Dec 26, 2009

அபேஸ் ராணியின் அசத்தல் டெக்னிக்




Courtesy: Junior Vikatan

அபேஸ் ராணியின் அசத்தல் டெக்னிக்
'மாப்பிள்ளை வர்றார்... பிளீச் பண்ணிக்கோ!'
''பத்திரிகைல நீங்க குடுத்த விளம்பரத்தைப் பாத்துட்டுத்தான் போன் பண்றேன்... கரூர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். நல்ல குடும்பம், மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறான். நீங்க ஓகே சொன்னா, பொண்ணு பார்க்க வர்றோம். மாப்பிள்ளை பிடிச்சிருந்தா மத்ததை நேரில் பேசிக்குவோம்...''
- திருமண வயதில் பெண் இருக்கும் வீட்டுக்கு பெண்குரலில் இப்படியரு போன் வந்தால் யாருக்குத்தான் ஆர்வம்வராது..? ஆனால், அப்படி ஆர்வத்தோடு நம்பித்தான் மோசம் போயிருக்கிறார் அஸ்ரப் அலி..!
காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் இந்த அஸ்ரப் அலி. கைம்பெண்ணான தன் மகள் காமிலா பானுவுக்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு மேற்கண்டபடி நைச்சியமாகப் பேசி தன் மோசடிக்கு வலை விரித்தார் இந்திரா என்ற கில்லாடிப் பெண்!
இந்திராவை பெண் பார்க்க வரச்சொன்னார் அஸ்ரப். ஆகஸ்ட் 23-ம் தேதி மதியம் இந்திரா மட்டும் அஸ்ரப் வீட்டுக்கு வந்திருக் கிறார். ''மாப்பிள்ளையும்
மற்றவர்களும் எங்கே?'' என்று கேட்டதற்கு, ''அவங்களெல்லாம் பின்னால வந்துக்கிட்டு இருக்காங்க...'' என்று சொன்னார். அப்போது, தன் நகைகளை எல்லாம் அணிந்துகொண்டு சுமாரான 'மேக்-அப்'பில் இருந்தார் காமிலா பானு. அதைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கிய இந்திரா, ''மாப்பிள்ளை பார்க்க வர்றப்ப பொண்ணு இப்படியா இருக்கறது? முகத்துக்கு ஒரு பிளீச் பண்ணிட்டு வந்தா நல்லா பளிச்னு இருக்குமே...'' என்று சொல்ல... அஸ்ரப் வீட்டாரும், ''பக்கத்துலதான் பியூட்டி பார்லர் இருக்கே... பண்ணிட்டா போச்சு...'' என்று ஆர்வத்துடன் சொன்னார்கள்.
உடனே காமிலா பானுவையும் அஸ்ரப்பையும் கூட்டிக்கொண்டு அங்கு போன இந்திரா, காமிலா பானுவுக்கு முகத்தில் பிளீச் பண்ணி மேக்கப் போடும்படி சொல்லி இருக்கிறார். அதற்கு ஆயத்தமான பியூட்டி பார்லர் பெண்மணி, காமிலா பானு அணிந்திருந்த 35 பவுன் நகைகளையும் கழற்றி இந்திராவிடம் கொடுத்திருக்கிறார்.
பியூட்டி பார்லருக்கு வெளியில் காத்திருந்ததால், இதெல்லாம் அஸ்ரப்புக்கு தெரியவில்லை. பத்து நிமிடத்தில் பார்லரை விட்டு வெளியில் வந்த இந்திரா அவசர அவசரமாக, ''மாப்பிள்ளையும் மத்தவங்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்களாம். நம்ம ரெண்டு பேரும் போய் கூட்டிட்டு வந்துருவோமா..?'' என்று சொல்லி அஸ்ரப்பையும் அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண் டுக்குப் போயிருக்கிறார்.
அங்கு போனதுமே, ''நான் இந்தப் பக்கம் தேடுறேன்... நீங்க அந்தப் பக்கம் பாருங்க..'' என்று இந்திரா சொல்ல... ஆளுக்கொரு திசையில் தேடப் போக... தான் போன திசையிலேயே வேகமாக ஓட்டம் பிடித்துவிட்டார் இந்திரா!
பஸ் ஸ்டாண்டில் இந்திராவை காணாமல், விஷயம் புரிந்து குடும்பமே அலறிப்புடைத்து போலீஸுக்கு ஓடியது. இந்த நூதன மோசடி பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட எஸ்.பி-யான ராஜசேகரன், ''இப்படி கைவரிசை காட்டியவள் இதோடு நிறுத்த மாட்டாள். தொடர்ந்து கை அரிக்கும். அதனால், நீங்கள் நேரடியா களத்துல இறங்காமல், வெவ்வேறு ஊர் முகவரிகளிலிருந்து'மணமகன் தேவை' விளம்பரம் கொடுங்கள். அதைப் பாத்துட்டு திரும்பவும் வருவா... அப்ப ஆளை மடக்கிடலாம்!'' என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படியே அஸ்ரப் தரப்பிலிருந்து வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு முகவரி போட்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர்.
அப்புறம் நடந்ததை இந்த வழக்கை விசாரித்துவரும் காரைக்குடி வடக்கு க்ரைம் இன்ஸ்பெக்டர் அருணாசலம் விவரித்தார். ''எஸ்.பி-யோட ஐடியா நல்லா ஒர்க்-அவுட் ஆச்சு. புதுக்கோட்டையிலிருந்து காமிலா பானுவின் தங்கை ஹக்கீலாவுக்கு மாப்பிள்ளை தேவைன்னு அவங்க அண்ணன் அன்சாரி குடுத்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, போன வாரம் இந்திரா அன்சாரிகிட்ட போனில் பேசினா. தந்திரமா பேசி அவளைத் தன் வீட்டுக்கு வரவச்ச அன்சாரி, ஆளை அமுக்கி எங்ககிட்ட ஒப்படைச்சாரு! ஆரம்பத்துல உண்மையை லேசுல ஒப்புக்கலை. லேசா அதட்டுனாலே மயக்கம் வந்த மாதிரி விழுந்தா. நிஜமாகவே அவ 'ஹார்ட் பேஷன்ட்'டாவும் இருந்ததால அவளை அவ போக்குலயே பேச விட்டு உண்மைகளை வாங்கினோம்.
இவளுக்கு சொந்த ஊரு சமயபுரம். இவளோட ஆத்தாளுக்கு சமயபுரம் கோயில்ல தேங்காய் பழத் தட்டு விக்கிறது பொழப்பு. இவளுக்கு மூணு வயசு இருக்குறப்ப, இவளோட ஆத்தா இன்னொருத்தனோட கள்ளத்தொடர்பா இருந்திருக்கா. அதைப் பாத்துடக் கூடாதுங்கறதுக்காக அடிக்கடி இவளை வீட்டை விட்டு வெளியில் துரத்தி விட்டுருக்காங்க. அது மாதிரியான நேரங்கள்ல கோயிலில் தங்கிக்கிட்டு, சின்னச் சின்னத் திருட்டுகளை செஞ்சிருக்கா. பெரியவளானதும் பெரிய பெரிய கேஸ்கள்ல சம்பந்தப்பட்டிருக்கா. இப்பதான் மாட்டியிருக்கா.
கடந்த மார்ச் மாதம் தென்காசி பாவூர்சத்திரத்துல திருமலைக்குமார் என்பவரின் மகள் கவிதாவிடம் 20 பவுன், போன மாசம் 2-ம் தேதி ராமநாதபுரம் கோவிந்தராஜின் மகள் ஷர்மிளாதேவியிடம் 10 பவுன் ஆகியவற்றையும் இதே ஸ்டைல்ல அபேஸ் பண்ணியிருக்கா. இவகிட்டருந்து 38 பவுனை ரெக்கவரி செஞ்சிருக்கோம். கோவை, சென்னைன்னு இன்னும் பல இடங்களில் இதே ரீதியில் இவ கைவரிசை காட்டியிருக்கா. விசாரிச்சுக்கிட்டிருக்கோம்...''என்றவர்,
''இப்படி அமுக்கின நகைகளை திண்டுக்கல்லிலும் திருப்பூரிலும் வித்துக் காசாக்கி இருக்கா. கட்டிக்கிட்டவன், வெச்சிக்கிட்டவன்னு இவளுக்கு பலரோட தொடர்பும் இருக்கு. முதல் புருஷன் உயிரோடு இல்லை. அவனுக்குப் பிறந்த தன் மகளை கொடைக்கானல் கான்வென்ட்ல சேர்த்துப் படிக்க வெச்சிருக்கா...'' என்று சொல்லி அசர வைத்தார்.
கடந்த 7-ம் தேதி ரிமாண்டுக்கு செல்லும் வழியில், சில நிமிடங்கள் இந்திராவிடம் பேச முடிந்தது. ''காரு... பங்களான்னு வசதியா வாழ நெனச்சுத்தான் இந்தத் தொழில்ல இறங்குனேன். இதுல கொஞ்சம் காசைத் தேத்திக்கிட்டு, திருப்பூர்ல போலி டாக்கு மென்ட்டுகளை தயார் செஞ்சு, சொத்துகளை விக்கிற ஆளுங்களோட சேர்ந்துகிட்டு பிசினஸ்(!) பண்ணி வசதியாகிடலாம்னு கணக்குப் போட்டேன். அதுக் குள்ள மாட்டிக்கிட்டேன்...'' என்றபடியே கோர்ட் படிகளில் ஏறினார்.
இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிச்சா பத்தாது... முழுசா ஒரு லாட்ஜே போட்டு யோசிக்கணும் போல!

A V A T A R



What to say?

As everyone know, it is not just another movie. Apart from the graphical gimmicks, the movie has a thousand things to write about. Am not that good reviewer. Let the movie speak to you.


WATCH IT WITHOUT FAIL, if possible in 3D's.

I thank each and every artist behind this movie production for bringing us life's one of the best movies.

Dec 25, 2009

அற்குப ஆங்கே செயல்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.





(நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்)


இந்தக் குறள் பற்றி கெளதம் கம்பீர் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் நேற்று அவர் ஆட்ட நாயகன் விருது தனக்குத் தரப்பட்டதும் அதை உடன் விளையாடி சதமடித்த விராத் கோலியுடன் பகிர்ந்து கொண்டவிதம் அவர் ஒரு ஆக்ரோஷமான வீரர் மட்டுமல்ல ஒரு  சான்றோன் எனவும் காட்டியது. 


பின்குறிப்பு: 1987 உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர், தனது முதல் மற்றும் ஒரே, சதமடித்து விருது பெறுகையில் இதே போல் hat-trick விக்கெட்டுகள் சாய்த்த சேத்தனுடன் விருதைப் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Learn English...



Interruption Introduction Examination Action Direction Limitation Conception Assumption Emotion Irritation........ Oh oh oh.......vvvvvvv.... Stop it...

I feel like lose m?tion after seeing this.




Dec 24, 2009

Until we meet again

My dear Gentle men/women


Are you getting relieved from your current company and joining a new one? Scratching your head for how to write a last day mailer and looking for a ready 'template'? Here's one.

I have seen at least a "Quarter Century" papers falling in my project in last two months. Don't ask me what is my project and where do I work? As per ISO 1234 policy, revealing these information is an offence. let me be defense.

I do not understand why some companies are still speaking about recession / economic slow down.
(நான் எங்க கம்பெனி பத்தி பேசலீங்க்னா!!!)

Dear All,


I wanted to take a moment to let you know that I have decided to move on…; it’s my last day in ????????? today


I have enjoyed my tenure here and I appreciate having had the opportunity to work with all of you. Thank you for the support, guidance, and encouragement you have provided me. Even though I will miss my colleagues and the company, I am looking forward to this new challenge and to starting a new phase of my life.


Please keep in touch; I can be reached at my personal email address (abcd@xyz.com; )


Thanks again for everything.


Yours truly,


ABCD
Mobile: 111 222 333 4

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே



இப்படி ஒரு பக்தி...இப்படி ஒரு காதல் கடவுளின் பால் எப்படி வரும்....?
நம்முள் அந்தக் கடவுள் வந்து இயங்கினலேயன்றி அது சாத்தியமில்லை.  குலசேகரர் தமிழும் பக்தியும் என்னை மயக்குறச் செய்கிறது.... மாலவனின் மாதமாம் மார்கழியில் இப்பாடலைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ரஞ்சனி - காயத்ரியின் குரலும், இசைப் புலமையும் பாடலின் அழகிற்கு அழகு சேர்ப்பதை நான் சொல்லத் தேவையில்லை....

Dec 23, 2009

சச்சின்-கார்த்திக் "சதம்' ரகசியம்! * கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?

இதெல்லாம் தேவையா சார்!

 

சச்சின் செஞ்சுரி அடிச்சா என்ன அடிக்கலன்னா என்ன? இந்தியா ஜெயிச்சிச்சா இல்லையா? அவருக்கென்ன செஞ்சுரி புதுசாஅவரு ஒரு chasing போட்டியில கடைசி வரைக்கும் களத்துல நிக்கறதே ரொம்ப அபூர்வம். மாமாங்கத்துக்கு ஒரு தபா நடக்கற சங்கதி. இதுல "அவரு செஞ்சுரி அடிக்கறத கார்த்திக் பறிச்சிட்டான்", "சின்னப்பய கார்த்திக் ஒழிக", அது இதுன்னு நாலு பேரு பேச, அதை நாப்பது கோடி பேரு பாக்க பத்திரிகை,  டிவி- எல்லாம் பரபரப்பா செய்தி குடுத்து காசு பாக்கறானுங்க சார்.....

ஒரு பழைய டயலாக் சொல்லி முடிச்சுக்கறேன்..... "நம்ம நாடு திருந்தும்கறீங்க

Dec 19, 2009

இப்படியெல்லாமா எழுதுவாங்க?

A guy says,

"I remember the first time I used alcohol as a substitute for women.

""Yeah what happened?" asked his friend.

The first guy replies......


ச்ச்ச்சீஈ..... மீதிய எப்படி எழுத......!!

Dec 18, 2009

Simplest review for Vettaikkaran

Total – 15 reels

Scenes from Basha – 3 Reels

Scenes from Bagavathi – 3 Reels

Scenes from Tirumalai – 3 Reels

Scenes from Kuruvi – 3 Reels

Song sequences from his previous movies – 2 Reels

Something new to see – 1 Reel

In total: Not a must watch movie.

*As told by Mahesh my friend. Own personal review follows….

Dec 16, 2009

சேத்தன் கவிதை...


இன்று இந்திய ஸ்ரீலங்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியை நீங்கள் தூர்தர்ஷனில் காணத் தவறியிருந்தால்.... ஒரு அழகான கவித்துவக் காட்சியை நீங்கள் miss செய்தீர்கள் என அர்த்தம்.


சற்றே பின்னோக்கி....


அது ஆட்டத்தின் கடைசிப் பந்து. வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை. அந்த அதிவேகப் பந்து வீச்சாளர் பந்து வீச முதல் அடி வைக்க, அணியின் ஆல்ரவுண்டர் கேப்டன் கையை உயர்த்தி ஏதோ சொல்லி அருகில் வருகிறார். இரண்டு பீல்டர்கள் உடன் சேர்ந்து அங்கு ஒரு சின்ன டிஸகஷன். பின்னர் கேப்டன், பீல்டர்கள் அவரவர் இடம் போக; இந்தியாவின் 75 கோடி மக்களும் இதயம் தடதடக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தக் கடைசிப் பந்து வீசப்படுகிறது.


"சிக்ஸ்"


எதிர் அணியின் favorite ஆடுகளத்தில்; ஷார்ஜாவில் நடந்த அந்த இறுதிப்போட்டியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் வாழ்வில் மறக்க மாட்டான்.


பந்து வீசியது: சேத்தன் சர்மா.

சிக்ஸ் அடித்தது: ஜாவித் மியான்தத்


இருபத்தி மூன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பியது.


அது ஆட்டத்தின் கடைசிப் பந்து. வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை. அந்த அதிவேகப் பந்து வீச்சாளர் பந்து வீச முதல் அடி வைக்க.....


...... அதே தூர்தர்ஷனின் கேமரா, இன்று நான்காவது அம்பயராக ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த சேத்தனை கவர் செய்கிறது. சேத்தன் ஏனோ விழி விழியென விழிக்கிறார்.....


....பந்து வீசப்படுகிறது, ஒரு ரன் எடுக்கப்பட, ஒரே நாளில் 800 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்யப்பட்ட அந்த ஒரு நாள் போட்டியில் ஸ்ரீலங்காவை இந்தியா வெல்கிறது....


...மீண்டும் கேமரா நான்காவது அம்பயர் அறைக்குச் செல்கிறது. சேத்தன் தலை கவிந்து ஏதோ யோசனையில் இருக்கிறார். அவர் பார்வை காமெராவை புறக்கணிக்கிறது.


தூர்தர்ஷன் கவிதை.....!!!



Dec 13, 2009

கரிகாலன் கால் கருப்பா?

"கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு...
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு..."


(முழுப்பாடலுக்கு) (பாடலைக் கேட்க)

சமீபத்தில் வந்த பாடல்களில் A, B, C என எல்லா சென்டர் ரசிகசிகாமணிகளையும் தலையசைக்க வைத்திருக்கும் பாடல் இது. Peppy-யான குத்துப்பாடல் என்றாலும் விஜய் ஆண்டனி வழக்கம் போல் பாடலில் ஒரு அழகான மெலடி சேர்த்திருக்கிறார். பாடலின் இசை ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கத்தோடு கிறங்கடிக்கிறது என்றால், பாடலின் வரிகள் கேள்வி பதில் வகையில் பாடலுக்கு அழகிய சுவை.

பாடல் (கவிஞர் கபிலன்), தமிழ் கூறும் நல்லுலகிற்கு "குழல்" என்ற வார்த்தைக்கு "கூந்தல்" என்பதுவும் ஒரு பொருள் என நினைவுப்படுத்துகிறது. மேலும், கரிகாலன் கால்நிறம் குறித்த விவாதத்தையும் நினைவுப்படுத்துகிறார் கபிலன்.

கரிகால் வளவன் என்று அழைக்கப் பட்ட கரிகால் சோழன் (இவர் பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் அல்ல) காலின் நிறம் குறித்து இருவித கருத்துக்கள் உண்டு.

- கரிகாலன் போர் ஒன்றில் ஈடுபட்ட போது, எரிந்த அரண்மனையில் இருந்து வெளியேறும் முன் அவன் கால் எரிந்து கரியின் நிறமானது முதல் கருத்து.
- "கரி" என்றால் தமிழில் "யானை" என்று ஒரு பொருள். கரிகாலன் யானையின் கால்களைப் போல் பலமான கால்களைக் கொண்டவன் என்றும் ஒரு கருத்து உண்டு.

ஆக, முதல் கருத்தை வழிமொழியும் வகையில்தான் கபிலன் பாடல் இயற்றி இருக்கிறார். Okkay sir....!!!

Dec 10, 2009

The Telangana Turmoil

The Telangana Turmoil


In my opinion, whether it is going to benefit the people of Telangana region or not, surely it will help emerge set of Madhu Koda’s. The political dramas are always self-plays rather than for people benefits.

Top and bottom line population never worry whether it’s Rama or Ravana who rules, their priorities are different. It’s the so called common man who is crumbled between the policy makers and their policies.

What’s the opinion of a common man of Telangana region on this separation? Who cares!

And what next on the Nijam’s land, who is given the right for Hyderabad. Is it Vijayawada or Vizag the new capital of AP …. Let’s continue watching the drama.

Dec 1, 2009

December Music Fest 2009 at Chennai

Carnatic Music lovers to follow the link provided below

to know the schedule of events for

Margazhi Utsavam 2009 -2010

 

 

http://www.thedecemberseason.com/schedule.php

 

More updates on specific concerts follow…

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...