Feb 13, 2010

காதலின் மறுபெயர் ஆண்டாள்


யாரோ எங்கோ யாரையோ சேர்த்து வைத்துவிட்டு இறந்ததற்காக காதலர் தினம் கொண்டாடும் நாம், காதலின் உச்சம் என்ன என்று காட்டிச் சென்ற ஆண்டாளின் காதல் குறித்து ஏதும் தெரிந்து கொள்ளாமல், வருடா வருடம் "வாரணம் ஆயிரமும்" "மார்கழித் திங்கள் மதி நிறைந்து" மட்டும் பாடிக் கொண்டிருப்பது கடற்கரையில் கால் நனைப்பதற்குச் சமம்.

இந்தப் பாடலைப் பாருங்கள்:


 கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
                                                         - நாச்சியார் திருமொழி

நாராயணன் ஊதும் சங்கினைப் பார்த்து ஆண்டாள் கேட்கிறாள்: நாரணனின் உதடுகளின் வாசனை என்ன? கற்பூர வாசனையா? கமலப்பூ (தாமரை) வாசமா? அவன் வாய்ச் சுவை இனிப்பானதா என்கிறாள்!

ஆண்டாள் மாலன்பால் கொண்ட காதல்போல ஒரு வெறிகொண்ட காதலை இன்று ஒரு பெண்ணிடம் நாம் கண்டால் அப்பெண் மீதான நம் விமரிசனமே வேறாக இருக்கும்.

இப்பாடல் ஒரு சின்ன உதாரணம்தான். ஆண்டாளைப் பற்றி நாம் படிக்கப் படிக்க வியப்பே மேலிடுகிறது. ஆகவே அன்பர்களே, ஆண்டாளின் காதல் குறித்து எழுத ஒரு பதிவு பத்தாது. தனியே எப்போதும் பெண்ணில் எழுதுகிறேன்.

ஆண்டாள் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் "அழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்" நூலில் இரண்டு அத்தியாயங்களை ஆண்டாள் குறித்து சிலாகிக்கவே ஒதுக்கியுள்ளார். படித்துப் பாருங்கள்!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...