Mar 31, 2012

மூணு விமர்சனம்

Mar 27, 2012

இனியவை 140


ட்விட்டர் நண்பர் வேதாளம் (எ) அர்ஜூன் தன் ட்வீட்டுகளைத் தொகுத்து மின்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். தன் முதல் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதும் கௌரவத்தையும் எனக்குத் தந்தார். அந்த அணிந்துரையின் சில வரிகள் இங்கே.


மூன்று மணிநேரத் திரைப்படத்தில் சொல்வதை விடமுப்பது நிமிட நாடகத்தில் சொல்வதை விடக் கடினம் ஒரு கதையை முப்பது நொடிநேர விளம்பரத்திற்குள் அடக்குதல். ஆனால் பலப்பல சினிமாக்கள் நாடகங்கள் தொடாத இடங்களையெல்லாம் சின்னஞ்சிறு விளம்பரங்கள் தொட்டுவிடுகின்றன.

அதே கதைதான் இந்த ட்விட்டர் தருவதும். நாவல்கள்கதைகளில் சொல்லாத பெரிய தகவல்களையும் கூட நூற்று நாற்பதே எழுத்துகளில் (அல்லது charector'களில்) சொல்லத் தெரிவது ட்விட்டரின் அழகு.....
 
......"மூர்த்தி சிறுசுகீர்த்தி பெருசு" என்று கேட்டிருப்பீர்கள்! அர்ஜூன் அந்த ரகந்தான்.  எங்கள் முதல் சந்திப்பில் (கார்பரேட் கனவுகள் புத்தக வெளியீட்டில்) அர்ஜூனைப் பார்த்த போது, "எந்த ஸ்கூல் படிக்கறீங்க?", என்ற என் கேள்விக்கு, "நம்புங்க சார்நான் சாப்ட்வேர் எஞ்சினியர்"என்ற பதிலை என்னால் நம்பத்தான் முடியவில்லை. சரி ஒரு ஆர்வமான சின்னப்பயல் வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். பிறகு அவர் எழுதும் ட்வீட்களைத் தொடரத் துவங்கிய பின்தான் "இது பெரிய பார்ட்டி ஓய்!"என்று என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.
உதாரண ட்வீட்'டாக கிட்டத்தட்ட ஒரு ஹைக்கூ! வடிவிலான இதைப் பார்த்தால் தெரியும்,

"கோயிலின் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கற்பூரம் கொளுத்தப்படுகிறது #ஆமென்"
இந்த ட்விட்டர் உலகில்..... ...வட்டம் எதையும் வரையறுக்காமல் புழங்குபவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒரு சிலரில் முதன்மையானவராக அர்ஜூன் நிச்சயம் இருப்பார்....
 .....தமிழ் டிவிட்டர் உலகினர் பலரையும் நேரில் சந்தித்து நட்பைத் திடப்படுத்திக் கொண்ட பெருமையும் நம் அர்ஜூனையே சாரும்.......
வாழ்த்துகள் அர்ஜூன்! எழுத்துலகில் இன்னும் பலப்பல படிகள் ஏறி சாதனைகள் பல புரிய வாழ்த்துகள்!

மின்புத்தகம் டவுன்லோடு செய்ய: இனியவை 140

வேதாளம் அர்ஜூனின் வலைப்பதிவு: இனியவை 140Mar 25, 2012

எமர்ஜென்சி நிலை / தீவிரவாதத் தாக்குதலின் போது....

ஏதேனும் எமர்ஜென்சி நிலையில் (70’களின் எமர்ஜென்சியல்ல இது, நிஜ எமர்ஜென்சி பற்றி சொல்கிறேன் :)) நீங்கள் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஈமெயில் ஆங்கிலத்தில் வந்தது. எனக்குத் தெரிந்த மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். திருத்தம் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

What you should do if caught in a life-threatening situation in a public place


பொது இடங்களில் நீங்கள் இருக்கும்போது உங்கள் உயிருக்கு ஆபத்தான ஒரு எமர்ஜென்சி நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டால் என்னசெய்ய வேண்டும்?
·         Familiarize yourself with your surroundings

·         Be aware of the location of emergency exits and the alarm system within the premises

·         In case of a commotion, immediately contact people in charge

·         While your reactions will be based on the situation, your objective is to move to a safe place

·         In case of a fire, move out immediately through the nearest fire exit. Do not wait to collect your belongings


நீங்கள் இருக்கும் இடம் / கட்டிடம் அதன் சுற்றுப்புறம் பற்றிய தெளிதலுக்கு முதலில் வாருங்கள். (கிட்டத்தட்ட மனதிற்குள் ஒரு வரைபடம் வரைந்து கொள்ளுங்கள்)

அந்த இடத்தில் / கட்டிடத்தில் எமர்ஜென்சி வழிகள் எங்கிருக்கின்றன என தேடுங்கள் / மற்றவர்களை எச்சரிக்கை செய்ய அலாரங்கள் எங்கே உள்ளன என்பதையும் உடனே அறிந்து கொள்ளுங்கள்.

தள்ளு முள்ளு நிலை ஏற்படும் என நீங்கள் நினைத்தால் / தள்ளு முள்ளு நிலை ஏற்பட்டால் அங்கே இன்சார்ஜ் யார் என்பதை அறிய முற்பட்டு அவருக்கு தகவல் தாருங்கள். நிலையை நீங்களாக கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேண்டாம்.


நீங்கள் அங்கே நிகழும் செயல்களுக்கு எதிர்வினையாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் உங்கள் நோக்கம் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைவதாக இருக்க வேண்டும், அதனை மறக்க வேண்டாம்.

தீவிபத்து ஏற்பட்ட இடமாக அது இருந்தால் உங்கள் உடைமைகள் குறித்த கவலைகளை மறந்து பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்லுங்கள்


In case you are caught in a terrorist attackதீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொண்டால்.... 

·         Do not panic

·         Close the doors and switch off the lights

·         Barricade the door if possible

·         Draw the curtains

·         Take cover, lie down on the ground

·         Put your cell phone on silent

  ·       Try and establish contact with someone in authority at the premises

·         Do not make unnecessary telephone calls; conserve your cell phone battery

·         Use your best judgment to make a safe exit

·         After escape from the location, stay away from crowded places


முதலில் பதற்றத்தைத் தவிருங்கள் (இது ரொம்ப கஷ்டம், ஆனால் இதுதான் ரொம்பவும் முக்கியம்) 

நீங்கள் இருக்கும் இடத்தின் கதவுகளை அடையுங்கள், விளக்குகளை உடனே அணைத்து விடுங்கள்

கதவுகளுக்கு முடிந்தால் தடுப்புகள் வைத்து விடுங்கள்

திரைச்சீலைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் முழுதாய் அடையுங்கள்.

உங்களை முழுதாய் எதேனும் தடுப்பு கொண்டு மறைத்துக் கொண்டு தரையோடு படுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்ஃபோனை சைலண்ட் ஆக்குங்கள் 

அந்த இடத்தின் / கட்டிடத்தின் விப்ரம் தெரிந்த அதிகாரி / நபர் ஒருவருடன் தொடர்பு கொள்ள முயலுங்கள்.

தேவையில்லாத அழைப்புகள் விடுத்து செல்போன் பேட்டரியை வீணாக்காதீர்கள்.

உங்களுக்கு ஆகச்சிறந்த முடிவை எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முற்படுங்கள்.

அங்கிருந்து வெளியேறிய பின் கூட்டமான இடத்தில் இருப்பதைத் தவிருங்கள்.
.
.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களிடம் அவசியம் பகிரவும். 
. image courtesy: Google god!

Mar 23, 2012

அவன், அவள், பூதம்


எச்சரிக்கை 1:
எப்பவோ ஈமெயிலில் வந்திறங்கிய கதை இதுமுன்னமே நீங்க வாசித்திருக்கக் கூடும்இருந்தாலும் என்னவந்தது வந்தீர்கள் படித்து வையுங்கள்!

எச்சரிக்கை 2 : 
இது அடல்ட் கதைஅதனால் அடல்ட் ஆனவர்களை விடவும் அடல்ட் ஆகவிருப்பவர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து படிக்கலாம்தனியறிவு கூடும்.

வர்கள் இளம் தம்பதியினர்கணவன் மனைவிக்கு கோல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறான்மனைவி எக்குத்தப்பாய் ஓங்கி விட்ட ஒரு அடியில் பந்து பத்து ஃபர்லாங் பறந்து காணாமற் போகிறதுபந்தைத் தேடி இருவரும் அந்த நீண்ட கோல்ப் மைதானத்தில் நெடும்பயணம் புறப்படுகிறார்கள்கடைசியில் பாசி படிந்து பயமுறுத்தும் பழைய பாழடைந்த பங்களா ஒன்றை அடைகிறார்கள் இருவரும். ('னாவுக்கு 'னாவுக்கு 'னாவுக்கு 'னாவுக்கு பா'னாதமிழ் வாத்தியார் பேரன் நான்). அந்த வீட்டின் முன்புற மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடியில் கோல்ப் பந்து உள்ளே சென்ற அடையாளம் தெரிகிறதுஒரு உடைசல்.

பயபக்தியோடு உள்ளே நுழைகிறார்கள்வீட்டில் யாரும் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லைவீட்டின் மண்டப அறையில் பொருட்கள் ஏதும் இல்லைஅறை மூலையில் இருக்கும் ஒரு கண்ணாடி அலமாரியின் கதவும் உடைந்திருக்கிறதுதரையில் ஒரு சிறு மண்குடுவை உடைந்து சிதறிக்கிடக்கிறதுஒரு மூலையில் அவர்கள் தேடிவந்த அந்த கோல்ஃப் பந்து இன்னமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்த அறையில் இன்னொரு மூலையில் திடீரென்று ஒரு மனிதன் தோன்றுகிறான்ஏழு அடி உயரம்பார்க்கவே விசித்திரத் தோற்றம்இருவரையும் வெறித்த பார்வை பார்க்கிறான்.

"சார், மன்னிச்சிடுங்கஎன் மனைவி இப்போதான் கோல்ஃப் கத்துக்கறாதெரியாம பந்து உள்ளே வந்துடுச்சி!", அத்தனை ஆஜானுபாகுவான ஒரு விந்தைத் தோற்றம் கொண்ட மனிதனைக் கண்டவுடன் கணவனுக்கு நா குழறத் தொடங்குகிறது.

"சாரி சார்!", மனைவியும் கணவன் முடித்த இடத்தில் தொடங்கி தன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறாள்.

இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான் அந்த மனிதன். "ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா", ஒரு நெடிய சிரிப்பு முதலில் பதிலாக வருகிறதுகணவனும் மனைவியும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்எதற்குச் சிரிக்கிறான் என்று விளங்கவில்லையே!

"ஐயாநீங்கள் எனக்கு நல்லதுதான் செய்திருக்கிறீர்கள்!"

"என்ன சொல்லறீங்க?"

"நான் ஒரு பூதம்இல்லை பயப்படாதீங்கநான் நல்லது செய்யும் பூதம்ஒரு கெட்ட மந்திரவாதி ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் என்னை இந்த மண் குடுவையில் அடிச்சி வெச்சிட்டுப்போயிட்டான்அந்த குடுவைக்குள்ளேயே எங்கெங்கயோ சுத்தி வந்த எனக்கு இன்றைக்கு உங்க மூலமாகத்தான் விடுதலை கிடைச்சிருக்கு", இப்போது கணவனும் மனைவியும் சந்தோஷமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்பூத மனிதன் தொடர்கிறான்...

"என்னை விடுதலை செய்த உங்களுக்கு நான் ஏதாவது செய்தாகணும்ஏதேனும் மூணு வரம் கேளுங்க"

இமேஜுக்கு தேங்க்ஸ்: http://www.mwctoys.com

"அட! அப்படியாரொம்ப சந்தோஷம் பூதம்நீங்க எங்களோடையே இருந்துடுங்க அதுதான் முதல் வரம்"

"இல்லைங்கஅது நடக்காதுநான் என் மக்களைத் தேடித்போயாகணும்வேற ஏதும் கேளுங்க!"

முதலில் கணவன் கேட்கிறான், "எங்களுக்கு உலகத்துலேயே மிகப் பெரிய வீடு வேணும்”, மனைவி எக்ஸ்டென்ஷன் சேர்க்கிறாள் ஃபுல்லி ஃபர்னிஷ்ட்".

"அப்படியே அப்படியேநீங்கள் வீடு திரும்பிச் சென்று பார்க்கும்போது உங்கள் வீட்டை உலகின் மிகப் பெரியவீடாகஅனைத்து வசதிகளும் பொருந்திய வீடாகப் பார்ப்பீர்கள்இரண்டாவது என்ன வேண்டும்?"

"அந்த வீடு முழுக்க போதும் போதும்ங்கற அளவுக்கு பணம் வேணும்"

"அப்படியே அப்படியேஎன்றும் தீராத செல்வம் உங்கள் வீட்டு அறைகள் முழுக்க நிரம்பியிருக்கும்மூன்றாவது வரமாக நீங்கள் ஏதும் கேளுங்கள் அம்மணி

"ஆ! இந்த ரெண்டையும் அனுபவிக்க எங்களுக்கு ஆரோக்யமான ஆயுள் வேணும்"

"அப்படியே அப்படியேஉங்கள் இருவருக்கும் நோயற்ற ஒரு வாழ்வை மூன்றாவது வரமாக வழங்கினோம்"

"ரொம்ப தேங்க்ஸ் பூதம்ஒரு பந்து அடிச்சி கண்ணாடியும்குடுவையும் உடைஞ்சதுக்கு இப்படி ஒரு பரிசா?"

"நீங்கள் என்னை விடுதலை செய்தவர்கள்அல்லவாஉங்களுக்கு இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?"

"சரிநாங்க அப்போ போயிட்டு வர்றோம்ரொம்ப நன்றி பூதம்!"

"ஒரு நிமிடம் ஐயாஒரு நிமிடம் அம்மணி!"

"சொல்லுங்க பூதம்"

"உங்களுக்கு மூன்று வரங்கள் வழங்கிய எனக்கு நீங்கள் ஒரு வரம் அருள்வீர்களா?"

"நாங்களாஉனக்கு என்ன வரம் தரமுடியும் நாங்க?"

"நான் பூதம்தான் என்றாலும் எனக்குள்ளும் ஐந்து நூறு வருடங்களாக உறங்கிக் கிடந்த ஒரு மனிதன் இருக்கிறான்"

"சரி?"

"அவனுக்கும் அமிழ்த்தி வைக்கப்பட்ட காதற்பசியும் இருக்கிறது..."

"அதனால?"

"உங்கள் மனைவியும் மிகவும் அழகாக இருக்கிறார்நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால்...

”...தவறாக நினைக்கவில்லை என்றால்...???”, அதிர்ச்சியும் கோபமும் சேர்ந்த கேள்வி கணவனிடமிருந்து...

நான்....நான்.... அவருடன் சிறிது நேரம் செலவிடலாமா?"

யோவ்! போய்யா, ஏதோ நல்ல பூதம்னு சொன்ன? நீயும் வேணாம் உன் வரமும் வேணாம். வாடீ....”, மனைவியின் கைபிடித்துத் தரதரவென்று வெளியே இழுத்தான் கணவன்

ஆனால் இங்கே மனைவியின் தியரி வேறுவிதமாக இருக்கிறது. எதுக்குங்க டென்ஷன் ஆகறீங்க?”

ஏய்! என்ன பேசற நீ?”

அவன் ஒண்ணும் மனுஷன் இல்லையே? அதுவும் இல்லாம இத்தனை வசதி வாய்ப்பு நமக்கு எப்படி திரும்ப அமையும்? நான் சின்ன காம்ப்ரமைஸ் பண்ணத் தயார்

செருப்பால அடிப்பேன். அப்படியே போயிடு அவனோட....”, என்று ஆரம்பித்த கணவன் கால்மணிநேர விவாதத்திற்குப் பிறகு சமாதானம் ஆகிறான். மனைவி அந்த பூதத்துடன் மேல்மாடி அறைக்குள் போகிறாள்.

அடுத்த ஒன்றரை மணிநேரம்.... ஆயகலைகள் எத்தனையோ நாமறியோம். ஆனால் அந்தக்கலையின் அறுபத்து சொச்ச வகைகளையும் ஒருங்கே அவளிடம் முயற்சிக்கிறான் அந்தப் பூதம். 

இப்படி ஒரு பெண்ணை நான் கண்டதேயில்லை. யூ ஆர் ஸோ செக்ஸி....”,சிரித்துக் கொள்கிறாள் அவள்.

களைப்பின் உச்சத்தில் கடைசிக் கலையை அவளிடம் பழகிக் களைக்கிறான் அந்தப் பூதம். பெருமூச்சின் உச்சத்தில் அவளிடம் கேட்கிறான்...

உனக்கு என்ன வயது?”

முப்பத்து நான்கு

உன் கணவனுக்கு?”

முப்பத்து ஆறு

ம்ம்ம்ம்... முப்பத்து ஆறு, முப்பத்து நான்கு.... இன்னமுமா இந்த பூதம், பிசாசுக் கதைகளையெல்லாம் நம்புகிறீர்கள் நீங்கள்?”
Mar 21, 2012

ஓலைக்கணக்கன்


சொந்தத்திலேயே பெண் கேட்டு (அல்லது பையன் கேட்டு)ப் போய் நின்றால் பெண்/ பையன் தர சம்மதம் இல்லாதவர்கள், “நம்ம தலைலயே நாமளே என்ன அட்சதை போட்டுக்கறது”, என்கிற ரீதியிலான பதில் தந்து மழுப்புவார்கள்.

கார்க்கி சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவாக “ஓலைக்கணக்கன்” வலைமனையை தன் 2012’ன் சிறந்தவைகள் பட்டியலில் குறிப்பிட்டபோது அப்படித்தான் நானும் நினைத்தேன். என்னது பக்கத்துல இருந்து பழகும் ஒருத்தரை “சிறந்த பதிவர் 2012” என்று பட்டம் தந்துப் பாராட்டுவது என்று. கார்க்கி சொன்னது சரிதான் என்று சமீபத்தில்தான் நம்பினேன்.

பக்கத்திலிருந்து தினம் பழகும் ஒருத்தர் எழுதுபவைகளை நாம் பெரும்பாலும் சிரத்தையாகப் படித்து விடுவதில்லை. “எழுதியிருக்கியா? ஓகே”, என்ற ரேஞ்சில் படித்தும் படிக்காமலும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, “நல்லாருக்கு நல்லாருக்கு”, என்று சொல்கிறோம். முடிந்தால் அவர் திருப்திக்கு பதிவின் இடையில் இருந்து நான்கு வார்த்தைகளை எடுத்து அவருக்கே அனுப்பி, “அது சூப்பர் போ”, என்று போலிப் பாராட்டையும் இணைக்கிறோம். 

நட்டு என்கிற நடராஜன் (ட்விட்டரில் @nattu_g) பதிவுகளில் ஒரேயொரு பதிவை மாத்திரம் எப்போதோ நுனிப்புல் மேய்ந்த நினைவு. மற்றபடி அவர் வலைமனைப்பக்கம் போய்வந்த நினைவில்லை. சமீபத்தில்தான் வெட்டியாய் இருந்த ஒரு பொழுதில் நடராஜரே எதிரில் வந்து ”வாசியும் ஓய்” என்று ஓசியில் (ஆஃபீஸ் கம்யூனிகேட்டரில்) வலியத் திணித்து சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது.

”வாவ்! வாட் எ திறமை இந்தப் பையருக்குள்?” என்று வியந்தேன்! 

“தெருநாய்” என்ற இந்தப் பதிவில் என் கையெழுத்தையும் இட்டு வைத்திருக்கிறேன், அதையும் இப்போதுதான் கவனிக்கிறேன். நிஜமாகவே கவனிக்கத்தக்க பதிவுதான் இது.

இந்தப் பெண் விடுதலை பதிவு “ஆனந்த விகடன்” ஸ்டஃப். தவறிப்போய் இவர் வலைமனையில் வெளியிட்டு விட்டார். தலைப்பை மட்டும் இன்னும் நன்றாக யோசித்திருக்கலாம்.

பிச்சைக்காரன்”, கிட்டத்தட்ட ஆளவந்தான் படம் பார்க்கும் எஃபெக்ட் தருகிறது. ஓவர் ஸ்டஃப் ஆனால் நடையில் இவர் காட்டும் ஜாலம் இவர் திராணியைப் பறை சாற்றுகிறது.

மற்ற பதிவுகளை நீங்களே தேடிப் படியுங்கள்

தமிழின் தன்னிகரில்லா இலக்கியவாதியாக வலம்வர வாழ்த்துகள் நடராஜ்!

Mar 19, 2012

தமிழனின் முழக்கங்கள்!


இலங்கையின் போர்க் குற்றங்கள் கண்டிக்கத்தக்கவை. அதில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள். ஐ.நா.தீர்மானத்தில் இலங்கையை எதிர்த்து இந்தியா ஓட்டு அளிக்கவேண்டும். இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இலங்கைக்கு எதிராக இவ்விஷயத்தில் செயற்படவேண்டும். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஒவ்வொரு இந்தியனிடமும் இதை எடுத்துச்செல்லவும், உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இதைத் தெரியப் பண்ணுவதற்கும் நினைக்கிறோம். ஆனால் அதற்காக எந்த வழியைக் கடைப் பிடிக்கிறோம் நாம்?

தமிழ் இணையத்தில் #KillerFields என்ற குடையின் தமிழர்களின் வீரத்தைக் காண்கையில் எனக்குப் புல்லரிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் வீரமும் ஆவேசமும் இலங்கை அரசின் போர்க் குற்ற வீடியோவைப் பார்த்ததும் இவர்களை வந்து சேர்ந்தது, சரிதான். ஆனால் அந்த வீராவேசத்தின் வெளிப்பாடு இருக்கிறதே!

இவர்கள் இணையத்தில் முழங்கும் முழக்கம் உண்மையானால் அந்த முழக்க ஒலிக்கு, வீரமுழக்கத்திற்கு, அந்த முழக்கத்தின் அனலுக்கு இந்நேரம் ஒட்டுமொத்த இலங்கையும் சுட்டு எரிந்திருக்கவேண்டும். கண் மண் தெரியாமல் சிலர் முழங்குகிறார்கள். தொடர்ந்துமுழங்குகிறார்கள். இருபத்து நாலு மணி நேரமும்அலறுகிறார்கள். ஆனால் இவர்களில் எத்தனை பேர் உருப்படியான அடுத் கட்டத்திற்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வார்கள் என்றுதெரியவில்லை.

தேசிய உணர்வைவிட இன உணர்வு என்றும் பெரிதுதான், யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த இனவுணர்வின் வேகம் உங்கள் தேசிய உணர்வை துச்சப்படுத்தும், "தேசியக் கொடியின் மேல் ஒண்ணுக்கு இருப்பேன்", என்று பேசும் வரையில் உங்களைக் கொண்டு வரும் என்றால்.... நீங்கள் கொஞ்சம் உங்களை ஆசுவாசப் படுத்திக் கொண் பின் இணையம் திரும்புதல் நலம். ஒரு தலைவனின் கண்மண் தெரியாத முட்டாள்தனக் கோபத்தில் ஒரு இனமே அழிந்தொழிந்தது போதாதா? உங்கள் கோப வெளிப்பாடுகளில் தேச அவமதிப்புக் குற்றத்தில் நீங்கள் உள்ளே போய் உங்கள் குடும்பத்தை நிர்க்கதியில் விட்டுவிடாதீர்கள். நான் இதை விளையாட்டாகச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்.

தகவல் பரப்புங்கள், எதிர்ப்பைத் தெரிவியுங்கள், ஒன்று திரளுங்கள், போராடுங்கள்.... அது உங்களுக்கானது. ஆனால் அதை கண்ணியமாகச் செய்யுங்கள். உங்கள் objective என்னவோ அதை நிறைவேற்றச் செய்ய வேண்டியதைச் செய்யாமல், போகும் வழியில் இருப்பவைகளை எல்லாம் உதைத்துத் தள்ளியவாறு செல்லும் மனப்பான்மை உங்களுக்கு இருந்தால் அது நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லாது என்பது உங்களுக்குப் புரியுமா?

"பச்சைத் தமிழர்கள், எச்சைஇந்தியர்கள்" என்று ஒரு கருத்துப் பதிவைப் பார்க்கநேர்ந்தது. இது நான் பார்த்த நூற்றுக்கணக்கான கண்மண் தெரியாத கோப வெளிப்பாடுகளுள் ஒன்றே ஒன்று. இதுபோல ஏகப்பட்ட முட்டாள்தனமான கோப வெளிப்பாடுகள் இறைந்து கிடக்கின்றன. உங்கள் கோபம் இத்தனை தூரமா உங்கள் கண்ணைமறைக்கும்?

இவர்களை என்ன சொல்ல?

Mar 16, 2012

ட்விட்டர் ப்ரேக்!


ந்ல்ல பல தகவல்கள் தந்த, தெரியாத விஷயங்களைத் தெரிய வைத்த, மகிழ்ச்சி தந்த, எரிச்சல் தந்த, கோபமடையச் செய்த, குதூகலம் கொள்ளச் செய்த, நட்பு பாராட்டிய, உற்சாகப்படுத்திய, காலை வாரிய அனைத்து நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!

இங்கே, பாடுகிறேன், கட்டுரை, தமிழோவியம் தளங்களில் தொடர்ந்து சந்திப்போம்!

பின்னொரு நன்னாளில் ட்விட்டரில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!

இந்த முடிவை எடுக்க என்னை உற்சாகப்படுத்திய @nattu_g’க்கு என் மனமார்ந்த நன்றிகள்! :))))))))) (செ.சே) 


Mar 9, 2012

பை பை டிராவிட்

நன்றி:http://crickethighlights.com 

ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த 16 வருடங்களில் அவர் கடந்த சாதனைகளைப் பட்டியலிடுவதோ, அவர் ஆடிய ஏதோ ஒரு ஆட்டத்தை மேற்கோள் காட்டியோ இங்கே எளிமையாகப் பேசிவிட முடியாது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 10000’ஆவது ரன்னை அவர் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த போது அந்த பெருமைக்குரிய தருணத்தை நேரில் தரிசித்ததை மாத்திரம் இங்கே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்! 

இந்த நெடிய 16 வருடங்களில் அயராத ஆட்டத்தை வெளிப்படுத்தியவரும், இந்தியாவை பலப்பல தருணங்களில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தலைநிமிரச் செய்தவருமான ஒருத்தரின் விலகல் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓர் பெரிய இழப்பே! 


இனி அவர் ஆடும் ஆட்டங்களை ஹைலைட்ஸ்’களிலும் யூட்யூபிலும் மாத்திரமே காண முடியும் என்பதை எண்ணும்போது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போலவும் எனக்கும் கண்கள் பனிக்கின்றன.


நன்றி டிராவிட்! வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு!

Mar 8, 2012

அன்னைமார்ச் 8, 2012
உலக பெண்கள் தினம்

மயிலின் அகவல் போல்தான் கொடூரமாக இருக்கும் அந்தப் பாட்டியின் குரல். ஐந்தடி உயரத்தில் ஒல்லியான தேகம். எப்போதும் கடுகடுவென ஏதோ கோபம் தாங்கிய முகம். இதுதான் அந்தப் பாட்டி. மந்தைவெளி நாலாவது சந்தில் லேன்ட்ஸ்கேப் வகையில் நீள்செவ்வகமாய் வீடு. ஒற்றை ஒற்றையாய் அருகருகே இரண்டு தீப்பெட்டி அறைகள். இரண்டு அறைகளுக்கும் இணைப்பு இல்லாது வெளிப்புறத்தில் வாசல். வீட்டிற்குப் பின்புறம் குளியல் மற்றும் கழிப்பறைகள், முன் பக்கமாக எதற்கும் உதவாத சில செடி, மரங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அந்தப் பாட்டியின் அறுநூறு சதுர அடியில் அமைந்த அந்த அரண்மனை. பக்கத்தில் அதேபோன்ற செட்டப்பில் அமைந்த இன்னொரு வீட்டில் இவருடன் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்த அவருடைய மகன், மருமகள் பேத்திகளுடன் இருக்க, இந்த வீட்டில் தன் மகள், மருமகனும், முருகன் பெயர் தாங்கிய மூன்று பேரன்களும் (செந்தில், சரவணன், கார்த்திக் என்று நினைவு) என பாட்டி இருந்தார்.

அந்தப் பாட்டியை அந்த மந்தைவெளி நாலாவது சந்தினில் யாருக்கும் பிடிக்காது. அவர் காட்டும் ரௌத்ரத்திற்காய் அந்த ஒட்டுமொத்த மந்தைவெளியிலேயே கூட அவர் மிகப் பிரபலம்தான். இது மயிலாப்பூர் மந்தைவெளி அல்ல; வடசென்னையின் மாதவரத்தில் ஹைஸ்கூலுக்கு எதிர்வாடையில் வரிசையாக ஒன்று இரண்டு என ஐந்தாறு சந்துகள் கொண்ட மந்தைவெளி ஏரியா. வடசென்னையின் கீழ்நடுத்தர வர்க்க (lower  middle  class ) மக்களின் கூட்டத்தை தரிசிக்க நீங்கள் இங்கே ஒருமுறை சென்று வரலாம்.

மாதவர மந்தைவெளியில் குடிபுக உங்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்கவேணும். ஆட்டோ ஓட்டும் அண்ணன்கள், தம்பு செட்டித் தெருவில் லுங்கி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள்,
கல்பனா லேம்ப் கம்பெனியில் ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்கள், சிம்சன் கம்பெனிக்காரர்கள், தபால்பெட்டி ஸ்ரீனிவாசா லெதர் கம்பெனி டேனரியில் வேலை பார்ப்பவர்கள், பின்னி மில்லில் வேலை இழந்தவர்கள், 48A, 38F என்று மாதவரத்தில் ஓடும் ஏதேனும் ஒரு பஸ் கண்டக்டர் டிரைவர்கள், மாதவரம் அப்போது சாராய சாம்ராஜ்யத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் அங்கேயே காய்ச்சி விற்ற குடும்பங்கள் என கைக்கும் வாய்க்கும் போதியும் போதாமலும் சம்பாத்தியத்தில் உழன்று கொண்டிருந்த குடும்பங்கள் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கவேணும் நீங்கள் என்பதுவே அந்தத் தகுதி.

சரி பாட்டி கதைக்கு வரலாம். பாட்டிக்கு வாயைத் திறந்தால் வண்டை வண்டையாக வார்த்தைகள் வந்து விழும். பாஸ் என்கிற பாஸ்கரனில் சந்தானம் சொல்லும் “கய்வீ கய்வீ ஊத்தும்” மூன்றாந்தர கெட்ட வசவுகளை எல்லாம் பாட்டி வாயால் சர்வசாதாரணமாகக் கேட்கலாம். பெரும்பாலும் அந்தப் பக்கத்து வீட்டில் வசித்த சிதம்பரத்தின் அம்மா பற்றினவை ஏதும் அந்த வசவுகளில் இருக்கும் அல்லது இந்தப்பக்கம் வசித்த மருமகள் புராணம் இருக்கும். இரண்டும் இல்லையென்றால் யாரேனும் விபரம் தெரியாமல் வம்புக்கு வந்து பாட்டியின் வாயைப் பிடுங்கி அர்ச்சனை வாங்கிச் செல்பவர்கள் என கெட்ட வார்த்தையின் ஒட்டுமொத்தக் கூடாரமாக இருக்கும் அந்தப் பகுதியே.

எங்கள் வீட்டில் அம்மாவும், படிக்கும் வயதில் இருந்த அக்காவும் அண்ணனும்  வேலைக்குப் போய்க்கொண்டு என்னை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது. அம்மாவுக்கும் அக்காவுக்கும் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை. அண்ணனுக்கு பாரீஸ் கோடவுன் தெருவில் துணிக்கடையில் வேலை. எல்லோருடைய சம்பளத்தையும் சேர்த்தாலும் கூட அது ஆயிரத்தை நெருங்காது. அசிஸ்டண்ட் மேனேஜர் உத்தியோகம், அனகாபுத்தூரில் வீடு என்பது எல்லாம் ஏதோ இப்போதுதான். ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்கு யார் வீட்டிலாவது ரேஷன் கார்டையும் அந்த அரிசி வாங்க வேறு யாரிடமாவது காசையும் எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் அது. இரண்டையும் ஒரே வீட்டில் கேட்பது சரியாகாது அல்லவா?

வாழ்க்கையில் சந்திக்கக்கூடாத சில சுனாமித் தாக்குதல்களை சந்தித்து நானும் மீண்டும் எழுந்து நிற்பேன், என் பிள்ளைகளும் பெரிய நிலைக்கு ஆளாவார்கள் என்ற நம்பிக்கையை மனசில் வைத்துக்கொண்டு எப்போதும் ஒரு இருகிய முகத்துடன் வேலைக்குப் போய்வந்த வண்ணம் இருப்பார் என் அம்மா. அந்தப் பெருநம்பிக்கை இருந்த அதே மனதில்தான் அன்றாட ஜீவனத்திற்கே இழுத்துக்கோ புடிச்சிக்கோ என்றிருந்த நிலைமையின் கஷ்ட சிந்தனைகளும் தேங்கியிருந்தன. அந்தத் தேக்கங்களில் வழிசல்களும் அந்த இருகிய முகத்தினில் அப்பட்டமாய்த் தெறிக்கும்.

ஒருநாள் வேலையிலிருந்து திரும்பும் வழியில் அந்தப் பாட்டி அம்மாவை வழி மறித்திருக்கிறார்,

”உன்னை நான் ரொம்ப நாளா பாக்கறேன். நீயும் உன் புள்ளீங்க ரெண்டும் ஏதோ போறீங்க வர்றீங்க. சின்னவன் இஸ்கூல்ல படிக்கறான் போலிருக்கு. உனுக்கு ஏதோ பெரிய கஷ்டம் மட்டும் இருக்குது. அது இன்னானு சொல்லு என்னாண்ட”, என்பதுதான் அவர் அன்று அம்மாவிடம் கேட்ட கேள்விகளின் சாராம்சம்.

திடீரென்று பரிச்சயமில்லாத ஒரு கிழவியிடம் என்னத்தை சொல்வது? அம்மா பெரிதாய் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. எனினும் அந்தப் பாட்டியும் விடுவதாய் இல்லை. அடுத்தடுத்த நாள்களில் அதேபோல் அம்மாவை வழியில் நிறுத்திப் பேசிப்பேசி என்ன கஷ்டம் என்பதை கேட்டு அறிந்து.....

“வயசுப் பொண்ணை வெச்சுட்ருக்க, சாப்பாட்டுக்கே கஷ்டோன்ற, இந்தா ரேஷன் கார்டு, இந்தா பைசா, உன் பையனாண்ட குட்த்து அரிசி வாங்கியாற சொல்லு. உன்னால எப்போ முடியுதோ அப்போ துட்டு திருப்பிக்குடு”

நம் கஷ்டத்தை வாய் திறந்து சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் காதுகள் அற்ற சூழலில் இந்த உலகம் இருக்கும்போது, தானே முன்வந்து உதவிய அந்தப் பாட்டியொன்றும் மல்ட்டி மில்லியனர் அல்ல. அவர் மருமகன் மாவு அரைவை மில்லில் வேலை செய்து மாலையில் சம்பாதித்ததைக் கொண்டு வந்து தந்தால் அதில் அன்றிரவும் மறுநாளும் பொங்கித் தின்று வாழ்ந்து வந்த ஒரு அன்னாடங்காய்ச்சிதான். 

ஜெயமோகன் எழுதிய சோற்றுக் கணக்கு படித்தபோது அதில் வந்த கெத்தேல் சாகிப் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களில் அந்தப் பாட்டியைத்தான் பார்த்தேன் நான். மாதந்தவறாமல் முதல் பத்து நாள்களுக்குள் என்னை அழைப்பார். 

“டேய் கிரி! இன்னாடா சின்னப் புள்ளீங்களோட வெள்ளாண்டுனுருக்க? வா, போயி ரேசன்ல அரிசி வாங்கியா”, பை, கார்டு, பணம் மூன்றும் என் கைபுகும். கிட்டத்தட்ட அடித்து உதைத்துத்தான் அரிசியை எங்கள் வீட்டிற்கு வாங்க வைத்து அனுப்பி வைப்பார்.

நாங்கள் எல்லாம் ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை அந்தப் பாட்டியின் தயவில்தான் எங்கள் வீட்டில் உலை கொதித்தது என்றால் அது மிகையில்லை. இந்த சர்வதேச மகளிர் தினத்தினில் என் வயிற்றுப் பசி துடைக்க என்றோ ஒருநாள் உதவிய அந்தப் பாட்டியை நினைத்துக் கொள்கிறேன். 

இப்போது அந்தப் பாட்டி உயிருடன் இல்லை. அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று இப்போது நான் யோசித்துக் கொள்கிறேன். அந்தப் பாட்டியிடமும் அவர் பெயரை என்றுமே நாங்கள் கேட்டதில்லை. 

அப்படி ஏதும் அவருக்குப் பெயர் என்று ஒன்று இருந்திருந்தால் அது அன்னை தெரசா என்று இருந்திருக்கலாம் என நான் நினைத்துக் கொள்கிறேன். இல்லைடா பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னை’டா அவங்க என்பார் அம்மா.

Related Posts Plugin for WordPress, Blogger...