Jan 26, 2010

நாணயம் - திரைவிமரிசனம்

படம் அப்படி ஒன்றும் பரபரப்பாய்த் தொடங்கவில்லை. டிரஸ்ட் வங்கியின் செக்யூரிட்டி/பாதிகாப்பு வடிவமைப்பின் மூளையான பிரசன்னா, அவரது சொந்த பிசினெஸ் செய்யும் கனவு, அதற்கு கடன் தர ஒப்புக்கொண்டு காலம் தள்ளும் அதே வங்கியின் தலைமை அதிகாரி எஸ்.பி.பி. என கதை தொடங்குகிறது. முன் கதைசுருக்கமாக ஒரு இக்கட்டான சூழலில் எஸ்.பி.பி.க்கு உதவியதன் மூலம் வங்கியில் வேலை பெறுகிறார் பிரசன்னா.



ரம்யா ராஜை திடீரென சந்திக்கிறார் பிரசன்னா, உடனே காதல்.  ரம்யாவின் முன்னாள் கணவர் வருகிறார், சாகிறார். பழியை பிரசன்னா மேல் போட தடாலடியாக உள்ளே நுழைகிறார் சிபிராஜ். கதையில் லேசாய் சுவாரசியம் சேர்கிறது. பிரசன்னாவின் வங்கியை பிரசன்னாவையே வைத்து கொள்ளையடிக்க பிளாக்மெயில் செய்கிறார் சிபி. கதை அங்கே இங்கே எனச்சுற்றி கிளைமாக்சில் வங்கிக் கொள்ளை அரங்கேறி, ஆளாளுக்கு அடித்துக் கொண்டு, யார் செத்து யார் பிழைத்து, யார் யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்குப் பின்னால் என்ற எதிர்பார்த்த விதமாய் எதிர்பாராத முடிச்சுகளை அவிழ்த்து படம் நிறைகிறது.

சிபிராஜின் அலட்டலான நடிப்பு (welcome back சிபி), பிரசன்னாவின் வழக்கம்போல் இயல்பான நடிப்பு, ஜேம்ஸ் வசந்தனின் "நான் போகிறேன்" பாடல், தெளிவான ஒளிப்பதிவு, பின்னணி இசை (தமன்),  லோகு பாத்திரத்தில் வரும் அந்த தாட்டியான நபர் என படத்தில் நிறைய பிளஸ்கள் உள்ளன.



ஆரம்பத் தொய்வு மற்றும் படத்தின் வேகத்தைக் குறைக்கும் பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் நாணயம் ஒரு நிறைவான படமே.


நாணயம்: பார்க்கலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...