Jan 12, 2010

வரையறைகளை மாற்றும்போது...




யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் எனக்குப் பிடிப்பதில்லை...! இந்த மனுஷன் கம்போஸ் பண்றதோட நிறுத்தக் கூடாதா? பாடி வேற தொலைக்கணுமா எனத் தோன்றும்.

இந்த ரீமிக்ஸ் செய்யப்படும் பாடல்களின் ஜிம்மிக்ஸ்கள் எனக்கு ஆர்வமூட்டுவதில்லை, எரிச்சலே தருகின்றன.

புதுசு புதுசா பாடறாங்க, யாரு என்னன்னே தெரியலை எனக்கு. SPB-யின் குரலையும், K.J.யேசுதாசின் குரலையும் அவர்கள் உச்சரிக்கும் இரண்டாவது வார்த்தையிலேயே கண்டறிய முடிகிறது.

தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா யாரேனும் ஒருவராவது பார்க்க லட்சணமாக இருக்கிறார்களா என்ன?

இவ்வாறாக, அலுவலகத்திற்கு செல்கையில் காரில் முன் அமர்ந்தவாறு பேசிச் செல்கிறேன் நான்.

பின்னாலிருந்து ஒரு இருபத்தைந்தின் குரல் கேட்கிறது, "சார், உங்களுக்கு வயசாயிடுச்சி சார்".

ஓ! நமக்கு முப்பது தாண்டிடுச்சா?

3 comments:

natbas said...

ஒரு நாப்பது என்கிற முறையில் எனது கருத்துகள் சற்றே மாறுபடுகின்றன. எந்த வகையில் என்றால், சமீபத்தில் நான் அழகிரிசாமி சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறபோது, ஒரு எழுபதைக் கடந்த வாலிபர், தமன்னாவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு போஸ்டரால் ஈர்க்கப்பட்டு தெரிந்தோ தெரியாமலோஅதில் முட்டிக் கொண்டு விட்டார். இதிலிருந்து வயது தமன்னாவை நிராகரிக்கவில்லை என்று விளங்குகிறது.

எனது பார்வையில் தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா போன்ற மாதரசிகள் இன்னமும் இலட்சனமாகத்தான் இருக்கிறார்கள்- ஆனால் என் குறை என்னவென்றால், எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் (எங்களைப் போன்றவர்கள்தான் இந்தக் குழப்பத்தைப் போக்கிக் கொள்ள, "தமன்னா, அசின், நயன்- இவர்களின் உதடை ஒப்பிடுக" என்று அரசுவைக் கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்).

தாங்கள் சொல்கிற குறிகளைக் காணும்போது உங்கள் வயதைக் குற்றம் சொல்லுவது அவ்வளவு சரியாகப் படவில்லை- தயவு செய்து ஒரு ent நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவில் யாரோ இரு சப்பானியர்கள் கைபேசி வைத்துக் கொண்டிருக்கிற புகைப்படத்தை சேர்த்திருப்பதன் உள்ளர்த்தம் என்ன? தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா- இவர்களின் புகைப்படத்தை சேர்த்திருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும், இல்லையா?

Giri Ramasubramanian said...

அந்த வயதான மனிதர்தான் நான், கையில் பழைய style-ல் புத்தகம் வைத்து வாசிக்கிறேன். அருகில் கைபேசியுடன் இருப்பவன் என்னைக் கிண்டல் செய்த அந்த இருபத்தைந்து. "வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் மாறுமே" என்ற பாடல் வரிகள்தான் இந்தப் பதிவை எழுத என்னைத் தூண்டியது.

Bhaski said...

Remixes are not good, I agree... but ippadi vaai koosaama Tamanna lakshanama illa nnu solriye... idhu unakke adukkuma.... Enna koduma Giri idhu!!!!!

Tamanna enna ma irukka... chey... ippadi solleettiye... enakku night thookkame varadhu po.... Watch "Happy Days".... adhula enna ma iruppa theriyuma.... Devadha da.... dei dei dei....

Related Posts Plugin for WordPress, Blogger...