Jun 16, 2010

சஹானாராகம், தாளம், பல்லவி இவற்றில் நீங்கள் விற்பன்னரா? அப்படியென்றால் இந்தப் பதிவு ஒரு கத்துக் குட்டியின் கிறுக்கல்கள்.

தோ அரைகுறையாய்ப் பாடுவேனே தவிர்த்து, எனக்கு ராகங்களை கண்டறியும் இசை ஞானம் ரொம்பவும குறைவே. கல்யாணி வகையறா ராகங்களை கொஞ்சம் கண்டறிவது சுலபம். காரணம், நான் இசையை நன்றாய் ரசிக்கத் துவங்கிய என் பதின்பருவத்தில் ராஜா அவற்றை தன் இசையில் அதிகம் பயன்படுத்தியதால். உ.ம். அம்மா என்றழைக்கத, கலைவாணியே, யமுனை ஆற்றிலே, ஜனனி ஜனனி, சிறு கூட்டுல, சுந்தரி கண்ணால் ஒரு சேதி. (சரிதானா?), 


எனினும் நான் முதன்முதலில் ராகம் என்னும் விஷயம் பற்றித் தெரிந்து கொண்டது "சஹானா" ராகம் கேட்டபோதுதான். 

சஹானா அதிகம் பயன்படுத்தப்படாத ராகம் என்றாலும், இசை ஆர்வலர்கள் பலருக்கு இது மிகப் பிடித்த ராகம்.

ரஹ்மான் அவர்கள் கூட சஹானா அல்லது சஹானாவைத் தழுவிய ராகங்களை அடிக்கடி அவர் இசையில் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு சிறப்பான உதாரணம் "அன்பே சுகமா (பார்த்தாலே பரவசம்).

பிரபலமாக சஹானாவில் அமைந்த திரைப்பாடல்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்....

பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யு)
ருக்கு ருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி)
சஹானா (சிவாஜி) - இது சஹானாதானா?

இந்தப் பழைய "ரயில் சிநேகப்" பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சஹானா ராகத்திற்கு என் நெஞ்சில் நீங்கா இடம் தந்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடல் பற்றி  பேச நிறைய உண்டு, எனினும், இப்போது இந்தப் பாடல் உங்களுடன் பேசட்டும்.சஹானா ராகம் குறித்த யுடியூப் தேடல்களில் கிடைத்த இன்னொரு முத்து இங்கே.....

10 comments:

அனுஜன்யா said...

சஹானா இனிமையான, குழையும் ராகம். முதல் இரண்டு பாடல்கள் சரி. சிவாஜி படத்தில் வரும் 'சஹானா'? - சாரி, அது சஹானா ராகம் இல்லை :)
(அந்தப் பாடல் 'சஹாரா' என்று துவங்கும் என்று நினைத்திருந்தேன்)

இன்னொரு பழைய்ய்ய்ய பாடல் - 'எங்கோ பிறந்தவராம்..எங்கோ வளர்ந்தவராம்... எப்படியோ என் மனதைக் கவர்ந்தவராம்..'

கர்நாடக சங்கீதம் கேட்பவர் என்றால் 'வந்தனமு' என்ற பாடல் சஹானாவில் பிரசித்தம்.

நல்ல போஸ்ட். உங்க வலைப்பூ சுவாரஸ்யமாக இருக்கு. வாழ்த்துகள் - அகிலுக்கும் :)

அனுஜன்யா

natbas said...

எப்படி ராகத்தைக் கணக்கு பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை - நீங்கள் கல்யாணி என்று சொன்ன பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ட்யூனில் இருப்பதாகவே தோன்றுகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு இந்தப் பாடல் நன்றாக நினைவிருக்கிறது.

ஆனால் வேறு வரிகள் என்று ஞாபகம். தூர்தர்ஷனில் வந்த சீரியல் இல்லை இது...? அதுவும் டைட்டில் பாடலாகக் கேட்ட ஞாபகம்.

Giri said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்
ரொம்ப நன்றி சார். அடியேன் தளத்திற்கு ஒரு மூத்த பதிவுலக எழுத்தாளரின் வருகையும் கமெண்டும் பெற்றதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன அந்த இன்னொரு வகை வரிகளில் அமைந்த பாடல் இதே பாடலின் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் குரலில் அமைந்தது. அதுவும் உண்டு இதுவும் உண்டு. கே.பாலச்சந்தரின் "ரயில் சிநேகம்" எண்பதுகளின் மத்தியில் பிரபலமாக இருந்த தூர்தர்ஷன் தொடர்.

Giri said...

@நட்பாஸ்
ஓகே. இந்த மாதிரி பாடல்களில் எளிமையா கண்டறிய முடியாது.

உதாரணத்துக்கு "மறைந்திருந்தே பார்க்கும்" மற்றும் "ஊரு விட்டு ஊரு வந்து" ரெண்டும் ஷண்முகப்ரியா ராகம். relate பண்ண முடியுதா? இல்லைதானே. ஆனா "ஊரு விட்டு ஊரு வந்து" பாட்டை அதே ராகத்துல அமைஞ்ச "பொதுவாக என் மனசு தங்கம்" பாட்டோட relate பண்ணி பாருங்க. அங்க ஆரம்பிச்சு இங்க தொடர்ந்து பாடிப் பாருங்க. relate ஆகும். எனக்கு தெளிவா விளக்க விஷய ஞானம் இல்லை. யாரையாவது கேட்டு எழுத முயற்சிக்கறேன்.

Giri said...

@ அனுஜன்யா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. சிவாஜி படத்தின் சஹானா பாடல் பற்றிய தகவலுக்கும் நன்றி. திருத்திக் கொள்கிறேன். நீங்கள் suggest செய்திருக்கும் பாடல்களை நிச்சயம் கேட்டுப் பார்க்கிறேன்.

அகில் சார்பிலும் நன்றிகள் பலப்பல.

natbas said...

எனக்கு என்னவோ இந்த சினிமா பாடல்கள் பல எந்த ராகத்திலும் அல்லது எல்லா ராகத்திலும் இருக்கும் என்று தோன்றுகிறது- இசை பற்றி எதுவும் தெரியாதவன் என்ற துணிவில் இந்த உண்மையைப் போட்டு உடைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட ராகத்துக்கு உரிய கட்டுக்குள் இந்தப் பாடல்கள் வருகின்றனவா? இல்லை ஒரு வரி ரெண்டு வரிகளுக்கு அப்புறம் எங்கேயோ பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றனவா?

உதாரணத்துக்கு இந்த செம்மொழிப் பாட்டு- அது காட்டுக்கும் மேட்டுக்கும் கத்துகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது: அதை கல்யாணி அஞ்சாவது மேளகர்த்தா ராகம் என்றோ கலகப்ரியா ராகம் என்றோ சொல்வதானால் நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.

நீங்கள் அண்ணலும் நோக்கினான் / அவளும் நோக்கினாள் என்றக் கம்ப ராமாயணப் பாடலைப் படித்திருப்பீர்கள். அவள் அப்பனும் நோக்கினான் /செந்தமிழ் மொழியாள் ஐயோ அம்பேல்// என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடலைப் படித்திருக்கிறீர்களா? அந்தப் பாடலும் கம்ப இராமாயண மரபில் வந்தது என்று சொல்ல முடியுமா?

அந்த மாதிரிதானே இந்தப் பாடல்கள் எல்லாம்?

கிரி said...

@ natbas

நீங்க சொல்றது ஒரு வகையில உண்மைதான். சினிமாப் பாடல்களிலே ஒரே ராகத்தை தொடர்ந்து பயன்படுத்துதல் ரொம்ப கஷ்டம். ஆனா ராஜா சார் இதுல ஒரு மேதைன்னு சொல்லக் கேட்டிருக்கேன். comparetively ரஹ்மான் சாரும் ஒரு ஜீனியஸ் தான், அவரும் ஒரு சின்சியர் சிகாமணி. இசையமைத்தல் எளிமையாகிட்ட இந்த காலகட்டத்துல என்னவேணா சத்தம் குடுக்கலாம்னு இருக்கற இடத்துல ராகத்துக்கு இடம் இல்லை. ஆனா கட்டுக்கோப்பா இசையமைச்ச ராஜாவும், அவர் அளவுக்கு இல்லைன்னாலும் செய்யற வேலைக்கு சின்சியாரிட்டி காட்டற ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் இவங்க முடிஞ்சவரை ராகம் பிறழாம பாட்டு போடறதா நான் நம்பறேன்.

virutcham said...

சுவாரஸ்யமான இடுகை. பின்னூட்டத்தையும் ரசித்தேன்.
ரயில் ச்நேஹதை ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி. பாலச்சந்தரும் இந்த கர்நாடக சங்கீதத்தை சினிமாவில் பிரபலப் படுத்திய இன்னொரு முக்கிய நபர்

கிரி said...

@ விருட்சம்
மிக்க நன்றி.

//பாலச்சந்தரும் இந்த கர்நாடக சங்கீதத்தை சினிமாவில் பிரபலப் படுத்திய இன்னொரு முக்கிய நபர்//

நிச்சயமாக!

Related Posts Plugin for WordPress, Blogger...