Feb 27, 2010

பேர் பெற்ற பிரச்னை!

சமீப காலமாக தமிழக ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் வார்த்தைகள் "கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்". இது அனைத்து விதமான அரசு நலத்திட்டங்கள் போல அதற்கே உரிய உள்ளரங்கு அரசியல் குத்துக்களுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அதைப்பற்றிப் பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.


என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் - தப்பித் தவறி ஏதேனும் ஆட்சி மாற்றம் வந்தால், இந்தத் திட்டம் தொடருமா? அப்படியே தொடர்ந்தாலும் இத்திட்டத்தின் பெயர் என்னவாக இருக்கும்?


கடந்த பதினைந்து இருபது வருடங்களில் பெயர் சார்ந்த அரசியல் அடிதடிகள் சிலவற்றைப் பாருங்கள்.  


J.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம். (அதிமுக) - ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகம் (திமுக)


J.J. நகர் (கிழக்கு / மேற்கு (அதிமுக) - முகப்பேர் (திமுக)


K.K. நகர் (அதிமுக) - கலைஞர் நகர் (திமுக)


எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் (திமுக)  - J.J. திரைப்பட நகர் (அதிமுக)


இன்னும்....


இதில் சிலவகைக் குழப்பங்கள் ஒரு முறை நிகழ்பவை. சிலவோ ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் நிகழ்பவை. நமக்கு வேற என்ன வேலை? வேடிக்கை பார்ப்போம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...