Feb 28, 2010

சுஜாதா நினைவலைகள்!

நேற்று எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் வருட நினைவு நாள்!

அத்வைதம் பேசும் வீட்டில் பிறந்த எனக்கு விசிஷ்டாத்வைத சிந்தனைகளை தீவிரமாக ஊற்றி என்னை ஆழ்வார்கள் பைத்தியம் ஆக்கியதில் முக்கியப் பங்கு அவருடையது. (உபயம்: ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்). 

என்னுடைய இன்னொரு blog-ற்கு பெயரை அவரிடம்தான் களவாடினேன்.

என் எழுத்தில் அவர் பாதிப்பு தெரியுமாறு நான் எழுதுவதாய் அவரை நிறைய வாசித்தவர்கள் சொல்கிறார்கள்.

அவர் எழுத்தில் தொடாத இயல் ஏதேனும் இருக்கிறதா என நான் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். fiction (காதல், சமூகம், கிரைம், மற்றும் பல), non-fiction (ஸ்ரீரங்கத்து தேவதைகள் வகையறாக்கள்), வரலாறு, அறிவியல், கம்ப்யூட்டர், நாடகம், பக்தி, கட்டுரை வகைகள் (கற்றதும் பெற்றதும்), அவ்வப்போது (may be இரண்டாம் தரத்தில்) சில கவிதைகள், இலக்கிய அறிமுக நூல்கள் (ஆழ்வார்கள், அகநானூறு, etc)...வேறு,.....

நான் அவர் எழுத்தில் இருபது சதம் படித்திருப்பேனோ என்னவோ! அவரை அணு அணுவாய் வாசித்தவர்கள் அவரை இழந்து தவிப்பது மிகவும் அதிகமாய் இருக்கும். Never Before என சில வியாபார விளம்பரங்களில் குறிப்பிடுவார்கள். அவர் ஒரு Never Before Never After எழுத்தாளர்.

Feb 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின் வெளிவந்துள்ளது வி.தா.வ! எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால், "partially" என்று சொல்வேன்.

செம்ம ஓபனிங்! கேரளா back water ஒன்றில் கேமரா பின்செல்ல டைட்டில் சாய்வாக மேலேறும் ஆரம்பத்திலேயே தொடங்குகிறது மேனன் டச். இப்படத்தில் A.R.ரகுமானின் துணை முதன் முறையாக கெளதம் மேனனுக்கு. "ஓ சோனா" பாடலின் ஆரம்பம் தியேட்டரையே அதிர வைக்கிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு பாடலும் இசை, படமாக்கிய விதங்களில் கலக்கி எடுக்கின்றன.
சிம்பு, த்ரிஷா இருவருக்குமே நல்ல ரோல் படத்தில். சொன்ன வேலையை தன் வழக்கமான அலட்டல்களை மட்டுப்படுத்திக்கொண்டு கச்சிதமாக செய்திருக்கிறார் "யங் சூப்பர் ஸ்டார்". த்ரிஷாவின் கதாபாத்திரம் படத்தின் சூப்பர் ஸ்பெஷல். காதல் சார்ந்த வசனங்கள், சிம்பு த்ரிஷா இருவரின் முக பாவங்கள் எல்லாம் படத்தில் பின்னிப் பெடல் எடுக்கின்றன. காதலில் உய்(ந்)தவர்களுக்கு இது செம ட்ரீட்! 


கண்களில் ஒத்திக்கொள்ளும் வண்ணம் இருக்கும் ஒளிப்பதிவு பற்றி தனியே சொல்லும் அவசியம் இல்லை. முன்னரே மீடியாக்களில் வெளிவந்த படத்தின் படங்கள் அதுபற்றி முன்னமே பேசிவிட்டன. கேரளா, கோவா, அமெரிக்கா என எங்கு பயணித்தாலும் லொகேஷன்கள் மனதில் நிற்கின்றன.உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதமான படமாகத்தான் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.  இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே இடத்தில் கதை தங்கிவிட்டு சிம்புவும், த்ரிஷாவும் மாத்திரம் வசனங்களைப் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டிருப்பது (இது போன்ற script-ற்குத் தேவைதான் என்றாலும்) படத்தின் பெரிய பேஜார்! படத்தின் பின்பாதியில் "யப்பா நேரமாச்சு, எப்போ படத்த முடிக்கப் போறீங்க?" என்று தியேட்டரில் குரல்கள் கேட்கின்றன. கெளதம் சார், நோட் பண்ணுங்க!படம் முழுவதும் சிம்புவுடனேயே வரும் ஒளிப்பதிவாளர் நண்பர் பேசிப்பேசியே காமெடி செய்து நம்மைக் கொஞ்சம் காப்பாற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - பாருங்கள்!

பேர் பெற்ற பிரச்னை!

சமீப காலமாக தமிழக ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் வார்த்தைகள் "கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்". இது அனைத்து விதமான அரசு நலத்திட்டங்கள் போல அதற்கே உரிய உள்ளரங்கு அரசியல் குத்துக்களுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அதைப்பற்றிப் பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.


என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் - தப்பித் தவறி ஏதேனும் ஆட்சி மாற்றம் வந்தால், இந்தத் திட்டம் தொடருமா? அப்படியே தொடர்ந்தாலும் இத்திட்டத்தின் பெயர் என்னவாக இருக்கும்?


கடந்த பதினைந்து இருபது வருடங்களில் பெயர் சார்ந்த அரசியல் அடிதடிகள் சிலவற்றைப் பாருங்கள்.  


J.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம். (அதிமுக) - ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகம் (திமுக)


J.J. நகர் (கிழக்கு / மேற்கு (அதிமுக) - முகப்பேர் (திமுக)


K.K. நகர் (அதிமுக) - கலைஞர் நகர் (திமுக)


எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் (திமுக)  - J.J. திரைப்பட நகர் (அதிமுக)


இன்னும்....


இதில் சிலவகைக் குழப்பங்கள் ஒரு முறை நிகழ்பவை. சிலவோ ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் நிகழ்பவை. நமக்கு வேற என்ன வேலை? வேடிக்கை பார்ப்போம்.

பேசுகிறேன் - மார்ச் மாத முன்னோட்டம்

மார்ச் மாதப் பதிவுகளுக்கான முன்னோட்டத்தை இங்கே தருகிறேன். இடையிடையே நடப்பு நிகழ்வுகள் இடைச் செருகல் பதிவுகளாக வரும். அது உங்களுக்கு போனஸ் (!!)

1. விண்ணைத்தாண்டி வருவாயா?

இன்று பார்க்கவிருக்கிறேன். உடனடியாக விமரிசனம் எதிர் பாருங்கள்.

2. Make use of!

நான் தொடர்ச்சியாக படித்துவரும் டெக்னோ இணையதளம் குறித்த ஒரு அறிமுகம்.

3. கடவுள் இருக்கிறாரா?

சுஜாதாவின் தலைப்பு இது. தலைப்பு மட்டும் அல்ல, நான் எழுதப் போவதும் அவர் எழுதியதையே!

4. படைத்தவனை வணங்கு, அவன் படைப்புகளை அல்ல! 

படைத்தவன் படித்தவைகளை வணங்குதல் குறித்த என் சிந்தனைகள்.

5. படி படி படி!

புத்தக மூட்டை சுமக்கும் என் இனிய அடுத்த தலைமுறைக்கு...

6. காதலர்களின் பெற்றோருக்கு!

தலைப்பே முன்னுரை சொல்கிறது, 

7. மறக்கமுடியாத maqbool 

பார்த்துப் பல வருடங்களானாலும் என்னால் இன்னமும் மறக்க முடியாத இந்த ஹிந்தி திரைப்படம் குறித்த என் வியப்பு குறித்தது.

8. மனிதனென்பவன்.....

தெய்வங்களாக நம்மெதிரே வாழும் சிலர் பற்றிய சில பதிவுகள்...


இன்னமும் பத்து பதிவுகள் வரிசையில் நிற்கின்றன....ஆனால் இந்த எட்டு எழுதினாலே நான் "exceeded expectation" என நினைத்து என் முதுகில் நானே தட்டிக் கொடுத்துக் கொள்வேன்.

Feb 25, 2010

சச்சின், பதில் சொல்லுங்க!


சமீபத்தில்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு self-assessment rating வாங்கி நொந்து நூடூல்ஸ் ஆனவர் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கே.

இந்த மின்னஞ்சலை அனுப்பியமைக்காக என் இனிய நண்பருக்கு நன்றி. இப்பதிவின் மீதம் ஆங்கிலத்தில் இருப்பதற்காக அவரிடமே ஒரு "ஸாரி".200 Runs/ 147Balls/ 25X4 / 3X6
Agree you have done GREAT BUT BUT BUT BUT
25 x 4s = 100
3 x 6s   =  18

IT implies that you have done 118 Runs in 28 Balls.
And 12 x 2s = 24
       58 x 1s = 58

IT means you have done all 200 Runs in only 98 balls

So you have wasted 147-98 = 49 balls

Considering only 1 run scored on each of these balls you could have earned 49 valuable RUNS FOR OUR TEAM

MANAGER’S COMMENT: So you only met the expectations and NOT EXCEEDING (though anyone of our team could not do it) and your Grade is  MEDIUM 
                                      
Trainings for him: Learn from how to STEAL singles. ( you better know what I mean stealing single )

சாதனை மன்னனுக்கு ஒரு சல்யூட்!
இருபத்தி ஒரு ஆண்டுகளாய் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சாதனைகளையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் சாதனை மன்னனுக்கு ஒரு ராயல் சல்யூட். முப்பத்து ஒன்பது வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக இருநூறு ரன்களை எடுத்துப் புதிய சாதனை படைத்திருக்கும் சச்சின் இப்போதும் சொல்வது "what next?" - அங்க நிக்கறீங்க சச்சின்!


ஆட்டத்தின் highlight முப்பத்து ஐந்தாவது ஓவரில் நிகழ்ந்தது.


இரண்டு பந்துகள் off சைடில் வைடாக வீசப்படுகின்றன. நூற்று இருபது ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கும் சச்சினை வெறுப்பேற்ற இவ்வாறு செய்கிறார் தென் ஆப்பிரிக்க ஸ்டெயின். மூன்றாவது பந்தும் off சைடில் வர, வலது பக்கமாக இரண்டு அடிகள் நடந்து, மூன்று ஸ்டம்புகளையும் "தோ பாத்துக்கோடா டேய்" என்றவாறு வளைத்து லெக் சைடிற்கு பந்தை திருப்பி பவுண்டரிக்கு அனுப்புகிறார் சச்சின். அவர் பதில் பேசுவது எப்போதும் தன் பேட்டின்  மூலம்தான்.

Feb 24, 2010

சைபர் கிரைம் - 3

சைபர் கிரைம் குறித்து நான் எழுதும் மூன்றாம் பதிவு இது.

சமீபத்தில் என் ஆர்குட் உள்ளே சென்று பார்த்தபோது அதில் புதியதாய் நான் ஆர்க்குட்டில் சேர்க்காத ஒரு பெண்ணின் படம் மின்னியது. அது ஒரு பெண்ணின் படம் அரைகுறை ஆடையில். அவளுக்கு எதிரே அவள் பெயராகக் குறிப்பிட்டிருந்ததை நான் இங்கு எழுத முடியாது. அங்கு மினுமினுத்த ஒரு scrap அவள் சகோதரியின் அந்தரங்கம் குறித்துப் பேசியது. உடனே எனக்கு எங்கோ மணியடித்தது. ஆஹா...! நம் ஆர்க்குட்டினுள் யாரோ நுழைந்துவிட்டார்களோ என்று. அப்படியே அவளைக் கிளிக்கினேன், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணை என் ஆர்க்குட் அக்கவுண்டில் இருந்து புறம் தள்ளினேன்.

மறுநாள் காலை என் கைப்பேசியில் என் நண்பர் ஒருவரிடமிருந்து தன் ஆர்க்குட் அக்கவுன்ட் யாராலோ கடத்தப்பட்டிருப்பதாக ஒரு குறுந்தகவல். ஓ! அவரா நீர்? என நினைத்துக் கொண்டேன்.  ஆர்க்குட்டுடன் இணைந்த கூகுல் பாஸ்வேர்டும் சேர்ந்து போயிற்று. அதைத் திரும்பப் பெற முயற்சித்த அவரது பிரயத்தனங்கள் உடனடிப் பலனைத் தரவில்லை. இதுவரை என்னாயிற்று எனத் தெரியவில்லை.

என்னைத் தொலைபேசியில் அழைத்து "எனக்கு பயமாயிருக்கு கிரி", என அவர் சொன்னது மட்டும் என் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது. நிஜம்தானே? ஒரு பாஸ்வேர்டுக்குள் கூகுல், ஆர்குட், பிளாக்கர், feedburner, பிகாஸா என என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. 

ஏதோ ஒரு படத்தில் படம் முடியும் முன் நடிகர் விஷால் ஒரு வசனம் சொல்லி படத்தை முடித்து வைப்பார்.... "ஏதாவது செய்யணும் சார்!" என்று.

சில நேரங்களில் இவைகளில் இருந்து தப்பிக்க "எதாவது செய்யணும்", சில நேரங்களில் "எதாவது செய்யாம இருக்கணும்".

பார்த்து நடந்துக்கங்க.


தொடர்புடைய பதிவுகள்:  சைபர் கிரைம் 

Feb 21, 2010

நான் போகிறேன் மேலே மேலே

வெயிலில் வாடியவனுக்கு கிடைத்த நிழலின் அருமை?
கொலைப்பசியில் இருந்தவனுக்குக் கிடைத்த விருந்து?

இப்படியெல்லாம் நான் அதிகப்படியாய் சொல்லவில்லை. ஆனால் ரொம்ப நாளுக்குப் பின்னால் வந்திருக்கும் ஒரு அழகான மெலடி "நாணயம்" படத்தில் வரும் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல். சென்னை 28-ற்குப் பின் SPB-சித்ரா இணைந்து பாடியுள்ளனர்.

புல்லாங்குழலில் ஜேம்ஸ் வசந்தன் தரும் துவக்கமே பாடல் பற்றி முன்னுரை பேசிவிடுகிறது. ஓகே ஓகே, நான் பேசலை! கீழே லிங்க் கொடுத்திருக்கேன், நீங்க பாட்டைப் பாருங்க.

பாடல் வரிகள்: http://myspb.blogspot.com/2010/01/896.html
பாடல் கேட்க / பார்க்க


Feb 19, 2010

இறுதிப்பயணம், இனிமையாக! - 2ஆலோசனை, அட்வைஸ் என்ற வார்த்தைகளைக் கேட்டால் தூரமாக ஓடுபவர்களும் இந்தப் பதிவை கண்டிப்பாகப் படிக்கவும்.

கான்சர் நோய் ஒரு  நோயாளியை  வந்தடைவதன் பெரும்பங்கு யாருக்கும் புரியாத புதிராக கடவுளிடம் இருந்தாலும், மற்றொரு பெரும்பங்கு நம் பழக்க வழக்கங்களிலும்,  முன்னெச்சரிக்கை இன்மையிலும் உள்ளது.

நாங்கள் ஜீவோதயாவில் பார்த்த பெரும்பங்கு நோயாளிகள் oral cancer எனப்படும் வாய்ப் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர். இந்தவகைப் புற்றுநோய் முழுக்க முழுக்க அவர்கள் உட்கொண்ட புகையிலை, சிகரெட், குட்கா வகையறாக்களால் அவர்கள் பெற்றது. ஜீவோதயாவில் எங்களிடம் பேசிய தலைமை சிஸ்டர் குறிப்பிட்ட ஒரு சின்ன விஷயம், பெரிய அளவில் சிந்திக்கத்தக்கது.


"புற்றுநோய் மார்க்கெட்டில் மிகவும் மலிவாகக் கிடைக்கிறது, சாந்தி சூப்பர், பான்பராக் வடிவுகளில்; ஆனால் அது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும்போது மிகவும் செலவுபிடிக்கும் (costly) விஷயமாகிறது" - நினைவில் எல்லோரும் கொள்ளவேண்டிய நிஜம்.

மேலும் மற்றவகைக் கான்சர் நோய்கள், நேரத்தில் கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட முடிபவை.

கலை இயக்குனர் "தோட்டா" தாரணி ஜீவோதயாவிற்காக சிகரெட்டின் கேடுகளைக் குறிக்கும் ஒரு அற்புத art work உருவாக்கித் தந்திருந்தார். அதுஒரு "Artistic Cigarette".

தொடர்புடைய முந்தைய பதிவு: இறுதிப்பயணம், இனிமையாக

Feb 17, 2010

டைம்ஸ் ஆப் இந்தியா நட்சத்திரங்கள்

டைம்ஸ் ஆப்  இந்தியாவின் படங்களுக்கான சமீபகால ரேடிங்குகளைப் பாருங்கள்! இது எப்படிப் பணி புரிகிறது எனத் தெரியவில்லை.

என் கருத்தில் இவற்றில் பலவும் மக்கள் கருத்தைப் பிரதிபலிப்பதாய் இல்லை. குறிப்பாய் "அசல்", "தமிழ்ப்படம்", "குட்டி" ஆகியவை.

அசல் படம் பார்த்த என் நண்பர்கள் யாவரும் "ஐயோ, வேணாம்பா" என்றனர்.
"குட்டி" ஓகே ஆனால் மூன்று நட்சத்திரங்கள் சற்றே அதிகம்.
"தமிழ்ப்படம்" ஏனோ தெரியவில்லை குறைத்து மதிப்பிடப் பட்டுள்ளது.

நீங்க என்ன சொல்றீங்க?


பின் குறிப்பு: அவதார், மை நேம் இஸ் கான் ஆகியவற்றுக்கு முழுசாய் ஐந்து நட்சத்திரங்கள் :)

டக்டாஸ்டிக் சாம்சன்

ஒரு ஆட்டோக்காரர் சொந்தமா ஒரு website வெச்சு நடத்தராருன்னா நம்ப முடியுதா உங்களால? எங்கள யெல்லாம் யாரு சார் வெப்சைட்ல தேடி கண்டுபுடிச்சி சவாரி தரப்போறாங்க என யோசிக்காமல், தொழில்நுட்ப வளர்ச்சியை தனக்குச் சாதகமாக்கி விளம்பரம் செய்துள்ளார் இவர்.

அவர் ஆட்டோவில் பிரயாணிக்கும் சவாரிகளான வெளிநாட்டு நண்பர்கள் மொழியில் "டக்டாஸ்டிக்" என இவர் இணையத்தளத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார். (ஆட்டோ ரிக்ஷாவிற்கு Tuk Tuk என்றும் ஒரு பெயருண்டு)

http://tuktastic.com தளத்திற்கு நீங்கள் சென்றால், உங்களை வெள்ளந்தியாய் சிரித்து வரவேற்கிறார் சாம்சன். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றிலிருந்த வண்ணம் தன் தினசரி சவாரிகளைப் பார்த்துவரும் சாம்சனுக்கு வெளிநாட்டுப் பயணிகளைக் கவரக் கிடைத்த நவீன வழியே இந்த இணையதளம்.

உங்கள் வெளி நாட்டு வாழ் நண்பர்களுக்கு இவர் பற்றி சொல்லுங்கள். அவர்கள் இந்தியா வந்தால் இவரிடம் ஆட்டோ முன் கூட்டியே பதிவு செய்து வைத்து சென்னை சுற்றிப் பார்க்கலாம்.

ஒரு முக்கிய விஷயம்: ஒரு இணையதளம் எப்படி simple and humble ஆக இருக்க வேண்டும் என்பதற்கு இவரது தளம் ஒரு நல்ல உதாரணம்.

Feb 13, 2010

காதலின் மறுபெயர் ஆண்டாள்


யாரோ எங்கோ யாரையோ சேர்த்து வைத்துவிட்டு இறந்ததற்காக காதலர் தினம் கொண்டாடும் நாம், காதலின் உச்சம் என்ன என்று காட்டிச் சென்ற ஆண்டாளின் காதல் குறித்து ஏதும் தெரிந்து கொள்ளாமல், வருடா வருடம் "வாரணம் ஆயிரமும்" "மார்கழித் திங்கள் மதி நிறைந்து" மட்டும் பாடிக் கொண்டிருப்பது கடற்கரையில் கால் நனைப்பதற்குச் சமம்.

இந்தப் பாடலைப் பாருங்கள்:


 கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
                                                         - நாச்சியார் திருமொழி

நாராயணன் ஊதும் சங்கினைப் பார்த்து ஆண்டாள் கேட்கிறாள்: நாரணனின் உதடுகளின் வாசனை என்ன? கற்பூர வாசனையா? கமலப்பூ (தாமரை) வாசமா? அவன் வாய்ச் சுவை இனிப்பானதா என்கிறாள்!

ஆண்டாள் மாலன்பால் கொண்ட காதல்போல ஒரு வெறிகொண்ட காதலை இன்று ஒரு பெண்ணிடம் நாம் கண்டால் அப்பெண் மீதான நம் விமரிசனமே வேறாக இருக்கும்.

இப்பாடல் ஒரு சின்ன உதாரணம்தான். ஆண்டாளைப் பற்றி நாம் படிக்கப் படிக்க வியப்பே மேலிடுகிறது. ஆகவே அன்பர்களே, ஆண்டாளின் காதல் குறித்து எழுத ஒரு பதிவு பத்தாது. தனியே எப்போதும் பெண்ணில் எழுதுகிறேன்.

ஆண்டாள் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் "அழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்" நூலில் இரண்டு அத்தியாயங்களை ஆண்டாள் குறித்து சிலாகிக்கவே ஒதுக்கியுள்ளார். படித்துப் பாருங்கள்!

காணாமல் போன காதல்...

"காதல் என்ற ஒன்று அது கடவுள் போல" என வைரமுத்து சொன்னது உணர முடிந்து உருவமில்லாமல் அது இருப்பதனால் இல்லை என எண்ணுகிறேன்.

இருபது வருடங்கள் முன் நான் சென்னை வந்த புதிதில், செம்பியம் சிம்சன் கம்பெனியைத் தாண்டினால் எதிரே அழகாக நிற்கும் ஒரு கிருஷ்ணர் கோவிலும் அதே காம்பவுண்டிற்குள் நிற்கும் ஒரு கிறிஸ்துவ தேவாலயமும்.

Feb 12, 2010

பதம் பார்த்த பாஸ்கர்!

துணுக்குறச் செய்தது! திடுக்கிடச் செய்தது! எனலாம் இதனை...

என் நண்பர் பாஸ்கர் பெரிய மனது பண்ணி எனக்காக ஒரு தமிழ்த்தளத்தைத் தொடங்கியிருந்தார் <http://livelyplanet.wordpress.com/>. அவர் எழுதும் high funda  ஆங்கில எழுத்துக்கள் எனக்குப் பிடிபடுவதில்லை <http://vbelonghere.blogspot.com/>. அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கேட்டு ஒருவழியாக அவரைத் தமிழ் எழுத வைத்தாயிற்று.

நான் துணுக், திடுக் உற்ற காரணம் தமிழ்த்தளத்தில் அவர் எழுதியிருந்த முகவுரையே.. பாருங்களேன்: http://livelyplanet.wordpress.com/about/

அது சரி...படிக்க நாப்பது பேரு இருந்தா, பதம் பாக்க நாலு பேரு இருக்கத்தான் செய்வாங்க.

இதில் விசேஷம் என்னவென்றால், நாங்கள் இருவரும் இதுவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்தது இல்லை. ஒருவர் குரலை ஒருவர் கேட்டதும் இல்லை. எங்கயோ இலக்கியத்துல படிச்சாப்போல இருக்கணுமே! அதுதான்...அதேதான் சார் இது!

Feb 11, 2010

கொஞ்சம் சுயவிளம்பரம்

அலெக்சா  - அனைவரும் அறிந்த வலைதளங்களுக்கான rating வழங்கும் முன்னணி நிறுவனம்.

IndiBlogger   - இந்திய வலைப் பதிவர்களுக்கான (blogger) rating வழங்கும் ஒரு இந்திய நிறுவனம்.

இவர்கள் இருவரும் "பேசுகிறேனுக்கு"  வழங்கியுள்ள சமீபத்தைய rating பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு .

அடிங்கடா அவனை! - எதிர்வினைகள்..

"அடிங்கடா அவனை" என்று எழுதினாலும் எழுதினேன்...எந்த நேரத்தில் என்று தெரியவில்லை...ஆளாளுக்கு என்னை சரமாரியாக போட்டுப் புரட்டி எடுக்கிறார்கள். என் வலைமனைக்கு வந்து விழுந்த எதிர்வினைகள் கீழே. இது தவிர்த்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் எனக்கு அறிவுரை சொல்லி, ஒரு கெட்ட வார்த்தை comment என் மின்னஞ்சலில்...

Feb 9, 2010

ஒருவன் ஒருவன் - 2

"அடிங்கடா அவனை" என்ற என் முந்தைய பதிவு வரலாறு காணாத (!) மறுப்புகளை சந்தித்து வரும் வேளையில்... (யாரோ முன்ன பின்ன தெரியாத anonymous எல்லாம் மறுப்பு சொல்றாங்க தலிவா! அப்புறம் வீட்டுக்கு உருட்டகட்ட வந்தா தாங்குவானா நானு?)

திருமிகு ஷாருக்கான்  அவர்களை அவமதிக்கும் வகையில் என் பதிவில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகள் அவரது அகில இந்திய ரசிகர்களைக் காயப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆகவே... நான் எழுதியது ஏதேனும் ஒரு வகையில் யாரேனும் ஒருவரைப் புண் படுத்தியிருந்தால், அவர்கள் அனைவரிடமும் தார்மீக மன்னிப்பு நான் கோருவதற்காக இவ்வளவும் எழுதவில்லை....

அடிங்கடா அவனை...

எங்க வீட்டுக்கு ஒருத்தன் வந்தான் சார்... நல்லா பேசினான், பழகுனான்.... வித்தையெல்லாம் காட்டினான், சந்தோஷமா இருந்திச்சி... சரின்னு எங்க வீட்டுலையே அவனுக்கு ஒரு ஓரமா இடம் பாத்து குடுத்தோம்...அவன் ஆடின ஆட்டம் பாட்டம் பாத்து எல்லாருக்கும் அவன புடிச்சி போச்சு.

எங்க வீடு மட்டுமிலாம பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு, பக்கத்துத் தெருன்னு எல்லாருக்கும் அவன் பண்ணின வித்தை புடிச்சிப் போயி அவன் கொஞ்ச கொஞ்சமா பெரிய ஆளா ஆயிட்டான். ஒரு இருபது வருஷமும் ஓடிடுச்சி....

Feb 8, 2010

இந்த வார டெக்னோ தகவல்.....

TwoFoods


என்ன சாப்பிடுகிறோம்? அதில் என்ன கலோரி, புரோட்டின், கார்போஹைடிரேட், கொழுப்பு சத்து எவ்வளவு என்று ஆராய்ந்த பிறகு சாப்பிடும் ஆளா நீங்கள் ? உங்களுக்கு ஏற்ற இணையதளம் தான் http://www.twofoods.com. "கிளிக்" செய்து பாருங்களேன், உங்களுக்கே புரியும்.


நன்றி: http://www.honeytamilonline.co.cc 

Feb 7, 2010

தமிழ்ப்படம்


இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களை ஒன்று விடாமல் கிண்டலடித்து வந்திருக்கும் படமே இந்தத் தமிழ்ப்படம். தன் முதல் படத்திலேயே இப்படி தன் குலதெய்வங்களை போட்டுப் புரட்டி எடுக்க இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு நிறையவே தைரியம் வேண்டும்.

சிவா பிறக்கும் காட்சியாக கருத்தம்மா கள்ளிப்பாலில் ஆரம்பிக்கிறது கிண்டல் உற்சவம். அங்கு தொடங்கும் காமெடி சரவெடி அதன்பின் ரவுடிகளை துவம்சம் செய்யும் ஹீரோ; பரதமாடி காலால் ஹீரோயின்  முகம் வரையும் காதலன்;  அந்நியன், அபூர்வ சகோதரர்கள் ஸ்டைலில் வில்லன்களைக் கொலை செய்வது; ஒரே பாடலில் கோடீஸ்வரனாவது என காமெடிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவரையும் விட்டுவைக்காது கமல், ரஜினி, விஜய், இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம், TR என எல்லோரும் புரட்டி எடுக்கப்படுகிறாகள். 


இறுதிப்பயணம், இனிமையாக!

"மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்குக் கிளை பாரமா?
கிளைக்கு காய் பாரமா? பெற்றெடுத்த......"

அதற்கு மேல் அந்த வயதான அம்மாவால் பாட முடியவில்லை. "எனக்கு அழுகைதான் வருது"  என வரும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நாற்காலியில் சென்று அமர்கிறார். யாருக்கு அவர் பாரமாய் இருந்ததன் நினைவோ தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த எங்கள் அனைவர்க்கும் நெஞ்சைப் பிசைந்தது.

Feb 5, 2010

வரவேற்பு

நேற்றுத்தான் அலுவலகத்தில் என் தீவிர வாசகரான (!) ஹரி சொன்னார்,  "இன்னும் நெறைய பேர்கிட்ட உங்க வெப்சைட்டை (blog) கொண்டு போங்க. கொஞ்சம் popularise பண்ணுங்க" என்று.

இன்று feedburner என் வலைப்பூ குறித்து அளித்த புள்ளிவிவரம், "அட, பரவாயில்ல! நம்ம எழுதரதக் கூட யாரோ படிக்கறாங்க" என்ற நிறைவைத் தந்தது. அந்த ஜெர்மனியிலிருந்து நான் எழுதியதைப் படித்தவர் பற்றி அறிய ஆசை.

இலவச தொலைக்காட்சியும் சிக்குன்குனியாவும்

The Butterfly Effect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த விஷயம் Chaos Theory என "தசாவதாரம்" படத்தில் கமல்ஹாசன் சொன்னது. "தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டும்" என்பார்களே, அதே விஷயம்தான்.

தமிழகத்தில் சமீபமாக பரவிவரும் விதவிதமான விஷக் காய்ச்சல்கள், நான்கு நோய்களின் கூட்டணி என நண்பர் ஒருவர் சொன்னார். டெங்கு, சிக்குன்குனியா, டைபாய்டு மற்றும் எலி ஜுரம் அவை.  இந்த பாதிப்புகளில் சிறு பங்கு எலிக்கும், பெரும் பங்கு கொசுவிற்குமே உள்ளது.

Feb 4, 2010

பிப்ரவரி 14இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. எதற்கு என்று கேட்கும் ஆளா நீங்கள்? ஓகே, சொல்கிறேன். பிப்ரவரி 14 இன்னும் பத்து நாட்களில்...

ஸ்பென்சர்ஸ், சிட்டி சென்டர்  வளாகங்கள் போன்ற இளசுகள் வளைய வரும் இடங்களில் வண்ணம் கூடும்.. வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்புப் பொருட்களும் கடைகளில் முன்னிலைப் படுத்தி விற்கப்படும்.
 தொலைக்காட்சிகளில்"காதலர் தினம்" தேவையா என முடிவில்லா விவாதங்கள் வழக்கம் போல் நடக்கும், அங்கே இங்கே என சில வாழ்த்து அட்டைக் கடைகள் அடித்து நொறுக்கப்படும்.  " நாங்க காதலர்தினம் கொண்டாடினா  இவங்களுக்கு என்ன சார்", என சன் செய்திகளில் மீசை முளைக்காத ஒரு சட்டை கிழிந்த சிறுவன் கடற்கரையிலிருந்து கதறுவான்.  (அவனருகில்துப்பட்டாவில் முக்காடிட்டு ஒரு சிறுமி இருப்பாள்).

இது சார்ந்த வடஇந்திய வரவேற்பையும், அடிதடிகளையும், ஆங்கில / ஹிந்தி சேனல்களின் கூக்குரல்களையும் நான் தனியே சொல்லத் தேவையில்லை.


காதலர் தினம் உண்மையோ இல்லையோ.... காதல் முற்றிலும் உண்மையானது.  அதன் அர்த்தமென்னவோ என்றும் ஒன்றாகவேஇருந்திருக்கிறது /  இருக்கிறது. வயதிற்கும் பக்குவத்திற்கும் ஏற்றாற்போல் நாம்தான் அதைப் பொருள் மாற்றிப் புரிந்து கொள்கிறோம், எல்லோர் வாழ்விலும் சொல்லாமல் கேட்காமல்நுழைந்து ஏதேனும் இனிப்பியோ கசப்பையோ விதைத்து விட்டே அது நிலைக்கிறது.

விகடன் பவள விழாக் கவிதைப் போட்டியில் 'சரவணன்' எழுதிய இந்த அட்டகாசமான கவிதை, என்னால் என்றும் மறக்க இயலாதது.
காதல்

இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்


இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல் 
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்


பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்


இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம் 
இன்னொரு பெயர் காதல்  


தொடர்புடைய இடுகைகள்

Feb 2, 2010

ஒருவன் ஒருவன் முதலாளி......

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தூர்தர்ஷன் விழா ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார், "தமிழில் இரண்டே இரண்டு தொலைக்காட்சி சேனல்கள்தாம் உள்ளன, அவை "பொதிகை மற்றும் ஜெய-ராஜ-விஜய-சன்" என்றார்.

பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் (நிர்மா, ரஸ்னா, ஓல்டு சிந்தால்), பழைய தூர்தர்ஷன் தொடர்கள் (ராமாயண், அலீப் லைலா, ஜுனூன்), வாராந்திர நிகழ்ச்சிகள் (எதிரொலி, முன்னோட்டம், ஒளியும் ஒலியும், செவ்வாய் நாடகம், ரங்கோலி, சித்ரஹார்) என ஒரே சேனலில் நாம் காத்திருந்து ஒரு காலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.

"ஊர் ரெண்டுபட்டால் ....

...கூத்தாடிக்குக் கொண்டாட்டம்", வேறென்ன? வெறும் வாயை மெல்லும் செய்தி சேனல்களுக்கு அவல் போல் கிடைத்தது, சிவசேனா - ஆர்.எஸ்.எஸ். முட்டல்கள் (சார் அது முட்டாள்கள் இல்லீங்க, சரியா படிங்க, அப்புறம் எங்க வீட்டுக்கு ஆட்டோ வரப்போவுது). 

செய்தி சேனல்களுக்கு நம்மிடம் ஒரேயொரு தேவைதான், "நீ என்னைப் பாரு". நீ என்ன கேக்கறியோ அதுக்கு மேலே நான் தர்றேன். ஒண்ண ரெண்டாக்கணுமா? ஆக்கறேன். உடைச்சக்கடலைய மூணாக்கணுமா? அதுவும் ஆக்கறேன். எது வேண்டுமென்றாலும் செய்வார்கள் அவர்கள்.

Feb 1, 2010

இந்த வார டெக்னோ டிப்ஸ்

டெக்னோ டிப்ஸ் நிறைய படிக்கிறேன். அவற்றில் தேர்ந்தெடுத்து உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறேன். இப்போ சாம்பிளுக்கு ஒண்ணு:

YouTube-ல் டவுன்லோட் செய்ய எளிய வழி:

எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...