரண்டு பாம்புகளையும் பிடித்து சிறு கோணியில் எடுத்துச் சென்றார். கிண்டி காட்டுப் பகுதிகளில் அவை விடப்படும் என்று தெரிவித்தார். எங்கள் பகுதி மக்களிடம் வசூல் செய்து எங்களால் இயன்ற ஒரு தொகையை  ப்ளூக்ராஸுக்கு டொனேஷன் தந்து அனுப்பினோம்.

நீச்சல் கற்றுக் கொள்வது எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் நிறைந்தது பாம்பு பிடிப்பதும் என்று நினைத்துக் கொண்டேன். 


Dec 21, 2011

ஆக்கிரமிப்பாளர்கள் அன்னியர்கள் அல்ல

சில டிவிட்டுகள். நேற்று டிவிட்டரில் பெரிய பெரிய பேச்செல்லாம் இருவர் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் டிவிட்டரின் இன்னொரு சந்தில் அவர்களுடைய கவலைகளுக்கான நியாயங்கள் அரங்கேறின.

@kalyanasc my discipline is semiotics and I describe language and its affectationsTue Dec 20 15:42:09 via Twitter for iPad

@mdmuthu Would it be correct to say that lumpens as a rule possess no vocation, trade, tradition or culture (in the mainstream sense)?Tue Dec 20 07:17:03 via web

@mdmuthu @kalyanasc @maamallan how would you name such usage if not by calling it a lumpenization of Tamil proseTue Dec 20 08:13:21 via web

மருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்பு படித்தவர்களுக்கும் புரிவதில்லை, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் புரிவதில்லை-

@thirumarant பிகர் சாதாரண வார்த்தை தானே அண்ணா! எல்லோருமே பயன்படுத்தி இருக்கிறோம்! இதற்காக குடும்பத்தை இழுப்பதெல்லம் அவசியமா?Tue Dec 20 19:43:37 via Dabr

மொழியே இரண்டுபட்ட நிலையில் இதெல்லாம் யாருக்குப் புரிகிறது?

@kalyanasc there are even diglossic relations between languages in multi lingual situationsTue Dec 20 14:56:20 via Twitter for iPad

"யாமறிந்த மொழிகளிலே..." என்று ஏதோ ஒரு பாட்டு வரும். அதில் இப்போது வார்த்தைகளுக்குப் பஞ்சம். இனி,

மொழியின் அகவயமான வரலாற்றினையும் அந்த வரலாற்றினை ஊடுபாவாக்கும் உரை நடையினையும் எழுத, வாசிக்க சினிமாபாடலறிவும் முஷ்டி பலமும் போதாதுTue Dec 20 12:58:23 via IndicNotes

தமிழுக்குத் தேவை கிரந்தத்தை நீக்குவதோ இல்லையோ,  எது மொழியை, அதன்வழி நம் வாழ்வை, சீரழிக்கிறது என்பது குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதல். எம்டி முத்துக்குமாரசாமி போன்றவர்கள் எதிர்கொள்ளும் இன்றைய தமிழ் சூழல் காலனியாதிக்கத்தைவிட தீவிரமான ஒன்று : ஆக்கிரமிப்பாளர்கள் அன்னியர்கள் அல்ல - 

- எங்களை ரெண்டு வார்த்தை கேட்டால் நாங்களும், "...ங்கோத்தா!" என்று பொங்க மாட்டோமா என்ன! ?


- கிரி & நட்பாஸ்

Dec 17, 2011

இலக்கிய விருதுகள்


இலக்கியம் என்றால் என்ன என்ற தியரிடிகல் கேள்விகளுக்கெல்லாம் பதில் கேட்டால் இண்டர்வியூவில் விழிப்பது போல் நான் பேந்தப் பேந்த விழிப்பேன். எனினும், எனக்குத் தெரிந்தவரையில்.... ”மேக்கப் ஏதும் அணியாமல் நீதியையோ போதனையையோ சொல்லாமற் சொல்லும், எங்கேனும் உங்கள் வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும், படிக்கையில் (அல்லது முடிக்கையில்) பேரானந்தம் தரும்” படைப்புகளை நான் இலக்கியம் எனக் கொள்கிறேன்.


பூமணி அவர்களுக்கு கோவையில் நாளை வழங்கப்படும் “விஷ்ணுபுரம் விருது” அழைப்பிதழை நேற்று நம் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அது தொடர்பாக நண்பர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியும் அது சார்ந்த எங்கள் சிறு விவாதத்தின் தொடர்ச்சியுமே இந்தப் பதிவைக் கொணர்ந்தது.

இந்த விருது விழாவில் வழங்கப்படும் பணமுடிப்பின் மதிப்பு ஐம்பதினாயிரம் ரூபாய்கள். இன்றைய காலகட்டத்தில் பெருமதிப்பிற்குரிய பணம் ஒன்றுமல்ல இது. இன்று நம் ஊர்களில் மேலைநாட்டு நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் மாத ஊதியம் கிட்டத்தட்ட இதற்கு நிகராகவே இருக்கிறது. 

ஆனால், எழுத்தில் தன் வாழ்க்கையை அமிழ்த்தி வைத்துவிட்டுத் தன் சமூகத்திற்கென இலக்கியம் படைத்துத் தேயும் எழுத்தாளனுக்கு இங்கே தரப்படும் பணமுடிப்பை விட இந்த அங்கீகாரம்தான் பெரிது என்பேன் நான்.  தான் வாழ்ந்த காலகட்டத்தின் சாதாரண நிகழ்வுகளை, அசாதாரண வாழ்வியல் அழகுகளை,  சமூக அவலட்சணங்களை ஆவணப்படுத்திவிட்டுப் போகும் ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கும் அவனைப் பின்பற்றி இந்தச் சூழலில் எழுத்தினைப் பிடித்துக் கொண்டு வாழும் படைப்பாளிகளுக்கும் இது போன்ற விருதுகள் நிச்சயம் ஊக்கம் தரும், சந்தேகமேயில்லை. அவர்களை நிச்சயம் உயிர்ப்புடனும் வைத்திருக்கும்.

ஆக, இந்த அழைப்பிதழை நான் வெறும் ஜெமோ வாசகன் என்றமுறையில் மட்டும் இங்கே பகிரவில்லை. இது போன்ற விருதுகள் ஊக்கங்கள் மேலும் வளரவேண்டும் என்பதை என்னால் முடிந்த விதத்தில் பதிவு செய்வதே என் முழுமுதல் நோக்கம்.


இதுவரை இதுபோன்ற விருதுகள் தனிப்பட்டவர்களின் பையிலிருந்தோ அல்லது ஏதேனும் தொண்டு நிறுவனங்களின், பதிப்பாளர்களின், புகழ்பெற்ற நிறுவனங்களின் (உ-ம்: நல்லி, த ஹிந்து) பையிலிருந்தோதான் வருவது நடைமுறையாக இருக்கிறது. இனி இதுபோன்ற விருது வழங்கல்களில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கினை கொண்டு வருவது எப்படி என்பது குறித்து நாம் யோசிக்கலாம். 

ஊழியர்களின் கேளிக்கை சார்ந்த விஷயங்களுக்கும், கிரிக்கெட் ஆட்டங்களைக் காண மொத்தமாகத் தம் ஊழியர்களுக்கு ஒரு கேலரியைக் குத்தகைக்கு எடுப்பது போன்ற விஷயங்களுக்கும், இவைபோல இன்னபிற கொண்டாட்டங்களுக்கும் என கார்பரேட்கள் ஒதுக்கும் பட்ஜெட்கள் ஒருபுறம் இருக்க, CSR Activities என்ற பெயரில் (Community for Social Responsibility) கார்பரேட் நிறுவனங்கள் இன்றைக்கு நம் நாட்டில் எத்தனையோ சமூக விழிப்புணர்வு சார்ந்த நல்விஷயங்களில் ஈடுபடுகின்றன. அதற்கென அவர்களிடம் எப்போதும் ஒரு தனி பட்ஜெட் இருக்கவே செய்கிறது. 

”இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ நான் இறந்திருப்பேன்” என்ற பாடல் நம் எல்லோருக்கும் தெரியும். இங்கே இலக்கியமும் நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் அப்படித்தான் உள்ளது. நல்ல எழுத்துக்களை வாசித்தே போகத் துடிக்கும் ஜீவனை இருகப் பற்றியிருப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். நாம் வாழ ஏதேனும் அர்த்தத்தைத் தந்து கொண்டிருக்கும் நம் இலக்கியக் கர்த்தாக்களை அங்கீகரிப்பதும் என் பார்வையில் ஒரு சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி’தான்.


Dec 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை


விழாவில் ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்
பூக்கும் கருவேலம் நூல் வெளியீடும் நடைபெறுகிறது.



நிகழ்வுக்கு உங்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பினில் அழைக்கிறேன்.

தொடர்புக்கு 094421 10123 (குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

Dec 14, 2011

’துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழா


கார்த்திகை மாதக் காலைப்பொழுதில், ஒன்பது மணிக்கெல்லாம் மக்களை வீட்டிற்கு வெளியே பார்ப்பதே அபூர்வமான விஷயம். அதிலும் ஊரே தூங்கிவழியும் ஞாயிற்றுகிழமையும் அதுவுமாக மயிலை ராகசுதா ஹாலில் காலம் சென்ற ஒரு இசைக் கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு புத்தகத்துடைய வெளியீட்டு விழாவில் அரங்கு நிறைய மக்களைப் பார்க்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
சொல்வனம் வெளியீடாக ஸ்ரீ. லலிதாராம் எழுதிய மிருதங்க மாமேதை அமரர் பழனி சுப்பிரமணியப் பிள்ளை அவர்களைப் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவினை சிறப்பிக்கத்தான் அத்தனை பேரும் கூடியிருந்தனர். ஒரு இசைமேதை மறைந்து சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்தபின் அவர் குறித்த ஒரு புத்தகம் வெளிவருவதே வியப்பிற்குரிய விஷயம். அதை விட, அந்த மேதையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முதல் புத்தகம் இதுதான்- அப்படியொரு புத்தகம் இப்போதாவது எழுதப்படுகிறது என்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு பெரிய அதிசயமும்கூட.
எத்தனை மேதைகளைப் பற்றிய தகவல்களை நாம் அலட்சியத்தாலும் காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத மிதப்பிலும் இழந்து விட்டிருக்கிறோம்! “மிருதங்கம் என்றாலே பழனிதான்!” என்று அவரது சமகாலத்துச் சிறந்த கலைஞர்களால் போற்றப்பட்ட அந்த மாமேதை மறைந்து பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரு இளைஞர், தொழில்முறை இசைக் கலைஞராகவோ, பத்திரிக்கையாளராகவோ இல்லாத ஒருவர், “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று அரும்பாடுபட்டு, நான்கு நீண்ட ஆண்டுகள் அந்த மேதையின் மாணவர்களைச் சந்தித்துப் பேசி, பழைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை எழுத வேண்டியிருந்திருக்கிறது.
மிருதங்க இசைக்கு ஒரு புதிய ஆற்றலை அளித்த அந்த மாமேதையின் வாழ்க்கையை அதன் காலகட்டத்தோடு ஆவணப்படுத்தும் லலிதா ராமின் இந்த நூல் மிக முக்கியமான ஒன்று என்பது விழா மேடையில் உரையாற்றியவர்களைக் கொண்டுதான் நான் அறிய நேர்ந்தது. நமது அறியாமையே பிழை என்று இல்லை; ஆனால் அந்த அறியாமையைக்கூட அறியாதிருக்கும் காலத்தை, அதை ஒரு பொருட்டாகவே நினைக்காத அவலத்தை நினைத்துப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையே, வாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம் – இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லை, இவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள என் போன்ற இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது- தங்களுக்கு முந்தைய தலைமுறை செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யும் இவர்களில் லலிதா ராம் முக்கியமானவர், தமிழகக் கலை வரலாற்றுப் பின்னணியில் இவரது எழுத்துப் பணியும், இந்த நூலும் அந்த வகையில் ஒரு அவசியத் தேவையை நிறைவு செய்வதாக இருக்கின்றன.
பழனி சுப்பிரமணியப் பிள்ளை ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடி சரியாக ஒன்பது மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீ கே.எஸ்.காளிதாஸ் , ஸ்ரீ என்.முரளி (’த ஹிந்து’), திருச்சி. ஸ்ரீ சங்கரன் , ஸ்ரீ பி.எம்.சுந்தரம் , சங்கீத கலாநிதி ஸ்ரீமதி ஆர்.வேதவல்லி ஆகியோர் விழா மேடையை அலங்கரித்தனர். சங்கீத கலாநிதி ஸ்ரீமதி. ஆர். வேதவல்லி குத்துவிளக்கு ஏற்றி வைக்க, சங்கீத மும்மூர்த்திகளை வணங்கும் ஒரு இனிய இறைவணக்கப் பாடலை குமாரி. ஐஷ்வர்யா ஷங்கர் பாட, இப் புத்தக வெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.
”ரா ரா ராஜீவலோசனா ராமா” என்று நூலின் ஆசிரியர் லலிதாராமை வரவேற்று வரவேற்புரை வழங்கிய திரு.கே.எஸ்.காளிதாஸ்,  லலிதாராம் இப்புத்தகம் வெளிவர மேற்கொண்ட பெரும் முயற்சிகள் குறித்து விரிவாகவே குறிப்பிட்டார். மேலும் திருச்சி. ஸ்ரீ சங்கரனுக்கு இந்த வருடத்தின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதைப் பேருவகையுடன் அவர் குறிப்பிட்டு, இந்த விருது தங்கள் இருவரின் குருநாதரான “துருவ நட்சத்திரம்” புத்தகத்தின் நாயகர் ஸ்ரீ சுப்பிரமணியப் பிள்ளை அவர்களுக்கே கிடைத்ததாகத் தாங்கள் கொள்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்தப் புத்தகம் தான் எழுதி வெளிவரும் பொருட்டு, திரு. காளிதாஸ் பேருதவிகளை தனக்கு நல்கியதை லலிதாராம் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது:
“காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர். நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும். ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார். சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார். அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.”
என்று எழுதுகிறார் லலிதா ராம். அவர் தன் பேச்சிலும், காளிதாஸ் இந்தப் புத்தகத்தை எழுத எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதைக் குறிப்பிட்டார். பழனி அவர்களின் இருபத்து ஐந்தாவது நினைவாண்டை ஒட்டி ’ஸ்ருதி’ இதழ், திரு. காளிதாஸின் மேற்பார்வையில் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அது இந்தப் புத்தகத்துக்கு உருவம் தரக்கூடிய ஒரு ‘காம்பாக்ட்டான பிப்லியோகிராபியாக’ இருந்தது என்று லலிதா ராம் சொன்னார். இது மிக முக்கியமான தகவல்- இருபத்து ஐந்தாம் நினைவாண்டில் விழுந்த விதை, ஐம்பதாம் நினைவாண்டை ஒட்டி ஒரு விருட்சமாக வளர்ந்திருக்கிறது.
சொல்வனம் பதிப்பகத்தார் சார்பில் திரு. பாஸ்கர் பேசினார். தனது துரித வாசிப்பில், “இசை, இசைக் கலைஞர்கள், வரலாறு என்று எந்தத் துறையாக இருந்தாலும் தான் எழுதுவதில் தகவல் பிழைகள் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் கடுமையாக உழைப்பவர் லலிதா ராம். தகவல் பிழைகள் தவறான கருத்துகளை நிலைநிறுத்தக்கூடிய ஆதாரங்களாக அமையும் என்பதை நன்கு உணர்ந்தவர் அவர்,” என்று பேசிய பாஸ்கர், இந்தப் புத்தகத்துக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், அவற்றை பிழையின்றி தொகுத்தளிக்கவும் லலிதா ராம் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய உழைப்பும் வரலாற்று உணர்வு சார்ந்த அர்ப்பணிப்பும் அவரது எழுத்தில் இருப்பதால், புத்தகமானாலும் கட்டுரையானாலும் லலிதா ராம் எழுதுவது உண்மையாக இருக்கும் என்று முழு நம்பிக்கையுடன் படிக்கலாம் என்றார்.
மியூசிக் அகாடமியின் இயக்குனரும் ’த ஹிந்து’ பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீ.என்.முரளி, லலிதாராமின் இந்த அரிய முயற்சியைப் பெரிதும் பாராட்டினார். திரு. சுப்பிரமணியப் பிள்ளை குறித்து அவர் பேசுகையில், தனி ஆவர்த்தனங்களில் அவர் வெளிப்படுத்திய தனிச்சிறப்புகளைக் குறிப்பிட்டார். அதே வேளையில் இந்தக் கால தனி ஆவர்த்தனங்கள் பற்றி ஒரு சின்ன ஒப்பீட்டு நகைச்சுவையையும் குறிப்பிட அவர் தவறவிடவில்லை. மிருதங்க வித்வான்களில் இடதுகை வாசிப்பு கொண்டவர்கள் சோபிப்பதில் உள்ள பிரச்னைகளைச் சொன்னவர், அதையும் தாண்டி பழனி சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தன் நிகரற்ற திறமையால் எப்படிப் புகழ் பெற்றார் என்பதையும் குறிப்பிட்டார். அவரது உரை ஆங்கிலத்தில் அமைத்திருந்தது. மேடையில். எவ்விதத் தயக்கமுமின்றி தமிழில் தொடர்ந்து உரையாற்றக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம்- இனி வரும் காலங்களில் அவர் தமிழிலேயே உரையாற்றலாம் என்று தோன்றுகிறது. பேசியவரை அவரது தமிழ் சரளமாகவும், சிறப்பாகவும் ரசிக்கும்படியுமே இருந்தது.
குரு வந்தனத்துடன் தன் பேச்சைத் துவக்கிய ஸ்ரீ.பி.எம்.சுந்தரம், தங்கள் குருவான பழனி சுப்பிரமணியம் பிள்ளை பாட்டுக்கு வாசிப்பதில் சிறந்தவர் என்பதைக் குறிப்பிட்டார். எல்லா மிருதங்க வித்வான்களும் பாட்டுக்கு வாசிப்பவர்கள்தானே என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் அற்புதமானது. தன் வாசிப்பு பாடுபவரின் பாடலை உயர்த்தும் பண்பு உடையதாக இருக்கவேண்டுமே தவிர தன் மிருதங்கக் கருவியின் நாதம் தனித்துத் தெரிவது அவசியம் இல்லை என்று வாழ்ந்தவர் அவர் என்று தெளிவுபடுத்தினார். தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கத்தின் நுட்பங்களை அனைவரும் வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் கீர்த்தனையின் சுவை கெடாமல் அதை ஒட்டி ஒலிக்கும் மிருதங்க இசை சாத்தியங்களின் உச்சத்தை பழனியவர்கள் அளவுக்கு அடைந்தவர்கள் எவருமில்லை என்று குறிப்பிட்டார் சுந்தரம்.
ஏற்புரை நல்கிய லலிதாராம் இந்தப்புத்தகம் வெளிவருவதில் திரு. காளிதாஸ் காட்டிய முனைப்பை முக்கியமாகக் குறிப்பிட்டது பற்றி மேலே பார்த்தோம். மேலும் பேசியதில், வரலாற்றுத் தகவல் சேகரிப்புகளின் போது தன்னைப் போன்றவர்கள் சந்திக்கும் முக்கிய இன்னலாக, தகவல்களின் ”கிடைக்கும் தன்மை” (availability) பற்றி குறிப்பிட்ட லலிதாராம் இதற்காக மியூசிக் அகாடமி போன்ற அமைப்புகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
விழாவிற்குத் தலைமை உரை ஆற்றிய திருச்சி.ஸ்ரீ. சங்கரனின் பேச்சு அரங்கத்தில் இருந்தவர்களை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை. திரு.சுப்பிரமணியப் பிள்ளை சின்னஞ்சிறு வயதிலேயே மிருதங்கம் கற்ற விபரங்கள் குறித்துப் பேசியவர், திரு.பஞ்சாமிப் பிள்ளையின் வாசிப்பு சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் வாசிப்பை பாதித்தது பற்றியும், அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட இசை சார்ந்த விஷயங்கள் பற்றியும் குறிப்பிட்டார். சுப்பிரமணியம் பிள்ளை ஒரு தேர்ந்த பாடகரும் கூட என்பதையும் குறிப்பிட்டவர், ரயில் பயண நேரங்களில் கல்பனா ஸ்வர சம்பாஷனைகளில் ஈடுபடுவது சுப்பிரமணியப் பிள்ளை அவர்களுக்கும் செம்பை வைத்தியநாத பாகவதருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதையும் நினைவுகூர்ந்தார்.
லலிதா ராம் ஆவணப்படுத்துதலின் அவசியம் குறித்தும் அது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டது தொடர்பாக திருச்சி சங்கரன் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பது மிகவும் சிக்கலான கேள்வி.
ஆவணப்படுத்துதல் குறித்து திருச்சி சங்கரன் அவர்கள் சொன்னது இதுதான் (நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்)- நம்மிடம் இரண்டு வகை ஆவணப்படுத்தல்கள் உண்டு. எழுத்து மற்றும் ஒலிப்பேழைகளாக ஒன்று. இவற்றையே போதுமான அளவில் செய்யவில்லை. இதை இன்னும் நிறைய செய்ய வேண்டும், சிறப்பாகச் செய்ய வேண்டும். உண்மைதான். ஆனால் இன்னொரு வகை ஆவணப்படுத்தல் இருக்கிறது. அது, குருபரம்பரையான வாசிப்பு.
இது குறித்து அவர் பேசியதைக் கேட்டபோது, இசையில் வெளி உலகுக்கு, ரசிகர்களுக்கு எளிதில் தெரிய வராத எவ்வளவோ இருக்கிறது என்பது புலனாயிற்று. ஒரு முறை சங்கரன் அவர் வீட்டுக்குப் போனபோது பழனியும் அவரது மனைவியும் பூஜை அறையில் ஒரு கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவு அருமையாக பாடினார்கள் என்று சொன்னார் திரு. சங்கரன். பழனியவர்கள் வீட்டில் எங்கும், எல்லாரிடமும் இசை கமழ்ந்த விதம் போன்ற விவரமெல்லாம் அரிய தகவல்கள். காலப்போக்கில் மறைந்து, பதிவு செய்யப்படாவிட்டால் பழனிக்கு ஒரு வாத்தியத்தை அருமையாக வாசிக்க மட்டும்தான் தெரியும், அவருக்கு பாடத் தெரியாது அல்லது பாட வராது என்றேதும் பிழைபட்ட கருத்தை உருவாக்கக்கூடிய தகவல்கள். இவற்றை எல்லாம் எழுதி வைப்பது ஒரு காலகட்டத்தில் இசை பரவி மிளிர்ந்ததைப் பற்றிய பூரணமான பார்வையைத் தருமென்பதால் இதெல்லாமும் பதியப்படுவது அவசியம்.
ஆனால் இப்படிப்பட்ட தகவல்களைவிட முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இசை என்று எடுத்துக் கொண்டால், இந்தக் கதைகள் தகவல்கள் மறைவதால் இசைக்கோ, அதன் ரசிகர்களுக்கோ பெரிய அளவில் வருந்தக்கூடிய நஷ்டமில்லை எனக் கருதலாம். இரண்டாவது வகை ஆவணப்படுத்துதல் பற்றி திருச்சி சங்கரன் சொன்னாரல்லவா, அது தொடர்பறாது, பாரம்பரியத்தை நீட்டி, அதே நேரம் தலைமுறை தலைமுறையாக புதுப்பிக்கப் பட்டு வாழும் இசை. அதுதான் முக்கியம். ரெகார்டிங் எவ்வளவு முக்கியமோ அதைவிட இந்த மாதிரியான ‘டாக்குமெண்டேஷன்’ முக்கியம். காலத்தால் உறைந்துவிடாமல் அது ஒரு மனிதனின் டிஎன்ஏ மாதிரி தொடர்ந்து நிலைத்தும்,  வளர்ச்சியுள்ள நீட்சியாகியும், காலங்களுக்கேற்ப மாறித் தன்னைக் காப்பாற்றி வைத்துக் கொண்டும் அது இருக்கிறது.
மாமேதை பழனி அவர்களின் நினைவு சொல்வனம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தால் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு ஒரு நியாயமும் அவசியமும் இந்த இசை தொடர்ந்து வளரும்போதுதான் இருக்கும். மிருதங்க இசையும், புதுக்கோட்டை பாணியும் சபைகளில் மட்டுமின்றி நம் கிராமப்புறங்களிலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- அருங்காட்சியகத்தில் இருக்கும் ஆவணங்களை நாம் தொட முடியாமல் தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இந்தப் புத்தகத்துக்கும், இது பேசும் இசைக்கும் வந்து விடக் கூடாது.
இந்தக் கவலை இசையில் நாட்டமுள்ள அனைவரையும் எதிர்நோக்கி நிற்கிறது. நாகசுரம் மற்றும் தவில் வாசிப்பு தமிழகத்தில் தொய்வடைந்த நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி கோலப்பன் – ஜெயமோகன் இடையான உரையாடல் முக்கியமான ஒன்று.
இந்நிலை மிருதங்கத்துக்கும் ஏற்பட்டுவிடாமல் காக்க பழனி எம் சுப்பிரமணிய பிள்ளை அறக்கட்டளையினர் வாயிலாக அவரது மாணவர்கள் செய்து வரும் முயற்சிகள் போற்றத்தக்கன. திருச்சி சங்கரன் பேசிய இரண்டாம் வகை ஆவணப்படுத்தலும், இசையின் உயிர்ப்பும் இவர்களின் தொடர்ந்த முயற்சியாலேயே நிகழ முடியும்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ.ஜே.பாலாஜியின் நன்றியுரையுடன் புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைந்தது. அதனைத் தொடர்ந்து டாக்டர்.விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமல்லாமல் பல்துறை அன்பர்களையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. சில வெளிநாட்டு அன்பர்களும் நிகழ்ச்சியில் ஆவலுடன் கலந்துகொண்டார்கள்.
விழா அரங்கிலேயே புத்தகம் விற்பனைக்குக் கிடைத்தது. அழகான வடிவமைப்பில் பல அரிய தகவல்கள், கிடைப்பதற்கு மிகவும் அரிதான புகைப்படங்களுடன் புத்தகம் அருமையாக வந்திருக்கிறது.
விழாவில் கலந்துகொள்ளத் தவறியவர்கள் இப்புத்தகத்தை உடுமலை.காம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.
(நன்றி: சொல்வனம்)

Dec 9, 2011

லலிதாராமின் துருவ நட்சத்திரம்



“துருவ நட்சத்திரம்”  புகழ்பெற்ற மிருதங்க மாமேதை பழனி சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் குறித்து நண்பர் லலிதாராம் எழுதியுள்ள நூல். சொல்வனம் வெளியீடாக வெளிவரும் இந்நூலின் வெளியீட்டுவிழா வரும் ஞாயிறன்று சென்னை மயிலை ராகசுதா ஹாலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் ராம் சார்பில் வரவேற்கிறேன்.




இந்தப் புத்தகம் குறித்த லலிதாராமின் பதிவு: துருவ நட்சத்திரம்

புத்தகம் ஆன்லைனில் பெற: உடுமலை.காம்


Dec 8, 2011

சேவாக் 200

வாழ்த்துகள் சேவாக்!

Dec 7, 2011

எக்ஸைல் - ஒரு எக்ஸ்ப்ரஸ் விமர்சனம்

முன்குறிப்பு: மன்னிக்கவும் - தலைப்பில் எக்ஸ் ஃபைல்ஸ் (X-Files) என்று எழுத வந்தபோது ஏனோ தவறு நேர்ந்துவிட்டது.

மேலும், எக்ஸ் ஃபைல்ஸ் கதையை விக்கிபீடியாவிலிருந்து எடுத்து கூகுள் ட்ரான்ஸ்லேட்டரிடம் தந்தபோது இந்த மொழிபெயர்ப்புதான் வந்து விழுந்தது.
என்ஸாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!






படம் வட டெக்சாஸ், 35,000 கிமு திறக்கிறது.ஒரு குகை நுழையும், ஒரு ஹண்டர் ஒரு பெரிய வேற்று கிரக lifeform தோன்றுகிறது என்ன மீது தடுமாற்றங்கள். அவர்கள் சண்டை மற்றும் caveman மரணம் உயிரினம் குத்தல், வெற்றி, ஆனால் கருப்பு எண்ணெய் தொற்று உள்ளது.


1998 இல், சிறிய நகரமான டெக்சாஸ், ஒரு இளம் பையன் (லூகாஸ் பிளாக்) ஒரு துளை கீழே விழுகிறது மற்றும் ஒரு மனித மண்டை காண்கிறது. அவர் இது உள்ளது என அவரது கண்களை கருப்பு முறை இதனால், அவரது தலை அடையும் வரை, கருப்பு எண்ணெய் அவரது உடலை தரையில் மற்றும் செல்கிறது வெளியே ஒழுகல்களுக்கு. நான்கு தீயணைப்பு வீரர்கள் அவரை காப்பாற்ற துளை சென்று வந்தவர் ஆனால் மீண்டும் பார்க்க படுகிறது.Biohazard-பொருத்தமான ஆண்கள் ஒரு குழு காட்சி நெருங்குகிறது.



இதற்கிடையில், எப்.பி. ஐ சிறப்பு முகவர்கள் ஃபாக்ஸ் மல்டர் (டேவிட் Duchovny) மற்றும் டானா ஸ்கல்லி (கில்லியன் ஆண்டர்சன்) X-கோப்புகளை மூடிய பின்னர் மற்ற திட்டங்கள் அளிக்கிறது. அவர்கள் டல்லாஸ் ஒரு கூட்டாட்சி கட்டிடம் எதிராக வெடிகுண்டு மிரட்டல் விசாரணை உதவி உள்ளன. மல்டர் கூறப்படும் இலக்கு இருந்து தெரு முழுவதும் ஒரு கட்டிடம் பரிசீலனை மற்றும் ஒரு பொருள் வழங்கும் இயந்திரம் குண்டு கண்டுபிடிக்கிறார்.மல்டர் மற்றும் ஸ்கல்லி கட்டிடம் வெளியேற்றினார் என்று பொறுப்பு டேரியஸ் Michaud (டெர்ரி குயின்ன்) சிறப்பு முகவர் குண்டு ஆயுதங்களைப்பறி பின் தங்குகிறது. முகவர் அறியாத, Michaud இறுதியில் வெடிக்கிறது இது குண்டு, ஆயுதங்களைப்பறி எந்த முயற்சி செய்கிறது.



Michaud கூடுதலாக, ஐந்து பேர் குண்டு போது கட்டிடத்தில் வெளிப்படையாக இன்னும் இருந்தது, ஏனெனில் வாஷிங்டன், டிசி திரும்பி, மல்டர் மற்றும் ஸ்கல்லி chastised உள்ளன.அவர்கள் வேலை நிகழ்ச்சிகள் மதிப்பீடு செய்யப்படுவதற்கான மணிக்கு தனி விசாரணைகளில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாலை, மல்டர் ஒரு சித்தப்பிரமை மருத்துவர், ஐந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று விளக்குகிறது யார் ஆல்வின் Kurtzweil (மார்டின் லாண்டவு), எதிர்கொள்கிறது, மற்றும் வெடிகுண்டு அவர்கள் எப்படி இறந்தார் ஆதாரங்களை அழிக்கும் பொருட்டு வெடிக்க அனுமதி என்று.மருத்துவமனை சவக்கிடங்கில் மணிக்கு, ஸ்கல்லி ஏலியன் வைரஸ் ஆதாரங்களை கண்டறிவது, பாதிக்கப்பட்ட ஒரு ஆய்வு செய்ய முடியாது உள்ளது.



மல்டர் மற்றும் ஸ்கல்லி டெக்சாஸ் குற்றம் காட்சிக்கு பயணிக்க. வழியில் அவர்கள் இரண்டு பிரகாசமான, ஒளிரும் குவிமாடங்கள் சுற்றியுள்ள ஒரு பெரிய cornfield வேண்டும் டேங்கர் லாரிகள் hauling ரயில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் குவிமாடங்கள் நுழையும் போது, அவர்கள் இன்னும் காலியாக காண்கிறார்கள், ஆனால் தரையில் grates திறந்து மற்றும் தேனீக்கள் ஒரு தடித்த திரள் cornfield மீது முகவர் அவுட் படைகள். விரைவில் கருப்பு ஹெலிகாப்டர்கள் அவர்களை துரத்தி, மேல்நிலை தோன்றுகின்றன, மற்றும் இரண்டு தப்பிக்க மீண்டும் வாஷிங்டன்.



ஸ்கல்லி அவரது நடிப்பு விசாரணை கலந்து அவள் சால்ட் லேக் நகரம், யூட்டா மாற்றம் வேண்டும் என்று அறிந்த போது அவர்கள் திரும்பியதும், மல்டர் தோல்வியுற்றார், Kurtzweil உதவி பெற முயற்சிக்கிறது. மல்டர் ஒரு பங்காளியாக ஸ்கல்லி இழக்க பெரும் அழிவை சந்தித்தது. ஸ்கல்லி அவரது சட்டை காலர் கீழ் தன்னை தாக்கல் கொண்டிருந்த ஒரு தேனீ முடிவு தாக்கியது போது இரண்டு பங்கு ஒரு மென்மையான தருணம்,. அவர் விரைவில் நனவு இழக்கிறாள். மல்டர் அவசர உதவியை அழைக்கிறது ஆனால் ஒரு ஆம்புலன்ஸ் வரும் போது, இயக்கி விட்டு தலையில் மல்டர் மற்றும் நேரத்தில் கொண்டு சேர்க்கிறது ஸ்கல்லி தளிர்கள். மருத்துவமனையில் எழுப்பி, மல்டர் புல்லட் மட்டுமே அவரது கோவில் grazed என்று தகவல், மற்றும் லோன் துப்பாக்கி ஏந்திய உதவியுடன் இலைகள். பிறகு அவர் ஒரு முன்னாள் விரோதி, அவரை அவரது பாதிக்கப்பட்ட என்று வைரஸ் போர் ஒரு தடுப்பூசி இணைந்து அண்டார்க்டிகாவில் ஸ்கல்லி தான் இடம் கொடுக்கிறது யார் நல்லது-Manicured மேன் (ஜான் நெவில்), சந்திக்கிறார்.சிண்டிகேட் அவரது காட்டி கண்டுபிடிக்கப்பட்டது முன் நல்லது-Manicured நாயகன் பிறகு, ஒரு கார் குண்டு கொல்லப்பட்டார்.



மல்டர் ஸ்கல்லி காப்பாற்ற அண்டார்டிகாவுக்கு பயணிக்கிறது, மற்றும் அவர்களது எதிரி, சிகரெட் புகை மேன் (வில்லியம் பி டேவிஸ்) ஒரு இரகசிய நிலத்தடி ஆய்வக ரன் கண்டுபிடிக்கிறார். மல்டர் ஆய்வக நிலையான சூழலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றும் cocooned ஏலியன்களை புதுப்பிப்பதன், ஸ்கல்லி புதுப்பிக்க தடுப்பூசி பயன்படுத்துகிறது. ஆய்வக வெறும் மேற்பரப்பு மல்டர் மற்றும் ஸ்கல்லி தப்பிக்க பிறகு அழிந்துவிட்டது. இது பனி கீழே உழைக்காத பொய் ஒரு பெரிய அயல் கப்பல் பகுதியாக அவுட் சுழல்கிறது; கப்பல் அதன் நிலத்தடி துறைமுக இலைகள் மற்றும் வானத்தில் தொடங்குகிறது. மல்டர் ஸ்கல்லி மயக்கம் தெளிந்தவுடன் கப்பல், நேரடியாக மேலெழுந்து பறந்து தூரம் சென்று மறைந்து கண்காணிக்கிறது.



சில நேரம் கழித்து, மல்டர் மற்றும் ஸ்கல்லி அவர்களின் சாட்சியம் புறக்கணிக்கப்படுகிறது ஒரு விசாரணை எடுக்கின்றன, மற்றும் ஆதாரத்தை விவாதிக்கப்படுகின்றன.அவர்களின் துன்பத்தில் மட்டுமே மீதமுள்ள ஆதாரம் லோன் துப்பாக்கி ஏந்திய சேகரிக்கப்பட்ட ஸ்கல்லி, தாக்கியது என்று தேனீ உள்ளது. அவள் எப்.பி. ஐ தற்போது ஒரு புலனாய்வு பிரிவு கையில் ஆதாரங்கள் தொடர தகுதி இல்லை என்று குறிப்பிட்டு, அதை கையில். பின்னர், மீடியாவின் கவர் அப் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளான, மல்டர் அவரது சிலுவை விட்டு ஸ்கல்லி தூண்ட முயற்சிக்கிறது. அவர் கூறுகையில், மறுக்கிறாள் "நான் இப்போது விட்டு விட்டால், அவர்கள் வெற்றி."



டுனிசியா மற்றொரு பயிர் ஆயுதப்படை மணிக்கு, சிகரெட் புகை நாயகன் கைகளில் X-கோப்புகள் அலகு மீண்டும் திறக்கப்பட்டது என்பதை ஒரு தந்தி Strughold.


பின்குறிப்பு: ஒன்றுமில்லை

இசை மொழியறியாது - 2

இந்த விடியோவிற்கு விளக்கம் ஏதும் எழுதத் தேவையா என்ன?

Dec 6, 2011

போராளி - விமர்சனம்



நேற்று காலை அனகாபுத்தூர் வரை சென்றுவிட்டு அலுவலகம் வருவதற்கு புழல் - இரும்புலியூர் பைபாஸ் சாலையில் ஏறினேன். கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர்கள் கடந்தால்தான் தாம்பரம் வருகிறது. அனகாபுத்தூரில் நான் ஏறிய இடம் போலவே இந்த பைபாஸ் சாலையில் பைக் / ஸ்கூட்டர்களில் ஏறுவதற்கு என மக்களாக பக்கவாட்டுச் சுவற்றை அகற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் வழிகள் ஒன்றிரண்டு மட்டும் வருகின்றன. மற்றபடி, இடையே ஏறவோ இறங்கவோ வழியில்லை. பெட்ரோல் தீர்ந்தால்கூட பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும்.

வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் இந்தச் சாலையில் பொதுவாக நடந்து செல்லும் மனிதர்களை நீங்கள் காணவே முடியாது. ஆனால் நேற்று கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு கிலோமீட்டர்கள் கடந்த நிலையில் அழுக்கு உடையில் சிக்குப் பிடித்த தலைமுடிகளுடன் ஏதேதோ குப்பைகள் அடங்கிய ஒரு பையை தோளில் மாட்டிக் கொண்டு மெலிந்த தேகத்தில் ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். இவர் எங்கிருந்து வருகிறார், எவ்வளவு தொலைவு நடந்திருப்பார், இவர் குறிக்கோள்தான் என்னவாக இருக்கும், இவரைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவர் பேரில் அக்கரையில்லை என்றெல்லாம் ஒரு ஃப்ளாஷ் போல சிந்தித்துவிட்டு இரண்டே விநாடிகளில் அவரைக் கடந்து போய்விட்டேன். நான்காவது விநாடி அந்த மனிதரை என் நினைவடுக்குகளில் இருந்து அகற்றி விட்டு சிந்தித்துச் செல்ல எனக்கு வேறு விஷயங்கள் இருந்திருக்கக் கூடும் நேற்று.

நேற்று மாலை நான் பார்த்த ‘போராளி’ படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு ஃப்ளாஷ் பேக் கதைகள். அவற்றில் நரேஷின் கதை சொல்லும் பகுதியில் இப்படிப்பட்ட மன அழுத்த நோயாளி ஒருத்தனின் கதையோடு சேர்த்து இந்த நோயின் பின்னணி குறித்து அழுத்தமாகப் பேசுகிறது படம். 

ஒரு அதி புத்திசாலி மாணவனான சிறுவயது ஹீரோ, அவன் வளர்வதைத் தடை செய்ய அவனை மனநலம் பிழன்றவன் எனும் பட்டம் கட்டும் சித்தி, அவள் காமத்துப்பாலில் முயங்கியிருக்கும் அப்பா, அவன் வளர்வது, தன் பெயரில் இருக்கும் சொத்துக்காக அவன் விரும்பியவள் வேட்டையாடப்படுவது, இவன் மேற்கொள்ளும் பழிவாங்கல்கள், தானே விரும்பி மனநலமுகாமில் தஞ்சமடைவது, அங்கே சந்திக்கும் நரேஷ், அந்த முகாமிலிருந்து ஒரு கட்டத்தில் சென்னைக்குத் தப்பி வருவது, அங்கே அவன் சந்திக்கும் கதாபாத்திரங்கள், உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கை, மீண்டும் பழையவர்களின் தலையீடு, கிளைமாக்ஸ் சண்டைகள், சுபம்.

இதுதான் கதை என்றாலும் படத்தின் மையம் நரேஷின் மன அழுத்தம் பற்றிப் பேசும் அந்த முகத்தில் அறையும் பகுதிதான். ’ஷுகர் இருக்குன்னு பெருமையா சொல்லிக்கறோம், கால் ஒடைஞ்சா மூணுமாசம் பெட் ரெஸ்ட் எடுத்துக்கறோம், ஆனா இதுபோல மனசு சம்பந்தப்பட்ட வியாதிகளை மட்டும் எதுக்கு தள்ளி வெச்சுப் பாக்கறோம்”, என்னும் கேள்விதான் படத்தின் சிம்பிள் மெஸேஜ். அதை டெவலப் செய்து நல்ல படமாகத் தந்திருப்பது சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணியின் வெற்றி ரகசியம்.

படத்தின் பெரிய ப்ளஸ் முன் கதையின் நட்சத்திரப் பட்டாளம். சென்னையின் பேச்சிலர் + ஃபேமிலி காம்பினேஷனில் ஒண்டுக்குடித்தனஅதகளங்களை அப்பட்ட அழகாகக் காட்டியிருப்பது படத்தின் முதற்பாதியின் பேரழகு. அதிலும் “ஐ டின் மீன் இட் ஷாந்தி”, என்று மூச்சுக்கு முன்னூறு ஷாந்தி சொல்லும் படவா கோபியும் அவர் மனைவியாக வரும் சண்டைக்கோழி சாண்ட்ரா ஜோஸின் மூக்குநுனிக் கோபங்களும் செம காமெடி. 

நரேஷ் ரொம்பநாள் கழித்து தமிழுக்கு வருகிறார் என நினைக்கிறேன் (குறும்பு படத்திற்குப் பிறகு?). மனிதர் ஆல்-ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் தந்து அசத்தியிருக்கிறார். அந்த பாத்திரத்திற்கு நரேஷ்தான் சரிப்பட்டு வருவார் என்று நம்பினவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு ந்ம் பாராட்டுகள்.

ஸ்வாதி, நிவேதா இருவரும் கதையின் சென்னை வெர்ஷனில் கதை வளர்க்க உதவுகிறார்கள். பத்தே நிமிடம் ஃப்ளாஷ்பேக்கில் மாரி பாத்திரத்தில் வரும் வசுந்தராவின் அநாயச நடிப்பு அவருக்கு நிச்சயம் நல்லபேரை வாங்கித்தரும்.

படத்தின் சின்ன மைனஸ் அந்தப் பின் கதையில் வரும் நட்சத்திரப் பட்டாளம். என்ன ஏது, யார் எவர் எனப் புரியாமல் போகிறது அங்கங்கே.

படத்தின் இசை ஒரு டிபிக்கல் சசி-சமுத்திரக்கனி கூட்டணிக்கானது. ஸ்பெஷலாக சொல்ல ஏதும் இல்லை என்றாலும் படத்தின் வேகத்தைத் தடை செய்யாமல் படத்தினூடே பயணம் செய்யும் வகையில் பாடல்கள் அமைந்திருப்பது நல்லது.

படம் விட்டு வெளியே நடக்கும்போது “ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த திருப்திடா”, என்று ஒரு குரல் கேட்டது.

Dec 5, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும் - 2


B1 விசா விண்ணப்பிக்க இருப்பவர்கள் இந்தப் பதிவை படிப்பது நல்லது. படிக்காமல் இருப்பது ரொம்பவே நல்லது.

எதிர்வரும் காலத்தில் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல B1 விசா தேவைப்பட்டாலும் படலாம் என்னும் நிலை அலுவலகத்தில் இருப்பதால், அலுவலக செலவில் B1 விசா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். குறைந்தது இனி பத்து வருட காலங்களுக்கு இந்த B1 விசாவுக்கான இண்டர்வியூ கவலையில்லை.

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாகவே இந்த பேப்பர் எங்கே, அந்த பேப்பர் எங்கே, அவர் அப்ரூவல் வேணும், இந்த இன்ஃபர்மேஷன் சேர்க்கணும் என்று ஒரு டஜன் விண்ணப்பங்கள், இரண்டு டஜன் அட்டாச்மெண்ட்டுகள், இதுக்கு வெயிட்டிங், அதுக்கு வெயிட்டிங் என காத்திருப்பு டென்ஷன்கள், இப்படி பேசணும், அப்படி பேசக்கூடாது என்ற அனுபவஸ்தர்களின் அறிவுரைகள்.ஆஆஹ்ஹ்ஹ்!

கடைசியில் இண்டர்வியூ என்னவோ வெறும் ஐம்பதே விநாடிகள்தான் நடந்தது. அதற்குத்தான் இத்தனை டென்ஷனும்.

யு.எஸ். விசாவைப் பொறுத்தவரை இவருக்கு அப்ரூவ் ஆகும் இவருக்கு ஆகாது என சொல்வதற்கில்லை. உங்களுக்கு நேரம் நன்றாயிருந்தால் ‘அப்ரூவ்’, இல்லையென்றால் ‘ரிஜக்ட்’ என்றவகையில்தான் இருக்கிறது.

என் கதையில், நான் ஒரு புராஜக்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விசாவிற்கு அப்ளை செய்யுமாறு என் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டேன். பின்னர் அதே புராஜக்டில் நான் சேரமுடியாத நிலை ஏற்பட, இருந்தாலும் பரவாயில்லை ”அப்ளை பண்ணியது பண்ணியாச்சு விசா இண்டர்வியூ போய் வந்துவிடு, நாளபின்ன தேவைப்பட்டா உபயோகிச்சிக்கோ” என்று அலுவலகத்தில் கூறவே ஏதோ ஓசியில் கிடைத்த ஜாக்பாட் போலத்தான் இண்டர்வியூவிற்குப் போனேன்.

விசா கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனக்குக் குறுகிய கால நஷ்டம் ஏதும் இல்லை. எனவே, ரொம்ப ஒன்றும் டென்ஷன் இல்லாமல் கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றாலும் கவலையில்லை என்ற நிலையில்தான் அந்தத் திங்கள்கிழமைக் காலைப் பொழுதில் அண்ணாமேம்பாலம் அருகே உள்ள அமெரிக்கத் தூதரக வாசலின் அந்த பிரஸித்தி பெற்ற வரிசையில் சென்று கலந்துகொண்டேன்.

நாம் டென்ஷனில்லாமல் அல்லது இருந்த டென்ஷனை வெளிக்காட்டாமல் இருந்தாலும், உடன் நிற்பவர்களைப் பார்த்தால் நமக்கும் டென்ஷன் தொற்றிக் கொள்ளும் போலத் தோன்றியது. Life is crazy என்று அந்த வரிசையில் நின்றபோது தெளிவாய்ப் புரிந்தது. ”அய்யா அமெரிக்க எஜமானரே தயவு செஞ்சு எனக்கு விசா அப்ரூவ் பண்ணிடு என் வாழ்க்கையே இந்த இண்டர்வியூலதான் இருக்கு. நீ அப்ரூவ் பண்ணிட்டா மவுண்ட்ரோடுலருந்து அவ்வை ஷன்முகம் ரோடு வழியா சுத்திக்கிட்டு கதீட்ரல் ரோடு பக்கமா வந்து ஒரு அங்கப்ரதிட்சணம் பண்ணிமுடிக்கறேன் என்பது போல கெஞ்சல் தொனிக்கும் முகத்தோடு பல முகங்கள் தென்பட்டன.  ”பாரத தேசமே! என்னை வுட்டுடு, நான் போயிடறேன்”, என்ற குரல்களும் எனக்குக் கேட்டாற்போல் இருந்தது.

அலுவலகத்தில் தந்த நான்கே நான்கு காகிதங்களையும் என் பாஸ்போர்ட்டையும் கையில் வைத்திருந்தவன், அங்கே நின்றவர்கள் பெட்டி பெட்டியாக வைத்திருந்த பேப்பர்கள், சர்டிஃபிகேட்டுகளைக் கண்டு நாம் ஏதும் கொண்டு வராமல் விட்டுவிட்டோமா என்று டென்ஷன் ஏற்றிக் கொண்டேன். பிறகுதான் அவை ஸ்டூடண்ட் விசா, ஹெச்1, எல்1 வகையறாக்களுக்கானவை எனப் புரிந்தது.

விண்ணப்பிக்கும் 100 பேரில் 57 பேருக்குத்தான் இப்போது யு.எஸ். B1 விசா கிடைக்கிறதாம். மீதம் 43% ரிஜக்‌ஷன் கேஸ்கள் என்று வரிசையில் நின்ற பெண் ஒருத்தி சொல்லி உடன் நின்றவர்களின் டென்ஷனை மேலும் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

தோளில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை உதறி உதறித் தோளில் ஏற்றிவிட்டுக் கொண்டு ஒரு பெண்மணி அந்த சில்லென்ற காலையில் வரிசையின் கடைக்கோடிக்கு அனுப்பப்பட்டாள். ஏதோ ஒரு அகர்வால் ஒருத்தன் பெங்களூருவிலிருந்து நேற்று நள்ளிரவு தாமத விமானத்தில் வந்து த்ராபை ஹோட்டல் ரூமின் தூக்கமின்மையில் தவித்து ஆறரைக்கு எழுந்து “அம்மா ஊர்வலம்” (!!!) ஒன்றைக் கடந்து வதைப்பட்டு உதைப்பட்டு தூதரகம் வந்த கதையை நான் கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தாலும் வலுக்கட்டாயமாக எனக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

அங்கேயும் நம்மாட்களுக்கு வரிசையில் நிற்கும் பயிற்சியை தூதரக செக்யூரிட்டிகள் புன்னகைமாறா முகக்கடுப்போடு செய்து கொண்டிருந்தார்கள். நம்மூரில் பிரம்பால் அடித்தாலும் வரிசையில் நிற்கும் கலையை கற்றுக்கொள்ள அடம் பிடிப்பவர்கள் அமெரிக்கா சென்றால் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கவேனும் எனக்கு அமெரிக்கா செல்லும் கனவு இருக்கிறது.

செக்யூரிடி செக், பேப்பர் வெரிஃபிகேஷன், கைரேகை எடுக்கும் படலம் என ஒவ்வொன்றாய் முடித்து இண்டர்வியூ ஹாலுக்குப் போனேன். ஒரு வெள்ளைக்கார அம்மணிதான் கவுண்டரில் இருந்தார்: “குட் மார்னிங் சார்! ஹவ் ஆர் யூ டூயிங்!” என ஆரம்பித்தவர் மேற்கொண்டு கேட்ட கேள்விகள்...

நீங்கள் எதற்காக அமெரிக்கா போகிறீர்கள்?
இங்கே வேலை செய்யும் நிறுவனத்தில் எத்தனை வருடம் வேலை பார்க்கிறீர்கள்?
என்ன வேலை செய்கிறீர்கள்?
உங்கள் சம்பளம் என்ன?
எத்தனை நாள் அமெரிக்காவில் தங்க உத்தேசித்துள்ளீர்கள்?
உங்கள் க்ளையண்ட் யார்?
அவருடைய பிசினஸ் என்ன?
நான் உங்கள் விசாவை அப்ரூவ் செய்கிறேன் 

அவ்வளவேதான். இங்கே ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் நிறைய அர்த்தங்கள் உண்டு. எல்லா கேள்விகளுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் ஒரு மறைமுகக் கேள்வி “அமெரிக்கா போகும் நீ அங்கேயே செட்டில் ஆகிவிடுவாயா? திரும்புவாயா?”, என்பதுதான்.  திரும்பிவிடும் எனத் தெரியும் கேஸ்களுக்கு அனுமதி உண்டு. தங்கும் முகமாய் ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் ரிஜக்ட்தான்.

மேலும், அங்கிருக்கும் வேலையை இங்கே கொண்டுவரச் செல்பவர்களுக்கு (அவுட்சோர்ஸிங்) விசா அனுமதி இல்லை. இருக்கும் வேலையில் சின்ன மாற்றங்கள் உள்ளன அதற்கான மீட்டிங்’கில் கலந்துகொள்ளப் போகிறேன் என சொல்லியே பெரும்பாலும் விசா அனுமதிகள் பெறப்படுகின்றன.

இங்கே பணிபுரியும் நிறுவனத்தில் நீங்கள் எத்தனை வருடம் வேலை செய்கிறீர்கள் என்பதுவும் ’அப்ரூவலுக்கு’ ஒரு காரணியாக அமையும். அதிக வருடங்கள் வேலை செய்பவர் என்றார் ‘திரும்பி வந்துவிடுவார்’ என்று அர்த்தம். சம்பளத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. அமெரிக்கா போய் இவரால் செலவு பண்ண முடியுமா என்பதையும் யோசிக்கிறார்கள்.

முடிந்தவரை அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் சுருக்கமாக பதில் தருவது நல்லது. உப தகவல்கள், கூடுதல் தகவல்கள் தருவது அவசியம் இல்லை. அவ்வாறு செய்தல் உங்களுக்கு மேலும் எதிர்க்கேள்விகளைத் தருவித்து உங்களுக்கே வில்லனாக அமையும் வாய்ப்பு உண்டு.


கடைசியாக....

B1 இண்டர்வியூ செல்பவர்களுக்கு கடைசியாக அதிமுக்கியமான ஒரு மிகப் பெரிய அட்வைஸ்...... “இதுபோன்ற அட்வைஸ்கள் தரும் நபர்கள், பதிவுகள் பக்கம் போகாமல் இருத்தல் மிகவும் அவசியம்”

ஹிஹிஹி!






Dec 4, 2011

ஒரு டெட்பாடி (இந்த வார புகைப்படம் - 6)

இதைப் பார்த்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன்.


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நேற்று சென்னை விஜிபி கோல்டன் பீச் போன போது அங்கே பார்த்த ஹார்ரர் ஹவுஸ் என்ற இடத்தில் கண்ட காட்சிதான் இது. உள்ளே ஒரு அறையில் வினோத சத்தங்களையும் கும்மிருட்டையும் கொண்டு 25 ரூபாய் செலவில் நம்மை பயமுறுத்தப் பார்க்கிறார்கள். அங்கே நம்மை உள்ளே நுழைய வைக்க அதற்கான ப்ரமோ’தான் இந்த டெட்பாடி செட்-அப்.

குரூரமான சிந்தனைதான் என்றாலும் அந்த கற்பனைக்காக நம் பாராட்டுகள்.


Dec 2, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும்



இடம்: வீனஸ் ஸ்டுடியோ, மடிப்பாக்கம்

ஸ்டுடியோ ரிசப்ஷனில்

”வாங்க சார்”

“பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கணும்”

“எடுத்துடலாம் சார், எத்தனை காப்பி வேணும்?”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“எட்டு காப்பி அறுபது ரூபா”

“எக்ஸ்ட்ரா காப்பி வேணும்னா?”

“எக்ஸ்ட்ரா எட்டு காப்பி போட்டுக்கோங்க. மொத்தம் பதினாறு காப்பி ஹண்ட்ரட் ருபீஸ்”

“ஓகே! ஸிடி’ல காப்பி பண்ணித் தருவீங்களா?”

“அதுக்கு ஒரு 30 ரூபா எக்ஸ்ட்ரா சார்”

“ஸிடி முப்பதா?”

“ஆமாங்க”

“சரி போடுங்க”

“ஒன் தர்ட்டி குடுங்க சார். பாஸ்போர்ட் சைஸ்தானே? கரெக்டா, என்ன சைஸ்ல வேணும் சார்”

“சாரிங்க! தப்பா சொல்லிட்டேன்! இது யு.எஸ். விசாவுக்கு 2x2 இன்ச் சைஸ்ல”

”ஓ! யு.எஸ். விசாவுக்கா? அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகும் சார்”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“அது ஆறு காப்பி ஒன் ஃபார்ட்டி ஆகும்”

“நூத்தி நாற்பதா”

“ஆமாம் சார்”

“சிக்ஸ் காப்பீஸ்”

“யெஸ்”

“அது என்னங்க! பத்து காப்பி கம்மியாத் தர்றீங்க, ஆனா நாப்பது ரூபா எக்ஸ்ட்ரா?”

“அது வொய்ட் பேக்-க்ரவுண்ட் வரணும் சார். கொஞ்சம் ஃபோட்டோஷாப் வொர்க் எல்லாம் இருக்கும்”

“அதுக்குன்னு இவ்ளோ அதிகமா வாங்குவீங்க. ஹண்ட்ரட்’க்கு எட்டுன்னா கூட பரவால்லை. இது ஜாஸ்தியா இருக்கே”

“இல்லை சார். இதான் நாங்க சார்ஜ் பண்றது”

”சரி போடுங்க”

“ஒன் நைன்ட்டி குடுங்க சார்”

“எப்படிங்க ஒன் நைன்ட்டி?”

“நூத்தி நாப்பது ப்ளஸ் ஸிடி’க்கு ஒரு ஃபிஃப்ட்டி”

“ஸிடி முப்பதுன்னுதானே சொன்னீங்க”

“இல்லை இதுக்கு அம்பது ரூபா சார்”

”இதென்னங்க புதுக்கதை? அதே ஸிடிதானே?”

”இல்லை இதுக்கு கொஞ்சம் வொர்க் ஜாஸ்திங்கறதால அப்படி எக்ஸ்ட்ரா சார்.”

“என்னங்க சொல்றீங்க. இது அதே ஸிடி’தானே”

“இல்லை சார், நாங்க இப்படித்தான் சார்ஜ் பண்றது”

“சரியாப்போச்சு. போடுங்க போடுங்க!”



உள்ளே ஸ்டுடியோவில்


பின்னணியில் திரைச்சீலை கச்சா முச்சாவென ஏதோ நிறத்தில் இருக்க, இதை எப்படி வெண்மையாக்குவார்கள் என்ற யோசனையில் நான் இருக்க...

”தலையை நேரா வைங்க சார், இங்க பாருங்க, ஏன் சார் லைட் ஷேட்’ல ஷர்ட் போட்டீங்க அதுவும் வொயிட்டாத் தெரியும். கொஞ்சம் இருங்க”

அந்தத் திரைச்சீலையை எப்படி வெண்மை ஆக்குவார்கள் என்று நான் மேலும் ஆழ்ந்து யோசித்த அந்தக் கணத்தில்...

“ஒரு நிமிஷம் சார்”, என்று விட்டு ஃபோட்டோ எடுக்க நின்ற அந்தப் பெண் பின்னே சென்று “சரேல் சரேல்” என்று ஏதோ சத்தம் தந்தாள், திரும்பிப் பார்த்தால் பின்னணியில் சுவரின் நிறம் பால் வெண்மையில் பளிச் என்று இருந்தது. அதுதான் ஃபோட்டோஷாப் வொர்க் போலிருக்கிறது.

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...