Jan 28, 2010

ஒரு தற்காலிகப் பிரிவு..இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன. அவள் அம்மா வீடு நான்கு கிலோமீட்டர் தொலைவுதான், எனினும் திருமணமான இந்த இரண்டரை வருடங்களில் நாங்கள் பார்க்காதது இந்தப் பிரிவு.

இதயத்தில் கனம் சேர்த்தவாரே நகர்கின்றன நாட்கள். கல்யாணமான புதிதில் அவள் சுமந்து வந்த சூட்கேசை தூசி தட்டிக் கீழே இறக்கித்தருகிறேன், அவள் துணிமணிகள் உள்ளே போகின்றன. அவள் மருந்து மாத்திரைகளும், வாக்மேனும், கேசட்டுகளும், சார்ஜரும்,பேட்டரிகளும் என ஒவ்வொன்றாய் அவள் கைப்பைக்குள் குதிக்கின்றன. ஏதோ பேச்சு ஆரம்பித்து, எதையோ பேசி அவளின்றி இருக்கப்போகும் எங்கள் அறையின் அந்தத் தற்காலிக வெறுமை குறித்து எண்ணி வெடித்து அழுகிறேன் நான். என் அழுகை கண்டுஅவளும் தேம்பித் தேம்பி அழ.... கண்ணீரில் கரைகிறது இரவு.


காலை எழுந்தவுடன் நானா அழுதேன் என எனக்கே வெட்கமாயிருக்கிறது. "ஏய்! அது முதலைக் கண்ணீர்தானே?" என என்னைசீண்டுகிறாள். "நீ மட்டும் என்னவாம், அது நீலிக் கண்ணீர்", என்கிறேன் நான். அழுகையில் லேசாய்க் குறைந்த இதயக் கனத்துடன் இன்னொரு நாளும் போயிற்று. நாளை புறப்பட வேண்டும்.... இரவில் தூக்கமின்றிப் புரள்கிறோம் இருவரும். "என்ன, தூக்கம் வரலையா,என்ன ஆச்சு?", என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு, "ஒண்ணுமில்லை, நீ தூங்கு" என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு ஒருவாறு தூங்குகிறோம்.

அவள் புறப்படுவதை எண்ணி சோகம் கப்பியது போல் விடிகிறது வானம். எழுந்தது முதல் ஏனோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்ப்பதை  தவிர்க்கிறோம். பார்க்க நேர்ந்தால், அதே கேள்வி, "போகப்போறியா?", அதே பதில், "போகணுமா?".  விருப்பமே இன்றி ஒவ்வொரு வேலையும் நடக்கிறது. "சித்தி! பாப்பாவோடதான் இந்த வீட்டுக்கு வருவியா?", கேட்கிறாள் எல்லாம் தெரிந்த சஹானா.

திடீரென என் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வண்ணம் சடசடவென மழை. தை மாத மத்தியில்  நான் பார்க்கும் முதல்மழை. "ஏய், பாரேன் உன் ஆறுமாதப் பிரிவை நினைத்து அந்த வானம் அழுது", என்கிறேன். "டேய், மழை ரொம்ப நல்ல சகுனம்டா,மதரோட கிரேஸ் அவளுக்கு அருள் மழையா பொழியுது", இது அம்மா.

அவள் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள். இதய கனம் இன்னமும் கூடுகிறது. தட்டுகளும், பழங்களும், பூக்களும், வெற்றிலைபாக்குக்களும் இங்கும் அங்கும் கைமாறுகின்றன. "அத்தைக்கு நமஸ்காரம் பண்ணிக்கோ", இந்தாங்கோ காபி சாப்பிடுங்கோ, இதுதான்நீங்க வாங்கின புது கம்ப்யூட்டரா?" என ஏதேதோ பேச்சுக்கள் பின்னணியில் கேட்கின்றன.  திடீரென புறப்பட்டேவிட்டாள். நான் வீட்டிற்குவெளியே சென்று அவளை வழியனுப்பக் கூடாதாம். அதுதான் முறையாம். என்னக்கொடுமை சட்டம் சார் இது. படியிறங்குகையில்,அவள் திரும்பிப் பார்க்காவிடிலும் அவள் கண்களில் திரண்டுவரும் கண்ணீர் எனக்குத் தெரிகிறது. அவள் திரும்பிப் பார்க்கவா பார்க்கவா என தடுமாறியவாறே லேசான தள்ளாட்டத்துடன் இறங்குகிறாள்.ஆட்டோ புறப்படும் சத்தம் எனக்கு உச்ச டெசிபலில் கேட்கிறது.

"ஆட்டோ பஸ் ஸ்டாப்பை கடந்திருக்குமோ, இப்போ மூலக்கடையைக் கடந்திருப்பார்களோ, நிதானமா ஓட்டுவானா?" என ஆட்டோவின்பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது மனம். "அம்மா, இப்போ போன் பண்ணி பேசலாமா?" "இருடா அவங்க வீடு போய் போன்பண்ணட்டும்". இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓட, எனக்குத் தாங்கவில்லை, தொலைபேசியை எடுத்து அவளை அழைக்கிறேன். அவள் அப்பாஎடுக்கிறார்.
"சொல்லுங்க மாப்பிள்ளை",
"அப்புறம் மாமா, எங்க இருக்கீங்க",
"லக்ஷ்மியம்மன் கோவில் கிட்ட இருக்கோம்",
"ஓஹ்! சரி, ஷைலஜா எப்படி இருக்கா?",
"இதோ இருங்க", கைபேசி கை மாறுகிறது. அழுது வெடிக்கப்போகிறாள் நாம்தான் நிதானமாகப் பேசவேண்டும் என நான் எண்ணுகையில்,எதிர்த் திசையிலிருந்து உற்சாகமாய் வருகிறது குரல். "ஆங், சொல்லுங்க!"
"எப்படிம்மா இருக்க", அடடா என் குரல் ஏன் இப்படி விவேக் குரல் போல போகிறது?
"நான் நல்லாதான் இருக்கேன், இப்போதானே பொறப்பட்டேன் அங்கருந்து, அதேமாதிரிதான் இருக்கேன், அது சரி, பீரோவ பூட்டியாச்சா?",வந்து விழுந்தது முதற்கேள்வி.
"ஆம், பண்ணிட்டேன்",
"சாவிய எங்க வெச்சீங்க", இது கேள்வி நம்பர் ரெண்டு.
"வெச்சிட்டேன்",
"வெச்சிட்டேன்னா, எங்க வேச்சீங்கன்னு கேட்டேன்", மூன்று...
"உள்ளே வெச்சிட்டேன்"
"உள்ளே எங்க"..நான்கு... அதட்டல் தொடர்கிறது....

அடிப்பாவி, அப்பா அம்மா கூட ஒக்காந்ததும் அப்பிடியே மாறிட்டியேம்மா!

"குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எஜமான் குத்துங்க" என என் வலது கையால் நானே என்நெஞ்சைக் குத்திக்கொள்கிறேன்.

15 comments:

zzz... said...

enakku azhanum pola irukku-

(silly comment, but blog'la post'aa potta, enna maathiri kandavanellam padiccha, ippaditthaan comment pannuvom)-

aanaalum naalu kilometre'ukku over emotion- naangallaam naanooru kilometrukku appaala naadu kadatthittomille...

Suresh said...

super emotional kadhai.,
eppadipa unnaala mattum eppadi ellam mudiyudhu...................... thanga mudiyalada saaaaaaaaaaami.,
annathae yengayooooooo poita, 1 serious thing.,u have a very good writting talent too., why cant u develop this and try to write stories in magazines also.i feel proud to see ur writtings., good & i look forward a good writer from u soon.
aps

Ramanarayanan said...

over sentimentagathan theriyum...byt vasthavam..
giri...you have good writing/narrating skill..develop it man...

Raghu Bhaskar said...

naalu kilometre kku idhu konjam over dhaan.... Naan 15 days kku once Hyderabad ticket advance aa book panni vechirundhen.... Ava oru maasam Madras la enga veetula irukkum podhu vaara vaaram Bangalore to Chennai up and down ticket advance booking..... Hmmmm.....

Namma kitta irukkura varaikkum "Unga kooda ve irukken... .Amma veetukku pogala... aaachaa vochaaa" nnu solluvaainga... Amma veetukku ponadhum andhar balti adichiduvaanga..... namma peelingi a paathu comedy pannuvaanga...... Amma veedu Vikramaadhithyan simhasanam maadhiri, ange irukkuravaraikkum peeeling e varaadhu.... thirumba inga vandhappuram dhaan maarum....

But nee inime same peelings a expect panna mudiyaadhu raasa.... kolandha porandhaa totally ellam change aayidum... ekka chekka harmone changes.... marriage to 1st child birth is CHAPTER 1, after 1st child birth is CHAPTER 2, it will be totally totally different.... welcome to CHAPTER 2.

CHAPTER 3 eppadi irukkumo nnu edhir paathukittu irukken.....

Giri said...

Thanks three Bhaskars...

The Madras Baskar
The Neyvli Bashar
and
The US Bhaskar for your comments...

Also to Aps....

Raghu Bhaskar said...

In your list, the two Bhaskars are no more officially called Bhaskar. My official name is Raghu and Neyveli Bhaskar is officially known as RamNarayan (a) Ram.....

Giri said...

Dei,
rendu comments post panni (!) irukkiye, engayavadhu 'post' pathi edhuna post panniniya? DD mail ezhudhara kanakka, vala vala-nnu edho ezhudhara.... S of the I of the NS....

Shannmuha said...

முடிவு மிக அருமை, அதை விட அருமை உங்கள் புகைப்படம்

Giri said...

நன்றி ஷண்முகா அய்யா! என் புகைப்படத்தைப் புகழ்ந்த முதல் ஆளு நீங்கதான்!

dondu(#11168674346665545885) said...

உங்களது இக்ககதை தனக்கு புன்முறுவலை வரவழைத்ததாக ஜெயமோகன் கூறியுள்ளார், காரணம் அவரது இப்பதிவு, பார்க்க: http://www.jeyamohan.in/?p=270

அன்புடன்,
டோண்டு ராகவன்

"ஸஸரிரி" கிரி said...

@ டோண்டு சார்

பின்னூட்டம் வாயிலாக இத்தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

அடியேன் தங்களைத் திருத்துவதற்கு க்ஷமிக்க வேணும். ஒரு சிறு திருத்தம்!

இது கதையல்ல, நிஜமோ நிஜம்!

மீண்டும் நன்றி.

ஜீ... said...

nice! :))

Gopi Ramamoorthy said...

வெரி நைஸ்

"ஸஸரிரி" கிரி said...

@ கோபி

ரொம்ப நன்றி சார்!

"ஸஸரிரி" கிரி said...

@ ஜீ

உங்களை மறக்கலாமோ! தங்களுக்கும் மிக்க நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...