Feb 11, 2010

அடிங்கடா அவனை! - எதிர்வினைகள்..

"அடிங்கடா அவனை" என்று எழுதினாலும் எழுதினேன்...எந்த நேரத்தில் என்று தெரியவில்லை...ஆளாளுக்கு என்னை சரமாரியாக போட்டுப் புரட்டி எடுக்கிறார்கள். என் வலைமனைக்கு வந்து விழுந்த எதிர்வினைகள் கீழே. இது தவிர்த்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் எனக்கு அறிவுரை சொல்லி, ஒரு கெட்ட வார்த்தை comment என் மின்னஞ்சலில்...
படித்தவுடன் அழிக்கவேண்டியாயிற்று. ஷாருக்   குறித்து எழுதினால் கெட்ட வார்த்தையால் திட்ட தமிழகத்தில் இருக்கிறார்கள் என நினைத்தால் என்னால் நம்ப முடியலை. (அந்த IP முகவரியை தட்டித் தடவி கண்டறிந்துள்ளேன், எப்படி ஆளைக் கண்டு பிடிக்க என யாரேனும் சொல்லுங்கள்)

இவை போதாதென என் அலுவலகத் தோழி ஒருவர், வீட்டில் மராத்தி பேசினாலும் அவர் ஒரு தீவிர ஷாருக் அபிமானி, உருட்டுக்கட்டையை கூர் தீட்டிக்கொண்டு (!!) காத்திருக்கிறார்.


Blogger zzz... said...
உங்க கோபம் புரியுது, ஆனா அடிங்கடா அவனைன்னு சொன்னது தப்பு- இதை ஒத்துக்க முடியாது. நாட்டாமை, தீர்ப்ப மாத்தி எழுதுங்க (at least தலைப்பை!)
9/2/10 8:57 AM
Delete
Blogger Giri said...
மன்னிக்கணும்.... நான் உண்மையான மொழி உணர்வாளன்னு சொல்லிக்கிட்டா அது என்னோட மொழியோட முடிஞ்சிடறது இல்லை... அடுத்தவன் அம்மாவுக்கு நடக்கற அவமானத்தையும் தட்டிக் கேட்பான் இந்த கிரி. விடுங்க சார்... அப்படியே எதாவது தடால் புடால்னு பண்ணி பெரிய ஆளாகலாம்னு பாத்தா விட மாட்டேங்கறீங்க....
But jokes apart. I am really unhappy with his comments.... I may not be able to hit him...let me vent my ager through those two words.
9/2/10 9:09 AM
Delete
Blogger zzz... said...
நல்லா இருக்கே கதை- இந்த தாய் மொழி தந்தை மொழின்னு சொல்றதெல்லாம் ஒரு பேச்சுக்குதான் சார், அதை உண்மைன்னு நம்பப்படாது. ஒரு பேச்சுக்கு சொல்றேன், நீங்க பச்சைத் தமிழன்னு நினைக்கிறேன் (உங்க உணர்ச்சி வெள்ளத்தைப் பார்த்தாலே தெரியுது!): ஒரு ரெண்டாயிரம், வேணாம், நாலாயிரம் வருஷத்துக்கு முன்னாலே உங்க அம்மா என்ன மொழி பேசியிருப்பாங்க, சொல்லுங்க? அதுவும், நீங்க பேசுற உங்க தாய் மொழியும் ஒண்ணா?
உங்க மூதாதையர் பேசற மொழிய நீங்க பேசலே, அப்படி இருக்கும்போது எங்க அம்மாவ திட்டிட்டான், எங்க அப்பாவோட சொத்தைக் கொள்ளை கொண்டு போயிட்டான்னு, ஏன் எமோஷன் ஆகறீங்க?
கணிப்பொறியில ஆண்டான் அடிமைன்னு ரெண்டு வல்லிய தகடு (ஹார்ட் டிஸ்க்) இருக்கு- அதை வெச்சுகிட்டு, கணிப்பொறியாளர்கள் எல்லாம் Feudalistகள்னு சொல்ல முடியுமா, என்ன? எல்லாம், ஒரு வார்த்தைக்கு சொன்னா, அதை வெச்சுகிட்டு அடிடா அவனை, கொளுத்துடா இவனைன்னு ரப்ச்சர் பண்றீங்களே,என்னண்ணா நீங்க!
9/2/10 9:22 AM
Delete
Blogger Giri said...
நான் பச்சைத் தமிழன் இல்லை. என் தாய்மொழி தெலுகு....! நானும் ஒரு வாதத்துக்கு சொல்றேன்... நாலாயிரம் வருஷம் முன்னால எங்க பாட்டன் பூட்டன் யாருன்னே எனக்கு தெரியாது...(மொழி உட்பட) ஆனா இப்போ என் கண்ணெதிரில எனக்கு சொந்தமான விஷயத்தை ஒருத்தன் மதிக்காட்டி பரவாயில்லை, ஆனா மிதிக்கக் கூடாது இல்லையா?
நான் மராத்தியர்களின் நடவடிக்கை சரின்னு சொல்லலை...ஆனா தமது மொழியைக் காக்கும் அவர்களின் உணர்வு சரின்னு சொல்றேன். அதேபோல என்னோட தலைப்பும் கூட ("அடிங்கடா அவனை") கண்டிப்பா தப்புதான்....ஆனா சில சமயம் தப்பு பண்ணிதான் சில விஷயத்தை சரி பண்ண வேண்டி இருக்கு. 
by the way, தாய்மொழி தந்தை இனம் எல்லாம் நிச்சயம் பொய்யில்லை. அது நாம நமக்கு தந்துக்கற அல்லது நமக்கு தரப்பட்ட அடையாளம் . எங்கயுமே அடையாளம் இருக்கற மனுஷன்தான் முழுமையான மனுஷனா இருக்க முடியும். இது என்னோட சொந்தக் கருத்து. அது உணர்வா இருக்கற வரைக்கும் பிரச்னை இல்லை, வெறியா போகும்போது தப்பு.
9/2/10 9:59 AM
Delete

Blogger zzz... said...
1 எது உங்களுக்கு சொந்தமான விஷயம்? மராத்தி உங்க சொந்த மொழியா இருக்கலாம், ஆனா அதுக்காக, எனக்கு மராத்தி கத்துக்க வேண்டிய அவசியமே ஏற்படலை'ன்னு சொல்றது உங்களுக்கு, உங்க சொந்த விஷயத்தை மிதிக்கற மாதிரி ஏன் தோணுது? அவருக்கு காய் கறி வாங்க வேலைக்காரங்க இருக்காங்க, எல்லா இடத்திலையும் ஹிந்தி, ஆங்கிலம், உருது பேசியே பிழைக்க முடியுது- அதை சொன்னா நீங்க ஏன், டேய் இவன் என் தாயை கேவலப் படுத்திட்டாண்டா- அடிடா இவனைன்னு ஆளைக் கூட்டிட்டு வரீங்க? இது எனக்கு புரியலை.
2. "ஆனா சில சமயம் தப்பு பண்ணிதான் சில விஷயத்தை சரி பண்ண வேண்டி இருக்கு."- இந்த வாதத்தை என்னால ஏத்துக்கவே முடியாது. தப்பு பண்றவங்க எல்லாரும் சொல்ற பேச்சுதான் இது. கேக்க நல்லா இருக்கலாம், ஆனா தப்போட விளைவுகள் எப்போவுமே தப்பாதான் இருக்கும். நீங்க வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாத்தா அந்த உண்மைதான் விளங்கும். அடிச்சு உதைச்சு ஒருத்தருக்கு உங்க தாய் மொழி பாசத்தை விளங்க வெச்சு, அவரோட அறியாமையை சரி பண்ண முடியும்னு நீங்க நினைக்கறது பெரிய தப்புங்க...எல்லா இசுலாமியர்களையும் அடிச்சாதான் நாளையும் பின்னேயும் எவனும் வெடி வெக்க மாட்டான்'னு சொல்ற மாதிரி இருக்கு. என்னிக்குமே தீவிரவாதம் வெறுப்பைத்தான் சம்பாதிச்சுக் கொடுக்கும்: முடிஞ்சா அவரிட்ட, யப்பா நீ கார்ல போற இப்படி பேசற, நாளிக்கு ரோட்டுக்கு வந்துட்டா என்ன மொழி பேசுவேன்னு அன்பா கேட்டுப் பாக்கலாம். இல்லியா, சீ நீ உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கிற காலிப்பய'ன்னு உதறி விட்டுரலாம்.
3 "எங்கயுமே அடையாளம் இருக்கற மனுஷன்தான் முழுமையான மனுஷனா இருக்க முடியும்"னு நீங்க சொல்றது யோசிக்க வேண்டிய விஷயம். அடையாளத்தை நீங்களாதான் குடுத்துக்கறீங்க, அதை மறந்துராதீங்க. அதை நினைவில் வெச்சுகிட்ட இப்படி என்னோட அடையாளத்தை அவன் ஏத்துக்க மாட்டேங்கறான்'னு அடிக்கப் போக மாட்டீங்க.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம், ஆனா இதுக்கு மேல பேசின நமக்குள்ள அடிதடி ஆகிரும். அதனால இத்தோட நிறுத்திக்கிடுவோம்.
எப்படியோ, என்னையும் மனுஷனா மதிச்சு பதில் சொன்னதுக்கு நன்றி.
9/2/10 5:39 PM
Delete
Blogger Giri said...
same dialogue..
(இன்னும் எவ்வளவோ சொல்லலாம், ஆனா இதுக்கு மேல பேசின நமக்குள்ள அடிதடி ஆகிரும். அதனால இத்தோட நிறுத்திக்கிடுவோம்.
எப்படியோ, என்னையும் மனுஷனா மதிச்சு பதில் சொன்னதுக்கு நன்றி....)
9/2/10 7:39 PM
Delete
Anonymous Anonymous said...
what I would like to say is, you have your right to vent your anger, but the words the title carries is not right.
9/2/10 8:26 PM
Delete
Blogger Giri said...
@ Anonymous... You too!?
9/2/10 8:26 PM
Delete
Blogger Raghu Bhaskar said...
Indha post yen da en kannula ithini naal padla... Naanum kodhaala eranguren...
I also agree with "zzz...".... Sharuk sonnadhula appadi enna thappu irukku "Enakku Marathi kathukkura avasiyam yerpadalai" nnu dhaane sonnaaru... Marathi oru kevalamaana mozhi adha naan kathukka maaten nna sonnaaru.... 
adhuvum illaama politicians panraa cheap politics idhu ellam.... thaai mozhi thathu pithu nnu... for eg., namma tamil kudimagan... Poo Market kku "Malar Angadi", Town Hall kku "Nagara Mandabam" nnu pala varusangalukku munaala periya puratchi panninaare.... tamil pattru nna idhu dhaana.... Avlo tamil patru nna un pasangala tamil mattum padikka veyi... tamil naattla ye irukka sollu.....yen aangilam paddikka vekkira... adhuvum convent la.... ivanunga enna venaa pannuvaanunga... aana aduthavan panna thappu... Enna koduma saravana idhu...
Hindi venaam venaam nnu solli tamilnatula irukkuravanga veliya ponaa evalavu kasta padraanga... Tamil enga mozhi, Marathi enga mozhi nnu solraanungale.... Ivanunga ellam Indians dhaane... Namma National Language Hindi adha pesanum... pesina enna thappu nnu oru naattu patru irukkaa.... Cheap politics panravangala - Adingada Avana Thai mozhi Thai mozhi nnu summa udhaar vittu kittu Nattu patru ilaadhavanungala - Adingada Avana...
Idhu enga ooru, nee enga oorukku varaadhe nnu cheap a nadandhukkuravanungala - Adingada Avana.....
Jai Hind
10/2/10 3:56 AM
Delete
Blogger Giri said...
எனக்கு ஒண்ணே ஒண்ணு புரியுது.... என்னைப் போல ஒரு எழுத்தாளன் (!) வளரணும்னா அவன் இது போல பரபரப்பா எதாவது எழுதணும். உங்க அனைவர் கருத்துக்கும் (குத்துக்கும்) நன்றி.
10/2/10 10:02 AM
Delete

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...