Jan 31, 2010

குஷ்பு

குடியரசு தினத்தையொட்டி திரு.H.வைத்யா அவர்கள், அவர் வலைமனையில் நடிகை குஷ்புவிற்கு எந்த ஆண்டு இந்தியா ஜனநாயக நாடாக மலர்ந்தது என்ற தகவலே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதுவே என் இந்த இடுகைக்கு தூண்டுகோல்..

ஆப்கானிஸ்தானிய அம்மாவுக்கும் பாகிஸ்தானிய அப்பாவுக்கும் பிறந்து, இந்தியரில் ஒருவர்களாய் தம்மை ஒப்புக்கொள்ள மறுக்கும் MNS, சிவசேனா புகழ் மும்பையில் வளர்ந்த குஷ்புவிடம் நாம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் குஷ்புவின் இந்திய வரலாற்று ஞானம் கண்டிக்கத்தக்கது.

Jan 30, 2010

மகாத்மாவும் மாவீரமும்

மகாத்மா குறித்து நான் புதியதாய் எழுத ஏதுமில்லை.  இந்திய வரலாற்றில் போதுமான அளவிற்கும் அதிகமாய் ஆராதிக்கப் பட்டவரும், அர்ச்சிக்கப் பட்டவரும் அவராகத்தான் இருக்க இயலும். ஜெயமோகன் அவர்கள் காந்தி குறித்த சிந்தனைகளாக எழுதியவற்றில் இக்கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. (வெறுப்புடன் உரையாடுதல்)


Jan 28, 2010

ஒரு தற்காலிகப் பிரிவு..











இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன. அவள் அம்மா வீடு நான்கு கிலோமீட்டர் தொலைவுதான், எனினும் திருமணமான இந்த இரண்டரை வருடங்களில் நாங்கள் பார்க்காதது இந்தப் பிரிவு.

இதயத்தில் கனம் சேர்த்தவாரே நகர்கின்றன நாட்கள். கல்யாணமான புதிதில் அவள் சுமந்து வந்த சூட்கேசை தூசி தட்டிக் கீழே இறக்கித்தருகிறேன், அவள் துணிமணிகள் உள்ளே போகின்றன. அவள் மருந்து மாத்திரைகளும், வாக்மேனும், கேசட்டுகளும், சார்ஜரும்,பேட்டரிகளும் என ஒவ்வொன்றாய் அவள் கைப்பைக்குள் குதிக்கின்றன. ஏதோ பேச்சு ஆரம்பித்து, எதையோ பேசி அவளின்றி இருக்கப்போகும் எங்கள் அறையின் அந்தத் தற்காலிக வெறுமை குறித்து எண்ணி வெடித்து அழுகிறேன் நான். என் அழுகை கண்டுஅவளும் தேம்பித் தேம்பி அழ.... கண்ணீரில் கரைகிறது இரவு.


காலை எழுந்தவுடன் நானா அழுதேன் என எனக்கே வெட்கமாயிருக்கிறது. "ஏய்! அது முதலைக் கண்ணீர்தானே?" என என்னைசீண்டுகிறாள். "நீ மட்டும் என்னவாம், அது நீலிக் கண்ணீர்", என்கிறேன் நான். அழுகையில் லேசாய்க் குறைந்த இதயக் கனத்துடன் இன்னொரு நாளும் போயிற்று. நாளை புறப்பட வேண்டும்.... இரவில் தூக்கமின்றிப் புரள்கிறோம் இருவரும். "என்ன, தூக்கம் வரலையா,என்ன ஆச்சு?", என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு, "ஒண்ணுமில்லை, நீ தூங்கு" என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு ஒருவாறு தூங்குகிறோம்.

அவள் புறப்படுவதை எண்ணி சோகம் கப்பியது போல் விடிகிறது வானம். எழுந்தது முதல் ஏனோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்ப்பதை  தவிர்க்கிறோம். பார்க்க நேர்ந்தால், அதே கேள்வி, "போகப்போறியா?", அதே பதில், "போகணுமா?".  விருப்பமே இன்றி ஒவ்வொரு வேலையும் நடக்கிறது. "சித்தி! பாப்பாவோடதான் இந்த வீட்டுக்கு வருவியா?", கேட்கிறாள் எல்லாம் தெரிந்த சஹானா.

திடீரென என் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வண்ணம் சடசடவென மழை. தை மாத மத்தியில்  நான் பார்க்கும் முதல்மழை. "ஏய், பாரேன் உன் ஆறுமாதப் பிரிவை நினைத்து அந்த வானம் அழுது", என்கிறேன். "டேய், மழை ரொம்ப நல்ல சகுனம்டா,மதரோட கிரேஸ் அவளுக்கு அருள் மழையா பொழியுது", இது அம்மா.

அவள் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள். இதய கனம் இன்னமும் கூடுகிறது. தட்டுகளும், பழங்களும், பூக்களும், வெற்றிலைபாக்குக்களும் இங்கும் அங்கும் கைமாறுகின்றன. "அத்தைக்கு நமஸ்காரம் பண்ணிக்கோ", இந்தாங்கோ காபி சாப்பிடுங்கோ, இதுதான்நீங்க வாங்கின புது கம்ப்யூட்டரா?" என ஏதேதோ பேச்சுக்கள் பின்னணியில் கேட்கின்றன.  திடீரென புறப்பட்டேவிட்டாள். நான் வீட்டிற்குவெளியே சென்று அவளை வழியனுப்பக் கூடாதாம். அதுதான் முறையாம். என்னக்கொடுமை சட்டம் சார் இது. படியிறங்குகையில்,அவள் திரும்பிப் பார்க்காவிடிலும் அவள் கண்களில் திரண்டுவரும் கண்ணீர் எனக்குத் தெரிகிறது. அவள் திரும்பிப் பார்க்கவா பார்க்கவா என தடுமாறியவாறே லேசான தள்ளாட்டத்துடன் இறங்குகிறாள்.ஆட்டோ புறப்படும் சத்தம் எனக்கு உச்ச டெசிபலில் கேட்கிறது.

"ஆட்டோ பஸ் ஸ்டாப்பை கடந்திருக்குமோ, இப்போ மூலக்கடையைக் கடந்திருப்பார்களோ, நிதானமா ஓட்டுவானா?" என ஆட்டோவின்பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது மனம். "அம்மா, இப்போ போன் பண்ணி பேசலாமா?" "இருடா அவங்க வீடு போய் போன்பண்ணட்டும்". இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓட, எனக்குத் தாங்கவில்லை, தொலைபேசியை எடுத்து அவளை அழைக்கிறேன். அவள் அப்பாஎடுக்கிறார்.




"சொல்லுங்க மாப்பிள்ளை",
"அப்புறம் மாமா, எங்க இருக்கீங்க",
"லக்ஷ்மியம்மன் கோவில் கிட்ட இருக்கோம்",
"ஓஹ்! சரி, ஷைலஜா எப்படி இருக்கா?",
"இதோ இருங்க", கைபேசி கை மாறுகிறது. அழுது வெடிக்கப்போகிறாள் நாம்தான் நிதானமாகப் பேசவேண்டும் என நான் எண்ணுகையில்,எதிர்த் திசையிலிருந்து உற்சாகமாய் வருகிறது குரல். "ஆங், சொல்லுங்க!"
"எப்படிம்மா இருக்க", அடடா என் குரல் ஏன் இப்படி விவேக் குரல் போல போகிறது?
"நான் நல்லாதான் இருக்கேன், இப்போதானே பொறப்பட்டேன் அங்கருந்து, அதேமாதிரிதான் இருக்கேன், அது சரி, பீரோவ பூட்டியாச்சா?",வந்து விழுந்தது முதற்கேள்வி.
"ஆம், பண்ணிட்டேன்",
"சாவிய எங்க வெச்சீங்க", இது கேள்வி நம்பர் ரெண்டு.
"வெச்சிட்டேன்",
"வெச்சிட்டேன்னா, எங்க வேச்சீங்கன்னு கேட்டேன்", மூன்று...
"உள்ளே வெச்சிட்டேன்"
"உள்ளே எங்க"..நான்கு... அதட்டல் தொடர்கிறது....

அடிப்பாவி, அப்பா அம்மா கூட ஒக்காந்ததும் அப்பிடியே மாறிட்டியேம்மா!

"குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எஜமான் குத்துங்க" என என் வலது கையால் நானே என்நெஞ்சைக் குத்திக்கொள்கிறேன்.

Jan 26, 2010

நாணயம் - திரைவிமரிசனம்

படம் அப்படி ஒன்றும் பரபரப்பாய்த் தொடங்கவில்லை. டிரஸ்ட் வங்கியின் செக்யூரிட்டி/பாதிகாப்பு வடிவமைப்பின் மூளையான பிரசன்னா, அவரது சொந்த பிசினெஸ் செய்யும் கனவு, அதற்கு கடன் தர ஒப்புக்கொண்டு காலம் தள்ளும் அதே வங்கியின் தலைமை அதிகாரி எஸ்.பி.பி. என கதை தொடங்குகிறது. முன் கதைசுருக்கமாக ஒரு இக்கட்டான சூழலில் எஸ்.பி.பி.க்கு உதவியதன் மூலம் வங்கியில் வேலை பெறுகிறார் பிரசன்னா.

Jan 24, 2010

சென்னை செந்தமிழ்

நான் சென்னை வந்து சேர்ந்து இருபது வருடங்கள் ஆகிறது. வந்த புதிதில் நாங்கள் குடியிருந்தது ஒரு typical வடசென்னை ஒண்டு குடித்தன கலாட்டா கும்பலுக்கு இடையே. ஐந்து குடும்பங்கள், இருபத்தைந்து மனிதர்கள், எல்லோர்க்கும் பொதுவாய் ஒரு கிணற்றடி, ஒரு குளியலறை, ஒரு கழிவறை. சரி, விஷயம் அதுவல்ல....

வடசென்னை மனிதர்கள் வெளிப்பார்வைக்கும் அவர்களது செய்கைக்கும் பார்த்தால், பொதுவாக ஒருமாதிரி முரட்டுத்தனமானவர்கள். ஆனால் பழகிய பின்தான் புரியும் அவர்கள் எந்த சூழலிலும் உங்களை விட்டுக்கொடுக்காது உங்களுக்கு உதவ வரும் மிகமிக இளகிய மனது கொண்டவர்கள். அதற்குமுன் நான் விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் வளர்ந்தவன். விழுப்புர சுற்று வட்டாரங்களில் பேசப்படும் தமிழ் எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கலப்பும் இல்லாத, வட்டாரமயமாகாத ஒரு பொதுத்தமிழ். வந்த புதிதில் சென்னைத் தமிழை உள்வாங்க நான் சற்றே மூச்சு வாங்கினேன்.

Jan 23, 2010

சே...! என்ன ஒரு சிந்தனை?

 என்னைப் போன்ற மக்குகள் அவதார் படத்தை வாயைப் பிளந்து பார்க்கையில், அதெல்லாம் குப்பைங்க அப்பு என்று சொல்லும் ஆட்களும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நம்ம celebrity எழுத்தாளர் "ஷோபா டே". அவர் கட்டுரையில் அவர் கடைசியாய் சொல்லும் விஷயத்தைப் பாருங்கள். அவதார் நாயகனும் நாயகியும் சம்பந்தப்பட்ட அந்த முத்தமும் முகர்தலும் வீண் என்கிறார் ஷோபா. அவர்கள் இருவரும் ஏன் தங்கள் வாலோடு வாலை இணைத்துப் புணர்ந்திருக்கக் கூடாது என்பது ஷோபாவின் கேள்வி. நியாயந்தானே சார்?

Excerpts from Shobhaa De
About 'Avatar' - excuse me for saying this and shattering several illusions - it is no better\worse than any cheesy formulaic commercial desi film. Take away the special effects and huge budget - what do you have? Yet another soppy love story with zero depth . The only thing missing was a rain dance. I also found it condescending and racist, offensive and bigoted. The 'superior' but exploitative white man Vs the nature worshipping natives who are so 'pure' and ... and.... primitive! Good fighting evil...come on, Cameron.... we do it better in India. At one hundreth the cost, too. The dialogues were a joke , rarely going beyond, " Holy shit! Let's go! Let's go. Go. Go. Go!" If it was Cameron's way of sending out some sort of an eco-friendly message via those weirdly conceptualised blue 'savages', I didn't get it. Rather, the package was so obvious and naive, it certainly didn't justify that indecent budget, which, if better employed might have saved many more forests. As for that clumsy kiss between Jake and the blue chick - help me, while I gag. Couldn't the two have just touched tails and connected as they'd been doing all along with those banshees and other bizarre creatures?
Not worth the 3-D glasses - mind it!

இது தேவையா?

இப்போதைக்கு இந்தப் பதிவு தேவையில்லை என்பதால் நீக்கியிருக்கிறேன்.

Jan 22, 2010

facebook - RSS feed வழியாக


உங்க ஆபீஸ்ல facebook உபயோகிக்க தடா'வா? அப்போ நீங்க feed வழியா facebook அப்டேட் எல்லாம் படிக்கலாம்.

எப்படி? கீழே குடுத்திருக்கறதை படிங்க....அப்படி....!!



You have to subscribe to three or four different feeds.
  1. Posts: Find the Posts feed by going to http://www.facebook.com/posted.php. On the upper right of the page is a gray box, and at the bottom of that box is a link entitled "My Friends' Links" with the RSS logo next to it. Copy that URL. Subscribe to it in your feed reader. This is the RSS URL for any links and (external) images that your friends post.
  2. Notes: Find the Notes feed by going to http://www.facebook.com/notes.php and repeating the above. This is the RSS URL for things that your friends post via the "Notes" app, which is (I guess) the more blog-like way of posting long things to Facebook.
  3. Notifications: Find the Notifications feed by going to http://www.facebook.com/notifications.phpand repeating the above. This is the RSS URL for things like "so-and-so commented on your status". You might not care to subscribe to this one because you can get all of these kind of notifications in email.
  4. Status Updates: This is the RSS URL for the "What are you doing?" Twitter-like part of Facebook. This is the one you probably care about, and it is trickier, because Facebook no longer links to the feed URL! Nice one guys. You have to construct this URL by editing one of the above URLs. E.g., take the "Notes" URL and change the part of the URL that says"friends_notes" to "friends_status". Keep the parts of the URL before and after that, including the magic numbers at the end.


நன்றி: http://jwz.livejournal.com/1144527.html

அறிவியல், ஆச்சர்யம், அட்டைப்பூச்சி!!

சமீபத்தில் வால்பாறை சென்று வந்த என் நண்பர்கள் கொண்டு வந்த அனுபவம் என் புருவங்களை உயர்த்தச் செய்ததுஅவர்கள் அனுபவம் என்று சொல்வதைவிடஅனுபவத்தில் கொண்டு வந்த செய்தி எனலாம்.

காரில் பயணம் செய்த மூவரில் இருவர் அட்டையின் (Leech) கடிக்கு இலக்காகி ரத்தம் சொட்ட சொட்ட நனைந்த கால்களுடன் காருக்கு வெளியே குதித்து, சூழ்நிலை முழுவதும் புரிந்து இது அட்டைக் கடித்தான் என்று அவர்கள் உணர சற்று நேரம் பிடித்திருக்கிறது. கடித்த அட்டைப்பூச்சிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் காரில் சீட்டுக்கு அடியில் கண்டு பிடித்தார்கள். இன்னொன்று பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இருவருக்குமே நிற்காமல் கால்களில் ரத்தம் வடிந்ததே தவிர, கொஞ்சமும் வலி இல்லை.

Jan 17, 2010

பேச்சைக் குறைங்கடா டேய்...!!


காலையில்தான் சொன்னார் நம்ம 'ஒரு மேட்ச் கேப்டன்' சேவாக், "பங்களாதேஷ் எல்லாம் ஒரு கிரிக்கெட் டீமா? அவிங்களுக்கு இருபது விக்கெட்டையும் சாய்க்கிற தெறமையெல்லாம் கெடயாது.... டெஸ்டு மாட்சுல நாங்கதேன் பெஸ்டுன்னு..."

சரி காலைல பேட்டு புடிக்க ஆரம்பிச்ச கொழந்தைங்க ஒரு நானூறு ரன்னு எடுத்துருப்பாங்கன்னு பாத்தா... அடப்பாவி மக்கா! இருநூத்து சில்லற ரன்னுக்கு எட்டு விக்கெட்டு சாச்சுப்ட்டானுங்கப்பா அந்த வங்காளதேசப் பாவிங்க.

பேச்சக் கொறைங்கடா கொறைங்கடான்னு சொன்னா எங்க கேக்கறானுங்க நம்ம பசங்க.

Jan 16, 2010

சீனாவும் கூகுளும்


உலகமே இந்த விஷயத்தப்பத்திக் கதைக்கும் போது, நான் மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்? இதோ என் பங்குக்கு.....

சீனாவின் (அல்லது சைனாவின்) கூகிள் விஷய அலம்பல்கள் குறித்த விவாதங்கள், கேள்விகள், விசாரிப்புகள் உலகெங்கும் பலவண்ணமாய் இருக்கிறது. அமெரிக்கா கிடைத்த வாய்ப்பை சரியாய்ப் பயன்படுத்தும் விதமாய் எகிறுகிறது. கம்யூனிசத்தின் எதிர் வீட்டுக்காரர்கள் ஏதோ கூகிள் சீனாவை விட்டு வெளியேறினால் அடுத்த நொடி சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும், சீனாவின் முன்னேற்றம் எல்லா அளவிலும் தடைப்பட்டு அது ஒரு அடங்கின ஒடுங்கின நாடாகிவிடும் என்கிற அளவிற்கு கற்பனா விவாதங்கள் புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதில் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கூகுளுக்கு முன்னாலும் சீனா இருந்தது, கூகிள் வந்த பின்னும் இருந்தது, கூகிள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும் சரி, மண்ணோடு மண்ணாகி மட்கிப் போனாலும் சரி சீனா இருக்கும். மாமியார் ஒடச்சா மண்குடம், மருமக ஒடச்சா பொன்குடம் என்ற கதையாய், தனக்கு கொஞ்சமும் ஒத்து வராத நாட்டிலிருந்துதான் கூகிள் வெளிவரப் பார்க்கிறது. இதே போன்றதொரு விஷயம் இந்திய விஷயத்தில் நடந்திருந்தால் அதில் அவர்களின் நடவடிக்கையை நாம் பார்த்திருக்க வேண்டும்.

சரி சரி... நான் இதுக்கு மேலே எழுத விரும்பலை. சீனா போற வாய்ப்பு நமக்கு இல்லாம போனாலும், நாளபின்ன கூகிள்-ல வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இத்தோட நிறுத்திக்கறேன்.

Jan 12, 2010

வரையறைகளை மாற்றும்போது...




யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் எனக்குப் பிடிப்பதில்லை...! இந்த மனுஷன் கம்போஸ் பண்றதோட நிறுத்தக் கூடாதா? பாடி வேற தொலைக்கணுமா எனத் தோன்றும்.

இந்த ரீமிக்ஸ் செய்யப்படும் பாடல்களின் ஜிம்மிக்ஸ்கள் எனக்கு ஆர்வமூட்டுவதில்லை, எரிச்சலே தருகின்றன.

புதுசு புதுசா பாடறாங்க, யாரு என்னன்னே தெரியலை எனக்கு. SPB-யின் குரலையும், K.J.யேசுதாசின் குரலையும் அவர்கள் உச்சரிக்கும் இரண்டாவது வார்த்தையிலேயே கண்டறிய முடிகிறது.

தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா யாரேனும் ஒருவராவது பார்க்க லட்சணமாக இருக்கிறார்களா என்ன?

இவ்வாறாக, அலுவலகத்திற்கு செல்கையில் காரில் முன் அமர்ந்தவாறு பேசிச் செல்கிறேன் நான்.

பின்னாலிருந்து ஒரு இருபத்தைந்தின் குரல் கேட்கிறது, "சார், உங்களுக்கு வயசாயிடுச்சி சார்".

ஓ! நமக்கு முப்பது தாண்டிடுச்சா?

Jan 10, 2010

படிக்காமல் கிழித்தது....

இடம்: சென்னை புத்தக கண்காட்சி.
காட்சி: குப்பை, கூளம்


இதுக்கெல்லாம் யார் சார் பொறுப்பு?

அரசாங்கமா?
மாநகராட்சியா?
இந்த கண்காட்சி அமைப்பாளர்களா?
இல்ல இந்த குப்பையை போற வர்றவங்க கைல திணிக்கிற ஆட்களா?              
இல்ல அத படிச்சும் படிக்காமலும் எல்லா எடத்துலயும் சிதறடிச்சி, இடத்தை குப்பை கூளமாக்கற நானும் நீங்களுமா?

அடிப்போளி


இப்படி ஒரு ஸ்கோர் கார்டு பார்த்திருக்கிறீர்களா?


Colts Cricket Club Women won by 9 wickets (with 105 balls remaining)
Moratuwa Sports Club Women innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalAP Silvalbw b Prabodhani02000.00
View dismissalCHMP Buddinib Prabodhani390033.33
View dismissalCN Weerakkodyb Prabodhani03000.00
View dismissalMA Maduwanthib Prabodhani4101040.00
View dismissalPCK Peirisc SS Weerakkody b Prabodhani013000.00
MEP Salgadu*not out014000.00
View dismissalDS Gankandalbw b Prabodhani01000.00
View dismissalGPP Pushpakanthib Prabodhani02000.00
View dismissalKN Sewwandic Dolawatte b Kariyawasam03000.00
ULHL Pererac Samuddika b Dolawatte04000.00
View dismissalKS Sewwandic Perera b Dolawatte02000.00
Extras(b 2, lb 1, w 7)10
Total(all out; 10.3 overs)17(1.61 runs per over)
Fall of wickets1-0 (Silva, 0.2 ov)2-0 (Weerakkody, 0.5 ov)3-6 (Buddini, 2.5 ov)4-12 (Maduwanthi, 4.5 ov),5-13 (Peiris, 6.3 ov)
6-14 (Gankanda, 6.4 ov)7-14 (Pushpakanthi, 6.6 ov)8-16 (KN Sewwandi, 8.3 ov),9-17 (Perera, 10.1 ov)10-17 (KS Sewwandi, 10.3 ov)
BowlingOMRWEcon
View wicketsKDU Prabodhani42571.25(1w)
SS Weerakkody42601.50(2w)
View wicketGL Kariyawasam10313.00(3w)
CR Seneviratna11000.00
View wicketsSK Dolawatte0.30020.00
Colts Cricket Club Women innings (target: 18 runs from 20 overs)RB4s6sSR
WHD Fernandonot out570071.42
View dismissalCR Seneviratnab Buddini140025.00
GL Kariyawasamnot out11420275.00
Extras(w 2)2
Total(1 wicket; 2.3 overs)19(7.60 runs per over)
Did not bat HAS PereraKDU PrabodhaniSK Dolawatte*HM SamuddikaD DedunuDMAP Chandrasiri,KS WeerakkodySS Weerakkody
Fall of wickets1-6 (Seneviratna, 1.3 ov)
BowlingOMRWEcon
PCK Peiris1.3015010.00(1w)
View wicketCHMP Buddini10414.00(1w)
Match details
Toss Moratuwa Sports Club Women, who chose to bat
Points Colts Cricket Club Women 5, Moratuwa Sports Club Women 0
Umpires DMS Dissanayake and ND Withana
Match referee D Samarasekera
Related Posts Plugin for WordPress, Blogger...