Aug 22, 2009

நாடோடிகள்


Office team outing-ல் இன்று நாடோடிகள் படம் பார்த்தோம். இரு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் "நல்ல படம்".காதலர்கள் இணைவதில் காதலின் வெற்றி இல்லை, அவர்கள் அதன் பின்னர் வாழ்ந்து காட்டும் விதத்தில்தான் உள்ளது என்பது படத்தின் Moral. உயிரைப் பணயம் வைத்து நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார்கள் கதை மாந்தர்களான சசி, விஜய், பரணி மூவரும். சேர்த்து வைக்கும் வேலைக்கு விலையாக "கால்", "காதல்", "காது" என ஒவ்வொன்றை இழக்கிறார்கள் ஒவ்வொருவரும். சேர்த்து வைத்த காதலர்கள் செய்துகொண்ட கல்யாணத்தை விளையாட்டாய் முறித்துக்கொண்டு விவாகரத்து வரை சென்று நிற்கும்போது உஷ்ணமாகிறார்கள் மூன்று தோழர்களும். காதல் ஜோடிக்கு மூவரும் தண்டனை தர நினைக்கிறார்கள். கொடுக்க நினைக்கும் தண்டனை "போட்டு தள்ளுவது". முடிவில் என்ன நடக்கிறது என்பதை சமுத்திரக்கனி அழகான பாணியில் சொல்லி இருக்கிறார். Hats Off!!சின்ன சின்ன பாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். அபினயா நடிப்பில் பின்னியெடுக்கிறார். அனன்யா looks good. இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு scope குறைவு.


இடைச் செருகலான அந்த highway குத்துப் பாட்டை தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு நிறைவான படம்.

Aug 14, 2009

ஐயோ அம்மா காப்பாத்துங்க Swine Flu

"ஐயோ அம்மா காப்பாத்துங்க Swine Flu"

கிட்டத்தட்ட இந்தக் குரல்தான் ஒலிக்கிறது எந்த News Channel-ஐ திருப்பினாலும்.

சில உண்மைகள்:
- நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு இல்லை என்றால், நீங்கள் mask அணிந்தாலும் சரி அல்லது இரும்பு கூடாரம் அமைத்து உள்ளே அமர்ந்தாலும் சரி உங்களை swine-flu தாக்கியே தீரும்.
- Swine-flu தாக்கிய 10000 பேரில் ஒருவர் தான் இறக்கிறார். அவரையும் நம்மால் காப்பாற்ற முடியும், முறையான சிகிச்சை கொடுத்தல் மற்றும் இந்திய டிவி.க்கள் வசம் இருந்து அவரை நாம் திசை திருப்பி வைத்தால்.

இந்திய Media-க்களுக்கு "Creating Awareness" என்பதற்கும் "Creating Panic" என்பதற்குமான வித்தியாசம் தெரியாமல் போனது தான் இந்தியாவின் உச்சகட்ட பரிதாபம். Swine-Flu பற்றி யாரும் கவலைப் படத் தேவையில்லை என்பதல்ல என் கருத்து. "ஐயய்யோ பத்து பேர் செத்துட்டாங்க, இந்தியாவின் இருபதாவது மரணம்" என்ற "Breaking News"-கள் யாவும் குணமடையும் நிலையில் இருப்பவனையும் கூட சாகடிக்கும் விஷ மருந்துகள் தான்.

என் முந்தைய Blog-ல் எழுதியது போல் வருடத்திற்கு 90000 பேரை காவு வாங்கும் விபத்துகள் குறித்து என்ன awareness-ஐ உருவாக்கின இந்த மீடியாக்கள்? அவர்களுக்கு எப்போதும் ஏதேனும் சுடச்சுட செய்தியுடன் படபடப்பாக பரபரப்பாக உச்சஸ்தாயியில் பின்னணி இசையுடன் அலற வேண்டும். குறிப்பாக நீங்கள் CNN-IBN இரண்டு நாட்கள் தொடர்ந்து பாருங்கள், மூன்றாம் நாள் உங்கள் BP குறைந்தபட்சம் 10 பாயிண்ட் ஏறி இருக்கும்.

மீடியாக்களுக்கு சின்ன வேண்டுகோள்: உங்கள் swine-flu வியாபாரம் நீர்த்துப் போனபின், TB என்று ஒரு பழைய வியாதி இருக்கிறது. அதனால் வருடத்திற்கு 400000 பேர் இறக்கிறார்களாம். அவர்களுக்காக ஏதேனும் அலறுங்கள், please.

Aug 9, 2009

குடி குடியை கெடுக்கும்

தினமலரில் இன்றைய செய்தி: சாலை விபத்துகளில் இறந்தவர் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 90000. (இது உலக அளவிலான செய்தி என நம்புகிறேன்). சிறிய காயங்களுடன் தப்பிப்பவர்கள் பல லட்சம் பேர். நிரந்தர ஊனத்திற்கு தள்ளப்படுபவர்கள் சில லட்சம் பேர் என்கிறது அறிக்கை. நிஜத்திலும் நிஜக் கொடுமையான செய்தி.

இந்த சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக போக்குவரத்து இயக்குனர் தெரிவித்து இருப்பது Drink & Drive. அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்டவர்களின் drink drive. சிறு வயதில் கன்னா பின்னா என சம்பாதிப்பது அதிகரித்ததே இதன் காரணம் என நினைக்கிறேன்.

My friends; நல்லா சம்பாதிங்க, நல்ல்ல்ல்ல்லா குடிங்க, ஆனா மத்தவங்க குடிய கெடுக்காதீங்க, please. Never drive while you are on drink's control.

விபத்துகளுக்கான இன்னொரு காரணம் அதிவேகமாக வண்டி ஓட்டுவது. இவர்களை என்ன சொல்லி திருத்த. ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது. அது லேனா தமிழ்வாணன் அருளிய ஒரு அறிவுரை. எப்போதும் உங்களைச் சுற்றி 20 முட்டாள்கள் வண்டி ஓட்டுவதாய் நினைத்து உங்கள் வண்டியை ஓட்டுங்கள். இந்த வகையில் ஓட்டும் போது தன்னாலே நீங்கள் முடிந்தவரை உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...